Sunday, October 20, 2013

மதுரை,காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் வைகோ உரை -2

காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 02.10.2013 அன்று மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர் கள் ஆற்றிய உரை பகுதி 1 தொடர்ச்சி....

அமைச்சரவை முடிவு முட்டாள்தனம் 

அஜய் மேக்கன் என்பவர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களுள் ஒருவர். அவர் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவசரச் சட்டம் நூற் றுக்கு நூறு சரி என்கிறார்.அதேபோலத்தான் கபில் சிபலும், இது மிகச் சரியான சட்டம் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார். அதைச் சரியாகப் படிக்கா மல், நுனிப்புல் மேய்ந்தவர்கள் தான் எதிர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்கிறார்.அமைச்சர்கள் எல்லாம் பல்வேறு இடங்களில் ஆதரித்துப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்.

அஜய் மேக்கன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்ற இடத் துக்கு, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருகின்றார். அவர் இதுவரை பிரஸ் கிளப்புக்கு வந்ததே கிடையாது.இப்போது திடீரென அதி ரடியாக வருகிறார். அஜய் மேக்கனிடம் இருந்து மைக்கை வாங்கினார்: ‘இந்த அவசரச் சட்டம் படுமுட்டாள்தனம்; it is Total Nonsense; it should be torn up and thrown away’இதைக் கிழித்து எறிய வேண்டும் என்கிறார்.


தோழர்களே, மதுரை மக்களே, சிந்தித்துப் பாருங்கள். டாக்டர் மன்மோகன் சிங்
அவர்களைக் கடுமையாக விமர்சித்து இருக்கின்றேன். கடந்த ஒன்பது ஆண்டு
களாக, இவர்கள் செய்த பாவங்களை எல்லாம், அந்தச் சீக்கியர் தம் தலையில்
சுமந்து கொண்டு இருக்கின்றாரே,கொத்தடிமைச் சேவகம் செய்கின்ற நிலை மைக்குத் தள்ளப்பட்டாரே, ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து பேருந்தில்
பயணம் செய்த நேர்மையாளராக இருந்தாரே, எளிமையானவர் நேர்மையான வர் என்று நான் மனதாரப் பாராட்டிய மன்மோகன்சிங், உலகப் பொருளாதார மேதைகளுள் ஒருவர் என்று போற்றப்பட்டவர், அமெரிக்காப் பயணத்தில் இருக்கிறார்.

அந்த நேரத்தில், இது படுமுட்டாள்தனம் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்
தலைவர் சொல்லுகிறார். அவர் இப்படிச் சொன்னது, மன்மோகன் சிங்கை மட் டும் அல்ல; மொத்த அமைச்சரவையை; அதில் இடம் பெற்று இருக்கின்ற சரத்
பவார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை எல்லாம் படுமுட்டாள்கள்
என்கிறார்.

இது ஒன்றும் துணிச்சல் அல்ல,அறியாத்தனம், அகம்பாவம், திமிர், அரைவேக் காட்டுத்தனம். நான் ஒன்றும் சரத் பவார் உள்ளிட்ட மற்ற தலைவர் களுக்கு வக்காலத்து வாங்கவில்லை.ஆனால், எத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றார்கள்? தவறுகள் இருக்கலாம்; மராட்டியத்து மாவீரன் சிவாஜிக்குப் பின்னர் இவர் ஒரு மகத்தான தலைவர் என்று, மராட்டிய மக்கள் அவரைப் பாராட்டியதை நான் பார்த்து இருக்கிறேன்.கருத்து வேறு பாடுகள் உண்டு. நான் காங்கிரசைக் கடுமையாக நிந்திக்கிறவன்தான். ஆனால், இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொடியவன் இராஜபக்சே, மத்தியப்பிரதே சத்துக்கு வந்த போது, அவனை எதிர்க்க, நானும் என் தோழர்களும், மத்தியப் பிரதேசத்துக்குச் சென்றோமே,அப்போது அலைபேசியில் சரத் பவாரோடு பேசி னேன். நாங்கள் ஆயிரம் பேர் வருகிறோம். மராட்டியம் எங்களுக்குப் புதிய இடம். நாகபுரியில் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தர முடியுமா? என்று கேட்டேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் அவர் என்னை அழைத்தார். எங்கள் கட் சியைச் சேர்ந்த அமைச்சர் அனில் தேஷ்முக் உங்களைத் தொடர்பு கொள்வார்; உங்களுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவார் என்றார். அவ்வளவு சிறப்பாக எங்களை வரவேற்று, சட்டமன்ற விடுதியில் 150 அறை களை எங்களுக்கு ஒதுக்கித் தந்து, அனைவருக்கும் நான்கு வேளை உணவு
தந்து உபசரித்தார்கள். அந்த நன்றிக்காக ஒன்றும் நான் பேசவில்லை. மராட் டிய மக்களின் அன்பைப்பெற்ற அந்த மாபெரும் தலைவர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் சகட்டு மேனிக்கு விமர்சிக்கின்ற தகுதியை ராகுல் காந் திக்கு எப்படிக் கொடுத்தீர்கள்?

நாடகமா?


இப்படி வெளிப்படையாக விமர்சிப்பதற்குப் பதிலாக, அவரது தாயாரோடு பேசி இருக்கலாம்;அங்கிருந்து அமெரிக்காவில் உள்ள பிரதமரோடு பேசி இருக்க லாம். அல்லது கபில் சிபலை குடியரசுத் தலைவரிடம் அனுப்பி, இதை நிறுத்தி வைக்கச்சொல்லி இருக்கலாம்;பிரதமர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகு, அவரோடு உட்கார்ந்து பேசி இருக்கலாம்; ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணித் தலைவர்களை எல்லாம் அழைத்து ஆலோசனை செய்து இருக்கலாம்; மக்கள் கோபமாக இருக்கின்றார்கள்; எனவே, இந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று ஜனநாயக அடிப்படையில் முடிவு எடுத்து இருக்கலாம்.

ஆனால், நாட்டு மக்களின் கோபத்தைப் பார்த்து இந்த இளம் தலைவர் கொதித் து எழுந்து விட்டார் என்று ஒரு நாடகமாடுவதற்கு, பிரதமரையும், ஒட்டுமொத் த அமைச்சரவையையும் கேவலப்படுத்தி விட்டார்கள்.

இப்போதெல்லாம் நான் யாரையும் கடிந்து பேசுவது இல்லை; காலம் என்னைப்
பக்குவப்படுத்தி இருக்கின்றது. இதுவே இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரு கின்ற பாணங்கள் மிகக் கடுமையாக இருந்திருக்கும்.

முதுகெலும்பு இல்லையா?


இந்த அவசரச் சட்டம் குறித்து, பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டி ஏடுக ளில் வெளியாகி இருக்கின்றது.‘இந்த அவசரச் சட்டம் குறித்து, காங்கிரஸ் கட் சியின் மையக்குழுவில் விவாதிக்கப்பட்டது; இதுகுறித்து அமைச்சரவை, ஒன் றுக்கு இரண்டு முறை விவாதித்தது’ என்கிறார். அந்த அமைச்சர்கள், ஆதரித் துப் பேசிக் கொண்டு இருந்தவர்கள், இந்த ராகுல் காந்தி, பிரஸ் கிளப்பில் உள றிக் கொட்டியவுடனே சொல்லுகிறார்கள், எங்கள் கருத்தும் அதுதான் என்று. ராகுல் காந்தியின் கருத்துதான், காங்கிரஸ் கட்சியின் கருத்து என்கிறார்கள். அந்த அமைச்சர்களைக் கேட்கிறேன்; உங்களுக்கு மூளையே கிடையாதா?
அறிவே கிடையாதா? முதுகெலும்பே கிடையாதா? முதுகெலும்பு இல்லாத
கோழைகள் நீங்கள். பிரதமரும், அமைச்சரவையும் எடுத்த முடிவை, இப்படிப் பகிரங்கமாக விமர்சிக்கக்கூடாது; இதைக் கட்சிக்குள்தான் விவாதிக்க வேண் டும் என்று சொல்லுகின்ற துணிச்சல் ஒருவருக்குக்கூட இல்லையா?

இந்தச் சூழ்நிலையில் தான் ராஜினாமா செய்தால், அதனால் காங்கிரஸ் கட்சிக் கு அவமானம் நேர்ந்து விடும் என்று கருதி,அவர் இதைச் சகித்துக் கொள்ளக் கூடும்.ஆனால், நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. காங்கிரஸ் கட்சியின் பிம் பமாகக் காட்டப்படுகின்ற ராகுல் காந்தியைக் கேட்கிறேன்; ஊழல் அற்ற அரசி யல் வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் செய்தீர்களா? லாலு பிரசாத் யாத வும், ரஷீத் மசூதும் கொலை செய்து விட்டுச் சிறைக்குச் செல்லவில்லை. அதி காரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்ப டையில்தான் இவர்கள் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.


ஏன் வாய் திறக்கவில்லை?


இப்போது கொதித்து எழுகின்ற ராகுல்காந்தி அவர்களே,1 இலட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததே, அப்போது நீங்கள் வாய் திறந்த து உண்டா?அந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைத்தண்டிக்கவேண் டும் என்று என்றைக் காவது கருத்துச் சொன்னதுண்டா? நிலக்கரி உள்ளிட்ட கனிமச் சுரங்கங்களுக்கு அனுமதி கொடுப்பதில்,1 இலட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் ;அதில் 257 கோப்புகள் காணாமல் போய்விட்டன என்கிறார்களே, நீங்கள்
திருவாய் மலர்ந்து அருளியதுண்டா?

எத்தனையோ ஆண்டுகளாக, ஒலிம்பிக் விளையாட்டிலே இந்தியாவுக்குத் தங் கப் பதக்கம் கிடைப்பதே அரிதாக இருக்கின்றது. ஆனால், ஊழலுக்காக ஒரு
ஒலிம்பிக் பந்தயம் நடந்தால், அதில் இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,கண்டிப்பாக நிறைய தங்கப்பதக்கங்களை வென்று விடும். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துறோம் என்று சொல்லி, அதிலும் கொள் ளையடித்தார்கள். அதைக் கண்டித்து வாய் திறந்ததுண்டா ராகுல் காந்தி?ஆதார் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த ஊழலைப் பற்றிப் பேசியது உண்டா? அமைச்சர் பவன்குமார் பன்சலின் மைத்துனர், ஒருவரை ரயில்வே போர்டு மெம்பராக
ஆக்குவதற்கு, கோடிக்கணக்கில் பேரம் பேசி, 90 இலட்சம் அட்வான்சும் வாங்கி
விட்டார்; உடனே அவரைக் கைது செய்து, பத்து நாள்களுக்கு உள்ளாக, பவன் குமார் பன்சல் பதவியையும் பிடுங்கி விட்டார்கள்.

இதெல்லாம் போகட்டும்; ராகுல் காந்தி அவர்களே, உங்கள் மைத்துனர் ராபர்ட்
வதேரா செய்தது என்ன? ஒரு இலட்சம் ரூபாயை மட்டும் முதலீடு செய்து விட்டு, 300 கோடி ரூபாயைச் சுருட்டி இருக்கின்றார் என்று குற்றச்சாட்டு வந்து
இருக்கின்றதே? இதைக் கண்டுபிடித்த அதிகாரி கெம்காவை இட மாற்றம் செய் தது மட்டும அல்ல, அவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்து விட்டார்கள். இதைப்பற்றி நீங்கள் வாய் திறந்ததுண்டா?

வெளிப்படைத்தன்மையாக அரசு இயங்க வேண்டும் என்பதற்காகவா நீங்கள் பிரஸ் கிளப்பில் போய் கூச்சல் போட்டீர்கள்? இத்தனை ஊழல்களைப் பற்றி நீங்கள் என்றைக்காவது பேசியதுண்டா?

இந்தியாவை விற்ற காங்கிரஸ்


அன்றைக்குத் தராசு கொண்டு வந்த வெள்ளையன்,இந்தியாவை அடிமைப்படுத் தினான்; இன்றைக்கு வால் மார்ட் போன்ற பெருமுதலாளிகளை உள்ளே அனு மதித்து, கோடிக்கணக்கான சிறு வணிகர்களின் வாழ்வை நாசமாக்கி விட்டதே காங்கிரஸ் கட்சி? குடிதண்ணீருக்கும் விலை வைத்து விட்டார்கள். இந்த காங் கிரஸ் அரசு நீடித்தால், உங்கள் சொந்தத் தோட்டத்தில் கூட, நீங்கள் கிணறு
தோண்ட முடியாது. உங்கள் வீட்டு முற்றத்தில் ஒரு குழாய்க் கிணறு போட
முடியாது. அந்த உரிமையையும் அந்நிய நிறுவனங்களுக்கு விற்கப் போகின் றார்கள். தண்ணீரை மட்டும் அல்ல, அடுத்து காற்றையும் விற்று விடுவார்கள்.

இவ்வளவு ஊழல்களையும் செய்து,நாட்டைப் பாழாக்கி விட்டார்கள். இன்றைக் குப் பொருளாதாரத்தில் நொறுங்கிக் கிடக்கிறோம்; ரூபாயின் மதிப்பு, நாளுக்கு நாள் தாழ்ந்து கொண்டே போகிறது; நிலைமை மோசமாகிக் கொண்டே போகி றது. இனி பொருள்களை வாங்குவதற்கு, ஜிம்பாப்வே நாட்டைப் போல சாக்கு
மூட்டைகளில்தான் பணத்தைக் கட்டிக் கொண்டு போக வேண்டும்.

ஊழல் செய்து நாட்டைப் பாழாக்கியது காங்கிரஸ் அரசு. நம்மைப் பொறுத்த மட் டில் நமக்கு வஞ்சகம் செய்த அரசு.இது நீடித்தால், மதுரை மக்களே, நீங்கள் குடிக் கின்ற வைகை ஆற்றுத் தண்ணீருக்கும் ஆபத்து. இன்றல்ல, நேற்றல்ல, இதைப் பல ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன். பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் திட்டமிட்டுக் கேரள அரசு பணத் தை ஒதுக்கி வைத்து இருக்கின்றது; வெடிமருந்தும் வாங்கி வைத்து இருக்கின் றது. அந்த அணை உடைந்தால், ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வு அழிந்து போகும்; 2,40,000 ஏக்கர் பாசனத்தை இழப்போம்; பஞ்சப் பிரதேசமாகி விடும் என்பதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றேன். அந்த ஆபத்து தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் காலில் போட்டு மிதித்த கேரள அரசை, மத்திய அரசு கண்டித்தது உண்டா? அதற்கு  மாறாக, அவன் கொண்டு வந்த அதே சட்டத்தை, அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில், மத்திய அரசு சட்டமாக்கப் போகிறது.அந்தந்த மாநில அரசுகளே, அணை களைப் பாதுகாக்கவும், உடைக்கவும் அதிகாரம் என்று சட்டம். எந்தக்
கோர்ட்டும் தலையிட முடியாது.அதற்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு எந்தப் பாது காப்பும் கிடையாது.

காங்கிரசை வேர் அறுப்போம்


இந்த ஒரு காரணத்துக்காகவாவது, காங்கிரஸ் அரசை அடியோடு அழித்துத் தீர வேண்டும். இதற்குப் பிறகு இந்தியா எதற்காக? எங்களுக்கு எதற்கு இந்தியா?
இந்த அமைப்பு என்ன ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்றதா? இல்லை.அசோ கன் காலத்திலும் இல்லை, அவுரங்கசீப் காலத்திலும் இல்லை. இதை நான் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம் நேரடியாகச் சொன்னேன்.இந்தச் சட் டத்தை நீங்கள் நிறைவேற்ற முயன்றால், அதன்பிறகு, சோவியத் ரஷ்யா உடைந்து சிதறியதைப் போல இந்தியா உடைந்து சிதறும் என்று எச்சரித்தேன்.

தெற்குச் சீமை மக்களே, நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றீர்கள். இந்தப் பாவத்தைச் செய்தவர்களுக்கு நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டாமா?

கடலுக்கு அருகில் இருக்கின்ற என்னுடைய அருமை மீனவச் சகோதரர்களை நேற்று இரவு சந்தித்துவிட்டு வருகிறேன். 560 தமிழக மீனவர்களைக் கொன்று விட்டானே சிங்களக் கடற்படை? அவனுக்கு நீ கச்சத்தீவைத் தாரை வார்த்துக் கொடுத்தாய். உலகக்கோப்பைக் கிரிக்கெட்டில் இலங்கையை இந்தியா ஜெயித் தது என்பதற்காக, நான்கு தமிழக மீனவர்களை வெட்டிக் கொன்றானே? இந்த அரசு எதற்காக?இரண்டு லட்சம் தமிழர்களைப் பட்டினி போட்டே கொன்றானே, அதற்குக் காரணம் இவர்கள்தானே? அவர்களை, மணிமேகலை என்று புகழ் கிறாரே, கலைஞர் கருணாநிதி?

ஆயுதங்கள் கொடுத்து தமிழர்களை அழித்தது போதாது என்று,இப்போது இராஜ பக்சேவுக்கு இரண்டு போர்க் கப்பல்கள் தரப்போகின்றார்களாம்.எதற்கு?பாகிஸ் தானோடு சண்டை போடவா?சீனாவோடு சண்டை போடவா? அல்லது அமெ ரிக்காவின் ஏழாவது கடற்படையை எதிர்த்துப் போராடப் போகின்றதா இலங் கை? யாரோடு யுத்தம் செய்யப் போகிறார்கள்? அவனுக்கு எதற்குப் போர்க்கப் பல் தேவை? எங்கள் மீனவர்களைக் கொன்ற வனுக்குப் பரிசு கொடுக்கின்றா யா? இன்னும் அவன் எங்கள் மக்களைக் கொல்வதற்கா?

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகும், கடந்த நாடாளுமன்றத் தேர்த லில், காங்கிரசும் தி.மு.க.வும் ஜெயித்தது அவமானம் அல்லவா? துடைக்க முடியாத கறை அல்லவா? இப்போதும், அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாக்கு களைச் சேகரிக்க முனைகிறார்கள் என்றால், இனி காங்கிரஸ் கட்சி எந்தச் சூழலிலும் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வாருங்கள்.

அழிக்க முடியாது


நான் மறுப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். எப்படியாவது ஒட்டுப் போட்டு, எங்காவது ஒரு கூட்டணியில் இடம்பெற்று, பதவிக்குப் போய்விட வேண்டும், நாடாளுமன்றத்துக்குள்ளே போய் விட வேண்டும் என்று ஏங்குகின்றஇடத்தில் வைகோ இல்லை.(கைதட்டல்). ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டி இடுகின்றோம். அது எத்தனை இடம்? எந்தெந்த இடங்கள் என்பதை யெல்லாம் கட்சி முடிவு எடுக்கும். நாலாபுறங் களிலும் மகாரதர்கள் சூழ்ந்து கொண்டு,அபிமன்யுவை அழித்ததுபோல, அழித்து விடாதீர்கள் என்று கேட்டீர் களே தமிழருவி மணியன் அவர்களே, அது இப்போது நடக்காது. (கைதட்டல்).

பத்ம வியூகத்தை உடைத்துக்கொண்டு வெளியே வருகின்ற புதிய அபிமன்யு
வாக, மறுமலர்ச்சி தி.மு.க. வரும்.நீங்களே சொல்லி விட்டீர்களே, காண்டீபம் ஒலித்தது, கண்ணன் துணை இருந்தான் என்பதைப்போல, அந்தக்கண்ணனைப் போல தமிழருவி மணியன் போன்றவர்கள் பக்கத்தில் இருக்கின்ற பொழுது கவலை எதற்கு?

அன்றைக்கு அபிமன்யு சாகப்போகிறான் என்பது கண்ணனுக்குத் தெரியும். அவன் நினைத்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம். அர்ஜூனனைப் போக
விடாமல் தடுத்தவனே கண்ணன்தான்.பீமன் முயன்றான். அவனுக்கு வியூகத் தை உடைக்கத் தெரியாது.அபிமன்யு தன்னந்தனியனாகச் சிக்கிக் கொண்டான். அபயக்குரல் எழுப்பினான்.அந்தச் சத்தம், அர்ஜூனன் காதுகளில் விழாத அள வுக்கு, தேவதத்தம் எனும் சங்கை எடுத்து ஊதிவிட்டான்.அது அந்தக் கண்ணன்; இந்தக் கண்ணன் அப்படி அல்ல.

நான் என்ன பெரிய துறவியா? வள்ளலாரைப் போல எல்லாம் துறந்தவனா? நானும் ஒரு சாதாரண மனிதன்தான். எப்படியாவது ஒரு பதவிக்குப் போய்விட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அமைச்சர் பதவிகளை மறுதலித்த வன் நான்.ஆனால், இலட்சக்கணக்கான தோழர்கள், இருபது ஆண்டுகளாக,கல் லிலும்,முள்ளிலும் நடந்து, இருட்டடிப்புகளுக்கு மத்தியில், ஏளனங்களுக்கு மத்தியில் என்னோடு கரம் கோர்த்து வருகிறார்களே, அவர்களும், ம.தி.மு.க.
வெற்றி பெறுகிறது என்ற செய்தியைக் கேட்க வேண்டும் என்கின்ற ஆசை
எங்களுக்கு இருக்கிறது.

விமர்சனங்களைப் பற்றிக் கவலை இல்லை


விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப் படவில்லை. ஆபிரகாம் லிங்கனை
அவ்வளவு இழிவுபடுத்தினார்கள்.கேலிச்சித்திரங்களை வரைந்தார்கள்.அவை அனைத்தையும் கண்ணாடிப் பேழைக்குள் வைத்து, அவருடைய நினைவு இல் லத்தில் காட்சிக்கு வைத்து இருக்கின்றார்கள். அரசியல்வாதிகள், ஆபிரகாம் லிங்கனைப் பார்த்துப் படிக்க வேண்டும். என் தோழர்களுக்காக, சில வேளை களில் நம்பகத்தன்மையை நான் இழந்தவன். அதற்குத்தான் அரங்கேற்றம் திரைப்படத்தின் கதாநாயகியை எடுத்துக்காட்டிச் சொன்னேன். அன்றைக்கு என்னோடு இருந்த சகாக்களின் விருப்பத்திற்கு இணங்க,நான் முடிவு எடுத் தேன். நான் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல.பெரும்பாலான தோழர்களின் விருப் பத்துக்கு இணங்க முடிவு எடுத்தேன். அதில் உறுதியாக நின்றேன். அதற்காக, பழி சுமத்தப் பட்டேன்; பணம் வாங்கினேன் என்று சொன்னார்கள். ஆனால், என் கைகள் கறைபடியாதவை என்பதை எதிரிகளும் அறிவார்கள்.இந்த உயிர் இருக் கின்ற வரையில் அதை நான் காப்பாற்றிக் கொள்வேன். நேர்மை தவற மாட் டேன்.எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். ஸ்டெர்லைட்
ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் எத்த னையோ பேர்களை வளைத்தான்.நான் பெயர்களைச் சொல்ல விரும்ப வில் லை. ஆனால், அவர்களால் எங்கள் பக்கம் நெருங்கக்கூட முடிய வில்லையே?

மக்களை நம்புகிறோம்


இங்கே நீங்கள் 50 ரூபாய் கொடுங்கள்,100 ரூபாய் கொடுங்கள், உண்டியல் ஏந்தி எங்கள் தோழர்கள் வருகிறார்கள் என்று சொல்லுவதைப்போல,எங்கள் தோழர் கள் வீடு வீடாகச் சென்று, 250,500,1000 என்று வாங்கி,நிதியைத் திரட்டிக் கொடுத் து இருக்கின்றார்கள்.இந்த நிதியை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்; அவர்கள் மலையளவு குவித்து வைத்து இருக்கின்றார்களே? என்றால்,நாங்கள் மக்களைச் சந்திக்கின்றோம். அவர்களிடம் சொல்லு கிறோம். இளைஞர்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றார்கள். கட்சிகளைச் சேராத வாலிபர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள். எங்களிடம் இருக்கின்ற பணத்தைக் கொண்டு, போஸ்டர் அடிக்கலாம். துண்டு அறிக்கை கள் அச்சிடலாம்.பூத் செலவுக்குப் பணம் கொடுக்க முடியாது. ஆனால்,சிற்றுளி தான் மலையைப் பெயர்க்கும்.டேவிட் கவண்கல் எறிந்து தாவீதைக் கொன் றான். அதைப் போலத்தான் பத்ருப் போர்க்களத்தில் பகைவர்களின் பெரும் படையை அண்ணலாரின் சஹபாக்கள் சின்னாபின்னமாக்கினார்கள்.எனவே எங்களுக்குக் கவலை இல்லை.மக்களிடம் செல்கிறோம், வாக்குகள் கேட்கி றோம்.

காங்கிரசை அங்குலம் அங்குலமாகக் களத்தில் சந்திப்போம். இம்முறை அவர் கள் தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற விட மாட்டோம். ஊருக்கு
ஊர் மக்களைச் சந்திப்போம்; தெருத் தெருவாகப் பேசுவோம். காங்கிரஸ் மீண் டும் ஆட்சிக்கு வரக்கூடாது.

யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம்.யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது மதில்மேல் பூனை ஆகலாம். சில திறமைசாலிகள் இருக்கின்றார்கள். பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கிறதா? அதற்கும் ஒரு துண்டைப் போட்டு வைப்பார்கள்; ஒருவேளை காங்கிரசே ஆட்சி அமைத் தால், அதிலும் சேர்ந்து கொள்வோம் என்று இருக்கி றார்கள்.அவர்களது நிழ லைக்கூட நாங்கள் நெருங்க மாட்டோம். காங்கிரஸ் திரும்ப வரக்கூடாது; அதற்கு ஏற்றவகையில் நாங்கள் தீர்மானிப்போம்.

என்னுடைய அன்புச் சகோதரர்களே,சிறுபான்மை சமுதாயத்துக்காக எங்களை
விடப்போராடியவர்கள் இருக்கின்றார்களா? என்னால் நிறைய எடுத்துச் சொல் ல முடியும். பொது சிவில் சட்டம் என்று ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார் களே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் என்னை அழைத்து, இந்த வாக்கெடுப்பில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பங்கு ஏற்காமல் வெளியே போய்விடுவார்கள்; நீங்களும் அதுபோல வெளியே சென்று விடுங் கள் என்று கேட்டுக் கொண்டார். நான் சொன்னேன்: இல்லை; நாங்கள் அவை யில் இருப்போம்; தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம் என்றேன். எதிர்த்துப்
பேசினேன். நாங்கள் சிறுபான்மை யினருக்கு ஆதரவாக இருப்போம் என்று
கூறி, அறிமுக நிலையிலேயே அந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்கு அளித்தோம்.
தி.மு.க.வும், அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த தமிழகத்தின் மற்றொரு
கட்சியும், அதை ஆதரித்து வாக்கு அளித்தார்கள். பதிவு ஏடுகளில் இருக்கின் றது. பனத்வாலா ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்து நன்றி சொன்னார். அதே போலத்தான் ஷரிஅத் மசோதாவின்போதும், சிறுபான்மையினருக்கு ஆதரவா கத்தான் இருந்தோம்.

அண்மையில் ஒரு செய்தி அறிந்தேன்.கவிக்கோ அப்துல் ரகுமான் கூறினா ராம்,முஸ்லிம் லீக் இயக்கத்தின் முன்னணித்தலைவர் பனத் வாலா தன்னிடம்
பினவருமாறு தெரிவித்தாராம்.

“இந்தியாவில் “பொது சிவில் சட்டம்” கொண்டுவர வேண்டுமென்று பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் மக்களவையில் தனி நபர் மசோதா கொண்டுவந்த போது,அதனை அறிமுக நிலையிலேயே நான் எதிர்த்தேன். அப்போது வைகோ
மட்டும்தான் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து கொண்டே, “அம்மசோதாவை அறி முகம் செய்யக் கூடாது என்று எதிர்த்துப்பேசி தனது வாக்கைப் பதிவு செய்தார். அந்தத்துணிச்சல் வைகோவிடம்தான் கண்டேன்” என்று கவிக்கோவிடம் சிலாகித்துப் பாராட்டினாராம்.

கவிக்கோ,தமிழகத்தின் கலீல் ஜிப்ரான் உன்னதமான கவிஞர்,ஒரு வேளை இத னையே அவர் மறுக்க வேண்டும் என்று திமுக பெரிய மனிதர்கள் நிர்ப்பந்திக் கவும் செய்வார்கள்.இதையெல்லாம் சொல்வதால், நீங்கள் ஏதோ ஒரு கணக் குப் போட்டுக் கொள்ளாதீர்கள்.

எங்களுக்கு ஒரு வாய்ப்பை நீங்கள் கொடுத்தால், அதை எங்கள் சுயநலத்துக் குப் பயன்படுத்திக் கொள்ள மாட்டோம். தமிழகத்துக்காக, மக்கள் நலனுக்காகப் பாடுபடுவோம். இதுவரை நாங்கள் எந்தக் கொள்கைகளைச் சொல்லி வருகி றோமோ, அந்தக் கொள்கைகளில் பெரும்பாலானவற்றை வரவேற்று ஆமோ தித்து, மதுவின் பிடியில் இருந்து மீள வேண்டும்; ஊழலின் பிடியில் இருந்து மீள வேண்டும்; இலவசங்கள், மதுவின் போதையில் தள்ளாடும் தமிழகத்தைக்
காக்க வேண்டும் என்ற எங்கள் குறிக்கோளை அங்கீகரித்து, மேடை தோறும் பாராட்டுகிறாரே, வைகோ இந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று சொல்லு கிறாரே தமிழருவி மணியன்,எங்களிடம் எந்தப் பிரதிபலனை எதிர் பார்க்கிறார்? மிக எளிமையானவர், நேர்மையானவர். இன்றைக்கும் இரு சக்கர வாகனத்தில் வருகிறார். பழைய கார் ஒன்றையும் வைத்து இருக்கிறார்.அதை அவரே ஓட் டிக்கொண்டு வருகிறார்.ஒருநாள் மழை நேரத்தில் வந்து விட்டார்.வண்டியைத் திரும்ப எடுக்க முடியவில்லை. ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போனார்.

நன்றி


எவ்வளவு விமர்சனங்கள் செய்கிறார்; இப்படித் தனியாகப் போகிறாரே? என்று
பார்த்துக் கொண்டே இருந்தேன். நாடு கெட்டுக் கிடக்கிறதே; என்ன வேண்டு
மானாலும் செய்யலாமே? கேள்வி கேட்பார் இல்லையே? அப்படிப்பட்ட இந்த எளிய மனிதருக்கு இயற்கைதானே பாதுகாப்பு?சத்தியம்தான் அவருக்குப் பாது காப்பு. இந்த நிகழ்ச்சிக்கு வானம் எவ்வளவு ஒத்துழைப்புக் கொடுத்து இருக்கின் றது.

ஈழத்தமிழர்களுக்கு விடியல் வேண்டும்; பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்ற வாளிக் கூண்டில் இராஜபக்சேயைத் தண்டிக்க வேண்டும். பிரபாகரன் கட்டி எழுப்பிய சுதந்திரத் தமிழ் ஈழம் மலர வேண்டும். அந்த நாள் வரும்;ஒரு வாக்கெ டுப்பு நடக்கும். உலகின் பல நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும் வாக்கு அளிப் பார்கள்.சுதந்திரத் தமிழ் ஈழம் மலரும். என் வாழ்நாளிலேயே அதைக் காணு கின்ற வாய்ப்புக் கிடைக்கும்.காங்கிரஸ் தூக்கி எறியப்படும். அந்த உறுதியோடு
மக்களைச் சந்திக்கச் செல்வோம். இந்த மதுரை மாநகரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டிய காந்திய மக்கள் இயக்கத்துக்கு நான்
நன்றி தெரிவிக்கின்றேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

மதுரை,காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் வைகோ உரை -1

No comments:

Post a Comment