Friday, October 18, 2013

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால்

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் வெல்ல முடியாத தலைவர் #வைகோ!

- விருதுநகர் மாநாட்டில் மல்லை சத்யா

பேரறிஞர் அண்ணாவின் 105ஆவது பிறந்தநாளையொட்டி,செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில், துணைப் பொதுச் செயலாளர்
மல்லை சத்யா ஆற்றிய உரை...

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105ஆவது பிறந்த நாள் விழாவினை மாபெரும் மாநாடாக கழகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. நமது விருப்பத்தை நிறை வேற்றப் போகின்ற மாநாடாக இந்த மாநாடு அமைந்து இருக்கிறது. விருதுநக ரின் சிறப்புகளை வரவேற்புரையில் நமது மாவட்டக் கழகச் செயலாளர் அண் ணன் ஆர்.எம்.எஸ்.அவர்கள் சொன்னார்கள். இதுவரை நடந்த மாநாடுகளில் இதற்கு நிகரான மாநாடு இல்லை என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்த மாநாடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து சிறப்பாக நடந்துகொண்டு இருக் கிறது.

இந்த விருதுநகரில் எங்கள் இதயத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஏற் பட்ட காயத்தை எப்படி எங்களால் மறக்க முடியும்? இங்கே இருக்கின்ற மக்கள் தங்கத்தை அளப்பதற்கு தங்கத்தை வைக்காமல் இரும்பை வைத்து அளப்ப தைப் போல்தான், தங்கத் தலைவனை அளந்து பார்ப்பதற்கு ஒரு தற்குறியை வைத்ததை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.மாணிக்கக் கட் டியை அளந்து பார்ப்பதற்கு ஒரு மண்ணாங்கட்டியை வைத்து நேர் செய்த மண் ணாக இந்த மண் இருக்கின்ற காரணத்தினால்,அவற்றைப் போக்குகின்ற வகை யில் இந்த மாநாடு இன்றைக்கு வெகு சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

திராவிட இயக்கத்தின் எழுச்சியை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். மறு மலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம் மட்டும்தான் அறிஞர் பெருந்தகை அண் ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆண்டு தோறும் கொண்டாடிக் கொண்டிருக்கிற பெருமையை தொடர்ந்து நாம் தான் பெற்று இருக்கின்றோம். அன்னைத்தமிழ் நாட்டின் விடுதலை இல்லமாக இருக்கின்ற தாயகத்தில், தலைவர் வைகோ பரிபாலனம் செய்கின்ற தாயகத்தின் மாட்சி யைப் பாருங்கள்.தந்தை பெரியார் உருவாக்கிய இயக்கம், திராவிடர் கழகம். அந்தக் கழகத்தினுடைய தலைமை அலுவலகம் சென்னையில் இருக்கிறது. அங்கே தந்தை பெரியாருக்கு மட்டும்தான் சிலை இருக்கிறது. திராவிட முன் னேற்றக் கழகத்தை உருவாக்கிய தலைவர் அண்ணா. அந்த அண்ணாவின் இயக்கம் தலைநகர் சென்னையில் இருக்கிறது. அங்கு அண்ணாவுக்கு மட்டும் தான் சிலை இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு இயக்கத்தைக் கட்டி எழுப்பினார். அவருடைய அலுவலகத் திலும் எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் சிலை இருக்கிறது.

ஆனால், திராவிட இயக்கத்தில் உண்மையான இயக்கமாக இருக்கிற மறும லர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டும்தான் நமது அன்புத் தலைவர் வைகோ அவர்கள்பெரியார் அண்ணா ஆகியோரை தனது இரண்டு கண்களாகப் பார்க்கின்ற காரணத்தினால்,பெரியார் சிலையையும், அண்ணா சிலையையும் நம்முடைய தாயகத்தில் காட்சியளிப்பதை நாடு பார்க்கிறது.

பெரியார், அண்ணா புகழைப் பாடுகின்ற தகுதி படைத்தத் தலைவராக அண்ணா வின் நிகழ்கால அடையாளமாக தலைவர் வைகோ மட்டுமே இருக்கின்ற கார ணத்தினால்தான் இந்தப் பயணத்தை அவரால் வெற்றிகொள்ளமுடிகிறது. திரா விட இயக்கம் ஏன் உருவாக்கப்பட்டது. காலத்தின் ஆணையை ஏற்று நடை மு றைப்படுத்த வேண்டிய கட்டாயம் திராவிட இயக்கத்திற்கு ஏன் வந்தது என்று
பார்த்தபோது, 1912 இல் டாக்டர் நடேசனார் அவர்கள் திராவிட சங்கத்தைக் கட்டி எழுப்பினார்.அவருக்குப் பின்னால் தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தை சர்.பிட்டி.தியாகராயர், டி.எம்.நாயர், நடேசனார் மூவரும் இணைந்து தென்னிந் திய நலஉரிமைச் சங்கத்தைக் கட்டி எழுப்பினார்கள். 1944 இல் திராவிடர் கழக மாக அது உருவானது. 1949 இல் அண்ணா அவர்களால் திராவிட முன்னேற்றக் கழகமாக அது பரிணமித்தது. 1972 இல் எம்.ஜி.ஆர்.அவர்களால் அண்ணா திரா விட முன்னேற்றக் கழகமாக உருவானது. 1994 இல் காலத்தின் ஆணையை ஏற்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை நமது அன்புத் தலைவர்
வைகோ அவர்கள் உருவாக்கினார்.

எனவே திராவிட இயக்கத்தினுடைய நிறுவனத் தலைவர்கள் நடேசனார் தொ டங்கி,தலைவர் வைகோ மட்டும் தான் நிறுவனத்தலைவர் என்ற பெருமையை பெற்றவராக இருக்கின்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் எவ்வளவோ இயக் கங்கள் இந்த மண்ணில் உருவாகி இருக்கின்றன. ஆனால், அவை கால ஓட்டத் தில் கரைந்துபோய்விட்டன.திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு,திராவிட இயக் கத்தின் சித்தாந்தங்களை வென்றெடுப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர் கள் தங்களுடைய வியர்வையைச் சிந்தியிருக்கிறார்கள்,இரத்தத்தைச் சிந்தி யிருக்கிறார்கள்.


சிந்தனை சிற்பி திவான் பகதூர் சிங்கார வேலர் தொடங்கி, திவான் பகதூர் இரட் டைமலை சீனிவாசன், திவான் பகதூர் இராஜ ரத்தின முதலியார், திவான் பக தூர் கருணாகர மேனன், பிரிமியர் சுப்புராயலு, பிரிமியர் பி.டி.ராசன், பிரிமியர் பனகல் அரசர், பிரிமியர் பொப்பிலி அரசர், பிரிமியர் முனியசாமி,பிரிமியர் சுப்பு ராயன், பிரிமியர் சக்கேவி ரெட்டி என்ற அந்த பிரிமியர்கள் வரிசைக்குப் பின் னால், திராவிட இயக்கத்தினுடைய லெனின் என்று போற்றப்பட்ட சர் ஏ.டி.பன் னீர்செல்வம்,சர் இராமசாமி முதலியார், சர் முத்தையா முதலியார் அவருக்குப் பின்னால் ராவ் பகதூர் பட்டங்களைத் தாங்கி ராவ் பகதூர் எம்.சி.ராஜா, போத் ரோ, நாராயண சாமி, தணிகாசலம் போன்றவர்கள் வந்தார்கள். திராவிட இயக் கத்தின் பகுத்தறிவுச் சித்தாந்தங்களை நாடு முழுவதும் பரப்பிய அஞ்சா நெஞ் சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி, திராவிட இயக்கத்தை அணியம் செய்கிறார்.

திராவிட தேசியத்தின் புரட்சிக்கவிஞர் என்று போற்றப்பட்ட பாரதிதாசன்,தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., முத்த மிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், மொழிநூல் அறிஞர் பாவலரேறு பெருஞ் சித்திரனார் இந்த வரிசையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.வரை நீண்டுகொண் டிருக்கிறார்கள்.பன்மொழிப் புலவர் அப்பாதுரையார்,சிறுகதை மன்னன் சிற் றரசு, குத்தூசி குருசாமி, இந்த மண்ணின் மைந்தராக உலவிய வாலிபப் பெரி யார் ஏ.வி.பி.ஆசைத்தம்பி, மூவலூர் இராமமிர்தம் அம்மாள், திருவரங்கம் பூலோக நம்பியார்,அலுமேலுமங்கை தாயார்,அன்னை நாகம்மையார்,அன்னை
மணியம்மையார், அன்னை சத்தியவாணி முத்து, புலவர் குழந்தை, புலவர்
கோவிந்தன், புலவர் பொன்னிவளவன்,புலவர் அருணகிரிநாதர், பாவலர் முடி யரசு,புதுமைக்கவி வாணிதாசன்,அரசவைக் கவிஞர் கண்ணதாசன்,அரசவைக் கவிஞர் புலமைப்பித்தன்,அரசவைக் கவிஞர் முத்துலிங்கம்,கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன்,நடிகமணி நாராயணசாமி, நடிப்பிசைப் புலவர் இராமசாமி, நடிகவேள் எம்.ஆர்.இராதா, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன், அண் ணல் தங்கோ,அரங்கண்ணல், மதியழகன், கோவை மதியழகன், தோழர் ஜீவா னந்தம்,செளந்திரபாண்டியனார்,இராமச்சந்திரனார், மாயவரம் நடராசன்,
மாணிக்கம் நாயக்கர், பாலசுப்பிரமணியம்,சண்முகம் செட்டியார், காஞ்சி தங்க வேலர், காஞ்சி மணிமொழியார்,அந்த வரிசையில் இந்த மண்ணில் உலவிய பெ.சீனிவாசன், க.சுப்பு,ஏ.வி.லிங்கம், சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத், உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற தினத் தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்த னார், தினகரன் நிறுவனர் கே.பி.கந்தசாமி, நடமாடும் பல்கலைக் கழகம் என்று போற்றப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன், நாடாளுமன்ற மேதை செழியன்,பைந் தமிழ் தேர்ப்பாகன் என்று போற்றப்பட்ட இனமான பேராசிரியர் அன்பழகன், சாதிக் பாட்சா, நாஞ்சில் மனோகரன், தத்துவக் கவிஞர் குடியரசு, தலைவரின் அன்பு நண்பர் காளிமுத்து, எஸ்.டி.சோமசுந்தரம் என்ற இந்த வரிசையில் இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருக்கிற தலைவர்களில் இராம. வீரப்பன், நீதிய ரசர் இரத்தினவேல் பாண்டியன், ஆனைமுத்து, ஆனூர் ஜெகதீசன், ஆசிரியர் வீரமணி,கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன் மறைந்து இன்றைக்கு
இந்த நுழைவாயிலில் காட்சியளித்து கொண்டிருக்கின்ற பேராசிரியர் பெரியார்
தாசன், வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான்,புளியங்குடி பழனிசாமி, வெற்றி கொண்டான் என்ற வரிசையில் திராவிட இயக்கத்தின் அடுத்த கட்ட வாரிசை
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டும்தான் தோற்றுவிக்க
முடியும் என்ற சூழலில், இந்த இயக்கத்தைத் தலைவர் வைகோ அவர்கள் உரு வாக்கினார்.

திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்து வருகின்ற அந்தச் சூழலில் அண்ணா உரு வாக்கிய பொதுக்குழு உறுப்பினர்களில் இருவர் மிச்சம் உள்ளவர்கள் ஒருவர் தலைவருக்கு அருகில் அமர்ந்து கொண்டிருக்கின்ற நமது அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி,இன்னொருவர் நெஞ்சமெல்லாம் வஞ்சகமும், வஞ்சனை யும் கொண்டு தான், தன் குடும்பம் என்று திராவிட இயக்கத்தைச் சிதைத்து சின்னா பின்னமாக்கிய மு. கருணாநிதி என்பது தான் திராவிட இயக்கத்தில் இன்றைக்கு இருக்கின்ற நிலைப்பாடாக இருக்கின்றது.

ஆக,திராவிடஇயக்கத்தினுடைய நிலைப்பாடுகளை தூக்கி நிறுத்துகின்ற இடத் தில் தலைவர் வைகோ அவர்கள் இருக்கின்றார்கள். இந்த இயக்கத்தைப்
பார்த்து விமர்சிக்கின்றவர்களுக்கு, எவராலும் வெல்லமுடியாதவர் வைகோ
என்பதனை அவர் நிரூபித்துக்கொண்டே வந்திருக்கிறார். தொடுத்த யுத்தம்
நாமாக இல்லாவிட்டாலும், அதை முடிக்கின்ற இடத்தில் தலைவர் வைகோ
அவர்கள்தான் வெற்றி பெற்றவராக இருந்துகொண்டிருக்கிறார் என்பதுதான்
வரலாறாக இருக்கிறது.

மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம் இல்லாமல் தலைவர் வைகோ அவர்களை தனிமைப்படுத்திவிடலாம் என்று நினைத்தால்,இருபதாண்டுக ளில் அவரால் முடியவில்லை. தலைவர் வைகோ வெல்லமுடியாதவராக
இருக்கிறார். சட்டமன்றத்தில் பிரதி நிதித்துவம் தராவிட்டால் இந்த இயக்கம்
கரைந்து காணாமல் போய்விடும் என்று  ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்
நினைத்தார்கள். அவர்களால் வெல்லமுடியாதவராக நமது அன்புத் தலைவர்
வைகோ அவர்கள் இருக்கிறார்கள்.

சென்ற ஆகஸ்டு கரூர் மாநாட்டுக்குப் பின்னால், கொடியவன் ராஜபக்சேவின்
சாஞ்சி வருகையைக் கண்டித்து,கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திட மத்தி யப்பிரதேசம் சென்றோம். பட்சி சோலை, தேசிய நெடுஞ்சாலை 69 இல் இந்த சாலையில் செல்ல தடை உள்ளது என்று துணை இராணுவம் சொன்னதற்குப் பின்னால், இந்த இடத்திலிருந்து ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாதா?என்ற போது, முடியாது. நீங்கள் திரும்பி தமிழ்நாட்டுக்குப் போங்கள் என்று சொன்ன போது, பெரியார் - அண்ணா வினுடைய ஒற்றை வடிவமாக தலைவர் வைகோ பாடிய அந்தப் போர்ப்பரணியை சாஞ்சிப் பரணியாக அண்ணன் அருணகிரி அவர்கள் தந்திருக்கிறார்கள்.இனிய தோழர்களே, துணை இராணுவம் திரும்பிப் போ என்று சொன்னது, 36 மணி நேர முற்றுகைப் போராட்டத்தில், 36 மணி நேரம் முடிகிறபோது, அந்த இடத்திலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் அழைத்துச் சென்றபோதுதான் வெற்றியைப் பெற்றவராக தலைவர் வைகோ இருக்கிறார் என்றால், வெல்ல முடியாதவர் வைகோ என்பதைத் தொடர்ந்து நிருபித்துக் கொண்டு வருகிறோம். இந்த இயக்கம் சின்ன இயக்கம் என்று எள்ளி நகை யாடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சில பெரிய கட்சித் தலைவர் கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணிகளைப் பொறுத்தவரை யில் நாம் மோசமாக இருப்பதைக் காட்டிலும் தனித்து இருப்பது சிறந்தது என்ற
முறையில் நாம் இருந்திருக்கிறோம்.தனித்து இருந்ததன் காரணமாக நம்மு டைய சுயத்தை, நம்முடைய பலத்தை நாடு அறிந்திருக்கிறது. இந்த ஈராண்டு காலத்தில் தலைவர் வைகோ அவர்கள் தனித்து சுயம்புவாக போராடி இருக்கி றார். தமிழக வாழ்வாதாரங் களுக்காகப் போராடி இருக்கிறார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக் கட்டிலுக்கு வர வேண்டும். எங்கள் அன்புத் தலைவர் வைகோ தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகுடம் சூட்டப்பட வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கும் இருக்கிறது. இது எங்களது அடிப்படை உரிமை. சில கட்சிகள் கொடுக்கின்ற நான்கு சீட்டுகளுக்காக காத் துக்கொண்டிருக்காமல்,இன்றைக்கு நாற்பது தொகுதிகளையும் தீர்மானிக் கின் ற இடத்தில் தலைவர் வைகோ இருக்கிறார். தலைவர் வைகோ தலைமையில் தான் தமிழ்நாட்டில் கூட்டணி அமைய இருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது. கூட்டணியைப் பொறுத்தவரை, தலைவர் வைகோ அவர்கள் போர்க் களத்தில் யாராலும் வெல்லமுடியாத வீரனாக இருப்பார்.ஆபத்து காலங்களில் உற்ற நண்பனாக இருப்பார். இவருடன் கூட்டணி வைத்தால் வெட்கப்படவோ,
வேதனைப்படவோ வேண்டிய செயல் ஒருபோதும் நடக்காது. மாறாக அவரை
இழந்துவிட்டோமோ என்ற எண்ணத்தை கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு உருவாக்குகின்ற இடத்தில் நம்முடைய தலைவருடைய பண்பாடு இருந்திருக் கிறது. அந்தத் தலைவனைக் கொண்டு நம்மால் சாதிக்க  முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சிறிய இயக்கம் என்று சொன் னார்கள், மூன்று தொகுதி, நான்கு தொகுதி நிற்பதற்குகூட சக்தியில்லை
என்று சொன்னவர்களும் உண்டு.இப்பொழுது நாற்பதையும் தீர்மானிக் கின்ற இடத்தில் தலைவர் வைகோ அவர்கள் தன்னுடைய சக்தியை தமிழ்நாட்டு அரசியலில் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். வருங்காலம் தலைவருடைய காலம். வெல்வோம் என்று கூறி விடைபெறுகிறேன் வணக்கம்.

மல்லை சத்யா இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment