Thursday, October 10, 2013

கோவை மெட்ரோ ரயில் -முதல்வருக்கு மதிமுக மனு

கோவை மெட்ரோ' திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக "கோவைக்கு வரும் "மெட்ரோ மேன்' ஸ்ரீதரனுடன் மாநகராட்சி மற்றும் மாநில அரசு அதிகாரி கள், அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்'  #மதிமுக இளைஞரணி வலியுறுத்தல்.

முதல்வருக்கு மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் அனுப்பி யுள்ள மனு:

டில்லி மெட்ரோ திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய ஸ்ரீதரன், கோவைக்கு வரும் 25ம் தேதி வரவுள்ளார். 

அவரது வருகையை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆலோசனையை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி, உள்ளூர் திட்டக்குழுமம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினரை, அவருடன் அதிகாரப்பூர்வமாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், 2011 நவம்பரில் வெளியிட்ட அறிவிப்பில், இரண்டாம் நிலை நகரங்களான ஆமதாபாத், புனே, சூரத், ஜெய்ப் பூர், கான்பூர், கொச்சி, கோழிக்கோடு, கோவை உள்ளிட்ட 19 நகரங்களை, "மெட் ரோ ரயில்' திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தகுதியான நகரங்களாக தேர்வு செய்தது. கோவையைத் தவிர மற்ற நகரங்கள் அனைத்திலும் அதற்கான பணி களை அந்தந்த மாநில அரசுகள் துவங்கிவிட்டன. 

mdmk_metro_covaiகோவையில் 20 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வலம் வரும் நிலை யில், போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. 3

இங்கு "மெட்ரோ ரயில்' திட்டம் நிறைவேற்றுவதே பிரச்னைக்குத் தீர்வாக அமையும். திட்டத்தைத் துவக்கினால் மட்டுமே, மத்திய அரசின் 50 சதவீத நிதிப் பங்களிப்பு கிடைக்கும்.

கோவை போன்ற பெரு நகரங்களுக்கு "மெட்ரோ' திட்டமே சிறந்தது. "மெட்ரோ' திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, ஸ்ரீதரனிடம் ஆலோசனை நடத்தி, அவரது தொழில்நுட்ப அறிவைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.ஈஸ்வரன் மனுவில் இவ் வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment