இடைத்தேர்தல்களில்,பணம் பட்டுவாடா செய்ததை தேர்தல்கமிஷன் தடுத்தது கிடையாது; ஓட்டுக்கு பணம் பெறுபவர் மீதும், நடவடிக்கை என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளது நாடகம்,'' , #மதிமுக பொது செயலாளர் #வைகோ குற்றச்சாட்டு
மதுரையில், நிருபரிடம் கூறியதாவது:
மதுரையில், நிருபரிடம் கூறியதாவது:
ஏற்கனவே, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தன.இதுகுறித்து, ஆதாரப்பூர்வமாக தகவல்கள் கொடுத்தும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது, "பணம் பெறுபவர் மீதும், வழக்கு பதிவு செய்து, ஓராண்டு சிறை தண் டனை பெற்றுத் தரப்படும்' என, தலைமை தேர்தல்அதிகாரி பிரவீண்குமார் கூறி யுள்ளார். இடைத்தேர்தல்களில், அரசியல் கட்சிகள், இரவு நேரங்களில் வீடு களில் பணத்தை போட்டு விடுகின்றனர். அப்பாவி மக்கள் என்ன செய்வர்.,என வே, பணம் கொடுப்பதை தடுக்கும் வழிமுறைகளை, தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும். இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில், பணம் பட்டுவாடா செய்த தை, தேர்தல்கமிஷன் தடுத்தது கிடையாது. எனவே, முக்கிய கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, வைகோ கூறினார்.
No comments:
Post a Comment