Thursday, October 24, 2013

வைகோ வின் கடின உழைப்பால்

#வைகோ வின் (கழகப் பொதுச்செயலாளரின் ) கடின உழைப்பால் துரோகங் களைத் தூளாக்கி நிமிர்ந்து நிற்கிறது இயக்கம்! விருதுநகர் மாநாட்டில் சதன் திருமலைக்குமார்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆற்றிய சதன் திருமலைக்குமார்
உரை...

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டின் தலைவர், நம் பிரியத்திற் கும், பாசத்திற்கும் உரிய உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ் அவர் களே,தமிழகத்தின் விடிவெள்ளியாகத் திகழ்கின்ற என் அன்புக்குரிய பொதுச்
செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கத்தைத்தெரிவித்துக்கொள் கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் சுடரை ஏற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்த
நம் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியி னைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய தமிழகத்தின் இருளை நீக்கி ஒளியை ஏற்றுவதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார் மரியாதைக்குரிய பொதுச் செயலாளர் அவர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல் நாம் எல்லோரும் ஒரு தாயின்
வயிற்றில் பிறக்க முடியாததால் பல்வேறு தாய்மார்களின் வயிற்றில் இருந்து பிறந்த பிள்ளை களாக நாம் இருக்கின்றோம்.ஆனால் இந்த இயக்கத்தில் இருக் கின்ற எல்லோரும் ஒருதாய் மக்கள். ஒரே இனம் என்று கருதி எல்லோரையும் எவ்வாறு சகோதர சகோதரிகளாக பாவித்தார்களோ, அதுபோன்று நம்முடைய பொதுச்செயலாளர் அவர்கள் செயல்படுகிறார்.



இன்று நம் கழகத்திலே இருக்கின்றவர் களை மட்டுமல்ல, நண்பர்களையும்,
பொது மக்களையும் சகோதர,சகோதரிகளாகக் கருதி அவர்களுக்கு ஏற்படு கின்ற இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள் எது வந்தாலும் அதனால் ஏற்படும் கண்ணீரைத் துடைத்து ஆறுதலும், தேறுதலும் சொல்லி அரவணைத்து காத் துக் கொண்டு இருக்கின்ற ஒரே தலைவர் நம்முடைய பொதுச்செயலாளர் அவர்கள்.

எனக்கு அவர்களோடு 43 ஆண்டுகள் தொடர்பு உண்டு. நான் திருநெல்வேலி
மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறபொழுது, நாங்கள் பொதுச் செயலாளர் அவர்களின் பேச்சால், பண்பால் கவரப்பட்டு ஈர்க்கப்பட்டு அவர் களோடு நாங்கள் நெருங்கிப் பழகுகின்ற ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.

நான் அப்பொழுது இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் உள்ளத் தாலும், உருவத்தாலும் எப்படி இருந்தார்களோ, அதேபோலத்தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் என்றுமே ஒரு மாறாத குணம், எல்லோரிடமும் மனித நேயத் தோடு பழகுகின்ற அந்தப் பண்பு.நான்கூட கடைசிப் பேச்சாக சட்ட மன்றத்தில் பதிவு செய்திருக்கின்றேன்.

எனக்கு கிரீடங்கள் தேவையில்லை.நான் மறுபடியும் பிறக்கப் போவதில்லை.
என் நோக்கம் எல்லாம் என் அருகில் இருப்பவர்களின் துன்பத்தைத் துடைப்பது மட்டும்தான் என்று மருத்துவத்தின் தந்தை ஹிப்போ டேட்டஸ் அவர்கள் சொன்னதைப்போல் தனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் தன் சகாக்களுக்கு கொடுத்துவிட்டு அழகு பார்த்தவர் எங்கள் தலைவர் பொதுச் செயலாளர் அவர் கள் என்று சொல்லி நான் கடைசிப் பேச்சாக தமிழக சட்ட மன்றத்தில் அதைப் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன். அந்த அளவுக்கு பிறரது வாழ்வின் நல னைக்கண்டு பிறர் நன்றாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடையக் கூடிய தலைவர் நம்முடைய தலைவர்.

பொதுச்செயலாளர் அவர்களின் கடினஉழைப்பால் கழகம் இன்று இருபது ஆண் டுகள் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. நம்முடைய நண்பர் கள் சொன்னார்கள்.பல கட்சிகள் இப்போது காணாமல் போய்விட்டன.ஆனால், இருபது ஆண்டுகாலம் பல்வேறு சோதனைகளைக் கடந்து துரோகங்களைத் தூளாக்கி நம்முடைய கட்சி நிலைத்து நிற்கிறது. அதற்குக் காரணம் நம்முடை ய பொதுச்செயலாளர் அவர்களின் கடின உழைப்புதான்.

நாம் பொதுச்செயலாளர் அவர்களோடு கரம்கோர்த்து நின்று அவர்களின் வழி யைப் பின்பற்றி இந்த இயக்கத்துக்கு இன்னும் அதிகமாக, கடினமாக உழைக்க
வேண்டும். இந்த இயக்கத்துக்கு வலுசேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன்.

நான்கூட அவர்களிடம் தனிமையாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது விருது நகர் தொகுதியை வளப்படுத்த வேண்டும்.நீங்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் அவர்களை வேண்டிக் கொண்டேன்.நிச்சயமாக நம் தலைவர் அவர்கள் நாம் நினைப்பதுபோல் அவர்கள் நாடாளுமன்றம் செல்வார் கள். நிச்சயம் வெற்றி பெறுவோம். வாய்ப்புக்கு நன்றி.

டாக்டர் சதன் திருமலைக்குமார் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment