Tuesday, October 8, 2013

திருக்கழுக்குன்ற பகுதியில் நோய்க்கிருமி

திருக்கழுக்குன்ற பகுதி மக்களை நோய்க்கிருமிகளிடமிருந்து காப்பாற்றுக!


தமிழக அரசுக்கு #வைகோ கோரிக்கை


மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் லேடெக்ஸ்  (எச்.எல். எல்) பயோடெக் லிமிடெட் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருக்கழுக்குன்றம் தாலுக்கா, திருமணி ஊராட்சியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மனித உயிர்களைப் பறித்திடும் கொடிய கொள்ளை நோய்களான அம்மை, காசநோய், காலரா, போலியோ, ரேபிஸ்,ஆந்ராக்ஸ்,டெட்டனக்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், பால்வினை உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழித்து எதிர்வினை ஆற்றி குணப்படுத்தும் மருந் தைக் கண்டறிய, நடப்பாண்டில் மத்திய அரசு சுமார் 600கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்து, பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்குவதை வரவேற்கின்றேன். மாறிவரும் பருவ மாற்றங்களில் புதிது புதிதாக நோய் கிருமிகள் உருவாகி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடிப்பது அரசின் கடமை.

மனித சமூகத்திற்கு எச்சரிக்கை விடுகின்ற மேற்கண்ட கொள்ளை நோய்க ளுக்கு மருந்து தயாரிப்பது, அதே நோய் கிருமிகளைக் கொண்டு மருந்து தயா ரித்து விலங்குகளில் பரிசோதனை செய்து, பின் விஞ்ஞானப் பூர்வமாக நிரு பிக்கப்பட்டு, மனிதப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். இந்த வகையான பரி சோதனைக் கூடங்கள், குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டர் சுற்றளவில், மக் கள் நடமாட்டம் இல்லாத குளிர் பிரதேசத்தில் மட்டுமே சாத்தியமானது. என வேதான், வெறிநாய் கடிக்கான மருந்தை இமாச்சலப் பிரதேசம் கச்சோலியி லும், தமிழ்நாட்டில் மலை மாவட்டமான நீலகிரி குன்னூரிலும் இதற்கான தொழிற்சாலைகள் இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், இப்போது மத்திய அரசாங்கம் தொடங்க உள்ள கிரிமிகளுக்கான பரி சோதனைக் கூடம், மக்கள் அடர்த்தியாக வாழுகின்ற வெப்பமானப் பகுதியில் உருவாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.எனவேதான்,திருக்கழுக்குன்றம் தாலுக் காவில் அமைந்துள்ள ஊராட்சிகளான திருமணி,மேலேரிப்பாக்கம்,மோசிவாக் கம், சோகண்டி, தாழம்பேடு, புல்லேரி, அழகுசமுத்திரம், நென்மேலி, மலாலி நத்தம், பொன்விழைந்த கலத்தூர், திருவாணைக்கோயில், புதுப்பாக்கம், செல் வி நகர், ஒத்திவாக்கம், புன்னப்பட்டு, வேண்பாக்கம்,கொள்ளமேடு,வீராகுப்பம்,  ஆலவாய், பொன்பதிர்கூடம், ஆனூர், வள்ளிபுரம், நாவலூர், சாளூர் போன்ற ஊராட்சியைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்ட கிராமத்தில் வாழுகின்ற ஒரு இலட் சம் மக்கள், தங்கள் பகுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட் டத்தைப் பற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டபோது, மாத்திரை தயாரிக்கும் ஆயுர்வேத தொழிற்சாலை என்று சொல்லியுள்ளனர்.

இத் தொழிற்சாலையினுடைய விவரங்களை கணினியில் இருந்து சேகரித்து மருத்துவ அறிஞர்களிடம் கேட்டபோது, இவை கொடிய வைரஸ்கிருமிகளைக் கொண்டு பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடம்.இதனால்,எப்பொழுதும் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலைக் கூறியிருக்கின்றனர்.

எனவேதான் மக்கள் தங்களையும், தங்கள் சந்ததியினரையும் பாதுகாக்க கட்சி,
சாதி, மதம் கடந்து போராட்டக்குழுவை அமைத்து, இதுவரை நான்கு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். வருவாய் துறையினர் ஐந்து கட்டப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். சில மாதத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற் றுகையிட்டபோது, கோட்டாட்சியர் செல்லப்பா அவர்கள் போராட்டக்காரர் களிடம் விவரத்தைக் கேட்டு, அதற்கு பதில் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட மத் திய அரசு நிர்வாகத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், மத்திய அரசின் அதிகாரத் திமிரில் அவர்கள் வர மறுத்துள்ளனர்.

கோட்டாட்சியர், போராடும் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு காவல்துறையை அனுப்பி கட்டுமானப்பணியை நிறுத்தி,மக்களுடனும் நிர்வா கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான உடன்பாடு ஏற்பட்டால் மட்டு மே இப்பணியைத் தொடரவேண்டும் என்று அறிவித்து, அதன் அடிப்படையில், நிலைமையை விவரித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் எழுதி, அதன் நகலை போராடிய மக்களுக்கும் தந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 02ஆம் தேதி இப்பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் இந்த ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், கடந்த மாதம் செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்லப்பா அவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய கோட்டாட்சியர் நியமிக்கப்பட் டுள்ளார். இவரிடமும் சம்பந்தப்பட்ட ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநி திகள், தங்கள் ஐயத்தைத் தெரிவித்து, தங்களுக்கு உதவிடமாறு கோரிக்கை வைத்துள்ளனார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தங்களது ஐயத்தைப் போக்காமல் பணிகள் நடந்துவருவதைக் கண்டித்து, அனைத்துக் கட்சியைச் சார்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், மக்கள் பிரதிநிதி களும் 07.10.2013 அன்று ஆயிரக்கணக்காண பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அனைவரையும் கைது செய்து செங்கல்பட்டு நகரில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.

நெம்மேலி 1ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி ரதி அவர்களின் கணவரும், சமீபத்தில் இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட மறுமலர்ச் சி தி.மு.க.வின் திருக்கழுக்குன்ற ஒன்றியச் செயலாளர் சௌந்தர்ராஜன் மற் றும் திருமணி ஒன்றியக்குழு உறுப்பினர் நீலகண்டன் (அ.தி.மு.க.), மேச்சேரி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூபதி (தி.மு.க.), மோசிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் முனுசாமி (தி.மு.க.), ஆலப்பாக்கம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் உமாபதி (அ.தி.மு.க.), மேலேறிப்பாக்கம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சண்முகம்(தி.மு.க.)உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள்.அன்று மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து திருக்கழுக்குன்றம் பகுதியில் கொந்தளிப்பாக உள்ள நிலையை அறிந்து,போராடும் மக்களுடைய கோரிக்கை களை தமிழக அரசு கேட்டு அறிய வேண்டும்.

பாலாற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் லிட்டர் தண்ணீர் எடுக் கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்ட கிருமிகள் கலந்த கழிவுநீரை எப்படி வெளி யேற்றப்போகிறார்கள் என்பது அம்மக்கள் என்று அம்மக்கள் வினா எழுப்பு கிறார்கள்.

7ஆம் அறிவு, தசாவதாரம் போன்ற திரைப்படங்களால் நச்சுக்கிருமிகளால் ஏற் படும் ஆபத்துகளை அறிந்துள்ள மக்கள்,சோதனைக்கூடங்களில் இருந்து வெளியேறும் கிருமிகளாலும், பரிசோதனைக்கு உள்ளாகும் எலி, முயல், பன்றி, நாய் போன்றவை தப்பி வெளியே வந்தால் ஏற்படும் விழைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? என்பதை சம்பந்தப்பட்ட மத்திய அரசின் இந்துஸ்தான் லேடெக்ஸ்  (எச்.எல்.எல்.) பயோ டெக் கம்பெனி தெரிவிக்க வேண்டும்.

எனவே போராடும் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, உயர் அதிகாரிகள் தலைமையில், மக்கள் பிரதிநிதிகளையும், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரையும் கொண்ட குழுவை அமைத்து மேற்படி ஆய்வுக்கூடத்தைப் பரிசோதனை செய்து, இதில் பாதிப்பு இருக்குமேயானால், சம்பந்தப்பட்ட ஆய்வுக்கூடம் இயங்குவதற்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்.

மத்திய அரசு ஏற்கனவே, இதுபோன்ற ஆய்வுகளுக்காக நீலகிரி மாவட்டம் குன் னூர் உள்ளிட்ட நாட்டின் பிறபகுதிகளில் உருவாக்கப்பட்ட ஆய்வுக்கூடங்கள், தொழிற்சாலைகள் போதுமான நிதி ஒதுக்கப்படாமல் முடங்கி, தொழிலாளர் கள் வேலை இழந்து, ஆலைகளை மூடும் நிலையில் உள்ளதை நினைவில் கொண்டு, இங்கே ஒதுக்கி இருக்கின்ற நிதியைக் கொண்டு அத்தொழிற்சாலை களை புரணமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பரிசீலனை செய்திட வேண்டுகிறேன்.

நச்சுக் கிருமிகளிடமிருந்து தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட தொடர் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்ற திருக்கழுக்குன்ற சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நியாயமான போராட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க.வின் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘தாயகம்’                                                                                   வைகோ
சென்னை - 8                                                               பொதுச்செயலாளர்
08.10.2013                                                                       மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment