Wednesday, October 2, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 21

நாள்:-18.12.2007

தமிழர்களைப் படுகொலை செய்யும் இலங்கைக்கு, இராணுவ உதவிகள் வழங்காதீர்!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத்தீவில் தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகின்ற இலங்கை இனவெறி அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற தாக்குதல்களில், அவர்களுக் கு உதவிடவும், ஆலோசனைகள் வழங்கிடவும், இந்திய இராணுவ நிபுணர் களையும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளையும் இலங்கைக்கு அனுப்புவது என்று இந்திய அரசு முடிவு செய்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ள தால், அதுகுறித்து மிகுந்த வேதனையுடன், என்னுடைய கடுமையான கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை அரசு முப்படைகளையும் ஏவி தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்து,
பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள்,பெண்கள், குழந்தைகளைக் கொன் று குவித்ததும், தமிழர்கள் மீது கடுமையான போர் திணிக்கப்பட்டு இருப்பதும் உலகம் அறிந்த உண்மை ஆகும்.

இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர்,இலங்கை அரசுக்கு ஆதரவாகச்செயல் பட்டு, தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள், உதவி வருகிறார்கள் என் பதையும் வேதனையுடன் தெரிவிக்கின்றேன். அவர்கள் தான், 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையைப் போன்ற ஒரு படுபாதக பாதுகாப்பு உடன்படிக்கையை இலங்கையுடன் இந்தியா செய்து கொள்வதற்காக, 2004 ஆம் ஆண்டு தாங்கள் பொறுப்பு ஏற்ற வேளையில், தவ றாக வழி காட்டினார்கள்.

ஆனால், அந்தக் காலகட்டத்தில், மூன்று முறை தங்களைச் சந்தித்து நான்
விடுத்த வேண்டுகோளை, மிகக் கவனமாக, தொலைநோக்குப் பார்வையுடன்
பரிசீலித்துத் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையால், இந்தியா அந்த ஒப்பந் தத்தில் கையெழுத்து இடவில்லை. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில் லையே தவிர, தமிழர்களுக்கு எதிரான போரில், இலங்கை அரசுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் மறைமுகமாக இந்தியா செய்து வருகிறது.

பெற்றோர்களை இழந்து,செஞ்சோலை என்ற இடத்தில் ஆதரவு அற்றோர் விடு தியில் தங்கி இருந்த 61 தமிழ்ப் பெண் குழந்தைகளை,14.8.2007 அன்று இலங்கை விமானப்படை குண்டுவீசிக் கொன்றதையும், ஃபிரெஞ்சு நாட்டின் சுனாமி மறு வாழ்வுக் குழுவினரோடு இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த 17 தமிழ் இளைஞர்களை, 8.8.2007 அன்று சிங்கள இராணுவம் சுட்டுக்கொன்றதையும் இந்தியா கண்டிக்க வேண்டிய கடமையில் தவறியது.

ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய மருந்துகள், உணவுப்
பொருட்களை அவர்களுக்கு அனுப்புவதற்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கத் துக்கு இந்திய அரசு அனுமதி வழங்காதது மன்னிக்க முடியாதது.

இலங்கை விமானப் படைக்கு ரேடார் உள்பட பல்வேறு இராணுவ உதவிகளை இந்தியா செய்து வருவதை எதிர்த்து, தொடர்ந்து பல கடிதங்களைத் தங்களுக்கு எழுதி இருக்கிறேன். இலங்கை இராணுவத்துக்குத் துப்புக் கொடுப்பதையும், இராணுவ உதவிகள் வழங்குவதையும் இந்தியா தொடருமேயானால், காலப் போக்கில் தமிழர்களின் நெஞ்சங்களில் வெறுப்பையும், வேதனையையும், கோபத்தையும் விதைக்கின்ற செயலாகவே அமையும்; அது நீறுபூத்த நெருப் பாகக் கனன்று கொண்டே இருக்கும்.

இலங்கைத் தீவில் தமிழர்கள் சிந்துகின்ற ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும், கொல்லப்படுகின்ற ஒவ்வொரு தமிழனின் உயிருக்கும் இந்திய அரசு பொறுப்பு
ஏற்க வேண்டிய குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரும்.

எனவே, எந்தவகையிலும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்குவதை
உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, ஆழ்ந்த வேதனையுடன் தங்களை வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment