#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008
அப்படிப்பட்ட வீரமும், தீரமும் நிறைந்த மன்னன் பூலித்தேவன் படையில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலாடி போராடிய வரலாற்றை இங்கே சொல்வது மிகவும் அவசியமாகும்.
அந்தப்போர் மிகஉக்கிரமானபோர்.வாசுதேவநல்லூர் போரில் கம்மந்தான் கான் சாகிப் வந்து போர்தொடுத்துத் தோற்றானே அந்தப்போரில்,இரண்டாம் போரில் வெண்ணிக்காலாடி பிரதான தளபதி. இன்று இம்மேடையில் சேதுராமனுக்குப் பக்கத்தில் என் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர் செல்வத்துக்குப் பக்கத்தில், தம்பி சரவணனுக்குப் பக்கத்தில்,செந்தூர் பாண்டியனுக்குப் பக்கத்தில்,என் அருமைத் தம்பி தேவேந்திரகுல சமூகத்துப் பிள்ளை டாக்டர் சதன் திருமலைக்குமார் உட் கார்ந்து இருக்கிறார்.
நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும். அன்றைக்கு வெண்ணிக்கா லாடி. மருத்துவர் சதன் திருமலைக்குமாருக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன். அவன் எங்கே இருக்கிறான்? அவன் பூலித்தேவன் படையில் பிரதான தளபதி. போர் நடக்கிறது. கம்மந்தான் கான்சாகிப் கால்பிடரியில் அடிபட ஓடு கிறான். அவனது படைதோற்று ஓடுகிறது. வெற்றிமேல் வெற்றிவருகிறது.
வெள்ளைக்காரன் எழுதுகிறான். 18 அடி நீளமுள்ள ஈட்டியை வாசுதேவநல்லூர் மறவர்கள் பயன்படுத்தினார்கள். நெற்கட்டுஞ்செவல் மறவர்கள் பயன்படுத்தி னார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 18 அடி நீளமுள்ள ஈட்டியை எப்படி அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று எனக்கே வியப்பாக உள்ளது. இங்கே இருக்கின்ற மக்கள் ஒவ்வொருவரும் எந்த நேரத்திலும் கையில் வாளும், வளைதடியும், கேடயமும் பக்கத்தில் வைத்திருப்பார்கள் என்று எழுதுகிறான் வெள்ளைக்காரன்.
அந்தப்போரில் தோற்று ஓடுகின்றவர்களை விரட்டிச்சென்று வெற்றிபெற்று
வந்தான் வெண்ணிக் காலாடி. அந்த வெண்ணிக்காலாடியின் வயிற்றில் பாய்ந்த ஆயுதம் வயிற்றைக் கிழித்து குடல் வெளியேவந்து விட்டது. குடல் வெளியே வந்தவுடன் அந்தப் பெருவீரன் தலையிலேயே கட்டி இருந்த தலைப் பாகையை எடுத்து அந்தக் குடலை உள்ளேதள்ளிவிட்டு இரத்தம் பெருக்கெடுக் கின்ற இடத்தில் அந்த தலைப்பாகையைவைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு திரும்பவும் சண்டை செய்கிறான்.
வந்தான் வெண்ணிக் காலாடி. அந்த வெண்ணிக்காலாடியின் வயிற்றில் பாய்ந்த ஆயுதம் வயிற்றைக் கிழித்து குடல் வெளியேவந்து விட்டது. குடல் வெளியே வந்தவுடன் அந்தப் பெருவீரன் தலையிலேயே கட்டி இருந்த தலைப் பாகையை எடுத்து அந்தக் குடலை உள்ளேதள்ளிவிட்டு இரத்தம் பெருக்கெடுக் கின்ற இடத்தில் அந்த தலைப்பாகையைவைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு திரும்பவும் சண்டை செய்கிறான்.
சண்டை செய்து வெற்றிச் செய்தியோடுதான் வந்து மன்னர் பூலித்தேவனிடம் கீழே விழுகிறார். இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பூலித்தேவர் எப்படி இலா மிய முடேமியாவை எடுத்துமடியில் போட்டாரோ அதேபோல இந்த தேவேந் திரகுல வேளாளர் சமூகத்தில் பிறந்த வெண்ணிக்காலாடியை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு கண்ணீர் பெருக்க பூலித்தேவன் அழுகிறார். அப்பொழுது அந்தத் தலைப்பாகை முழுக்க இரத்தத்தில் நனைந்து பூலித்தேவனின் உடம் பெல்லாம் இரத்தம் பாய்கிறது.
அந்தக் காட்சியில் அவர் தன்னுடைய வேதனை எல்லாம் கொட்டி ஒருபிள் ளையை இழக்கின்ற தகப்பனைப்போல அழுகிறார். அந்த இரத்தம் அவரது உடம்பில், கைகளில் பட்டது. அன்புக்கு உரியவர்களே, வளரும் பிள்ளைகளே, வாலிபச் சிங்கங்களே, நான் இதைச் சொல்லக்காரணம், ஒரு இலட்சியத்துக் காக ஆயுதம் ஏந்தலாம். ஒரு உன்னதமான இலட்சியத்துக்கு - ஒரு நாட்டின் விடுதலைக்கு - ஒரு இனத்தின் விடுதலைக்கு - ஆயுதம் ஏந்தலாம்.
ஆனால், சொந்த சகோதரர்களாக வாழவேண்டிய நாம், பகையை - மற்றவர்கள் பாராட்டினாலும் நாம் பாராட்ட வேண்டாம். இது உங்கள் சகோதரனாகிய வைகோ வின் தாழ்மையான வேண்டுகோள். உங்களைப்போன்ற தம்பிகளை உயிராக நேசிக்கின்ற ஒரு அண்ணனின் வேண்டுகோள். பகை மற்றவர்கள் பாராட்டினாலும் நாம் பாராட்ட வேண்டாம் அந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்.
ஏன் என்றால் அன்றைக்கு வெண்ணிக்காலாடி உடம்பில் இருந்து இரத்தம் பூலித்தேவனின் உடம்பில் பாய்ந்தது. அதேபோலத்தான் ஒண்டிவீரன் அருந்த தியர் குலத்தில் பிறந்தவன். அவன் ஒற்றர்படைக்குத் தலைவன். பூலித்தேவன் ஒற்றர் படையும் வைத்திருந்தார். அப்பொழுதுதான் தகவல் வருகிறது. தென் மலையில் வெள்ளைக்காரன் முகாம் அமைத்து இருக்கிறான். தென்மலை முகாமில் இருந்து கும்பினிப் படைத்தலைவன் சவால்விடுகிறான். அவனுக் குத் தகவல் சொல்கிறார். இந்தத் தென்மலை முகாமுக்குள் எவனாவது நுழைந் து எங்கள் பட்டத்துக் குதிரையைக் கொண்டுபோய்விட்டால் நாங்கள் தோற்ற தாக ஒத்துக் கொண்டு போய்விடுவதாக சவால் விடுகிறான்.
தொடரும்....
No comments:
Post a Comment