Wednesday, October 23, 2013

நாளைய தமிழகம் வளம் காண

நாளைய தமிழகம் வளம் காண #வைகோ வின் முயற்சிகள் வென்றாக வேண் டும்! விருதுநகர் மாநாட்டில் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில், அரசியல் ஆலோச னைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன்  ஆற்றிய உரை...

தலைவர் உள்ளிட்ட சபைக்கு வணக்கம், கடல் மண்ணில் வீழ்ந்தாலும் தலை வர் நெஞ்சில் நிறைந்திருக்கின்ற ஐயா கே.பி.கே. அறிமுகப்படுத்திய வண்ண மணிக்கொடியினை விண்முட்ட பறக்க விட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன்.

ஆண்டுகள் இருபதை திரும்பிப் பார்க்கிறேன். எத்தனை ரவுண்டுகள் வருவார் கள் என்று கணக்கு பார்த்தவர்கள் மத்தியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகம் என்கின்ற இயக்கம் இருபது ஆண்டுகளைக் கடந்து நிலைத்திருக் கிறது. அதுதான் இந்த மாநாட்டுத் திடலில் நாம் பார்க்கின்ற காட்சி. அதுபோல இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தக் கட்சி இனி என்ன செய்யப்போகிறது என்று எண்ணியவர்களுக்கு மத்தியில், தலைவர் வைகோவின் உழைப்பால் இந்தக் கட்சி இன்றைக்கு முன்னைவிட மதிப்பில் உயர்ந்திருக்கின்றது. இதை நாளைய தமிழகம் தீர்ப்பாகச் சொல்ல இருக்கின்றது.

இன்றைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், தலைவர் வைகோ வும் வாக்கு வங்கி அரசியலில் உரிய இடத்திற்கு வரவில்லை. நான் அதைத் தவிர்த்துவிட்டுச் சொல்கிறேன்.இன்றைக்கு வென்ற இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அரசியலில் நின்ற தலைவர் எங்கள் தலைவர் வைகோ என்கின்ற பெருமிதத்தோடு என் உரையைத் தொடங்குகிறேன்.


விண்ணைப் பார்த்து மழைக்கும்,மண்ணைப் பார்த்து பயிருக்கும், விளைந்த மகசூலைப் பார்த்து நல்ல விலைக்கும், வாழ்க்கையெல்லாம் ஏங்கி தவிக்கும் விவசாயிகளின் உரிமைப்போராட்டத்தில்,அது முல்லைப் பெரியாறு உரிமைப் போராட்டம் தொடங்கி, எல்லாப் போராட்டங்களிலும் விவசாயிகளுக்காக நீங் கள் உழைத்தீர்கள்.

இன்றைக்கு காற்றை, ஆம்! அலைக்கற்றையை; கரியை, ஆம்! நிலக்கரியை காசாக்கி அதன்மூலம் தமிழக அரசியலை மட்டுமல்ல, இந்திய அரசியலை மாசாக்கி, நடத்துகின்ற இந்த அரசியல் களத்தில், நீங்கள் மட்டும்தான் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கு தமிழ்நாட்டில் ஒரு சட்ட யுத்தம் நடத்திக் கொண்டி ருக்கிறீர்கள்.

ஆம்! இனி இழப்பதற்கு ஏதும் இல்லை.சுமப்பதற்கு துன்பம் இல்லை என்று மனிதகுலத்தின் சோகக் கடலாய் மாறிவிட்ட ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் நீங்கள் மட்டும்தான் முப்பது வருடமாக சுருதி குறையாமல், உறுதி மாறாமல் தமிழ்நாட்டில் முழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இவையெல்லாம் சேர்த்து நமக்கு ஒரு நன்மதிப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது.

ஆம்! அரை உலகம் என்று அழைக்கப் படுகின்ற அமெரிக்க தேசத்தில் இன் றைக்கு இந்தியாவின் முகவரியாக இருக்கின்ற இளைஞர்கள் கணிப்பொறித்
துறையில் சாதித்து இருக்கின்றார்கள். அந்தக் கணிப்பொறித்துறையில் சாதித் து இருக்கின்றவர்களின் கையிலே இருக்கின்ற அந்தக் கணிப்பொறியில் தேர் தல் வைத்தால் இணையதளத்தில் தேர்தல் வைத்தால் இன்றைக்கு தமிழ்நாட் டில் வெல்லுகின்ற தலைவர் நம் தலைவர் வைகோ என்பதை காலம் நிருபித்து இருக்கின்றது.

இணையதளத்தில் மட்டுமல்ல தலைவர் அவர்களே, இன்றைக்கு இரண்டு வரு டங்களுக்கு முன்னால் சென்னையிலே புத்தகத் திருவிழாவில்,அரசியல் விமர் சகர், எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு எல்லோரையும் ஆண் மையோடு விமர்சிக் கின்ற ஒரு அரசியல் விமர்சகர் ஞாநி நடத்திய கருத்துக் கணிப்பில் அன்றைக்கு புத்தக் திருவிழாவிற்கு வந்த வாசகர்கள், படித்தவர்கள் தமிழ்நாட்டின் அரசியலில் மாற்றத்திற்கு யார் தகுதியானவர்கள் என்று சொன் னபோது, எல்லோரும் நினைத்துப் பார்க்காத ஒரு தீர்ப்பு வந்தது.

ஆம்! 60ச தவிகிதம் வாக்காளர்கள் தமிழ்நாட்டின் அடுத்த திருப்பத்திற்கு வைகோ தான் பொருத்த மானவர் என்று தீர்ப்பு சொன்னார்கள்.

இத்தனை தீர்ப்புகளையும் நாம் கடந்து வந்திருக்கின்றோம். அதனால்தான் தமிழ்நாட்டில் ஒரு நல்ல பத்திரிகையாக இருக்கின்ற ஆனந்த விகடன் சொல் கிறது, நாகரிக அரசியல் என்பது அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படு கின்ற ஒரு அரிய களத்தில் இன்றைக்கு வைகோ ஒரு அரசியல்  அதிசயம் என்று சொன்னது.

நாளைய தமிழகத்தில் யாரும் எதிர்பாராத குறைவான வாக்குகளே உள்ள மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெல் லப்போகிறது என்ற அதிசயம் இந்த மண்ணில் நடக்க இருக்கின்றது.

ஆம்! மாற்றம் என்பது மட்டும்தான் மாறாதது. நான் இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 1996 இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உத யமாகி ஒரு தேர்தல் களத்தைச்சந்தித்தபோது, எல்லோரும் தலைவர் வைகோ அவர்கள் செயிண்ட்ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட் டார்கள். எனக்கு தெரிந்து நான் ஒரு மாணவன். வைகோவைப் படிக்கின்ற மாணவன். அவர் மட்டும்தான் டெல்லிக்கு செல்ல வேண்டும். நாடாளு மன்ற உறுப்பினர்களோடு செல்ல வேண்டும். ஒரு குழுவாக சென்று முன் வரிசை யில் அமர்ந்தால், அண்ணா நினைத்ததை, அண்ணா கனவு கண்டதை, தமிழ் நாட்டிற்கு அத்தனை திட்டங்களையும் பெற்றுத்தர முடியும்.

ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்கி அதில் வலிமையான தமிழகத்தில் ஒரு வளமான தமிழகத்தைப் படைக்க முடியும் என்று நம்பிக்கையோடு 1996 களத்தில் சந்தித்தோம். அன்றைக்கு பல விசயங்கள் நமக்கு திருப்பமாக மாறி
விட்டது. இன்றைக்கு நம்பிக்கையோடு நாம் களத்திலே இருக்கிறோம். ஆம்!
1957 தேர்தலில் முதல் முதலாக தேர்தல் களத்தில் நம்புதிரிபாடு தலைமை யிலே காங்கிரஸ் அல்லாத ஆட்சி வந்தது. 1967 இல் அண்ணாவின் வியூகத் தால் தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டது. அதில் இருந்து இன்று வரை காங்கிரஸ் இங்கு தலை தூக்க முடியவில்லை.அன்று தமிழகம் உட்பட 15 மாநி லங்களில் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டு ஒரு ஆட்சி மாற்றம் வந்தது.

1977 இல் முதன் முதலாக நேரு குடும்பத்தின் சொத்தாக காங்கிரசின் பூர்விக உரிமையாக இருந்த ஒரு இந்திய அரசியலில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆம்! 1996க்கு பிறகு இந்திய அரசியலில் கூட்டணி ஆட்சிதான் என்கின்ற தலை விதி இன்றைக்கு உருவாகி இருக்கிறது. இந்திய அரசியலில் ஒரு பன்முகப் பட்ட தேசத்தில் இத்தனை மாற்றங்கள் இத்தனை வருடத்தில் நடந்தது என் றால், இந்த தமிழ்நாட்டில் தலைவர் வைகோ நடந்திருக்கிறார். முனைந்திருக் கிறார். அவருக்கு தகுதி இருக்கிறது. தியாகம் செய்திருக்கிறார்.மாற்றம் வரும். அந்த மாற்றம் என்பது என்ன? காந்தி சுதந்திரத்திற்கு பின்னால் கிராம ராஜ்யம் வேண்டும் என்று சொன்னார். ஜெ.பி. 1977 ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் ஒரு சர்வோதயம் வேண்டும் என்று சொன்னார். அது குறிக்கோள்.

ஒரு தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் எனக்கு தெரிந்து நான் ஒரு சின்ன கணக்குதான் பார்க்கிறேன்.கூட்டல் கணக்கு. நான்கு கட்சிகள் சேர்ந் தால் கூட்டணி,அதுபோக சாவும் நோவும் நடந்தால் அது ஒரு அனுதாப அலை. இதோடு சேர்ந்து இப்போது சாபக்கேடாக காந்திதேசத்தில் பணமும் இருந்தால் எவனும் வெல்ல முடியும் என்பது. கடந்த தேர்தலில் நாம் வெல்ல முடியவில் லை என்பது ஒரு பெரிய இழப்பல்ல. ஆம்! 15ஆவது நாடாளுமன்றத்தேர்தலில் நீங்கள் வெற்றிபெறவில்லை. எல்லோருக்கும் வருத்தம். இன்னும் சொல்லப் போனால் இயக்கத்தில் பல தோழர்களுக்கு அதிக வருத்தம். நான் அறிவேன்.

என்னைப் பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே.15 ஆவது நாடாளுமன்றத்திற் கு நீங்கள் சென்றிருந்தால் இத்தனை வருடத்தில் ஒரு மோசமான ஆட்சியை ஒரு செயல்படாத நாடாளுமன்றத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்பது ஒரு பேரல் ல. இனி ஒரு மாற்றத்துக்கான ஆட்சி வரப்போகின்றது. அந்த ஆட்சியில் உங் கள் குரல் ஒலிக்கப் போகிறது.

ஐந்து வருடமாக முடங்கிக் கிடந்த நாடாளுமன்றத்தில் உச்சியில் பறக்கின்ற
இந்த தேசத்தின் தேசியக் கொடிகூட நீங்கள் காலெடுத்து வைக்கின்றபோது
புதிய பொலிவோடு பரபரப்புடன் பறக்கப்போகின்றது. சிதிலமடைந்த இடத்தில்
தான் மறுமலர்ச்சி வேண்டும். கெட்டுப் போன இடத்தில்தான் மாற்றம் வேண் டும். அந்த மாற்றத்தை வரும் தேர்தல் உருவாக்கும் என்று நம்பிக்கையோடு நான் இன்றைக்கு இந்த மாநாட்டைப் பார்க்கிறேன். இன்றைக்கு எனக்கு தெரிந் து காசு கொடுக்காமல் தானாகக் கூட்டம் வருவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தவிர தமிழ்நாட்டில் வேறு இயக்கத்திற்கு தகுதியில்லை. நாங்கள் கூட காலை அமர்வில் கொஞ்சம் கூட்டம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.தலைவர் எப்படி 2009 தேர்தலில் காசு கொடுத்து ஜெயிக்க வேண்டாம் என்று சொன்னார்களோ, அதுபோல ஏற்பாடு செய்து கூட்டம் வர வேண்டாம் என்று இந்த மாநாட்டில் சொன்னார்கள்.

ஆம்! அவர் சொன்னது அன்று நடக்க வில்லை. இன்று நடந்திருக்கின்றது. காசு
கொடுக்காமல் காலை அமர்வுக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. அரசிய லில் சரியான அடி எடுத்து வைத்திருக்கின்றோம். தமிழ்நாட்டு அரசியல் தலை விதியை மாற்றுவதற்கு தலைவர் வைகோவுக்கு தகுதி இருக்கிறது.செய்என்று சொல்வதற்கு ஒரு வார்த்தை போதும். செய்யாதே என்று சொல்வதற்கு ஒரு தலைமுறையே தயார் செய்ய வேண்டும்.

ஆம்! குடிக்காதே என்று இளைஞர்களை சொல்வதற்கும், நிலங்களை விற்கா தீர்கள் என்று விவசாயிகளை சொல்வதற்கும், வன்முறை செய்யாதே என்று அரசியலில் சொல்வதற்கும் உங்கள் ஒருவருக்கு மட்டும்தான் தகுதி இருக் கின்றது. அந்தத் தகுதியை நீங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றீர்கள்.தேர்தலில் எல்லோரும் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று விருப்பத்தைச் சொல்கிறார்கள்.பத்திரிகைகள் ஆருடம் சொல்கின்றன.

நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உழைத்தீர்கள், பேசினீர்கள். மறும லர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தியாகம் செய்தீர்கள். இனிவரும்
காலத்தில் நீங்கள் வியூகம் அமைக்க வேண்டும். இந்தியாவில் யார் வர வேண் டும். மக்கள் யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எதற்கு பலம் இருக்கிறது.மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் கள். யார் வரவேண்டும் என்பதற்கும், இங்கே என்ன பலம் இருக்கிறது என்ப தற்கும் வைகோ என்கிற நன்மதிப்பு சேர்ந்தால்தான் 2004 இல் எத்தனைக் கட்சி கள் சேர்ந்தாலும் தலைவரின் பிரச்சாரம் மின்சாரம் பாய்ந்ததைப்போல அது வரை தமிழ்நாட்டு அரசியலில் சரித்திரத்தில் இடம்பெறாத வகையில் நாற்பது
தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பறித்துத் தந்ததோ, அதுபோல இந்த
இரண்டு ஆண்டுகளில் இந்த மண்ணில் எங்கள் தலைவர் உருவாக்கி வைத்து
இருக்கின்ற நன்மதிப்பை, எங்களுடைய உழைப்பை, எங்கள் செல்வாக்கை,
வாக்கு எண்ணிக்கையில் இல்லாமல் தலைவரின் நன்மதிப்பைச் சேர்த்து ஒரு
கூட்டுமதிப்பாக எவருக்கு கணக்குப் பார்க்கத் தெரிகிறதோ, அவர்களுக்கும்
நன்மை, தமிழ்நாட்டுக்கும் நன்மை.

அந்த நேரம் வருகின்ற வரை வியூகம் என்பது யாருக்கும் தெரியாமல் வைத் துக் கொள்வதுதான். வியூகம் அமைப்பதில் நீங்கள் அர்ஜூனனைப்போல. நீங் கள் வியூகம் அமைத்து வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

இந்த மாநாட்டைப் பொறுத்தவரை,என்னைப் பொறுத்தவரை இங்கே திரண்டி ருக்கின்ற மக்கள் கூட்டம் நதியாக வேண்டும். இங்கு விதையாக விழுந்தி ருக்கின்ற இந்த நிகழ்வு விருட்சமாக வேண்டும். நாளைய தமிழகம் வளமாக வேண்டும். தேர்தல் களமாக வேண்டும். வைகோவின் முயற்சிகள் வென்றாக வேண்டும்.அதற்கு நாம் துணையாக நின்றாக வேண்டும்.நீங்கள் மாலைசொல் லும் சொல். வெல்லும் சொல்லாக இருக்கும். நாளை இந்த மண்ணில் பம்பரம்
வெல்லும் சின்னமாக இருக்கும்.

சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment