பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தீர்மானம்-#மதிமுக மாணவர் அணி
திருச்சியில் நடந்த மாணவர் அணி மாநில துணைச்செயலாளர்கள் கூட்டத் தில் ம.தி.மு.க. பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்சியில் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் மாநில மாணவரணி மாநில துணைச் செயலாளர்கள் கூட்டம் 27.10.13 அன்று நடைபெற்றது.
மாணவரணி மாநில செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட செயலாளர் மலர்மன்னன், புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சி.டி.பி.சேரன், மணவை தமிழ் மாணிக்கம், பாசறை பாபு, மகேஷ் சங்கர், உமாபதி, முகமது சாதிக், ராசு எழிலன், எஸ்.ஆர்.எம்.ராஜா, நல்லியகோடன், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட அமைப்பாளர் வைகோ பழனிச்சாமி, மாநகர் மாவட்ட அமைப்பாளர் கனகராஜ், துணை அமைப்பாளர் மகுபு ஈஸ்வரர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு –
ம.தி.மு.க. மாணவரணி சார்பில் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்களுக்கான நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்ற 1014 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது.
அடுத்த மாதம் 24-ம் தேதி திருச்சி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, தஞ்சை, கோவை, ஈரோடு, வேலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட 11 மண்டலங் களில் நடைபெறும் பேச்சுப் போட்டியை சிறப்பாக நடத்த மண்டல பொறுப்பா ளர்கள், மாநில துணைச் செயலாளர்கள் ஏற்பாடு செய்வது.
3ம் கட்டமாக டிசம்பர் 22-ம் தேதி நடக்கும் பேச்சுப் போட்டியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் முதல் 3 பேரை தேர்வு செய்து முதல் பரிசாக ரூ. 1 லட்சம் 2 வது பரிசாக ரூ.50 ஆயிரம் 3 வது பரிசாக ரூ. 25 ஆயிரம் வழங்குவது. பேச்சுப் போட்டி யில் பங்கேற்பவர்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி திருச்சியில் நடைபெறும் விழாவில் சிறப்பிப்பது.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழக சட்டச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் திருப்தி அளிக்கவில்லை என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment