மக்களின் ஆவேச அலை காங்கிரஸின் கடைசி நாட்கள்!
சங்கொலி தலையங்கம்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த லில்லிதாமஸ் என்னும் மூத்த பெண் வழக்கறிஞ ரும், லோக்பிரகாரி என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.என்.சுக்லா என் பவரும் 2005 ஆம் ஆண்டில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்கள். “இந்திய அரசியல் குற்றமயமாகி வருகிறது; நாடாளுமன்றத்திலும் சட்டமன் றத்திலும் குற்றப்பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண் டே வருகிறது. இதைத் தவிர்ப்பதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 இன் உட்பிரிவு 4 ஐ ரத்து செய்ய வேண்டும்” இதுதான் பொதுநல வழக் கின் சாரம்சம். இந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.
“குற்றவழக்குகளில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான ஆண்டு கள் தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவிகளை தண்டனை அறிவிக்கப்பட்டதுமே உடன டியாகப் பறிக்க வேண்டும். குற்றப்பின்னணி உடையவர்களைப் பாதுகாக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்திருந்தால் பதவி நீக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 8 இன் துணைப்பிரிவு 4 வசதியாக உள்ளது. இந்தப் பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்.”
உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு இந்திய அரசியல் அரங்கில் உள்ள பெரும் பாலான அரசியல் கட்சிகளைக் கலக்கம் அடையச் செய்தது. ஏனெனில் அரசி யல் கட்சிகளில் வியாபித்து இருக்கும் குற்றவாளிகள்தான் காரணம். ஆளும் காங்கிரஸ் கட்சியில் கேட்கவே வேண்டாம். காங்கிரஸ் கட்சி ஊழல் மன்னர் களின் ஒய்யார கூடாரமாகவே ஆகிவிட்டது. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ‘நிபந்தனை அற்ற” (?) ஆதரவு தரும் கட்சித் தலைவர்கள் முலாயம்சிங் யாதவ், லல்லுபிரசாத் யாதவ், மாயாவதி மற்றும் ஐ.மு.கூட்டணி அரசின் பங்காளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது வண்டி வண்டியாக வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய அரசு
மறுசீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. ஆனால், நாங்கள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை என்று உச்சநீதிமன்றம் மறுசீராய்வு மனுவைத்தள்ளுபடி செய்துவிட்டது. உடனடியாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை
நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு ஒரே மிச்சமுள்ள வழி, நாடாளுமன்றத் தின் மூலம் சட்டத்திருத்தம் கொண்டுவந்து, குற்றப்பின்னணி கொண்டவர் களின் “பொதுப்பணி”யைப் பாதுகாக்கும் தலையாய கடமையை நிறைவேற் றத் துடித்தது மத்திய அரசு.
நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத்தொடரில் ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்
(இரண்டாம் திருத்தம்) மசோதா - 2013, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப் பட்டது.இந்த மசோதா இன்னும் நிறைவேறவில்லை.
இதனிடையே, காவல்துறையின் காவலிலும், சிறையிலும் உள்ள அரசியல் வாதிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் வகையில், “மக்கள் பிரதி நிதித்துவ (சட்டத்திருத்த) மசோதா - 2013” நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கபில்சிபில் இம்மசோதாவை தாக்கல் செய்து பேசியபோது, ‘சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம். சில நேரங்களில் நீதிமன்றங்களும் தவறு செய்கின்றன. இந்தப் பிரச்சினையில் நீதி மன்றம் செய்த தவறை நாம் சரி செய்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றம் ஜூலை 10 இல் அளித்த தீர்ப்பில் காவலில் இருக்கும் அரசி யல்வாதிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று கூறியி ருந்தது.இந்த உத்தரவை செல்லாததாக்கிட, மத்திய அரசு கொண்டுவந்த மக் கள் பிரதிநிதித்துவ (சட்டத்திருத்த) மசோதா - 2013” நாடாளுமன்றத்தில் செப் டம்பர் 6 ஆம் தேதி, ஒப்புதல் பெறப்பட்டது.
இதுபோலவே, உச்சநீதிமன்றம், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட உடனே, எம்.பி.,எம்.எல்.ஏக்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதை
செல்லாததாக்க, ஒரு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கிறது. (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (இரண்டாம் திருத் தம் - மசோதா 2013) இந்நிலையில் செப்டம்பர் 24 ஆம் தேதி பிரதமர் மன்மோ கன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுகிற எம்.பி.,எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள் பதவி யைக் காப்பாற்றும் வகையில் அவசர சட்டம் இயற்றுவதற்கு ஒப்புதல் வழங் கியது.
இந்த அவசர சட்டம், அரசியல் வாதிகள் தங்கள் மீதான தண்டனை தீர்ப்புக்கு
தடைபெற்று, 90 நாட்களில் மேல்முறையீடு செய்து, அது விசாரணைக்கு ஏற் கப்பட்டுவிட்டால், பதவியில் தொடருவதற்கு வகை செய்கிறது. மத்திய அர சின் இந்த அவசர சட்ட நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கும் தொட
ரப்பட்டுள்ளது.இதனிடையே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அவசர சட்டத்தை மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை செப்டம்பர் 26 ஆம் தேதி சந்தித்த பார திய ஜனதா கட்சி மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி, எதிர்க்கட்சித் தலை வர் கள் மக்களவை சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை அருண்ஜெட்லி ஆகியோர் இந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கக்கூடாது என்று முறையிட்டனர்.இதனை அடுத்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி,மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே,சட்டம் மற்றும் நீதித்துறை அமைச் சர் கபில்சிபில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோ ரை அழைத்து நேரில் விளக்கம் கேட்டார்.
முன்னாள் சட்ட அமைச்சர் வழக்கறிஞர் சாந்தி பூஷன், சட்ட நிபுணர் பிரசாந்த் பூஷன் மற்றும் ‘ஆம் ஆத்மி’ கட்சித் தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் ஆகியோ ரும் குடியரசுத்தலைவரை சந்தித்து அவசர சட்டத்தைத்திருப்பி அனுப்ப வேண் டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இடதுசாரி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் குடியரசுத் தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்தார்.
இத்தகைய அவசர சட்டத்தைக் கொண்டுவர காங்கிரசு அரசு முயற்சிப்பது ஏன்?
குற்றப்பின்னணி கொண்டவர்களின் பதவிகளைக் காப்பாற்றத் துடிப்பது எதற் காக? காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத், மத்திய அமைச்சராக இருந்தபோது, திரிபுரா மாநிலத்தில் தகுதியற்றவர்களுக்கு மருத் துவப் படிப்பு படிப்பதற்கு இடங்களை ஒதுக்கீடு செய்தார் என்று சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ரஷீத் மசூத் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அக்டோபர் 1 ஆம் தேதி 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இத்தாலி நாட்டுக் குடிமகள் சோனியா இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பதை எவரும் எதிர்க்கக்கூடாது என்று கூறியது மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு வழங்கி வருபவர் பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ். இவர் மீது பீகார் முதல் வராக பதவி வகித்தபோது, நடந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கு கடந்த 17 ஆண் டுகளாக நடைபெற்று, செப்டம்பர் 30 ஆம் தேதி ராஞ்சி நீதிமன்றம் லாலு குற்ற வாளி என்று தீர்ப்பளித்தது.உடனடியாக சிறையில் அடைக்கப்பட்ட லாலு பிர சாத் யாதவுக்கு அக்டோபர் 3 ஆம் தேதி தண்டனை விபரங்களை ராஞ்சி நீதி மன்றம் அறிவிக்கப்போகிறது.
தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ரஷீத் மசூது, லாலு பிரசாத் யாதவ்
இருவரும் எம்.பி. பதவிகளை இழக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.இவர் களையும் இதே பட்டியலில், வரும் காலத்தில் இணையப் போகிறவர்களையும்
காப்பாற்றவே அவசர சட்டத்தை கொண்டுவர காங்கிரஸ் அரசு வேகவேகமாக
நடவடிக்கை எடுத்தது. ஆனால், நாடுமுழுவதும் இதற்கு எதிர்ப்புஅலை எழுந்த வுடன் காங்கிரஸ் கட்சி தனது ஓரங்க நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. இந்த நாடகத்தில் கதாநாயகன் இருந்தால் வில்லனும் இருந்தாக வேண்டுமே! இந்நாடகத்தில் பிரதமர் மனோகன்சிங் வில்லன் ஆக்கப்பட்டுவிட்டார் அய்யோ, பாவம்;
டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் 27 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ஊட கத்துறைத் தலைவர் அஜய்மக்கான் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கொண் டிருந்தார். அப்போது அங்கே எதிர்பாராவிதமாக வருகை தந்த ராகுல்காந்தி,
“குற்ற வழக்குகளில், தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏக்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத் தரவை செல்லத்தகாததாக்கும் வகையில் மத்தியஅரசு,அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்ற முற்பட்டுள்ளது. அது முட்டாள்தனமானது; இந்த விவகாரத்தில் மத்திய அரசு செய்தது மிகவும் தவறானது. அந்த அவசர சட்டம் கிழித்து, தூக்கி எறியப்பட வேண்டும்; இது என் தனிப்பட்ட கருத்து என்று பத்திரிகையாளர் களிடம் கூறிவிட்டுச் சென்றார்.
பிரதமர் மன்மோகன்சிங், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றார். அவசர சட்டத்திற்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தாம் நாடு திரும்பியதும் அமைச்சரவையைக்கூட்டி முடிவு எடுக்கப்படும்என்று கூறினார்.
காங்கிரஸ் அரசு அவசர சட்டம் கொண்டு வந்து குற்றவாளிகளைக் காப்பாற் றத் துடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் லாபத்திற்காக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை குப்பையில் எறிந்துவிட்டு ஜன நாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் என்று நாடெங்கும் மக்களின் கோபாவேச அலை வீசியது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் ராகுல்காந்தி,தமது கட்சி தலைமை தாங்கும் அரசின் அமைச்சரவை கூட்டம் எடுத்த முடிவை முட்டாள்தனமானது; கிழித்து எறிய வேண்டும் என்று கூறு வது பிரதமர் பதவியை அவமானப்படுத்தும் செயலாகும். நாட்டின் ஜனநாயக அமைப்பின் ஆணிவேரையே வெட்டி எறிய முற்பட்டு, பிரதமரை சிறுமைப் படுத்தி ராகுல் காந்தி இழிவுப்படுத்திய அவமானத்தையும், வழக்கம்போல் ஜீர ணித்துக் கொண்டுதான் சுயமரியாதையை அடியோடு நாசப்படுத்திக்கொண் டார் பிரதமர். ஐயோ, பாவம்! சோனியாகாந்தி இப்பொழுது மகன் ராகுல்காந்தி சுமத்தும் பாவ மூட்டைகளைச் சுமந்து நிற்கிறார் மன்மோகன்சிங்.
மொத்த மந்திரிசபையையும் “படு முட்டாள்கள்” என்று ராகுல்காந்தி திமிரோடு
வசைபாடியதையும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சகித்துக் கொண்டது படு கேவலமாகும். கடைசியில் நாட்டு மக்களின் கோபமும், எதிர்ப்பும் கண்டு பயந்து “அவசரச் சட்டத்தையும் - மசோதாவையும்” மன்மோகன்சிங் அரசு ரத்து செய்துவிட்டது.
காங்கிரஸ் அரசின் கடைசி நாட்கள் எண்ணப்படுகின்றன.
No comments:
Post a Comment