Thursday, October 3, 2013

மறுமலர்ச்சி பயணம் ,தூத்துக்குடி மாவட்டம்-2 வது நாள்-பாகம் 2

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ, தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். 01.10.13 அன்று   ஆறுமுகநேரி, திருச்செந்தூர் வ.உ.சி. திடல், அமலிநகர், ஆலந்தலை ஆகிய இடங்களில் பேசினார். 

பிரசாரத்தில் வைகோ பேசியது:–

ஈழத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் பச்சிளங் குழந் தைகளையும், பெண்களையும், இளைஞர்களையும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது இலங்கை அரசு. அதேபோல் சிங்கள ராணுவம் 578 தமிழக மீனவர் களை இதுவரை கொன்று குவித்துள்ளது. ஆனாலும் மத்தியில் ஆளும் காங் கிரஸ் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக வேடிக் கை பார்க்கிறது.


கூடங்குளம் போராட்டத்தில் உயிரிழந்த இடிந்தகரை, மணப்பாடு மீனவர்கள் சாவுக்கு காரணமானவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மீன வ மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.



தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் ஆற்று மணல், கடற்கரை தாது மணல் ஆகிய இயற்கை வளங்களை போட்டி போட்டு கொள்ளையடித்தனர். இதனால் விவசாயிகள், மீனவர்கள் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வாழ்வு உரிமைக்காகவும் கடந்த 20 ஆண்டுகளாக ம.தி.மு.க. போராடி வருகிறது. சமுதாயத்தை மதுப் பிடியில் இருந்து மீட்க அறப்போராட்டம் நடத்தி வருகிறோம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் விலை வாசி உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஊழல் ஆகியவற்றால் இந்திய பொருளா தாரமே ஆட்டம் கண்டுள்ளது.

அநீதியை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க ம.தி.மு.க.வை ஆதரி யுங்கள். ஊழலற்ற, சுயநலமற்ற ஆட்சி அமைய எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் கட்சி, சாதி, மத ரீதியாக மக்களை பிரித்து பார்க்க மாட் டோம். தமிழக மக்கள் எங்கே கண்ணீர் வடித்தாலும் அங்கே நாங்கள் இருப் போம். மக்களின் கண்ணீரை துடைத்து துயரத்தை போக்குவாம்.

இவ்வாறு வைகோ பேசினார்.

மாவட்ட செயலாளர் வக்கீல் எஸ்.ஜோயல், நெல்லை மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், தேர்தல் பிரிவு செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் வித்யா கே.சுரேஷ், காயல் அமானுல்லா, கருப்ப சாமி பாண்டியன், சிவசகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment