Sunday, October 6, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 5

தமிழ்த்தாத்தா’ உ.வே.சா செய்த பணியை, இன்றைக்கு திவான் செய்து கொண் டு இருக்கிறார். சாகித்ய அகாடெமி போன்ற விருதுகளுக்கு அவர் தகுதி உடை யவரா என்றால் ஆம், என்பேன். இவருக்குக் கொடுத்தால் அந்த விருதுக்குத் தகுதி என்று கருதுகிறவன் நான். 70 புத்தகங்களுக்கு மேல் அவர் தந்து இருக் கிறார். என்ன அருமையான ஆராய்ச்சி! அவர் எம்.பில். பட்டம் பெற்றதேகூட. ஆக்ஷ் கொலைவழக்கை ஆய்வு செய்ததை வைத்துத்தான் பரிசு பெற்றார், விரு துபெற்றார்.

செக்கு இழுத்த செம்மல் சிதம்பரம் பிள்ளை இந்த ம.தி.தா. இந்து பள்ளியில் தான் படித்தார். முண்டாசுக் கவிஞன் பாரதி இங்கேதான் படித்தார். அந்த நாள் களை நான் எண்ணிப் பார்க்கிறேன். வ.உ.சி. தொழிலாளர்களுக்காகப் போராடி னார். கோரல் மில்லில் அவர் நடத்திய போராட்டம். அந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு உணவு படைக்க தன் சொத்துகளைத் தந்தார். இந்தியாவி லேயே தொழிலாளர்களைத் திரட்டிப் போராட்டத்தில் வெற்றிபெற்ற ஒரே தலைவர் அந்தக் காலகட்டத்தில் செக்கு இழுத்த செம்மல் வ.உ.சி.யைத்தவிர வேறு யாரும் கிடையாது.

அப்படிப்பட்ட வ.உ.சி., எந்த நாளைத் தேர்ந்து எடுக்கிறார் சுதேசிக் கப்பல் கம் பெனியைத் தொடங்குவதற்கு?

நமது மூதாதையர்கள் கடலில் கப்பலைச் செலுத்தினார்கள். வெள்ளைக் கார னுக்குக் கப்பம் கட்டிக் கிடப்பதா இந்த நாடு? நாம் மரக்கலம் செலுத்துவோம் என்று சுதேசிக் கம்பெனியைத் தொடங்கிய நாள் என்ன தெரியுமா? அக்டோபர் 16. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட நாள். மராட்டியத்துக்குச் சென்று, ‘சுயராஜ்யம் எனது பிறப்பு உரிமை’ என்று முழங்கிய திலகரைச் சந்தித் துத் திரும்பிய கப்பல் ஓட்டிய தமிழன், 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 இல் சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். வங்காளி தொடங்கவில்லை.பஞ் சாபியன் தொடங்கவில்லை. ஒரியக்காரன் தொடங்கவில்லை. மராட்டியர்கள் தொடங்கவில்லை. ஒரு தமிழன் தொடங்கினான். தெற்குச்சீமையில் வாழ்ந்த ஒட்டப்பிடாரத்து சிதம்பரம் தொடங்கினான். கப்பல் கம்பெனியைத் தொடங்கி யதற்குப்பிறகு அவரது பெயரும், புகழும், அவரது வீர உரைகளும் பரவியது. அந்தக் காலகட்டத்தில் சுப்பிரமணிய சிவாவோடு சேர்ந்து விடுதலைக் கிளர்ச் சிக்காக அவர் ஆற்றிய உரைகள் வீர உரைகள்.

1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்குச்சென்றார்.இருதரப்பிலும் நாற் காலிகள் பறந்தன. அப்போதே நாற்காலிகள் பறந்திருக்கின்றன (பலத்த கைதட் டல்). இன்றைக்கும் அந்த மரபுகளை அப்படியே கொண்டு வருகின்றனர். இதை நான் சொல்லவில்லை, சரித்திரம். அந்த சரித்திரத்தில். திலகர் பக்கம் - தீவிர வாதிகள் பக்கம் நிற்கிறார் வ.உ.சி.

இதே நெல்லையில் தேசாபிமானிகள் சங்கத்தை அதற்கு அடுத்த வருடத்தில் தொடங்குகிறார். 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் எழுப்புகின்ற கிளர்ச்சி உணர்ச்சி 7, 8, 9 தேதிகளில் பரவுகிறது. 12 ஆம் தேதி கைது செய்யப்படுகிறார். குதிரை வண்டியில் விலங்குபோட்டு கொண்டுபோனார்கள். சாலை ஓரத்தில் பாண்டிச்சேரியில் இருந்து வந்து இருந்த நீலகண்ட பிரம்மச்சாரியைப் பார்த் தார். துப்பாக்கி பிடித்த போலிசுக்குப் பக்கத்தில், வண்டியில் இருந்தவாறு வ.உ. சி. பலத்த குரல் கொடுத்து, ‘ பிரம்மச்சாரி இங்கேயே இருங்கள். போய்விடாதீர் கள்’ என்கிறார்.

அதற்குப்பிறகு வஉசிக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவைச் சிறையில் அடைக்கப் படுகிறார். வ.உ.சி. கைது செய்யப்பட்டபோது ஆக்டிங் கலெக்டராக இருந்தவன் தூத்துக்குடியில் துணை கலெக்டராக இருந்த ஆக்ஷ். இங்கே திருநெல்வேலியில் போராட்டம் வெடித்தது.வெள்ளைக்காரன் துப்பாக் கிக்குப் பயப்படாதவர்கள் என்பதை நெற்கட்டான் செவலிலும், பாஞ்சாலங் குறிச்சியிலும் நிரூபித்த மண் அல்லவா? பீரங்கிகளுக்கே பயப்படாதவர்கள் அல்லவா? அப்படிப்பட்ட வீரர்கள், பிரிட்டிக்ஷ்காரன் லத்திக் கம்புகளுக்கும், துப்பாக்கி களுக்கும் பயப்படாமல் மறுநாள் போராட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். ஒரு தலித் இளைஞர், ஒரு இஸ்லாமிய இளைஞர் உட்பட நான்கு பேர். எண்ணற்றவர்கள் படுகாயமுற்றார்கள். அந்த உணர்ச்சி இன்று எங்கே?

பஞ்சாப்பில் இன்றைக்கு முதல்வராக இருக்கின்ற மாட்சிமை தங்கிய பிர
காக்ஷ் சிங் பாதல் அவர்கள் கட்சி எல்லைகளைக் கடந்து, என்மீது அளவற்ற அன்பைக் கொண்டவர். சமீபத்தில்கூட ஒரு மாதத்துக்கு முன்னர் அவருடைய வீட்டுக்கு விருந்தினராகச் சென்று விட்டு வந்தேன். அவர் ஒரு முறை பகத்சிங் கின் பிறந்த நாளில் அவருடைய ஊருக்கு என்னை அழைத்துக் கொண்டு போ னார். நானும், அப்பொழுது மத்திய அமைச்சராக இருந்த கண்ணப்பன் அவர் க ளும், சென்று இருந்தோம். அவர் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சராக இருந் ததால் சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரம் தருகின்ற திட்டத்தை பகத்சிங் பிறந்த ஊருக்குத் தருகின்ற திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப் போயிருந்தோம். முதல்வர் பிரகாக்ஷ் சிங் பாதல் அவர்கள் என்னையும் அழைத்து இருந்தார்கள். நான் சென்று இருந்தேன்.

அங்கிருந்து இந்திய எல்லை பாகிஸ்தான் எல்லை இரண்டு நாடுகளும் சந்திக் கின்ற எல்லையில் பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் நினைவாலயம் இருக்கிறது. அங்கே போவோம் என்றார்கள். லாகூர் சிறைக்குள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே அவர்களைத் தூக்கில் போட்டு, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி ஒருவருக்கும் தெரியாமல் கொண்டுவந்து நதிக்கரையில் தீ வைத்தார் கள் பிரிட்டிக்ஷ்காரர்கள்.

அவர்களது சாம்பலைக் கொண்டுவந்து நினைவாலயம் கட்டி இருக்கிறார்கள். பகத் சிங்கின் தாயாரின் கல்லறையும் அங்கே இருக்கிறது. அந்த இடத்துக்கு என்னை அழைத்துக் கொண்டு போனார்கள். அன்புக்கு உரியவர்களே, அப்படி ஒரு காட்சியை நான் இந்தியாவில் ஒரு சில இடங்களில்தான் பார்த்து இருக் கிறேன்.

கிட்டத்தட்ட 200 கி.மீட்டர் நான் பயணம் செய்தேன். இலட்சக்கணக்கான மக் கள் அந்த நினைவாலயத்தை நோக்கி வந்துகொண்டேஇருக்கிறார்கள்.ஆணும், பெண்ணும், வாலிபர்களும், வயோதிகர்களும், கூட்டம் கூட்டமாக எனக்குத் தெரிய தேசத்துக்கு பாடுபட்ட உயிர்நீத்த தியாகியை, இந்த அளவுக்கு இந்தியா வில் வேறு எந்தப் பகுதி மக்களும் மதிப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது வல்லவா உணர்ச்சி! அந்த நிகழ்ச்சியில் என்னை அறிமுகப்படுத்திவைத்து பேசச் சொன்னார். அப்போது பேசும்போது ஒன்றைச் சொன்னேன்.

தொடரும்........

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment