திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என #மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாநகர், புறநகர் மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சட்டத்துறை துணைச் செயலர் அரசுஅமல்ராஜ் தலை மையில் நேற்று (12.10.13 ) நடைபெற்றது.
மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலர் எஸ். வெயிலுமுத்து முன்னிலை வகித்தார். வழக்குரைஞர் கே. தவசிராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நவ. 11-ல் சென்னையில் நடைபெறும் வழக்கறிஞர்கள் மாநாட்டில் தென் மாவட்டங்களில் இருந்து 500 வழக்கறிஞர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
முல்லை பெரியார், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற மக்களை பாதிக்கும் பிரச்னையில் நீதிமன்றம் சென்று சிறப்பாக வாதாடி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த பொதுச்செயலர் வைகோவுக்கு நன்றி தெரிவிப்பது.
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஆணை பிறப்பிக்க வேண்டும்.
குடும்பநல நீதிமன்றம், அத்தியாவசிய பண்டங்கள் குறித்த நீதிமன்றங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்காக திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்
திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. என். சங்கரநாராய ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment