Monday, October 7, 2013

வைகோவின் கரங்களை வலுப்படுத்துங்கள்!

மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுகின்ற #வைகோ வின் கரங்களை வலுப் படுத்துங்கள்!

விருதுநகர் மாநாட்டில் #மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, செப்டம்பர் - 15 அன்று விருதுநக ரில் நடைபெற்ற மதிமுக  மாநாட்டில், அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி
ஆற்றிய உரை:

தமிழ்நாட்டு அரசியல் நிலைகளை எல்லாம் நமது பொதுச்செயலாளர்அவர்கள் இங்கே விரிவாக உரையாற்ற இருக்கிறார்கள்.நான் பத்திரிகையாளர்கள் வாயி லாக சில கருத்துகளைச் சொல்ல நினைக்கிறேன்.பேரறிஞர் அண்ணாவினு டைய பிறந்த நாள் விழாவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்ட நாள் முதல் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நாங் கள் மாநாட்டை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

அண்ணாவினுடைய இதயத்தை இரவல் வாங்கியவர்கள் நடத்துகின்றார்களா? அல்லது அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற கட்சி நடத்துகிற தா? அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டிருக்கிற கட்சியும் நடத்தவில் லை.அண்ணாவினுடைய இதயத்தை இரவல் வாங்கிய அந்தக் கட்சியும்அந்தப் பெருமையைச் சேர்க்கின்ற காரியத்தில் ஈடுபடவில்லை.


தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் இன் றைக்கு அண்ணாவின் பெருமையை நாட்டுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
மாநாட்டில் இன்று மக்கள் இலட்சக் கணக்கில் அரங்கம் நிறைந்து வெளியே திரண்டு இருக்கின்றார்கள். இடதுபுறத்தில் பல்லாயிரக்கணக்கான தாய்மார் கள் அமர்ந்திருக்கிறார்கள். ஒருவரைக் கூட பணம் கொடுத்து, வாகனம் வைத் து நாம் அழைத்துவரவில்லை. வந்திருக்கின்ற அனைவரும் தாங்களாக முயற் சி எடுத்து இந்த மாநாட்டில் பங்கெடுத்து இருக்கிறார்கள்.

நான் கேட்க விரும்புகிறேன் அண்ணா தி.மு.க. இந்த இரண்டு ஆண்டுக்காலத் தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது.முதலமைச்சர் அவர்கள் எங்காவதுஒரு இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசியது உண்டா? மக்களைச்சந்தித்தது உண் டா? ஒரு மாநாடு நடத்தியது உண்டா? அண்ணாவுக்கு பெருமை சேர்க்கின்ற எந்த நிகழ்ச்சியாவது நடத்தியது உண்டா? என்று பார்த்தால், இன்றைய முதல மைச்சர் எதிலேயும் பங்கெடுத்துக் கொள்ள வில்லை.

அந்தக் கட்சியினர் இன்றைக்கு ஆங்காங்கே நாடாளுமன்றத் தொகுதிக்கூட்டம் என்று நடத்தினார்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும், எப்படி
நடைபெற்றது என்று. அந்தக் கூட்டத்திற்கு ஏராளமான அரசு வாகனங்களை அனுப்பியும், சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பி னர்கள் என்று வாகனம் வைத்து அதில் ஏற்றி வந்து சாப்பாடு வாங்கிக் கொடுத் து, அவர்களுக்கு பணமும் கொடுத்துத்தான் நடத்தினார்கள்.ஏதாவது ஒரு இடத் திலாவது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் போல மக்களை நீங்கள் சந்தித்தது உண்டா? என்றால் இல்லை.

அண்ணா தி.மு.க. இன்றைக்கு ஆட்சிக்கு வந்திருக்கலாம்.அண்ணா தி.மு.க. வுக்கு இருக்கிற ஆதரவு என்பது, இந்த நாட்டு மக்கள் மத்தியில் இருபது சதவி கிதம் தான். அதற்கு மேல் அண்ணா தி.மு.க.வுக்குக் கிடையாது.அண்ணா தி.மு. க. வெற்றிபெற்றது என்று சொன்னால் அதற்கு அடிப்படைக் காரணம் யார்?
கலைஞர் கருணாநிதிதான் அதற்கு அடிப்படைக்காரணம். அவருடைய குடும்ப ஆட்சி, அந்த அமைச்சரவையினுடைய ஆட்சி என்று எங்கே எடுத்தாலும் லஞ் ச ஊழல் என்று தலைவிரித்து ஆடிய காரணத்தினால், நாட்டு மக்களுக்கு ஏற் பட்ட அதிருப்திதான் அண்ணா தி.மு.க.வுக்கு வெற்றியே தவிர, அண்ணா தி.மு. க.வுக்கு மக்கள் மத்தியிலே ஆதரவு கிடையாது.

அண்ணா தி.மு.க.வினர் இன்றைக்கு பல இடங்களில் கூட்டம் நடத்து கிறார் கள்.இரண்டாண்டு சாதனை என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், அனைத்துக் கூட்டத்திற்கும் மக்கள் கூடுகின்றார்களா? என்றால் இல்லை.

அண்ணா தி.மு.க.வின் ஆட்சியில் எங்கே இலஞ்சம் இல்லை? எங்கே ஊழல் இல்லை? அனைத்து இடங்களிலும் இலஞ்சமும் ஊழலும் அப்படியே இருக் கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க.வில்
கலைஞர் குடும்பம், அமைச்சர்கள் குடும்பம், சட்டமன்ற உறுப்பினர்கள் குடும் பத்தினர்கள் ஊரைக் கொள்ளையடித்தார்கள்.நீங்களும் இன்றைக்கு அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

இன்றைக்கு ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றப் படியேறிக் கொண் டிருக்கிறார்.அமைச்சர்களும் ஊழல் குற்றச் சாட்டில் படியேறிக் கொண்டு
இருக்கிறார்கள். தி.மு.க.-அண்ணா தி.மு.க. இரண்டு கட்சிகளும் நேர்மையான கட்சிகளா என்றால் இல்லை. இரண்டும் ஊழல் கட்சிகள்தான்.

இன்றைக்கு தமிழக அரசியல் வரலாற்றில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத அப்பழுக்கற்றவராக தனிமனித ஒழுக்கத்திலும் சரி,பொதுவாழ்க்கை யிலும் சரி நேர்மையாக இருக்கின்ற தலைவர் யார்? என்றால் வைகோ ஒருவ ரைத் தவிர வேறு யாரையாவது நீங்கள் குறிப்பிட முடியுமா? அண்ணா தி.மு. க.வில் சொல்ல முடியுமா? தி.மு.க.வில் சொல்ல முடியுமா? அப்படிப்பட்ட
தலைவருக்கு எதிர்காலத்தில் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று நான் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பிற்குரிய சகோதரர்களே, நமக்கு இனிதான் அதிகமான வேலை இருக் கிறது. இந்த மாநாட்டில் பங்கெடுத்துக்கொண்ட உங்களை நான் அன்போடு
கேட்டுக்கொள்வது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளு மன் றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறது. அது எப்படி என்பதை நமது பொதுச் செயலாளர் உரிய காலத்தில் அறிவிப்பார்.

ஆனால், நமது பொதுச்செயலாளர் எதை நினைக்கிறாரோ அதுதான் நடைபெ றும் என்பதைக் குறிப்பிட்டு, வந்திருக்கின்ற நீங்கள் அனைவரும் இன்னும் ஏழு மாத காலம் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு. அதற்குள் மக்களைச்
சந்திக்கின்ற அனைத்து இடங்களிலும் நமது தலைவர் அவர்கள் சேவையைப் பற்றிப் பேச வேண்டும்.

நமது தலைவர் அவர்கள் முல்லைப் பெரியாறு, காவிரி, கூடங்குளம், விலை வாசி உயர்வு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர் பிரச்சினை என்று அனைத்துத் துறைகளிலும் மக்கள் பிரச்சினைக் காகப் போராடுகிற தலைவர், அவர் கரங்களை வலுப் படுத்தக்கூய அளவில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment