Thursday, October 3, 2013

மறுமலர்ச்சி பயணம் ,ஈரோடு மாவட்டம்-பகுதி 2

மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் காங்கிரஸ் கட்சியுடன் சேராத கட்சிகளுடன் மட்டும் தான் மதிமுக கூட்டணி வைக்கும் என்று #மதிமுக பொதுச்செயலர் #வைகோ கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் மறுமலர்ச்சி பயணத்தை சோலாரில் இன்று தொடங்கிய வைகோ பேசியதாவது:

அக்.3-ம் தேதி மதிமுக, ஈழத்தமிழர்களுக்கு முக்கியமான நாள்.

என் மீது தேவை யற்ற பழியை திமுக சுமத்திய நாள் இது.

அதுபோல விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை,புது தில்லிக்கு அழைத்து வந்து ஹோட்டலில் வைத்து மிரட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட காங்கிரஸ் அரசு முயற்சி செய்த நாள் இது.உரிய நேரத்தில் மக்களவைத் தேர் தல் நடத்தப்பட்டதால் மே மாதம் வாக்குப்பதிவு நடைபெறும். மத்திய அரசு இப் போது ஆட்டம் கண்டு வருவதால் எனது கணிப்புபடி பிப்ரவரி மாதத்தில் தேர் தல் வர வாய்ப்பு உள்ளது.

மற்ற கட்சிகளிடம் பண பலம் உள்ளது. ஆனால், மதிமுகவிடம் பண பலம் இல் லையென்றாலும் மக்களை திரட்டும் சக்தி, தன்னம்பிக்கை, அறநெறி உள் ளது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மதிமுக உறுதி யாக உள்ளது.காவிரி பிரச்னையில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு துணையாக இருக்கிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப் படுவதற்கு காரணமாக இருந்தது மத்திய அரசு தான்.

திமுக, அதிமுக இருக்கும் அணியில் மதிமுக இடம்பெறாது என திட்டவட்டமா க அறிவித்துவிட்டோம். சுயமரியாதை, தன்னம்பிக்கை இருந்ததால் சட்டப்பேர வைத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை.இளைஞர்கள் மூலம் இந்த தேர்தலில் நிச்சயம் மாற்றம் வரும்.தேர்தலுக்கு முன்பும், பின்பும் காங்கிரஸ் கட்சியுடன் சேரும் கட்சிகளுடன் மதிமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்றார் வைகோ.

இக்கூட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலர்கள் அ.கணேசமூர்த்தி எம்.பி. (ஈரோ டு), டி.என்.குருசாமி (நாமக்கல்), மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் பூங்கொடி சாமிநாதன், மாநில தொண்டர் அணி இணைச்செயலர் முசிறி ரவிச் சந்திரன், ஈரோடு நகரச் செயலர் பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.







No comments:

Post a Comment