Monday, October 21, 2013

சல்மான் குர்ஷித் கொழும்பு பயணம்

சங்கொலி தலையங்கம் 

சல்மான் குர்ஷித் கொழும்பு பயணம்....தமிழின துரோகம் தொடருகிறது!

இந்தோனேசியா நாட்டின் பாலி நகரில் நடைபெற்ற ஆசியா பசிபிக் பொருளா தார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அதன் 21 உறுப்பு நாடுகளின்
தலைவர்கள் பங்கேற்றனர். அக்டோபர் 8 ஆம் தேதி முடிவுற்ற இம்மாநாட்டில்
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் 7 ஆம் தேதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஆட்சி யில், ஜனநாயக சுதந்திரம் கேள்விக் குறியாகிவிட்டது. அரசியல் தலைவர்கள் மிரட்டப்படுகின்றனர்.தலைமை நீதிபதியையே குற்றம் சுமத்தி பதவியிலிருந் து நீக்கிவிட்டனர். மனித உரிமைகள் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படவில் லை” என்று குற்றம் சாட்டினார்.

கனடா பிரதமரின் விரிவான அறிக்கை ஒன்றையும் அந்நாட்டு அரசு வெளியிட் டுள்ளது. “இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் கொல்லப்ப டுவதாகவும், நிறையபேர் காணாமல் போவதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் மிரட்டப்படுவதாகவும் வரும் செய்திகள் கனடாவை கவலை அடையச் செய்துள்ளது. இலங்கை நிலவரம்
வேதனை அளிக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித
உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதை ஏற்க முடியாது. போர் முடிந்த பிறகும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை பொறுப்பேற்கத் தவறி விட்டது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பில் நவம்பர் மாதம் 17,18 தேதிகளில் நடைபெறும் காமன்வெல்த் நாடு கள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டை கனடா புறக்கணிக்கும் என்றும்,
காமன்வெல்த் அமைப்பின் திட்டங்களுக்கும் அதன் செயலகத்துக்கும் கனடா
தரப்பிலான நிதி பங்களிப்பை மறு ஆய்வு செய்யவும் கனடா அரசு முடிவு செய் திருப்பதாகவும் பிரதமர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளை வன்மையாகக் கண் டித்த நாடு கனடா. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நாடாளுமன்றத்திலே யே, இலங்கையில் ராஜபக்சே கூட்டம் நடத்திய இனப்படுகொலையை, மனித உரிமை மீறல்களை, இந்தியா கண்டும் காணாமலிருந்தது என்று இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டிப் பேசினார். பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் ஏதிலி களாக கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்தபோது, அடைக்கலம் தந்து, ஆதரித்து வருகிற நாடு கனடா. தற்போது, இலங்கையில் நடைபெறப்போகும் காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து இருப்பதன் மூலம், கனடா தேசம் என்றைக்கும் தமிழர்களின் நேசத்துக்கு உரிய நாடு என்ப தை வெளிப்படுத்தி இருக்கின்றது.

ஆனால், ஏழரை கோடி தமிழர்கள் குடிமக்களாக இருக்கும் இந்தியா, தமிழினத் திற்கு எதிராகவே செயற்படுகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல் மான் குர்ஷித் அக்டோபர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நவம்பர் மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளைப் பார் வையிடவும், இந்தியாவின் சார்பில் அதற்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் தான் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு ‘திக் விஜயம்’ மேற்கொண்டார். இரண்டு இலட்சம் தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமின்றி, தமிழினத்தைப் பூண் டோடு கருவறுக்க துடித்துக் கொண்டிருக்கும் ராஜபக்சேவை சந்தித்து, இலங் கையின் வடக்கு மாகாணத் தேர்தலை நடத்தியதற்காக இந்தியாவின் சார்பில்
பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கின்றார்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொடர்ந் து வலியுறுத்தி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள்,
கொழும்புவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் ‘இந்தியா’ பங்கேற்கக் கூடாது என்று கூறிவருகின்றன. இலங்கையில் காமன்வெல்த் மாநாடே நடத் தக்கூடாது. மாநாடு நடைபெற்றால் 53 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த்
அமைப்பின் தலைவராக ராஜபக்சே வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்றுகுவித்த மனித குல விரோதி ராஜபக் சேவை பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்து தண்டனை அளிக்க வேண்டும். அதற்கு மாறாக காமன்வெல்த் அமைப்பின் தலைவராக ராஜபக்சேவுக்கு முடிசூட்டப்பட்டால், ஐ.நா.மனித உரிமை ஆணை யத்தின் விசாரணை என்பது பெயரளவிற்குக்கூட நடக்க வாய்ப்பு இல்லை.

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும். தமிழ்ச் சமூ கம் இவ்வளவு தூரம் வலியுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தமிழர் விரோத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அனுப்பி, இலங்கையில் மாநாட்டை நடத்துவதற்கு ஆலோசனை வழங்குகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கை மீது பொருளாதார தடையைக் கொண்டு
வர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட் டது.தமிழக மக்களின் கருத்தை எதிரொலித்த சட்டமன்றத் தீர்மானத்தை மத் திய அரசு காலடியில் போட்டு மிதிக்கிறது. சோனியா தலைமையில் இயங்கு கின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழினத்தை வஞ்சிக்கின்ற துரோக அரசு என்பதற்கு இதைவிட உதாரணம் தேவை இல்லை.

“இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தினை முழுமையாக நடை முறைப்படுத்தி, தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு கிடைக்கச்செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது” என்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறிய சல்மான் குர்ஷித், கொழும்பு சென்று ராஜபக்சேவை சந்தித்தார். அப்போ து ராஜபக்சே, ‘தமிழர் பகுதிகளில் அதிகார பகிர்வு கிடைக்கச் செய்வது குறித்து இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். இலங்கை நாடாளு மன்றத் தேர்வுக்குழுதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறி இருக்கிறார். ராஜபக்சே கூறுவது என்னவெனில், தமிழர் பகுதிக்கு அதிகாரம்
தருவது குறித்து எங்களுக்கு இந்தியா கட்டளையிட முடியாது. எங்கள் நாடா ளுமன்றத் தேர்வுக் குழுவுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்பதே.

இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவில் ((Parliamentary Select Committee - PSC) பெரும்பான்மை உறுப்பினர்களாக ராஜபக்சேவின் கட்சியைச்சேர்ந்தவர்களும், அவரது கூட்டணி கட்சியினரும் தான் இருக்கின்றார்கள்.ஒருபோதும் தமிழர் களின் கையில் அதிகாரம் கிடைப்பதற்கு, இலங்கை நாடாளுமன்றக்குழு ஒப்பு தல் தரப்போவதில்லை;

ஆனால், உலக நாடுகளை ஏமாற்றவும் ஐ.நா. மன்ற மனித உரிமை ஆணை யத் தின் விசாரணையிலிருந்து தப்பிக்கவும், இலங்கையில் ஜனநாயகம் உள்ளது என்று பொய் உரைத்து, காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தயாராக இருக்கிறது என்பதைக் காட்டவும், வடக்கு மாகாண சபை தேர்தலை ராஜபக்சே நடத்தி உள்ளார். இதற்கு இந்தியாவின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைத்து இருக்கின்றது.

இலங்கை வடக்கு மாகாணத்தில் செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடந்தது.
மொத்தமுள்ள 38 தொகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 30 இடங்களில்
வெற்றி பெற்றது. இலங்கை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சி.வி.விக்னேஸ்வரன் (73)அக்டோபர் 7ஆம் தேதி ராஜபக்சே முன் னிலையில் வடக்கு மாகாண முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ்ப்பாணத்துக்குச்
சென்றபோது, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப்
பேசினார். அப்போது சி.வி.விக்னேஸ்வரன் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டு
இருக்கின்றார். “வடக்கு மாகாணத் தேர்தல் நடத்தப்பட்டதற்காக இந்தியா வுக் கு நன்றி தெரிவிக்கிறேன். அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்யப் போகிறோம் என்று இலங்கை அரசு கூறிய வேளையில், இன்றைக்கு நான் இங்கே முதல்வர் ஆகி இருக்கிறேன் என்றால் அதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம்” என்று சி.வி.விக்னேஸ்வரன் கூறியதிலிருந்து, ராஜபக்சே உல கத்தை ஏமாற்ற நடத்தும் நாடகத்திற்கு இந்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்துள்ளது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.

இலங்கையின் தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும், இலங்கை
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா, புதுச்சேரிக்கு வந்தபோது, ஒரு பத்திரிகைக்கு (தி இந்து அக்டோபர் 8, 2013) அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

“கடந்த 60 ஆண்டுகளிலும், போர் நடந்த காலங்களிலும் ஆண்ட அரசுகள், தமி ழர்களை அழிக்க எடுத்த நடவடிக்கைகளை விட போருக்குப்பிறகு கடந்த  நான் கு ஆண்டுகளில் ராஜபக்சே அரசு, தமிழ் இன அடையாளங்களை தீவிரமாக
அழிக்க நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில், இலட்சக்க ணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.சீன இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. இராணுவக் குடியிருப்புகள் நிறுவப்பட்டன. பல இடங்க ளில் இந்து கோவில்கள் கிறிஸ்துவ தேவாலயங்கள், முஸ்லிம் மசூதிகள் அகற்றப்பட்டு, புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டன. தமிழ் மக்களின் சொந்த நிலங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. விவசாய நிலங்கள் தற் போது தமிழர்களிடம் இல்லை.அத்துடன் தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்க அனு மதி இல்லை.

மாகாண அரசுக்கு பல அதிகாரங்கள் இல்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு நிதியை கையாளும் அதிகாரத்தையும் பறித்தனர்.

இலங்கையின் மாகாண சபைகளுக்கு நில அதிகாரம், நிதி அதிகாரம் எவையும்
இல்லை. தமிழர் நிலங்கள்பறிக்கப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டி ருக்கின்றன. இலட்சக்கணக்கான இராணுவவீரர்கள் தமிழர்கள் வசிக்கும் பகுதி யிலிருந்து திரும்பப்பெறப்பட மாட்டார்கள் என்று ராஜபக்சே அரசு திமிரோடு அறிவித்து இருக்கின்றது. தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்ப ட் டு வருகின்றன. இவைபற்றியெல்லாம், சிங்கள இனவாத அரசின் அதிபரோடு பேசுவதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அங்கு செல்லவில்லை.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துவதும்,
மீனவர்களை படுகொலை செய்வதும், மீனவர்களின் படகுகளையும், மீன்பிடி
உபகரணங்களை அழிப்பதும் சிங்கள வெறியர்களின் அன்றாட வேலை ஆகி விட்டது. இன்னும் 112 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப் பட்டு இருக்கின்றனர். மீனவர்களின் படகுகளை பறித்துச் சென்று இலங்கை அரசுக்கு சொந்தம் என்று அறிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் இத்தகைய காட்டுமிராண்டித் தனத்தை இந்திய அமைச்சர்
சல்மான் குர்ஷித், தட்டிக் கேட்கவில்லை. 2011 இல் அன்றைய வெளியுறவு
அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்பு சென்றபோது இலங்கை அரசு என்ன
கூறியதோ அதையே இப்போதும் தெரிவித்துள்ளது. “இரு நாட்டு மீனவர்களின்
பிரதிநிதிகளும் அடிக்கடி சந்தித்துப் பேசி, தங்களுக்குள்ளேயே நியாயமான -
விவேகமான முறையில் தீர்வு காண்பதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்ப தால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கி றது” என்று சல்மான் குர்ஷித் கூறி இருக்கின்றார். தமிழக மீனவர்கள் இலங் கைக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகி அடிக்கடி கொல்லப்படுவது குறித் து, இந்திய அரசு கவலைப்பட வேண்டியது இல்லை. மீனவர்களின் பிரதிநிதி களே, இலங்கை மீனவர் பிரதிநிதிகளைச் சந்தித்துப்பேசி தீர்வு காண்பார்கள் என்பதுதான் வெளியுறவு அமைச்சரின் கருத்தாகும். பாகிஸ்தான் நாட்டு இரா ணுவம், குஜராத் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் இந்திய அரசு இப்படி கருத்துக் கூற முடியுமா? அதுமட்டுமல்ல, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், டில்லி திரும்பிய பிறகுதான், இம்மாதம் 14 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் - கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 15 பேரும், இராமேஸ்வரம் மீன வர்கள் 22 பேரும் ஆக 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய வெளியுறவு அமைச்சரின் பயணத் தை சிங்கள அரசு எவ்வளவு அலட்சியமாகக் கருதுகிறது என்பதற்கு இது எடுத் துக்காட்டு.

தமிழர்கள் என்றாலே கிள்ளுக்கீரை போல நினைக்கின்ற காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து நீடித்தால், தமிழினம் மேலும் பெரும் அழிவைச் சந்திக்கும். டெல்லி ஆட்சி பீடத்திலிருந்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டியதும், தமி ழர்களின் தலையாய கடமை என்பதை, இந்திய வெளியுறவு அமைச்சர் சல் மான் குர்ஷித்தின் இலங்கைப்பயணம் உணர்த்துகிறது. உறுதிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment