#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008
அப்படிப்பட்ட நிலையில் கான்சாகிப் இவ்வளவு படைகளையும் கொண்டுவந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று 1759 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வாசு தேவநல்லூர் கோட்டையையும், நெற்கட்டுஞ் செவல் கோட்டையையும் தாக் கவேண்டும் என்று படைப் பிரிவுகளோடு வந்தான். 1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கிய யுத்தம் டிசம்பர் 26ஆம் தேதிவரை நடந்தது.அவன் வெற் றி பெறுவான் என்று பிரிட்டிக்ஷ்காரன் நினைத்தான். ஹைதர் அலியையேத் தோற்கடித்தவன் ஆயிற்றே. சூராதி சூரனாயிற்றே என்று நினைத்தார்கள். அப் படி நினைத்த அந்தப் போரில் கான்சாகிப் தோற்றான்.
பூலித்தேவன் வெற்றிபெற்றான். பீரங்கிகளும், துப்பாக்கிகளும் கொண்ட இத் தனை படைகளை வெள்ளைக்காரன் கொண்டுவந்து பெரும்படையோடு தாக்கி ஏறத்தாழ ஒருமாதகாலம் நடைபெற்ற முதல் யுத்தத்தில் பூலித்தேவன் வெற்றி பெற்றான். கான்சாகிப் தோற்கடிக்கப்பட்டான். புறமுதுகிட்டு ஓடினான். ஏன் அவனைப்பற்றிச் சொல்கிறேன் என்றால் அவனுடைய மனத்துணிவையும் நான் அறிவேன்.
காரணம், அதே கான்சாகிப் பிரிட்டிக்ஷ்காரனை எதிர்த்தான். மதுரைக்கு நானே அரசன் என்றான். கும்பினிக்கு கட்டுப்பட முடியாது என்றான். வெள்ளைக் கார னை எதிர்த்தான். பிரெஞ்சுக்காரனோடு உடன்பாடு வைத்தான். கடைசியில் அவன் அவனுடைய படையில் இருந்து துரோகம்செய்து பிரிட்டிக்ஷ்காரனோடு போய்ச்சேர்ந்த பிரெஞ்ச் தளபதி மார்ச்சந்த் திரும்ப வந்து நான் உன்னோடு திரும்பச் சேர்கிறேன் செய்தது தவறுதான் என்று திரும்பவும்சேர்ந்தான். வடக் கே நடந்த சண்டைகளில் சில வெற்றிகளை கான்சாகிப்புக்குத் தேடிக்கொடுத் தான் மார்க்சந்த்.
ஒருமுறை துரோகம் செய்தவன் எப்பொழுதும் துரோகம் செய்வான் என்பதை
நான் வரலாற்றில் படித்திருக்கிறேன். அதே மார்க்சந்த்தான் பிரிட்டிக்ஷ்காரன் பெரும்தனம் கொடுத்து அவனைச் சரி கட்டியதால் மீண்டும் துரோகியானான். தொழுகை நடத்துகின்ற வேளையில் கம்மந்தான் கான்சாகிப்பை சிப்பாய்கள் பலர் பாய்ந்துசென்று கைதுசெய்தார்கள். கான்சாகிப் கையில் வாள்கிடையாது. அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மதுரையில் அவனைத் தூக் கில் போடுகிறபோது முடிந்தது கதை, கயிறு கழுத்தை இறுக்கிவிட்டது இறந் தான் இனிசவம்தான் என்று போய்ப்பார்த்து கயிற்றை அவிழ்த்து கீழேபோட் டார்கள். துள்ளிவிழுந்து உட்கார்ந்தான். மூச்சை அடக்குகின்ற பயிற்சி பெற்றி ருந்தான்.
நான் வரலாற்றில் படித்திருக்கிறேன். அதே மார்க்சந்த்தான் பிரிட்டிக்ஷ்காரன் பெரும்தனம் கொடுத்து அவனைச் சரி கட்டியதால் மீண்டும் துரோகியானான். தொழுகை நடத்துகின்ற வேளையில் கம்மந்தான் கான்சாகிப்பை சிப்பாய்கள் பலர் பாய்ந்துசென்று கைதுசெய்தார்கள். கான்சாகிப் கையில் வாள்கிடையாது. அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மதுரையில் அவனைத் தூக் கில் போடுகிறபோது முடிந்தது கதை, கயிறு கழுத்தை இறுக்கிவிட்டது இறந் தான் இனிசவம்தான் என்று போய்ப்பார்த்து கயிற்றை அவிழ்த்து கீழேபோட் டார்கள். துள்ளிவிழுந்து உட்கார்ந்தான். மூச்சை அடக்குகின்ற பயிற்சி பெற்றி ருந்தான்.
முதல்தடவை அவனைத் தூக்கில்போட்டு அவன் சாகவில்லை. இரண்டாவது முறையும் அதேமுறையில் தூக்கில் போட்டார்கள் அவன் சாகவில்லை. மூன் றாவது முறை இரும்புக் குண்டுகளைக் காலில்கட்டி தூக்கில் போட்டார்கள் அப் பொழுது இறந்தான். அவன் உடம்பைத் துண்டு துண்டாக வெட்டி பல இடங் களில் புதைத்தார்கள். அப்படிப்பட்ட கம்மந்தான் கான்சாகிப் தோற்றது யாரிடம் என்று சொன்னால் மாமன்னர் பூலித்தேவனிடத்தில். அந்த யுத்தத்தை பூலித் தேவர் நடத்தியதே ஈடில்லா சாகசமாகும். இப்போரில் கான்சாகிப்பின் பீரங்கி கள் வாசுதேவநல்லூர் கோட்டையை தகர்த்தெறிய பன்முறை முயன்றன - தோற்றன - கடைசியில் வாசுதேவநல்லூர் முற்றுகை ஆரம்பமாயிற்று. இதில் இருமுனைத் தாக்குதலை பூலித்தேவர் நடத்தினார்.
நெற்கட்டும் செவலிலிருந்து வந்த கும்பினிப் படையை வாசுதேவநல்லூர் கோட்டைக்கு எதிர்ப்புறத்தில் இருந்து பூலித்தேவர் தாக்கினார். கோட்டைக் குள் இருந்த வீரமறவர்கள் கும்பினிப் படையைத் தாக்கினார்கள். இருதரப்பி லும் பெரும் உயிர்ச்சேதம். இறுதியில் பூலித்தேவர் வென்றார். கான்சாகிப் தோற்றுப்பின் வாங்கினான்.
1759 ஆம் ஆண்டு தோற்று ஓடிய கான்சாகிப் மீண்டும் இரண்டாவது முறை யாக 12 மாதம் கழித்து 1760ஆம் ஆண்டு அதே டிசம்பர் மாதம் வந்தான். இந்துஸ் தானத்தில் பிரிட்டிக்ஷ் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு என்ற புத்தகத்தை ராபர்ட் ஓர்ம் எழுதினார். முதல் பதிப்பு 1764 இல் வெளிவந் தது. பூலித்தேவரின் வாசுதேவநல்லூர் போர்க்களங்களுக்கு இந்நூலே மூல ஆதாரம். இந்நூல் மூன்று வால்யூம்களைக் (தொகுப்புகள்) கொண்டது. மொத் தம் 1291 பக்கங்களை உடையது. தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில் இந்த நூல் உள்ளது. இந்நூலின் முதல் தொகுப்பில் 15 இடங்களிலும் இரண்டாம் தொகுப்பில் 12 இடங்களிலும் பூலித்தேவர் பற்றியும், மூன்றாம் தொகுப்பில் 3 இடங்களிலும் பூலித்தேவன் கோட்டை குறித்தும் செய்திகள் உள்ளன.
தொடரும்....
No comments:
Post a Comment