Tuesday, October 29, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 27

நாள்:-09.06.2008

இந்திய அரசு கைவிட்டது: தமிழக மீனவர்கள் அச்சம்!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் தொடர் தாக்கு தல்களையும், அராஜகத்தையும் மிகுந்த கவலையோடும், வேதனையோடும் மீண்டும் தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள பாம்பன் பகுதிக்கு 07.06.2008 அன்று நான் சென்றபோது, அங்கு வாழும் நாட்டுப்படகு மீனவர்களின் பல்வேறு சங்கங் களும், அவர்தம் குடும்பத்தாரும் இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் அவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்பொழுது இலங்கைக் கடற்படையினரால் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களையும், துயரங்களையும் கண்ணீர்மல்க என்னிடம் தெரிவித்தார்கள்.

நான்கு நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 26.5.2008 அன்று இலங்கை கடற்படையினரால் அழைத்துச்செல்லப்பட்டனர் என்றும்,இப்பொழு து அவர்களைப்பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும், என்னி டம் அளித்த விண்ணப்பத்தில் தெரிவித்து உள்ளார்கள்.

இதுபோன்ற கடந்தகால நிகழ் வுகளில், இலங்கைக் கடற்படையினரிடம்பட்ட
மனிதாபிமானம் அற்ற கொடுமைகளை மனதில் கொண்டு, இப்பகுதியில் வாழும் மீனவர்களின் குடும்பத்தாரும், ஒட்டுமொத்த மீனவர் சமுதாயமும்,
கடற்படையினரின் காவலில் உள்ள மீனவர்களின் நிலைமை குறித்தும், நலம்
குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டு உள்ளார்கள்.

இலங்கைக் கடற்படையினரால் 09.05.2008 அன்று அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட மீனவர்கள், தங்கள் படகுகளை இழந்ததோடு மட்டும் அன்றி, கைகள் கட்டப்பட்டு மனிதாபிமானம் அற்ற முறையில் சித்திரவதை செய் யப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு உண்ண உணவும் வழங்கவில்லை, உடலை மூடிக் கொள்ளத் துணியும் கொடுக்கவில்லை.

அதே போன்று 26.05.2008 அன்று 23 மீனவர்கள்,சுமார் 6முதல் 10 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள மீன்பிடி வலைகள், கருவிகள் மற்றும் உதிரிபாகங்களோடு அழைத்துச் செல்லப்பட்டு, இலங்கைக் கடற்படை யினாரால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்களோ என்ற அச்சம் இங்கு உள்ள மீனவர்கள் இடை யே நிலவுகிறது.

இலங்கைக் கடற்படையின் காவலில் உள்ள மீனவர்களைப்பற்றியும் அவர்கள்
பயணித்த படகுகள் பற்றிய விவரங்களும் இத்துடன் இணைக்கப்பட்டு உள்ள ன. 09.05.2008 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகு களை விடுவிக்கவும், 26.05.2008 அன்று அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களை, அவர்களது படகுகளுடன் பாதுகாப்பாகவிடுவிக்கவும் துரித நடவடிக்கை மேற் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடுக்கின்ற, கட்டுப்பாடற்ற
தொடர் தாக்குதல்கள், தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச் சியையும் ஏற்படுத்தி இருப்பதோடு, அவர்களது ஒரே வாழ்வு ஆதாரமான மீன் பிடித் தொழிலிலும் பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்ற உண்மையை, மீண்டும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

தங்களது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை குறித்தும், தங்கள் வாழ்க்கை யான மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவது குறித்தும், சிறிதும் கவலைப்படாத, செயல்படாத, இரக்கமற்ற இந்திய அரசின் நிலையை எண்ணி இப்பகுதி மீனவர் கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் ஒவ் வொரு சமயமும் அவர்களது பரிதாபமான நிலையைச் சிறிதும் கண்டுகொள் ளாமல் அரசு கண்மூடி இருப்பதாக அனைவரும் ஓரே குரலில் குற்றம் சாட்டு கின்றனர்.

எனவே, கொழுந்து விட்டு எரிகின்ற இந்தப் பிரச்சனையைக் கண்டுகொள்ளமல் தூங்கிக் கொண்டு இருக்கும் அரசு, இனிமேலாவது விழித்துக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து, அமைதியை விரும்பும், அறவழியில் செயல்படும் மீனவ சமுதாய மக்கள், மீன்பிடித் தொழிலை அமைதியாகத் தொடர, அவர்கள் மன தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுகிறேன்.

26.05.2008 அன்று இலங்கைக் கடற்படையால் கைது செய் யப்பட்டு காவலில்
உள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளின் விவரங்கள் :

1. படகு எண் : TN10/WV/848
                          
1. முனியசாமி, 2.அடைக்கலம்,3. மைக்கேல், 4. ஆறுமுகம், 5. அடிமை, 6. முரு
கன்.

2. படகு எண் : TN10/WV/798

1. களஞ்சியம், 2.முருகன், 3.சேகர், 4.கணேசன், 5.சேதுராமன், 6. சுந்தரம்.

3. படகு எண் : TN10/WV/704

1. இக்னேஷியஸ் , த/பெ. அருள் சகாயம் 2. ஜோஸ்பத், த/பெ. அருள் சகாயம்
3. செந்தில், த/பெ.முனியாண்டி 4.விஜயகுமார், த/பெ.முனியாண்டி 5. ஈஸ்வரன், த/பெ. முனியசாமி

4. படகு எண் : TN10/WV/704

1. கணேசன், த/பெ. கருப்பய்யா 2. பழனி, த/பெ. ஆறுமுகம் 3. ஜெனிபர், த/பெ. மரியன் 4. சுரேஷ், த/பெ. பால்சாமி 5. மாரி, த/பெ. முனியசாமி 6. சத்தியராஜ், த/பெ. மதுரைவீரன் 

மொத்தம் : 4 படகுகள். 23 மீனவர்கள்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

No comments:

Post a Comment