Thursday, October 3, 2013

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ம.தொ.மு. கொடி உயர்ந்தது!

#வைகோ வின் திருக்கரத்தால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ம.தொ.மு கொடி உயர்ந்தது!

திராவிட இயக்கத்தில் தொழிலாளர்களின் பங்கு எத்தகையது என்பதை இந்த நாடறியும். ஆளுங்கட்சியாக ஒரு இயக்கம் இருக்கும்பொழுது பலனை எதிர் பார்த்து வரும் வேடந்தாங்கல் பறவைகள் போலல்லாமல், ஒட்டியும் ஆம்ப லும் போல இருக்கும் தொழிலாளர்கள்தான் அந்தக் காலக் கட்டங்களில் உணர் வுபூர்வமாக இயக்கத்திற்குப் பணியாற்றி, ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிலாளர்களை அசைத்துப்பார்க்க முயன்ற ஆளுங்கட்சிகள் தோல்வியைத் தான் சந்தித்து இருக்கின்றன.


தொழிலாளர்களுக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் ஊட்டி உணர்வு பூர்வமா னவர்களாக உருவாக்கிட வேண்டுவது அரசியல் இயக்கங்களில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களின் கடமை. தொழிலாளர்கள் விரும்புகிற காலக் கட்டத்தையறிந்து வாயிற்கூட்டங்களை நடத்த ஒத்துழைக்க வேண்டுமே தவிர, தேர்தல் காலங்களில் அல்லது தனக்கு பயன் கிடைக்குமென்ற காலக் கட்டங்களில் மட்டுமே பயன்படுத்த நினைத்தால் அவர்களின் போராட்ட குணங்கள் மழுங்கிப்போய் செயலற்றவர்களாக மாறிவிடுவார்கள்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கும் சுறுசுறுப்பான தோழர்களைக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு தலைவர் வைகோ அவர் களின் தொடர்ந்த போராட்டங்கள், தோழர்களுக்கு அவர் இடுகிற பணிகள்தான்.
தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளக்கூடாது. தொழிற்
சங்க நடவடிக்கைகள் தொய்வின்றி இருந்தால்தான் அவர்களுக்கு தொழிற்
சங்கப் பணியின் மீது இருக்கிற ஆர்வம் குறையாது. வருடத்தில் ஒருமுறை
யாவது அவர்கள் சார்ந்துள்ள துறையைச் சார்ந்த நமது தொழிற்சங்கத் தொழி
லாளர்கள் இடம் பெற்றுள்ள மாநாட்டை நடத்த வலியுறுத்த வேண்டும். அவர் களது ஆர்வத்திற்கும் வேகத்திற்கும் உந்துதலாக இருந்திட வேண்டும். அவர் கள் சார்ந்துள்ள அரசியல் இயக்கமும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.


மறுமலர்ச்சி திமுகவைப் பொறுத்த வரையில் தலைவர் வைகோ அவர்கள் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி ஏனைய தொழிற்சங்கங்களைப் போல
பிரகாசிக்க வேண்டுமென நினைப்பவர்.நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த
காலத்தில் தொழிலாளர் களுக்காகப் போராடியதைப் போலவே தொழிற்சங்க
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது போலவே இன்றும் பங்கேற்கிறார்

இரயில்வே தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தலைவராக இருந்தபோது அண் ணன் சி. கண்ணையன் தலைவர் வைகோவை முழுமையாகப் பயன் படுத்திக் கொண்டு, இரயில்வே தொழிலாளர்களின் எண்ணற்ற கோரிக்கை களை நிறை வேற்றிக் கொண்டு வருவதைக் கண்டறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் ‘நீங்கள் வைகோவை நல்ல முறையில் பயன்படுத்தி சங்கத் தை வளர்த்து உள்ளீர்கள். எங்களால் அப்படிப்பட்ட செயலை ஆற்ற முடியவில் லை” என்று ஆதங்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேசி வாதாடியதும் இரயில்வே தொழிலாளர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாதது. சில சமயங் களில் தலைவர்வைகோ இரயில்வே தொழிலாளர்களின் வேலை நேரத்தை உத்தேசித்து, காலை 6 மணிக்கே காலை உணவுகூட புசிக்காமல் மாலை 4 மணி வரை ரயில் நிலையங்களிலும் தொழிலகங்களிலும் தொழிலாளர்களை சந்தித்துள்ளார்.இடையிலும் உணவு அருந்தமாட்டார்.

1980ஆம்ஆண்டு திருச்சி பொன்மலை தொழிலகத்தை பார்வையிட கழக அமைப்புச் செயலாளர் சி. கண்ணையன், தலைவர் வைகோவை அழைத்துச்
சென்றபோது, தலைவரின் தோற்றமே அங்கிருந்த தொழிலாளர்களை மெய்சி லிர்க்க வைத்தது. கிரேன் மேலிருந்து ரோஜா மலர்களைத் தூவி, பிரம்மாண் டமான மாலைகளை அணிவித்து, சால்வைகளைப் போர்த்தி ஆனந்தக்கூத்தா டினார்கள்.தலைவரைப் பயன்படுத்தி சங்கத்தில் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்து, அவர்களது கோரிக்கைகளை தலைவரிடம் எடுத்துக் கூறி நிறைவேற் றிட கண்ணையன் அவர்கள் பெரிதும் உழைத்தார்.

தலைவர் வைகோவின் கடுமையான உழைப்பின் பலனாக 55ஆண்டுகாலமாக
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தில் இருந்த, 30 கோடி ரூபாய்க்கு மேல் மூலதனம் கொண்டிருந்த,எழும்பூரிலிருந்து திருவனந்தபுரம் வரை வியா பித்திருந்த, 63 ஆயிரம் இரயில்வே தொழிலாளர்களை உறுப்பினர்களாகக்
கொண்டிருந்த, திருச்சிராப்பள்ளி தென்னக இரயில்வே தொழிலாளர்கள் கூட்டு றவு நாணயச் சங்கத்தை, நமது தொழிற்சங்கம் கைப்பற்றியது. அந்த வளர்ச்சிக் கு வெற்றிக்கு உழைக்கத் தயாராக இருந்த தலைவர் வைகோவை முழுமை யாக அன்று அண்ணன் கண்ணையன் பயன் படுத்திக் கொண்டதே காரணமா கும். இன்று இரயில்வே பரிசோதகர்கள் படுத்துறங்கிச் செல்ல படுக்கை வசதி
கிடைத்துள்ளதற்கு தலைவர் வைகோ தான் காரணம் என்பதை அவர்கள் மறக் கமாட்டார்கள்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை 2002 இல் தனியாருக்கு தாரை வார்ப்பதை அன்றைக்கு அனுமதித்து இருந்தால் அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கும்.அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து அதைத் தடுத்து நிறுத்திய பெருமை தலைவர்
வைகோவையே சாரும். அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களும் நெய் வே லிக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்ததை அவர்கள் மறந்திருக்க வாய்ப் பில்லை.

தபால் தந்தி ஊழியர்கள் 162 பேர் வேலை வாய்ப்புச் செய்தி அறிவிப்பின் மூலம் பெற்ற வேலையை நம்பி சிலர் திருமணம் செய்து கொண்டனர்,சிலர் தங்கைக் கு திருமண ஏற்பாடு செய்யத் தொடங்கினர், சிலர் கடன் வாங்கி வீடு கட்டத் தொடங்கினர். ஆனால் மத்திய அரசாங்கம் கொள்கை முடிவு என்ற அடிப்படை யில் அதை ரத்து செய்து அதன் காரணமாக அவர்கள் வேலை இழந்தனர். எல் லாத்தரப்பு அரசியல் கட்சித் தலைவர்களையும் அணுகினர்.பலன் இல்லை.

நீதிமன்றத்தை இறுதியாக அணுகிய போது, அரசாங்கத்தின் கொள்கை முடி வில் தலையிடமுடியாது என்று கூறிவிட்டனர். இறுதியாக தொழிற்சங்கத்
தலைவர் மாசிலாமணி மூலமாக தலைவரிடம் வந்தனர். அப்போதைய பிரத மர் வாஜ்பாய் மற்றும் துறை அமைச்சர் பிரமோத்மகாஜன் ஆகியோரைச் சந் தித்து வாதாடி, மீண்டும் அந்தத் தொழிலாளர்களுக்கு பணி கிடைக்கச் செய்தார்.

ஊட்டியில் இயங்கிவரும் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை நிதி
நெருக்கடியின் காரணமாக கதவடைப்பு செய்கிற நிலைமை எழுந்தபோது,மத் திய அரசிடம் வாதாடி புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யச் செய்து,அந்த ஆலையை இயங்கச் செய்து,தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றினார். ஆக தலைவர் வைகோ அரசியல் தலைவராக மட்டுமல்லாது, ஒரு தொழிற் சங்கத் தலைவராகவும் இருந்து, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி உள்ளார்.

அதுமட்டுமல்ல, கடந்தகாலங்களில் 

10.6.1994 தொ.மு.ச. பேரவையாக இருந்த போது மதிமுக பொதுச் செயலாளராக கலந்துரையாடல் கூட்டத்திலும்

9.7.1994 இல் கரூரில் நந்தினி கூட்ட அரங்கில் நடைபெற்ற மறுமலர்ச்சி தொழி லாளர் முன்னணி என்ற பெயர் சூட்டிய பொதுக்குழு, 

21.07.1996 இல் திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்ற ம.தொ.மு.பொதுக்குழு, 

8.6.2000 இல் முன்னணியின் பொதுக்குழு, 

7.1.2001 இல் தாயகத்தில் நடைபெற்ற முன்னணியின் செயற்குழு, 

07.03.2005 இல் தாயகத்தில் நடைபெற்ற 2005 திருப்பூர் மேதின மாநாடு கலந்து ரையாடல் கூட்டம், 

30.4.2005 திருப்பூர் இராமசாமி முத்தம்மாள் திருமண மண் டபத்தில் நடைபெற்ற முன்னணியின் பொதுக்குழு, 

1.5.2005 இல் நடைபெற்ற திருப்பூர் மே தின மாநாடு.

2007 இல் கடலுர் மேதின மாநாடு.

1.5.2008 ஆவடி மே தின மாநாடு.

21.02.2009 இல் தாயகத்தில் நடைபெற்ற முன்னணியின் செயற்குழு,

1.5.2011 தாயகத்தில் நடைபெற்ற மே தின விழா, 

1.5.2012 இல் தாயகத்தில் நடைபெற்ற மே தின விழா 

1.5.2013 இல் நெல்லையில் நடைபெற்ற மே தின விழாக்களில் பங்கேற்றது. 

12.08.2005 இல் தொழிற்தகராறு சட்டம் 1947, 1936 சம்பள பட்டுவாடா சட்டம், 
1970 ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் மற்றும் நீக்கல்,1965 போனஸ் வழங் கல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர கழக நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக தனி நபர் மசோதா தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தது.

2005 அக்டோபர் 20 இல் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச் செயலா ளர் சு. துரைசாமி. தலைவர் செ.முத்து, முன்னாள் தலைவர் டி.பி. மூர்த்தி ஆகி யோரை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து போனஸ் உச்சவரம்பை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியது,

11.2.1997 இல் பெரியார் திடலில் நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்ன ணி அனைத்துப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர் மாநில மாநாடு,சென்னை பல்லவன் சாலையில் நடைபெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணா நோன்பில் பங்கேற்றது, சுற்றுப் பயணங்களின்போது ஆங்காங்கு தொழிற்சாலை மற்றும் போக்குவரத் துப் பணிமனைகளில் ம.தொ.மு.கொடியை ஏற்றி வைத்து சங்கப் பெயர்ப் பலகை களை திறந்து வைப்பது, வாய்ப்புள்ள இடங்களில் தொழிலாளர்களின்
கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசுவது என்று இத்தனை நிகழ்ச்சிகளில்,மறு மலர்ச்சி தொழிலாளர் முன்னணி தொழிற்சங்க வளர்ச்சிக்காக கலந்து கொண் டு ஆற்றிய பணிகள் கொடுத்த உற்சாகம் ஒத்துழைப்பு ஆகியவை படிக்கிற நமக்கு வியப்பைத் தரக்கூடியதாக உள்ளது. இன்னும் நினைவுக்கு வராத பல நிகழ்ச்சிகள் உண்டு. அதன் காரணமாக நமது அமைப்பு தொழிலாளர்கள் மத்தி யில் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களாக இருந்தபோதிலும் மரியா தைக்கு உரியதாக இருந்து வருகிறது.

கடந்த 29.08.2013 அன்று சென்னை குறளகத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு நுற் பாலைத் தொழிலாளர்களின் ஊதிய முடிகிற தருவாயில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் எதிர்பாராத விதமாக வந்து கலந்துகொண்டபோது, ஒவ் வொரு மத்திய தொழிற்சங்க அமைப்பின் பெயருடன் கலந்து கொண்டவரின் பெயரையும் கூறி அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பினார்.

ம.தொ.மு.சார்பில் பங்கேற்ற மதுரை மகபூப்ஜான் தன்னை செயலாளர் மறும லர்ச்சி தொழிலாளர் முன்னணி என்றபோது. அமைச்சர் குறுக்கிட்டு ‘வைகோ கட்சி’ என்று கூறுங்கள் என்று கூறிச் சிரித்தபோது அனைவரும் சிரித்தனர்.என் வரிசை வந்தபோது என் பெயரைச் சொல்லி ‘வைகோ கட்சி’ என்றபோது அதே அமைச்சர் அமைப்பின் பெயரைச் சொல்லுங்கள் என்று  நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.அடுத்து தர்மபுரி மாவட்ட தோழர் பெயரைச் சொல்லி மறுமலர்ச் சி தொழிலாளர் முன்னணி என்றபோது, அமைச்சர் குறுக்கிட்டு ‘பாருங்கள் நீங் கள் கூறுவதற்கும் அவர் கூறுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது’ என்று என்னைக்காட்டி நகைச்சுவையுடன் கூறினார்.

அக்கூட்டத்தில் இது ஒரு பிரதான மானதாக இருந்தது என்பதோடு ‘வைகோ என்றால் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி’, ‘மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி என்றால் வைகோ’என்று பல்வேறு பணிச்சுமைக்கு மத்தியில் உள் ள அமைச்சருக்கே நினைவில் இருக்கும் போது, பல்வேறு அமைப்புகளிலி ருக் கும் தொழிலாளர்கள் அதிகாரிகளுக்கு நினைவில் இருக்கும் என்பதையே
வெளிப்படுத்துவதாக உணர்த்தியது.

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி இணைப்புச் சங்கங்களில் தங்களை
இணைத்துக்கொண்டுள்ள தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை விவரிப் பதற்கு வார்த்தைகளே கிடையாது. கடந்த 20 ஆண்டுகளாக தலைவர் வைகோ அவர்களின் ஆணையை ஏற்று பணிக்கு  பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டா லும் கவலைப்படாமல், அதனால் தங்களது குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுமே
என்கிற சிந்தனைக்கும் செல்லாமல், அவர் அறிவித்த ஆர்ப்பாட்டங்கள், 
போ ராட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் எல்லாம் பங்கேற்று வருவதோடு, சிறைநிரப்பும் போராட்டத்திலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார் கள்.

தாங்கள் பணியாற்றும் இடங்களில் தொழிற்சங்கங்களின் பெயர்ப் பலகை களில் தலைவர் வைகோ அவர்களின் பலவிதமான வகைகளில் அமைந்துள்ள படங்களை வரைந்து உள்ளனர். தொழிலாளர்களிடம் இருந்து எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் அவர்களின் பிரச்சினையை நிர்வாகத்திடம் பேசி தீர்த்து வைத்து வருகிறார்கள்

நாம் ஆண்ட கட்சியும் அல்ல. ஆளும் கட்சியும் அல்ல. எப்படி தொழிலாளர் க ளின் பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்க முடிகிறது என்று கேட்கிறபோது,
எல்லாம் இரண்டெழுத்தால் ஏற்படுகிற மகிமை அதாவது தலைவர் ‘வைகோ’
அவர்கள் பெயருக்கு இருக்கிற மரியாதை என்பார்கள்.

அந்த உழைப்பும் மரியாதையும் தூத்துக்குடி அனல்மின் திட்டத்தில் மதொமு சங்கம் உருவாக அடித்தளமாக அமைந்துள்ளது. அங்குள்ள நமது தோழர்கள் தொழிற்சங்கம் தொடங்க மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக மாநில இலக்கிய அணித் துணைச் செயலாளர் எரிமலை வரதன் சென்னை வரும்போதெல்லாம் கூறுவார்.அவருடன் அவ்வப்போது வரும் டேவிட்ராமும் கூறுவார்.அது மாநி ல அரசின் பொதுத் துறை நிறுவனம். தூத்துக்குடியிலிருந்து எபனேசர்தாஸ், சங்கரகோபால் ஆகியோரும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள்.

தலைவர் வைகோ அவர்களின் திருக்கரத்தால் தான் கொடியேற்றி,பெயர்ப் பலகை திறந்து, இனிப்பு வழங்கி,சங்கத்தைத் தொடங்க வேண்டு மென்பதே பிரதானமாக இருந்தது.அவர்களின் அந்த ஆர்வத்திற்கு அணைபோடாமல் வடி கால் அமைத்து வழி வகுத்துத் தந்தவர் மாவட்டச் செயலாளர் ஜோயல் ஆவார் என்றால் அது மிகையாகாது.

திடீரென 02.08.13 அன்று சங்கத்தை தலைவர் வைகோ அவர்கள் திறந்துவைக்க வருகிறார்கள் என்று தகவல் தெரிவித்தார்கள். ஆனால் தலைவர் வைகோ தலைமையில் அன்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திருச்சியில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற இருந்ததால் ஒத்திவைக்கப்பட் டது. மீண்டும் 02.9.2013 அன்று நடைபெற்றது. 

மதுரையில் ஒரு திருமணத்தில் பங்கேற்றுவிட்டு பகல் 1.30 மணிக்கு தூத்துக் குடியில் உள்ள சுகம் விடுதிக்கு வந்திறங்கிய தலைவர், பயணக் களைப்பின் காரணமாக ஓய்வெடுக்கச்சென்று விடுவார் என்றே வணக்கம் தெரிவித்து நின் றார்கள் அங்கிருந்தோர்.ஆனால் வந்திருந்தோருக்கெல்லாம் வணக்கம் தெரி வித்து நலம் விசாரித்த தலைவர் அறைக்குள் சென்றதும், தமிழ்நாடு மின் வாரி ய மறுமலர்ச்சி தொமுசங்க மாநில, திட்ட நிர்வாகிகளை உள்ளே அழைத்தார்.

தலைவரிடம் வாழ்த்துப் பெற்ற நிர்வாகிகளிடம் 30 நிமிடங்கள் அவர்களின் கோரிக்கைகளான புதிய ஓய்வூதியத் திட்டம், அனல்மின் திட்டத்தில் உள்ள மருத்துவ வசதி குறைபாடு, நடைபெற்று வரும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தை, ஒப்பந்தப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத்தை உயர்த்துவதோடு ஏற் படுகிற காலியிடங்களை பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத்
தொழிலாளர்களைக் கொண்டு நியமித்து அவர்களை நிரந்தரப்படுத்துவதோடு
மீதியுள்ள காலியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்பிட
வேண்டுவது ஆகியவற்றின் அடிப்படை விவரங்களைக் கேட்டறிந்தார்.

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் வளர்ச்சியில் தலைவர் வைகோ
கொண்டுள்ள அக்கறை இன்றுவரை ஒரு எள்ளளவுகூட குறையவில்லை என் பதை இந்தச் சந்திப்பு வெளிப் படுத்திய தோடு, அங்கிருந்த தொழிலாளர் தோழர் களுக்கு தொழிற் சங்கம் தொடங்கிட வேண்டு மென்கிற ஆர்வத்தை மேலும் அதிகப் படுத்தியது.

சுகம் விடுதியில் இருந்து மாலை 4.30க்கு புறப்பட்ட தலை வர் வைகோ அவர் களை அலைக்காற்றுக்கு இடையில் இரு தொழிலாளத்தோழர்கள் கண் விழித் து விடிய விடிய கம்பங்களில் கட்டிய ம.தொ.மு. கழகக் கொடிகள் பட் டொளி வீசிப் பறந்து அசைந்தாடி வரவேற்றது.எல்லையில் வரவேற்பளித்தனர். சுமார்
75 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ம.தொ.மு.கொடியுடன் தலைவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

என்.எல்.சி. தமிழ்நாடு மின்வாரிய நிறுவனவாயிலில் தலைவர் வைகோ 
ம.தொமு.கொடியேற்றி பெயர்ப்பலகை திறந்து வைத்தார். மாவட்டக் கழகச்
செயலாளர் வழக்கறிஞர் எஸ். ஜோயல் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்க, ஆர்.சுந்தர்ராஜ் வரவேற்புரையாற்றிட, பி.முருகபூபதி முன்னிலை வகித்தார். செ.நக்கீரன் தொகுப்புரை வழங்கினார்.

பின்னர் அனல்மின்திட்ட நுழைவாயிலில் தலைவர் வைகோ ம.தொ.மு. கொடி யேற்றி கல்வெட்டு, சங்கப் பெயர்ப் பலகையினை திறந்து வைத்தார். பணி முடித்து ஆலைக்குள்ளிருந்து வெளியில் வந்த ஆண், பெண் தொழிலாளர்கள், பொறியாளர்கள்,அதிகாரிகள் குழுமி நின்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக் கு மாவட்டச் செயலாளர் திட்ட சங்க ஆலோசகர் வழக்கறிஞர் ஜோயல் தலை மை தாங்க மாநில சங்க துணைத்தலைவர் மாநில இலக்கிய அணித் துணைச் செயலாளர் அ.எரிமலைவரதன் தொகுப்புரை வழங்கினார்.

திட்டத்தலைவர் என்.சங்கரகோபால்,பொருளாளர் ஆர்.டேவிட்ராஜ், முன்னி லை வகித்தனர், திட்டப்பொதுச் செயலாளர் ஐ.எபனேசர்தாஸ் வரவேற்பு உரை யாற்றினார். மாநில தலைவர் க.இளங்கோவன், பொதுச் செயலாளர் வழக்கறி ஞர் ஆவடி இரா. அந்திரிதாஸ்,பொருளாளர் ச. மணவாளன் ஆகியோர் உரை யாற்றினர். சகோதர தொழிற்சங்கத் தலைவர்கள் தலைவருக்கு சால்வைகள்
அணிவித்து மகிழ்ந்தனர். திட்ட நிர்வாகிகள் ஆ.பொன்ராஜ், சி.தங்கபாண்டி, கே. சின்னாண்டி, எஃப்.அண்டன்பர்னாந்து, எஸ். கார்த்திகேயன், என். சந்திரன், பி. முகம்மது ரபி,எம்.சின்னத்துரை, ஜே. அந்தோணிராஜ், எஸ். இசக்கி, எஸ். சந்த னராஜ், எம்.வேம்பன், கே. ராமதாஸ், ஆ.சண்முகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள்
இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். பி.கிருட்டிணன் நன்றி கூறினார்.

இறுதியாக தலைவர் வைகோ உரை ஆற்றினார். அவரது உரையின் ஆரம்பத் தைக் கேட்டவர்கள் இவர் என்ன அரசியல் தலைவரா? அல்லது தொழிற்சங்கத் தலைவரா என்று வியந்தனர்.அவர்களின் அத்தியாவசியமான கோரிக்கை களை அவர் வரிசைப்படுத்தி அதன் சாதகபாதகங்களை தெள்ளத் தெளிவாகக் கூறியபோது, அதிலும் குறிப்பாக புதிய ஓய்வூதியத் திட்டத்தினால் ஏற்படும் பின் விளைவு களைக் கூறியபோது, பேசாமல் தொழிற்சங்க வாயிற் கூட்டங் களுக்கு தலைவரையே அழைத்துவிடலாம் போல இருக்கிறதே என்று அவர் கள் நினைத்து இருக்கக்கூடும். அந்த அளவுக்கு விளக்கமாகவும் எளிமையாக வும் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.தலைவர் பேசி முடித்து புறப்பட்டுச்
செல்கிற வரை 4.55 மணிக்கு ஆலையிலிருந்து வந்த தொழிலாளர்கள்ஒருவர் கூட எழுந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி அனல் மின்திட்டத்தில் தலைவர் திருக்கரத்தால் திறந்து வைக்கப் பட்ட ம.தொ.மு. சங்கம் ஏற்றி வைக்கப்பட்ட ம.தொ.மு. கொடி தமிழ்நாட்டின் மாற்று அரசியலை உருவாக்க தொழிலாளர்களும் தயாராகி விடடனர் என்ப தை எடுத்துக்காட்டுவதாகவே தெரிகிறது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனத்திலேயே தொழிலாளர்கள் ம.தொ.மு.சங்கம் ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே போக்குவரத்துத் துறையில் அனைத்துப் பணிமனைகளிலும் நமது சங்கம் இயங்கி வருகிறது.

ஒரு அரசியல் இயக்கத்தின் பலத்தை நிருபிப்பது தொழிலாளர் அணியும். மக ளிர் அணியும் தான். இந்த இரு அணிகள் பலமாக இருந்து மக்கள் அணியும் இணைகிறபோது அரசியல் அரங்கத்தில் பயணத்தை எளிதாக மேற்கொண்டு இலக்கை அடைந்து விடலாம் என்பதை கடந்தகால வரலாறுகள் மெய்ப்பித் துள்ளன.தலைவர் வைகோவும் பலமுறை இதை வலியுறுத்தியுள்ளார்.. அந்த வரலாற்றை நாம் உருவாக்கிடுகிற வகையில் தலைவர் வைகோவின் கடந்த கால தற்போதைய தொழிலாளர் மேம்பாட்டுக் காக அவர் ஆற்றிய பணிகளை
அவர்களிடம் எடுத்துசொல்வோம்.

“ எங்கள் சுயலநலத்திற்காக ஒருபோதும் தொழிலாளர்களின் உரிமையை எந் தக் கட்டத்திலும், எந்த இடத்திலும் சமரசம் செய்யமாட்டோம் என்ற முழுத்
தகுதியோடு மறுமலர்ச்சி தி.மு.க.இருக்கிறது. வாருங்கள் தோழர்களே,வாருங் கள். விருப்பம் உள்ளவர்கள் வாருங்கள். எங்களிடம் நீதியும்,நேர்மையும், நியா யமும் இருக்கிறது,தமிழக உரிமைக்குப் போராடுகிறோம் என்ற நம்பிக்கை யுடன் தோழர்களே வாருங்கள், எங்கள் கரங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். பற்றிக்கொண்டு தொடர்ந்து போராடுங்கள்.

என் தொழிலாளத் தோழர்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறட்டும்” என் று தூத்துக்குடியில் கூறிய வைகோவின் வார்த்தைகளை விதைகளாக வாழ் வில் விதைப்போம், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியை வலுப்படுத் து வோம். மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கும், தலைவர் வைகோவுக்கும் துணை யாக இருப்போம்.

கட்டுரையாளர்:-வி.ஜார்ஜ் (ம.தொ.மு. )

No comments:

Post a Comment