இந்தக் காலகட்டத்தில் வழக்கை நடத்துவதற்கும்,இந்தப் பிரச்சனையில் பாதிக் கப்பட்டவர் களுக்கு உதவுவதற்கும் சிறையிலே இருந்த சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன் சொத்தை விற்று இராஜபாளையத்தில் இருந்த சுப்பையா முதலி யார் என்பவர் மூலம் பாண்டிச்சேரிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அங்கு ஒட்டப்பிடாரம் மாடசாமிப்பிள்ளையைச் சந்திக்கிறார். அன்றைக்கு ஆயிரம் ரூபாய் என்றால் இன்றைக்கு பத்து இலட்சம். அதைவிட அதிகம்.
சிறையில் இருந்தவாறே தகவல் கொடுத்து, ஆயிரம் ரூபாய் பணம் ஏற்பாடு செய்து இந்தப் பணத்தை வழக்கு சம்பந்தப்பட்டவரிடத்தில் பாண்டிச்சேரியில் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று பணத்தைக் கொடுத்து அனுப்புகிறார். இதற்கு ஆதாரம் இருக்கிறது. ஒன்றல்ல பல ஆதாரங்கள் இருக் கின்றன.
நன்றி மறக்காதவர் சிதம்பரம் பிள்ளை. அவர் தன் மூத்த மகனுக்கு தன் தந்தை யின் பெயரான உலகநாதன் என்று பெயர் சூட்டினார்.அவர் அதிக நாள்வாழவில் லை. சிறிய வயதிலேயே மறைந்து விட்டார். அடுத்த மகனுக்கு ஆறுமுகம் என்று பெயர் சூட்டினார். காரணம். தூத்துக்குடியில் கப்பல் கம்பெனியைத் தொடங்குகின்ற காலத்தில் ஆறுமுகம் பிள்ளை என்பவர் பேருதவி செய்தவர். பல பேர் விதித்த தடைகளை எதிர்த்து இடையூறுகளை அகற்றுவதற்கு உதவி செய்தவர் பெயரை ஆறுமுகம் என்ற பெயரை தனது இன்னொரு மகனுக்கு வைத்தார்.
மற்றொரு மகனுக்கு திவான் போய் சந்தித்தாரே, வ.உ.சி. சுப்பிரமணியன் என்ற
பெயரை வாலேஸ்வரனின் அண்ணனை, அவர் சொன்னார் அல்லவா? அப்பா வின் நூல்கள் எங்கே கிடைக்குமோ முயற்சித்துப் பாருங்கள் என்று சொன்ன தாக எழுதி இருக்கிறாரே. அந்த சுப்பிரமணியன் என்ற பெயரை ஏன் வைத்தார் தெரியுமா? இவர் கோயம்புத்தூர் சிறையில் இருந்த போது பெரியபுராண நூலுக் கு பதவுரை போட்டு வெளியிட்டாரே, சி.கே.சுப்பிரமணிய முதலியார். அவர் தான் வ.உ.சி. அவர்களுக்குப் பேருதவி செய்தவர். வ.உ.சி.யின் துணைவியார் வருகிறபோது, அவரை சிறைக்கு அழைத்துப்போவது, இண்டர்வியூவுக்கு அழைத்துப்போவது, வழக்கு சம்பந்தமாக பல்வேறு விதங்களில் உதவுவது என எல்லாவற்றையும் செய்த அந்த சுப்பிரமணிய முதலியாருக்கு நன்றி தெரிவிக் கத்தான் தன் பிள்ளைக்கு சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தார்.

அதன்பிறகு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் 11 மாதம் 12 நாட்கள் சிறையில் கழித் து விட்டு வெளியே வந்தபிறகு அரிசி விற்றார், நெய் விற்றார். எல்லா சொத்து களையும் விற்றாயிற்று. வறுமை கக்ஷ்டம். மீண்டும் வக்கீல் தொழில் செய்வ தற்கு சன்னத் யார் தந்தார்? ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்த வெள்ளைக்காரன் வாலேஸ் என்பவன் தந்தான். அந்த நன்றியை மறக்காமல்தான் தனக்கு சன் னத் தந்த நீதிபதியின் பெயரை வைத்துத்தான் ‘வாலேஸ்வரன்’ என்று இவர் களுக்குப் பெயர் சூட்டினார்.
அவருடைய மகள்களுக்கு ஆனந்த வல்லி, மரகதவல்லி, வேத வல்லி, ஞான வல்லி என்று பெயர்கள் சூட்டினார். வேத வல்லி என ஏன் பெயர் வைத்தார்? தென் ஆப்பிரிக்காவில் வேதியப்பப் பிள்ளை என்று நாட்டு விடுதலைக்காகப் போராடிய பெரும் தீரர். அந்தக் காலத்தில் வ.உ.சி. படுகிற கக்ஷ்டங்களை கேள் விப்பட்டு அவர் ஐயாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தார். அது வ.உ.சி.க்கு வந்து சேரவேயில்லை. பிறகு ஒரு கட்டத்தில் வட்டிப்போட்டுத் தருகிறேன் என்றார். வேண்டாம் என்று விட்டார். தேவைப்பட்ட காலத்தில் பணம் வரவில்லை, கப் பல் கம்பெனியைத் தொடங்கி இவ்வளவு கக்ஷ்டப்பட்டு இவ்வளவு போராடிய இந்தப் பெருமகனுக்கு.
எந்தக் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரவாதியாக இருந்து, நாட்டின் விடுதலைக் காகப் போராடினாரோ அந்த இயக்கம் அவரை மதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியைவிட்டு அவர் வெளியேறினார். 1927 ஆம் ஆண்டு அவர் சேலத்துக்குச் சென்றார். சேலத்தில் நடைபெற்ற மூன்றாவது அரசியல் மாநாட்டில் பெரியார் கலந்து கொள்கின்ற அந்த மாநாட்டில் வ.உ.சி. கலந்து கொள்கிறார். அவர்தான் மாநாட்டுத் தலைவர்.
அந்த மாநாட்டில் பேச்சை எப்படித் தொடங்குகிறார் தெரியுமா? ‘நான் தேசாபி மானம் அற்றவன் என்றும் தேசபக்தி இல்லாதவன் என்றும் சிலர் புண்மொழி கூறியதையும், நாட்டில் சாத்வீகப் போராட்டம் நடத்தி, விடுதலை சுதந்திரம் கிடைக்க தேச அரசாட்சிக்குப் பலர் போராடும்போது, நீங்கள் பயந்து அச்சப் பட்டு பின்வாங்கி ஓடி விட்டீர்களே என்று ஒரு பாரிஸ்டர் என்னைப் பார்த்துப் புண்மொழி கூறியதையும், அதை எல்லாவற்றையும்விட பிரிட்டிக்ஷ் அரசிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு நான் தேசத் துரோகத்தில் ஈடுபடுகிறேன் என்று ஒருபத்திரிகை எழுதியதையும் நான் மறக்க முடியுமா?’ என்று சேலத்தில் பேசு கிறார்.
அந்தக் காலகட்டத்தில் நாட்டுக்காகவே தன்னைத்தந்த உத்தமனைக்கூடகளங் கம் சுமத்துவதற்கு சிலபேர் இருந்திருக்கிறார்களே என்று நான் எண்ணிப் பார்க் கிறேன். அவரது உள்ளம் எவ்வளவு சுக்கல் சுக்கலாக வெடித்து இருக்கும்?
அடுத்த ஆண்டு நாகப்பட்டினத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அங்கே இருக் கின்ற தேசபந்து சமாஜத்தின் ஏழாவது ஆண்டு விழா. அதற்குத் தலைவர் யார்? நமது வ.உ.சி. அவர் கலந்து கொள்ளும் அந்த விழாவை, பெரியாரின் குடியரசுப் பத்திரிகை வெளியிடுகிறது “சுயமரியாதை வீரர்களுக்கு ஆடம்பர வரவேற்பு வ.உ. சிதம்பரம் பிள்ளை அக்ராசனம்’’ என்று படம் போட்டு வெளியிட்டது.
No comments:
Post a Comment