Sunday, October 27, 2013

மறுமலர்ச்சிப் பயணம்-விருதுநகர் மாவட்டம்-பாகம் 5

விருதுநகர் மாவட்ட மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்ட #மதிமுக பொது செய லாளர் #வைகோ மூன்றாம் நாளாக நேற்று முன் தினம் (25.10.13) வெம்பக் கோட்டை ஒன்றியத்தில் ஆலங்குளத்தில் நடைபெற்ற நிறைவு பொது கூட்டத் தில் பேசினார் .. பேச்சின் சுருக்கம் வருமாறு..

கிராமத்தில் பலசமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறித்து மகிழ்ச் சியடைகிறோன்.ஜாதி,மத பூசல்கள் இருந்தால் மக்கள் நிம்மதியாக வாழமுடி யாது.இளம் பெண்கள், படிக்கும் மாணவர்கள், புதியவாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்.வாக்காளர்களின் இந்தமனநிலை வரவேற்க்கதக்கது.

தமிழக மீனவர்களை இலங் கை அரசு கைது செய்த போது மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. ஊழல் செய்வதிலும், மக்கள் விரோத நடவடிக்கையில் மட் டுமே மத்திய அரசு ஈடுபடுகிறது. காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் மது விற்பனை கிடையாது. அது போன்று மீண்டும் மது விலக்கு அமுல் படுத்த வேண்டும். இளைய சமுதாயம் காப்பாற்றப்பட வேண்டும்.

மத்தியபிரதேசம் போபாலுக்கு,இலங்கை அதிபர்ராஜபக்சே வருவதற்கு எதிர்ப் பு தெரிவித்து, 25 பஸ்களில் 1,200பேர், மூன்று மாநிலங்களை கடந்து சென் றோம்.மத்திய பிரதேச எல்லைக்குள், எங்களுக்கு அனுமதி இல்லை என கூறி, துணைராணுவத்தினரால், பெரிய இயந்திர துப்பாக்கி கொண்டு ,தடுத்து நிறுத் தினர். நாங்கள் ரோட்டிலே, பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும், தொந்தரவு இல்லாமல், சுய கட்டுப்பாடுடன் உட்கார்ந்திருந்தோம். 

போராட்டம் முடிந்து திரும்பிய போது, மத்திய பிரதேச உயர் அதிகாரிகள், என் னிடம் வந்து,"நாங்கள் அனைவரும்உங்களது அணுகுமுறையை பார்த்து, உங் களுடைய தீவிர ரசிகர்களாக மாறிவிட்டோம்,' என்றனர். 

கருணாநிதிக்கு எதாவது ஆபத்து என்றால், அவர்கள் மகன்கள் கூட வருவ தற் கு தயங்குவார்கள்.ஆனால் நான்,என் உயிரையும் கொடுத்து, அவரை காக்கும் அரணாக இருந்தேன். 


நாங்கள் சட்ட சபைக்கு செல்லக் கூடாது என்பதற்காகவே, எங்களுக்கு, அ.தி. மு.க., குறைந்த இடங்களை ஒதுக்கியது. 

அறிவை அடமானம் வைத்த ஒருவர், தலைமை தேர்தல் அதிகாரியாக இருக் கிறார். அதிகாலையில், அடையாளம் தெரியாதவர்கள், வீட்டிற்குள் பணத்தை போட்டு விட்டு செல்வார்களாம்.அவர்களை தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொ டுக்க வேண்டுமாம். இல்லையென்றால், பணத்தை பெற்றுக் கொண்ட குற்றத் திற்காக, பொது மக்களை சிறையில் அடைப்பார்களாம்.ஆனால், போலீசார் உதவியுடன் ஆளுங்கட்சியினர் பணத்தை கொண்டு சென்றால், அவர்களை விட்டுவிடுவார்களாம்.

விருதுநகர் மக்களவைத்தொகுதியில் மதிமுக போட்டியிட உள்ளது. வேட்பா ளர் நானாகவோ, அல்லது வேறுயாகாரவும் இருக்ககூடும்.வரும் மக்களவைத் தேர்தல்ஒரு சவாலாக இருக்கும்.பிரச்சாரத்தில் மக்கள் கூடுகிறார்கள் எனவே வெற்றி பெற்றுவிலாம் என கட்சியினர் எண்ணக்கூடாது.இந்தத்தொகுதியில் அதிமுக,திமுக போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தலாம். 

பணம் உள்ள கட்சியினர் வாக்குக்கு பணம் கொடுக்கதயாராக உள்ளார்கள். அவர்களுக்கு இந்தப்பணம் எவ்வாறு வந்தது.பதவிகளை பயன்படுத்தி கோடிக் கணக்கில் கொள்ளையடித்த பணம் எனக்கூறலாம். திட்டப்பணிகளுக்கு திமுக ஆட்சியில் 8 சதம் கமிஷன் என்றால், இப்போது 15 சதம் கமிஷன் வாங்குகிறார் கள்.என்னிடம் பணம் இல்லை.ஆனால்பணத்தினை தேர்தலில் முறியடிக்கும் சக்தி என்னிடம் உள்ளது.மற்ற கட்சிகள் எத்தனைகோடி செலவழித்தாலும் இந் தத் தொகுதியில் மதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

பொதுமக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். நாட்டின் நலனில் அக்கறை உள்ள வர்களை தேர்ந்தெடுங்கள் என்றார் வைகோ.

இவருடன் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்மு கசுந்த ரம், முன்னள் சட்டமன்ற உறுப்பினர் ஞானதாஸ் , முன்ளாள் விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்றனர்.

No comments:

Post a Comment