Sunday, October 13, 2013

இளைஞர்கள்,மாணவர்கள் என1,500 பேர் மதிமுகவில் இணைந்தனர்

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள்  மாணவர்கள் என 1500 பேர் நேற்று (12.10.13) இரவு #மதிமுக வில் #வைகோ தலைமையில் இணைந்தனர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண் டு அரங்கத்தில் பல்வேறு இயக்கத்தினர்,மாணவர்கள், இளைஞர்கள் ம.தி.மு.க. வில் இணையும் விழா நடந்தது. விழாவிற்கு துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உதய குமார் வரவேற்றார். விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந் து கொண்டு பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:–

போராளிகளுக்கு தோல்வியே கிடையாது. வீரவரலாறு தஞ்சையில் செதுக்கப் பட்டுள்ளன. பல்வேறு சிறப்புமிக்க சோழர் மண்ணில் நம் இதயத்தை விட்டு அகலாத, அழியாமல் கிடக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப் பட்டுள் ளது. இதற்கு நிகராக அவலத்தை சித்தரிக்கக்கூடிய அருங்காட்சியகம் வேறு எங்கும் இல்லை. இலங்கையில் குழந்தைகள், சகோதரிகள் கொல்லப்பட்ட காட்சிகள் கல்லில் ஜீவத்துடிப்போடு செதுக்கப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட தமிழர்களின் பிணத்தை நாய் கடித்து குதறுவது போன்றும்,சமா தானம் பேச வருகிறோம் என்று கூறி குண்டுகளை வீசிய சம்பவத்தை நினைவு கூறும் வகையில் புறா வாயில் குண்டுகள் இருப்பதை போன்றும், யாழ்ப்பா ணம் நூலகத்தை தீ வைத்து எரிக்கப்பட்டதை போன்றும் காட்சிகள் வடிவமைக் கப்பட்டுள்ளன. கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து,வயிற்றுக்குள் இருக் கக்கூடிய சிசுவின் கை வெளியே தெரிவதை போன்றும், போரின்போது ஈழத் தமிழர்கள் எப்படி வேதனைப்பட்டு இருந்தார்களோ அந்த வேதனையை பிரதி பலிக்கும் வகையிலும் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நடந்த படுகொலையை தடுக்க வேண்டிய தமிழர்கள், இன்னும் விழிக்கவில்லையே என்று தீக்குளித்து உயிர்நீத்த முத்துக்குமரன் உள்பட 20 பேரின் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. 18–ம் நூற்றாண்டிற்கு பின் தமிழ் தொண்டாற்றிய தமிழறிஞர்களின் புகைப்படங்களும், கலைக்கு தொண்டாற்றியவர்கள், இசைக்கு பெருமை சேர்த்தவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த முள்ளிவாய்க்கல் முற்றம் மீண்டும் ஆயுதம் ஏந்தக்கூடிய சக்தியை கொடுக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு இது உணர்ச்சியை ஊட்டிக் கொண்டே இருக்கும். உல கில் எங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் தஞ்சைக்கு வர வேண்டும். மனிதஉரி மை ஆர்வலர்கள் வர வேண்டும். அடுத்த மாதம் (நவம்பர்) 8, 9, 10 ஆகிய தேதி களில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்புவிழா நடக்கிறது. இதில் அனைவ ரும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும். சிங்களர்கள் நம் மக்களை அழித்தது மட்டுமின்றி, அவர்களுக்கு எந்தகாலத்திலும் தமிழ் உணர்வு வந்து விடக்கூடாது என்ற செயலிலும் ஈடுபட்டு வருகிறது. நீதியை புதைக்கும் திட்ட மாகவே இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் காமன்வெல்த் அமைப்பின் குறிக்கோள் புதைக்கப்பட்டதாகவே அர்த்தம். ம.தி.மு.க. எதிர்காலத்தில் பல மான வெற்றியை பெறும். பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும். காலம், இடம் அறிந்து, எதிரிகளின் பலம் அறிந்து களம் அமைக்கப்படும். இந்த தேர்தலில் ம.தி.மு.க. வெற்றி பெறும். அது எப்படி வெற்றி பெறும் என்று யூகிக் க முடியாது. இந்த யுத்தத்தை நடத்தக்கூடிய முழு பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு வைகோ பேசினார்.

விழாவில் மாவட்ட செயலாளர்கள் சின்னப்பா, சந்திரசேகரன், சேரன், ரெயில் பாஸ்கர், மோகன், தணிக்கைக்குழு உறுப்பினர் முருகன், தஞ்சை மாவட்ட பொருளாளர் துரைசிங்கம், நகர செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் விடுதலைவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு இயக்கத்தினர், இளைஞர்கள், மாணவர்கள் என 1,500 பேர் வைகோ முன்னிலையில் ம.தி.மு.க.வில் இணைந்தனர்.

நிருபர்களிடம் வைகோ கூறும்போது, 

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது தொடக்கத்தில் இருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று நான் சொன்னது கிடையாது. ஏன்? என்றால் கடைசி நேரத்தில் நாங்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள். இலங் கை, இந்தியாவின் கூட்டுசதியால் தான் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை தலைநகரான கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு தமிழகஅரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

No comments:

Post a Comment