Sunday, October 20, 2013

தமிழக உரிமைகளை, வாழ்வாதாரங்களைக் காப்பவராக

தமிழக உரிமைகளை, வாழ்வாதாரங்களைக் காப்பவராக மக்கள் தலைவர் #வைகோ திகழ்கிறார்!

- விருதுநகர் மாநாட்டில் அ.கணேசமூர்த்தி எம்.பி.,

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில், ஆட்சிமன்றக்குழுசசெய லாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., ஆற்றிய அ.கணேசமூர்த்தி உரை...

பேரறிஞர் அண்ணா 105 ஆவது பிறந்தநாள் விழா - மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழக மாநாடு. மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்தவுடன் மெய் மறந்து போகிற நிலையில் இந்த மாநாடு அமைந்திருக்கிறது. மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தினுடைய பல்வேறு மாநாடுகளை அமைப்பதிலே உடன்
நின்று நான் பணியாற்றி இருக்கிறேன்.இந்த மாநாடு போல எந்த மாநாடும்
அமையவில்லை. கரூரையும் விஞ்சியது விருதுநகர் என்ற சரித்திரத்தை இந்த
மாநாடு படைத்திருக்கிறது. நான் எண்ணிப்பார்த்தேன். இதற்கு என்ன காரணம் என்று யோசித்தேன். ஆமாம்! நமது பொதுச்செயலாளர் முன்னின்று அவரது கண்பார்வையிலே அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. ஆகவேதான் அனைத்து மாநாடுகளுக்கும் இமயம் போல் அமைந்திருக்கிறது.

பொதுச்செயலாளர் அவர்கள் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்குகின்ற பொறுப்பினை இமயம் ஜெபராஜ் அவர்களை அமர்த்தியிருக்கிறார்கள். அவருக் கு என்னுடைய வணக்கம்.மாநாட்டுத் திறப்பாளர் சிறைச் சாலையிலே என்னு டைய அறைத்தோழர் காலையிலே முழக்கமிட்டார்.இந்த மாநாட்டைத் திறந்து வைத்துள்ள சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் அவர்க ளுக்கு வணக்கம்.மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர், எனக்கு முன்னாலே அழகுசுந்தரம் குறிப்பிட்டதுபோல, வைகோ அவர்கள் தமிழகத்திலே உரையாற் றக் கூடாது என்று சொல்லி அவரது உரைக்கு தடை போட்ட நேரத்தில் அவரை பேசவைத்து சிறப்பித்தார் என்று சொல்லி பாராட்டு பெற்ற நம்முடைய மாவட் டக் கழகத்தின் செயலாளர் வரவேற்புக்குழுத் தலைவர் ஆர்.எம்.எஸ்.சுக்கு என் னுடைய வணக்கம்.

கொடியேற்று விழாவிலே கழகத்தினுடைய வண்ணக்கொடியினை உயர்த்தி வைத்து, சிறந்த உரை தந்த சிப்பிப்பாறை இரவிச்சந்திரனுக்கு என்னுடைய வணக்கம். அண்ணா சுடர் ஏற்றி வைத்த சதன் திருமலைக்குமார் அவர்களுக் கும், தலைமைக் கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கும் என்னுடைய தலைப்பின் நாயகனாக இருக்கிற அண்ணாவின் வாரிசு,அண்ணாவின் அடிச்சுவட்டில்
பணியாற்றுகிற அரசியல் தலைவர் வைகோ அவர்களுக்கும் என்னுடைய
வணக்கம்.

நம்மை ஆளாக்கிய அண்ணா அவர்கள்மூடத்தனத்தின் முற்றுகையில் இருந்து
தமிழகத்தை விடுவித்தார்கள்.தந்தை பெரியார் அவர்கள் கருப்புச்சட்டை போட் டு நம்மை எல்லாம் வெள்ளைச் சட்டை போட வைத்ததுபோல, பேசா மடந்தை களாக இருந்த நமது தமிழர்களை அவர்களுக்கு நினைப்பையும் உணர்த்தி இனத்தினுடைய சிறப்பை எடுத்துச் சொல்லி, ஏ! தாழ்ந்து கிடந்த தமிழகமே, என்று தட்டி எழுப்பி, தரணியிலே தமிழர் புகழ் பெறும் நிலைமையிலே மாற்றி அமைத்த பெருமை அண்ணா அவர்களுக்கு உண்டு.

அவர்கள் 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி
வைத்து உரை ஆற்றுகிறபொழுது நமக்கு எடுத்து வைத்த அடித்தளம், சமுதா யத்துறையிலே சீர்திருத்தம்,பொருளாதாரத் துறையிலே சமதர்ம குறிக்கோள். அரசியலில் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலைஆகியகொள்கை களைத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாக அறிவித்தார் கள். அதை வலியுறுத்தி தான் கழகம் இன்று வரை நடைபோடு கின்றது.

இன்றைக்கு இருக்கின்ற அரசியலில் திராவிட இயக்கத்தில் எது உண்மையான
திராவிட இயக்கம்?அண்ணாவின் அடிச்சுவட்டிலே பணியாற்றுகின்ற இயக்கம் எதுவென்று கேட்டால், கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. மறும லர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர வேறு இயக்கம் இல்லை என் று சொல்லக்கூடிய தகுதியைப் பெற்று இருக்கிற இயக்கமாக நம்மை வழிநடத் தி வந்திருக்கிறார்கள் நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள். அண்ணா வி னுடைய குணங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் சரி, அண்ணா அவர்கள் இந்தத்
தமிழகத்தில் எதற்காக உழைத்தார்களோ, அதை நிலை நிறுத்தும் பணியினை நம் இயக்கம் செய்து வருகிறது.

அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கியவர்கள் எல்லாம் ஆட்சிப்பொறுப் பை அவர்களிடத்திலே ஒப்படைத்த நேரத்திலும் அவர்களால் செய்ய முடியா தவற்றை, செய்யத் தவறியவற்றை, அவர்களாலே இந்த நாடு சீரழிந்திருக்கிற நிலையிலே அதைத் திருத்துவதற்காக அண்ணாவின் இலட்சியங்களை கையி லே ஏந்தி அரசியல் பயணத்தை மேற்கொண்டு இருக்கிற தலைவராக வைகோ அவர்கள் இருக்கிறார்.

அண்ணா சொன்னார், மக்களிடம் செல் என்று சொன்னார். நம்முடைய தலை வர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பு நம்மிடத்திலே இல்லை. அதிகார வர்க்கம் நம் மிடத்திலே இல்லை. ஏன், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட நமக்கு இல்லை. ஆனால், அவர் சொல்லுவ தெல்லாம் நாட்டில் ஏற்றுக்கொள்கிற சொல்லாக அமைகின்றது என்று சொன்னால் அவர் அண்ணாவின் கரம் பிடித்து தன்னை ஒப்படைத்துக் கொண்ட காரணத்தினால்தான்.அண்ணாவினுடைய உணர்வு கள் அண்ணாவினுடைய இலட்சியங்களை கொள்கைகளை நெஞ்சிலே ஏற்று
அதைச் சொல்லுவதற்கு ஆளில்லாத இந்த நேரத்தில் அதைச் சொல்லுகிற
தலைவராக சொல்லுவதோடு மட்டுமல்ல, சொல்லத் தகுதி வாய்ந்த ஒரு தலைவராக இருப்பதால்தான் நாடு வியந்து பாராட்டுகிறது. எனக்கு முன்னா லே செந்திலதிபன் அவர்கள் சொன்னார், பிரஸ்ஸல் மாநாட்டில் ஈழத்தில் நடைபெறுகிற இனப் படுகொலைக்கு ஈழத்தின் விடிவை காண்பதற்கு தீர்வு பொதுவாக்கெடுப்பு என்ற சொல்லை அறிமுகப்படுத்தியதே நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள்தான்.

இன்றைக்கு நாடு முழுவதும் அதை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். திரா விட இயக்கத்திலே ஏற்பட்டிருக்கிற தேக்கத்தைப் போக்குவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டவர்கள் நாம். இந்த இயக்கம் எதனாலே தோன்றியது என்று எண்ணிப் பாருங்கள். ஈழத்திலே நம்முடைய இனம் அழிக் கப்படுகிறது. தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பிலே இருப்பவர்கள் அண்ணா வளர்த்த இயக்கத்தை தன்னிடத்தில் வைத்து கொண்டு,ஆட்சிப் பொறுப்பை யும் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு இன அழிப்பிற்குதுணை போனார்களே தவிர, தடுத்து நிறுத்துகிற சக்தியாக அவர்களால் விளங்கமுடியவில்லை. அண்ணா ஊட்டி வளர்த்த பாச உணர்வு கொண்டு, அண்ணன் தம்பிகளாக குடும் பப்பாசத்தோடு வளர்ந்த இந்த இயக்கத்தை ஒரு குடும்பம் கும்மி அடிப்பதற்காக  மடைமாற்றிவிட்ட காரணத்தினாலே அந்த மனம் அவர்களுக்கு வரவில்லை
வைகோ அவர்கள் சொல்லுகிறார், அவர் சொல்லுவதை இந்த நாடு ஏற்றுக்
கொள்கிறது. அவர் சொல்லுவதுதான் இன்றைய தமிழகத்தினுடைய வேதவாக் காக மாறியிருக்கிறது. காலையிலே இந்த மாநாடு 9 மணிக்கு தொடங்கு கிறார் கள் என்று சொன்னார்கள். எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இப்படி இருக்கும் என்று சொன்னால் நிச்சயமாக இல்லை. ஒன்பது மணிக்கு மேடைக்கு வரும் போது அரங்கம் நிரம்பியிருந்தது என்று சொன்னால் எந்த அரசியல்கட்சியிலும் இப்படி இல்லை. எண்ணிப் பாருங்கள். என்ன காரணம்? எதுவும் இவராலேதான் சாத்தியம். அதை சந்திப்போம் என்று நீங்கள் வந்து இருக்கிறீர்கள். தமிழகத்தின் அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டிய காலகட்டம் இது.

எனக்கு முன்னாலே பேசிய நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள், நாடாளுமன் றத்திற்கு வைகோ செல்ல வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். நாடாளு
மன்றத்திற்கும் செல்ல வேண்டும்.இந்தத் தமிழ்நாட்டை ஆளுகின்ற தலைவ ராகவும் மாற வேண்டும். அதற்கு நிச்சயமாக வியூகம் எடுக்கிற இடத்திலே
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. தமிழகத்திலே ஒரு
மாற்றத்தைத் தேடி இந்த மக்கள் அலைகிறார்கள். ஒரு தகுதிவாய்ந்த தலைவ னைத் தேடி திரிகிற நாடாக மாறி இருக்கிறது. அந்த அளவுக்கு தமிழகம் சீர் கெட்டுப் போயிருக்கிறது. நல்ல தலைவரை காண்பது அரிது என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.தமிழகத்தினுடைய உரிமைகளை, வாழ்வாதாரங்களைக் காப்பாற்றுகின்ற தலைவராக தமிழக இளைஞர்கள் வைகோவை உணர்கிறார் கள். அவர்கள் எண்ணிப் பார்த்தார்கள். நமக்கு ஒரு தலைவர் இருக்கிறார். கருப்புத் துண்டோடு வலம் வருகிறார் என்று சொல்லி அவரது பின்னால் வரு கின்ற சூழல் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.

நாடாளுமன்றம் மட்டுமல்ல நமது குறிக்கோள். தமிழகத்தினுடைய ஆட்சி
பொறுப்பு வைகோவினுடைய கைக்கு வருகிற நாள் வெகு தொலைவில் இல் லை. மாற்றத்தைத் தேடி அலைகிறவர்கள் எல்லாம் இன்றைக்கு இதோ ஒரு தலைவர் இருக்கிறார் என்று சொல்லி பின்னால் வருகிறார்கள்.இருபது ஆண் டு காலம் அவர் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பலன். தந்தை பெரியார், பேர றிஞர் அண்ணா, மாவீரன் பிரபாகரன் போன்று மக்களுக்கு உரிய தலைவராக நாம் வைகோ அவர்களைப் பார்க்கிறோம்.

1967 ஆம் ஆண்டு மக்கள் செல்வாக் கோடு ஆட்சிப்பொறுப்பை ஏற்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முதன் முதலாக எங்கே அவர் சென்றார்கள்.தந்தை பெரி யாரிடத்தில் அந்தத் தேர்தலிலே காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். கண் ணீர்த் துளிகள் தோற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார் பெரியார். இன் னும் சொல்லப்போனால் வசைமொழி பொழிந்தார் பெரியார் அவர்கள். தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பு தன்னுடைய கையிலே வந்தவுடன் நேராக தந்தை யைத் தேடி திருச்சிக்கு சென்றார்.

அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்,என்னை கூச்சப்பட வைத்து விட்டீர்கள் என்று சொல்லி,இவ்வளவு வசை பாடினோம்.இவர்களைத் திட்டித் தீர்த்தோம். அதை யெல்லாம் மறந்துவிட்டு இங்கு வந்திருக்கிறாரே என்று பெரியார் சொன்னார். அதுபோலத்தான் நம்மை ஏசுகிறவர்கள், ஏசியவர் கள், எதிர்த்தவர்கள் இன்றைக்கு கூச்சப்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது. அவர் மேடை ஏறிப் பேசினால் ஏற்றுக்கொண்ட கொள்கையை நெஞ்சிலே நிறுத்திப் பேசுகிறபொழுது சாடுகிற எவரும் தலைகுனிந்துதான் போக வேண் டும்.

ஆனால், நேராக சந்திக்கிற போது, அவரைப் போன்று பணிவான மனிதரைப்
பார்க்க முடியாது. இது தந்தை பெரியார் அவரிடத்திலே இருக்கும் குணம். நான்
அவரோடு சென்னையில் ஒருமுறை இந்திய நாட்டினுடைய பிரதமரை சந்திப்
பதற்காக சென்றேன். பிரதமரிடத்திலே தன்னுடைய கண்டனத்தைச் சொல்லி
விட்டுச் சொன்னார், நான் இந்திய நாட்டினுடைய பிரதமரை வன்மையாகக்
கண்டிக்கிறேன்.ஆனால், மன்மோகன் சிங் அவர்களை மரியாதை செய்கிறேன்.
அந்த அளவிற்கு பேரறிஞர் அண்ணா அவர்களிடத்திலே இருந்த குணங்கள்
இன்றைக்கு வைகோ அவரிடத்திலே இருக்கிறது. மனிதநேயம் என்று சொன் னால் அரசியல் வாதிகளுக்கு இல்லாத ஒன்று நம்முடைய தலைவர் அவர்களி டத்திலே இருக்கிற காரணத்தினாலேதான் இன்றைக்கு நாடு அவரைத் திரும் பிப் பார்க்கிறது. நான் அவரை புகழ்வதற்காக சொல்லவில்லை. சட்டக்கல்லூ ரியிலே மாணவர் தேர்தலிலே போட்டியிடுகிற போது நான் அவரைப் பார்த்த வன். அண்ணா விடத்திலே அவர் அறிமுக மானது இந்தி எதிர்ப்பு நிகழ்விலே தான். ஏதோ படித்து அண்ணாவின் கரம்பற்றி வந்தவர் அல்ல அண்ணாவை முழுவதுமாக படித்தவர்.அண்ணாவை அறிந்தவர் வைகோ.

அதுமட்டுமல்ல வைகோ அவர்களுடைய பேச்சில் உண்மை இருக்கும். ஈழத் தைப் பற்றி அவர் பேசுகிறார் என்று சொன்னால் அவரது உரை வீச்சிலே மட்டு மல்ல அவரது மூச்சிலும் ஈழம் இருக்கிறது.ஆகவேதான் சொல்லுவது ஒன்று
செய்வது ஒன்று என்று இல்லாமல் ஒரு தலைவராக வைகோ திகழ்கிறார்.
தமிழகத்தினுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கிறபோது, மக்களை நாடிச்சென்று
அவர்களை அணிதிரட்டி, அரசாங்கத்தின் கவனத்தை இழுக்கிற ஒரு தலைவ ராக இருக்கிறார். மதுவின் பிடியிலே இந்த நாடு சிக்கித் தவிக்கிறது. தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லி தன்னை வருத்திக் கொண்டு 1500 கி.மீ. மூன்று கட்ட நடைப்பயணத்தை முடித்தார்.தமிழகத்திலே இன்றைக்கு ஒரு எழுச்சி உருவாகி இருக்கிறதா?இல்லையா?மதுக்கடைகள் அரசாங்கம் அமைத் தால் அதைத் தட்டிக்கேட்க முடியாமல் இருந்த மக்கள் இன்றைக்கு பல இடங் களிலே இங்கே மதுக்கடைகள் கூடாது என்று சொல்லி போராடுகிற சூழ்நிலை
உருவாகி இருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? அண்ணாவின் அடிச் சுவட்டைப் பற்றிய தலைவராக வைகோ இருக்கிறார். அவருடைய அரசியல் பயணத்தைத் தொடர்ந்து கவனித்து வந்தால் ஒரு தலைவருக்கு உரிய அத்த னை தகுதிகளையும் பெற்று இருக்கிறார்கள்.

சாஞ்சிப் பயணத்திலே அவருடன் செல்லும் வாய்ப்பு கிடைக்காது என்று சொல் லி இரயிலில் செல்லும் பயணத்தை கவனித்துக் கொண்டு இருந்தேன். அதை எப்படி எண்ணினார்கள் என்று எனக்கு தெரியாது.இரயிலிலே செல்லுபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு செல்லுங்கள் என்று அறிவித்தார். இல்லை நான் பேருந்திலேதான் வரப் போகிறேன் என்று சொல்லி என்னுடைய பெயரை
பதிவு செய்து கொண்டேன்.இந்தப்பயணத்தைப் பற்றி ஆவணம் ஒன்றை வெளி யிட்டுள்ளார்கள். அதில் சாஞ்சியில் கலந்து கொண்ட அனைவரும் இடம்பிடித் துள்ளார்கள்.நான் பல்வேறு போராட்டங்களை பார்த்திருக்கிறேன். மாணவர்
போராட்டங் களில் இருந்து பொடா சிறை வரை அவர் எடுத்த நடவடிக்கையில் உடன் இருந்து இருக்கிறேன். இந்தப் பயணத்தில் அவரோடு செல்ல வேண்டும் என்று எண்ணியதற்கு காரணமே அங்கு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது.ஏதோ ஒன்று வெளிப்படப் போகிறது என்று நான் உணர்ந்தேன். பயணம் முடிந்ததற்கு
பின்னாலேதான் எனக்கு தெரிந்தது இவர் இயக்கத் தினுடைய தலைவர் மட்டு
மல்ல, ஒரு இராணுவத்தளபதியாக,இராணுவத்தலைவராக இருக்கிறார் என்று எனக்கு புரிந்தது. 42 மணிநேரம் ஓர் இடத்திலே தங்கி இருந்தோம் என்று சொன் னால் சாலையிலே படுத்துக் கிடந்தார். இராணுவத் தளபதிபோல கண்டிப் போடு, கனிவோடு, ஒரு படை நடத்திச் செல்கிற அத்தனை தகுதிகளும் அவ ருக்கு இருக்கிறது.

ஒரு மாற்றம் தமிழகத்திலே உருவாகும்.அதற்கு நாம் தயாராக வேண்டும். அவர் உழைக்கிறார். 24 மணிநேரம் உழைக்கிறார். இன்னும் சொல்லப் போ னால் ஓய்வில்லா உழைப்பாளி என்று ஒரு பட்டம் வைத்திருந்தால் அது அவ ரைத் தவிர யாருக்கும் பொருந்தாது. மக்களிடத்திலே எடுத்துச் செல்வதற்கு
என்ன சாதனம். இந்த மாநாடு அதற்கு பயன்படவேண்டும். பேரறிஞர் அண்ணா தான் மாநாடுகளைப் பற்றிச் சொல்லும்போது சொல்லுவார்கள்.மாநாடு என் பது ஏதோ கூடி கலைகிற கூட்டமல்ல, கொள்கைகளை நெஞ்சிலே ஏற்றி நாடு முழுவதும் பரப்புரை செய்கிற ஒரு பாசறைக் கூட்டம் என்று சொல்லுவார்கள். அதைக் கருத்திலே கொண்டுதான் இந்த மாநாட்டை அமைத்து இருக்கிறார்கள்.

மாநாடு அமைந்திருக்கிற சூழல் இந்திய நாட்டின் அரசியல் சூழல் மட்டுமல்ல,
தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லி மக்கள் எண்ணத்தகுந்த சூழல் அமைந்திருக்கிறது. தகுதியானவர்
இவர்தான் என்ற சூழல் அமைந்து இருக்கிறது. இதை எடுத்துச் சொல்ல வேண் டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.அந்த வாய்ப்பை இந்த இயக்கம் முழுமை யா கப் பயன்படுத்தி கொள்ளுமா என்று சொன்னால் அது உங்களுடைய கையிலே இருக்கிறது. அண்ணாவின் அடிச்சுட்டில் பணியாற்றுகிற தலைவர் அவருக்கு தெரியும் பத்திரிகையெல்லாம் பரபரப்பாக எழுதுகிறது.நம் தலைவரும் அவரே! அடுத்த நாடாளுமன்ற உறுப்பினரும் அவரே! நன்றி வணக்கம்.

அ.கணேசமூர்த்தி எம்.பி., இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment