வைக்கம் வீரரின் படத் திறப்பு. தந்தை பெரியார் படம் திறப்பு. திறந்து வைத்தது யார்? வ.உ.சிதம்பரம் பிள்ளை.பெரியாரும் காங்கிரசை வளர்த்தவர்தானே, காங் கிரசில் இருக்கும் வர்ணாசிரமக் கொடுமையை எதிர்த்து வெளியேறியவர் தானே?
1928 ஆம் ஆண்டு பெரியார் படத்தை வ.உ.சிதம்பரம் திறந்து வைத்ததை குடிய ரசுப் பத்திரிகை வெளியிடுகிறது. 20 ஆண்டுகள் கழித்து வ.உ.சி. மறைந்த பிறகு, 1948 இல் மே மாதம் 9 ஆம் தேதி தூத்துக்குடியில் திராவிடர் கழகத்தின் 18 ஆம் மாகாண மாநாடு. அந்த மாநாட்டில் வ.உ.சி. படம் திறந்து வைக்கப்பட்டது.அந்த மாநாட்டில் படத்தைத் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தவர் தமிழ்த் தென் றல் திரு வி.க. ஆனால், அவர் வரவில்லை. அவர் வரவில்லை என்பதால் குத் தூசி குருசாமி அந்தப் படத்தைத் திறந்து வைத்தார். அந்த உணர்வோடுதான் நான் இங்கே பேசுகிறேன்.
இவ்வளவு தியாகம் செய்தாரே!நாட்டுக்காகப் போராடினாரே!அப்படிப்பட்ட தீரர் எழுதிக் குவித்தவை, இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடி அவர் செய்தி ருக்கிற மகத்தான தியாகம் இதை மதிக்க வேண்டும் நாம் உணர்வுகள் பெறுவ தற்கு.
சிவஞான போதத்தில் இவர் என்ன விளக்க உரை எழுதுகிறார் தெரியுமா? அவர் சொல் கிறார். மற்ற உரைகளில் இருந்து என் உரை மாறுபட்டது. மற்ற உரை களில் பிற சமயங்களைக் குறித்த கண்டனம் இருக்கிறது. அவருடைய குறிப்பு அதுதான். பிற சமயங்களைப்பற்றி எந்த விமர்சனமும் செய்ய அவர் விரும்ப வில்லை. பொய்யான உயர்வு தாழ்வு பற்றி நான் பேச விரும்பவில்லை. வேறு எந்த மதத்தைப்பற்றியும் விமர்சிக்கத் தயாராக இல்லை என்கிறார்.
நான் பேசுவது 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாள். அவர் எத்தனையோ
ஆண்டுகளுக்கு முன்பு, 1935 ஆம் ஆண்டில் சொல்கிறார். ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வேற்றுமைகளை ஏற்படுத்துகிறவர்கள்தான் இந்த நாட்டுக் கு தேச பக்திக்கு தீங்கு செய்கின்றவர்கள் என்று அவர் எழுதுகிறார்.அதைவிட இந்தக் காலகட்டத்தில் பகை உணர்ச்சியும் வேற்றுமை உணர்ச்சியும் வளர்க் கப்பட்டு அப்படிப்பட்ட கொடுமைகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நூலை வெளியிடும் போது இந்தக் கருத்தை வெளியிடுகிறோம்.
ஆண்டுகளுக்கு முன்பு, 1935 ஆம் ஆண்டில் சொல்கிறார். ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வேற்றுமைகளை ஏற்படுத்துகிறவர்கள்தான் இந்த நாட்டுக் கு தேச பக்திக்கு தீங்கு செய்கின்றவர்கள் என்று அவர் எழுதுகிறார்.அதைவிட இந்தக் காலகட்டத்தில் பகை உணர்ச்சியும் வேற்றுமை உணர்ச்சியும் வளர்க் கப்பட்டு அப்படிப்பட்ட கொடுமைகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நூலை வெளியிடும் போது இந்தக் கருத்தை வெளியிடுகிறோம்.
ஒடுக்கப்பட்ட மக்களை அவர் சகோதரர்களாகப் பாவித்தவர். விருதுநகரைச் சேர்ந்த இராமையா தேசிகர் என்பவர் ஒரு தலித். கண் பார்வை இல்லாதவர். அவரை வீட்டிலே வைத்து உணவு அருந்தச்சொல்லி வள்ளியம்மையே உணவு ஊட்டுகிறார். ஒரு தலித் இனத்தைச் சேர்ந்தவரை தன் வீட்டிலேயே வைத்துப் பராமரித்து அரவணைத்துக் கொள்கிற இயல்பு வ.உ.சி. க்கு இருந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வு இருந்தது. தன் மனைவி வள்ளியம்மை யைப்பற்றியும் வ.உ.சி. நூல் எழுதி இருக்கிறார்.
அவருடைய உணர்வு எப்படிப்பட்டது? காரைக்குடிக்குப் போகிறார் ஜீவாவின் ஆசிரமத்துக்கு. அங்கு ராட்டைகளாக இருக்கிறது. அப்பொழுது ஜீவா கொஞ்சம் அகிம்சாவாதி. தீவிர கம்யூனிசத்துக்கு வரவில்லை. வ.உ.சி. ஜீவாவிடம் கேட் கிறார். இதெல்லாம் என்ன? இதுதான் ராட்டைகள், நூற்பதற்கு என்கிறார். வாள் ஏந்த வேண்டிய கைகளில் கொண்டுபோய் ராட்டைகளைக் கொடுத்து இருக்கி றீர்கள்? என்று இவர் சொல்கிறார். - ஆதாரம் இல்லாமல் நான் பேச மாட் டேன்.
தூத்துக்குடியில் காங்கிரஸ் கூட்டம். காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் வரத ராஜுலு நாயுடு வந்து இருக்கிறார். அந்தக் கூட்டத்துக்கு இவர் பார்வையாளரா கப் போகிறார்.அந்தக் கூட்டத் தில் ஒருவர் பேசுகிறார். ஸ்ரீமான் சிதம்பரம் பிள் ளை போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் கதர் சட்டைப் போடா மல் வருவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது என்று பேசி விடு கிறார். எதிரே உட்கார்ந்து இருக்கிறார் சிதம்பரம் பிள்ளை. ஆவேசப் பிழம்பு அல்லவா? மேடை ஏறுகிறார். நான் அணிந்து இருப்பது கதர் அல்ல. கைத்தறி. ‘நான் காந்தியின் கதர் தொண்டன் சிதம்பரம் பிள்ளை அல்ல, நான் சுதேசி சிதம்பரம் பிள்ளை’ என்றார்.
அவர் திருக்குறளுக்கு அறத்துப்பால் வெளியிட்டார் அல்லவா? முழுக்க முழுக் க அந்தத் தாள் அனைத்தும் இந்த மண்ணில் உற்பத்தியான பொருட்களில் செய் தது. இந்த உணர்வு அவருடைய ஊனோடும் உதிரத்தோடும் கலந்தது. அப்படிப் பட்ட மாபெரும் தலைவர், இந்த மண்ணுக்குப் பெருமை தேடிக்கொடுத்த தலை வர், நாட்டின் விடுதலைக்குப் போராடிய தலைவரின் குடும்பத்தினர் எதையும் எதிர்பார்க்கவில்லை.
இங்கே வந்து இருக்கின்ற வாலேஸ்வரன் அவர்களைப் பார்த்து நாங்கள் பெரு மைப்படுகிறோம்.பொன்னும் பொருளும் நிலையல்ல.மாடமாளிகைகள் நிலை யல்ல. இந்த மண் இருக்கின்றவரை உங்கள் தந்தையின் புகழ் இருக்கும். இந்த பூமி இருக்கின்ற வரை அவரது தியாகம் இருக்கும்.
தியாகிகளின் உன்னதமான தியாகத்தில்தான் இந்த நாடு வாழுகிறது. அந்தத் தியாகத்தை நான் மதிக்கிறேன். என்னைப் போன்றவர்களுக்கு உணர்ச்சியும், எங்களுக்குச் சோதனைகள் சூழ்கிறபோது நெஞ்சில் உறுதியும் ஏற்படுவதற்குக் காரணம் இப்படிப்பட்ட தீரர்களை நினைக்கிற போதுதான். அவருக்குச் சிலை எழுப்ப வேண்டும் என்றார் குட்டி அவர்கள். எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்த அந்தத் தலைவனுக்கு சிலை எழுப்பும் நிகழ்ச்சிக்கு நீங்கள் எடுக்கின்ற எல்லா முயற்சிக்கும், எளியவன் எந்த விதத்தில் உதவ வேண்டுமோ எல்லா உதவி யும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
கட்சி, ஜாதி, மதஎல்லைகளைக் கடந்து ஒளிவீசும்நட்சத்திரமாக என்றைக்கும் திகழ்கிற வீரசிதம்பரம் பிள்ளையின் புகழ் வாழ்க!
வளர்க திவானின் எழுத்துப் பணிகள்! வெல்க அவரது முயற்சிகள்.
வைகோ இவ்வாறு உரையாற்றினார்.
No comments:
Post a Comment