Wednesday, October 9, 2013

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்.

விவசாயிகளின் பாசன உரிமையில் கைவைக்காதீர்கள்..... #வைகோ

ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு  எங் கள் மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்!

தூத்துக்குடி மாவட்ட-தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவை யின் விவசாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டில் #வைகோ


தூத்துக்குடி மாவட்ட - தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவையின் விவ சாயிகள் வாழ்வாதார விழிப்புணர்வு மாநாட்டு - செப்டம்பர் 29 அன்று ஏரலில் நடைபெற்றது.மாநாட்டில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறுதேக்கிய நல்வாய்க்காலும் நெற்சேர
உழுது பயன் விளைக்கும் தோள்கள் எல்லாம் எவரின் தோள்கள்? அது உழவர் களின் தோள்கள். உழைப்பாளி களின் தோள்கள்.தொழிலாளர்களின் தோள்கள்.

உழுது விதைத்து நீர் பாய்ச்சி பயிர் வளரக் கண்டு கண்ணை இமை காப்பதைப் போல, அந்த நெற்பயிரைக் காத்து திருமண நாளிலே புதுமணப் பெண் தலை கவிழ்ந்து நிற்பதைப்போல,நெல்மணிக் கதிர்கள் குலுங்கி நிற்கின்ற காட்சி கண்டு மகிழ்ந்து, களத்து மேட்டுக்கு அவற்றைக் கொண்டுவந்து பொலியோ பொலி என்று அந்த ஒலிச் சந்தத்தைக் கேட்டு மகிழ்ந்து, மக்களை எல்லாம் வாழ வைப்பதற்கு அமுதசுரபி ஏந்திய மணிமேகலையைப் போல,மனித குலத் தை வாழ வைக்கின்ற உணவைத் தருகின்ற விவசாயி நொறுங்கிக் கிடக்கின் றானே! அவன் துயர் தணிவது எப்படி? என்ற கவலை மேகங்கள் நம்முடைய இதய வானத்தில் சூழ்ந்திருக்கின்ற வேளையில், பொதிகையிலே பிறந்து காய லிலே கடலிலே கலந்து, பாவங்களைப் போக்கு வதற்காகவே மலையிலே குதித்துத் துள்ளிக் கீழே விழுந்து, அது பாபநாசம் என்றும் பெயர் பெற்று, இந்த
மண்ணுக்கே உரிய தமிழருக்கே உரிய, தமிழ்நாட்டுக்கே உரிய எந்த மாநிலத் துக்காரனும் இதுவரை சொந்தம் கொண்டாட முடியாத, என்றைக்கும் சொந்தம் கொண்டாட முடியாத நதி,நம்முடைய பொருநை - தாமிரபரணி நதி.

அந்த நதித் தண்ணீரை நம்பி வாழ்கிற வேளாண் பெருங்குடி மக்களுக்குச் சூழ்ந்

து வருகிற துன்பங்களைத் தடுப்பதற்காக தாமிரபரணி நதிநீர்ப் பாசன விவசா யிகளின் வாழ்வுரிமை மாநாட்டைத் தனது 90ஆவது அகவையிலும் ஒரு வாலி பனாகவே உலவி, எதிர்காலத்தில் நம் சந்ததிகளைக் காப்பாற்றுவதற்காக, விழித்து எழுங்கள்,போராட வாருங்கள், இல்லையேல் நம் வருங்காலம் பாழா கிவிடும் என்று ஏரலிலே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து, அடியேனும் உரை யாற்றுவதற்கு அரியதோர் சந்தர்ப்பத்தைத் தந்து, தலைமை தாங்கி இருக்கக் கூடிய, மக்கள் நலனுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருக் கின்ற நம்முடைய மரியாதைக்குரிய பெரியவர் நயினார் குலசேகரன் அவர் களே,

வீரம் மணக்கும் மண்

வீரம் மணக்கும் இந்த மண்ணில்,தாமிரபரணி ஆற்றங்கரையிலே, பெரும் குடும்பத்திலே பிறந்து, விடுதலைப் போராட்டக்களத்திலே அடிமை விலங்கு களை உடைப்பதற்காகப் போராடி, பொதுஉடைமை இயக்கத்திலே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, ஆண்டுகள் பலவாக சிறைக் கோட்டம் ஏகி, பிரிட் டிஷ் போலிஸ் காரர்கள் காலத்தில் தலைமறைவு வாழ்க்கைக்கும் தயாராகி, தியாகத் தழும்பேறியவராக இந்த மண்ணுக்கும் தமிழகத்துக்கும் அரும்பாடு பட்டு உழைத்துக்கொண்டிருக்கின்ற நான் பெரிதும் மதிக்கின்ற இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினுடைய முன்னணித் தலைவரான அண்ணன் நல்லகண்ணு அவர்களே!

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புக்குரிய சகோதரர் சமூக ஆர்வ லர் ஜெயபாலன் அவர்களே, வரவேற்புரை ஆற்றிய அன்புச் சகோதரர் பேரூர்
சிவஞானவேலு அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்று உரையாற்றிய
தாமிரபரணி பாசன உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் அருமைச்சகோ தரர் வியனரசு அவர்களே, தமிழ்நாடு உழவர் முன்னணியின் சார்பில் உரை யாற்றிய அன்புக்குரிய சகோதரர் தமிழ் மணி அவர்களே, விவசாயிகள் சங்கத் தின் தலைவர் அன்புக்குரிய சதீஷ்குமார் அவர்களே, தீர்மானங்களை வாசித்த
மதிப்பிற்குரிய வரதராஜபுரம் பெருமாள் அவர்களே, நன்றியுரை ஆற்றுகின்ற
வில்சன் செல்லையா அவர்களே,நிகழ்ச்சியிலே கலந்துகொண்டிருக்கின்ற
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் வழக்கறிஞர் மோகனராஜ் அவர்களே,கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என் ஆருயிர்த் தம்பி வழக்கறிஞர் ஜோயல் அவர்களே, கடற்கரையோர மக்களுக்கு மட்டும் அல்லாமல், சுற்றுச்சூழலைக் காப்பதற் காகவும் போராடி வருகிற அன்புச்சகோதரி பேராசிரியர் பாத்திமா பாபு அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே
பங்கேற்றிருக்கக்கூடிய விவசாயப் பெருமக்களே, பத்திரிகையாளர்களே,
தோழர்களே, வணக்கம்.

என் ஆருயிர்த் தம்பி தோழப்பன் பண்ணை காசிராஜன் அவர்கள்,ஒருநாள் தொலைபேசியில் என்னை அழைத்தார். திருவைகுண்டம் வட்டார விவசாயி கள் சார்பிலே, மாநாட்டை நடத்தவேண்டும் என்று பெரியவர் நயினார் குலசே கரன் அவர்கள் விரும்புகிறார். அந்த மாநாட்டில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்று கூறிய மாத்திரத்தில்,அழைப்பவர் யார்? மக்க ளுக்காகவே போராடுகிறவர், தொண்டுள்ளம் கொண்டவர், தன்னலமற்றவர், தியாக வாழ்வு வாழ்கின்றவர். அப்படிப்பட்டவர் அழைத்த மாத்திரத்தில் எந்தத் தேதியில்வரவேண்டும் என்று கேட்டேன். 22 ஆம் தேதி வசதிப்படுமா? என்று கேட்கிறார் என்றார். ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் நல்லது என்று சொல்கிறார் என்றார். உடனே 29 ஆம் தேதி அவர்கள் நடத்துவதற்கு வாய்ப்பு இருக்குமா என்று கேட்டேன். 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை.மாநாட் டை ஏற்பாடு செய்கிறார்கள் என்றவுடன், மாவட்டச் செயலாளர் என்னுடைய
அருமைத் தம்பி ஜோயல் அவர்களிடம்,தகவல் சொல்லிவிட்டு, இந்த நிகழ்ச்சி யிலே கலந்துகொள்ளக்கூடிய அரிய வாய்ப்பைப் பெற்று உங்கள் முன்னால் நான் நிற்கின்றேன்.

இரண்டு வீர வாலிபர்கள் இங்கே இருக்கிறார்கள். இங்கே வருகை தந்திருக்கக் கூடியவர்களில் வயதில் மூத்தவர்கள், நடுபிராயம் கொண்டவர்கள் உங்கள் பிள்ளை களுக்குச் சொல்லுங்கள், உங்கள் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லுங் கள்.அவர்களுக்காகத்தான் வயதில் முதிர்ந்த இவர்கள் போராடுகிறார்கள் என் பதை இளைஞர்களுக்குச் சொல்லுங்கள்.

தொண்டால் சிறந்தவர்கள்

ஒருவர் 90 ஆவது அகவையில் இருக்கிறார் நம்முடைய ஐயா நயினார் குலசே கரன் அவர்கள். இன்னொருவர் 88 ஆவது அகவையில் இருக்கும் அண்ணன் நல்லகண்ணு அவர்கள்.அண்ணன் நல்லகண்ணு அவர்களுடைய 80ஆவது பிறந்த நாள் விழாவில், காமராஜர் அரங்கத்தில் நான் உரையாற்றினேன். நயி னார் குலசேகரன் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடக்கிறபொழுது அண்ணன் நல்லகண்ணு அவர்கள் அதிலே வாழ்த்துவார்கள்.அடியேனுக்கும் அந்த வாய்ப் பை இயற்கை வழங்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.

தொண்டால் சிறந்தவர்கள், தியாகத்தால் உயர்ந்தவர்கள், தன்னலமற்றவர்கள்,
நாட்டுக்காகப் போராடுகின்றவர்கள்.எனவேதான் அரசியல், கட்சி எல்லை களைக் கடந்து நிகழ்ச்சி இங்கே நடக்கின்றது. நாளும் உழைத்துக் கொண்டிருக் கிற பெரியவர் நயினார் குலசேகரன் அவர்களைப் பார்க்கின்ற போது என் போன்றவர்கள் இன்னும் புத்துணர்ச்சி பெறுகிறோம். 90 வயதில் அவர் உழைக் கிறாரே, போராடுகிறாரே,நாம் இன்னும் உழைக்க வேண்டும் என்று என் போன் றவர்களுக்கு அதனாலே உந்துதலும் ஊக்கமும் ஏற்படுகின்றது.

தாமிரபரணி நதியின் பெருமையைப் பற்றி அண்ணன் நல்லகண்ணு அவர்கள்
மிக அருமையாகச்சொன்னார்கள்.அந்தத் தண்ணீரைப்பருகிவாழ்ந்தவர்.வளர்ந் தவர். அந்த நதியிலே நீந்தி மகிழ்ந்தவர். அந்த நதிக்கரையிலே நடந்துசென்று கழனியிலே நெற்பயிர்களும், வாழைத் தோட்டங்களையும் கண்டு மகிழ்ந்தவர். இந்த மண் வீரம் விளைந்த மண்.

இந்த நதியின் நீரையும், இந்தப் பகுதி வாழ் விவசாயிகளையும் காப்பாற்றுவ தற்கு உரிய கடமை நமக்கு இருக்கிறது. நான் எதை யோசித்துக் கொண்டிருந் தேனோ அதை அண்ணன் பேசினார். என் மனதில் என்ன சிந்தனை ஓடிக் கொண்டிருந்ததோ அதை அண்ணன் நல்லகண்ணு அவர்கள் சொன்னார்கள். பாலாற்றுக்கு ஆபத்து,காவிரியில் ஆபத்து, முல்லைப் பெரியாறுக்கு ஆபத்து, நெய்யாறு இடதுகரை சானலுக்கு ஆபத்து, அமராவதிக்கு ஆபத்து, இந்தத் தாமி ரபரணிக்கு அண்டை மாநிலங்கள் எவரும் கேடு செய்ய முடியாத அளவுக்கு
இது பொதிகைக் குன்றத்திலே பிறந்து,அங்கே துள்ளி விளையாடிக்கொண்டு
வந்து, நம்முடைய காயலிலே கலக்கிறது.

இந்தத் தாமிரபரணி நதியைப் பற்றி வரலாறுகளை எழுதிய சரித்திர ஆசிரியர் கள் அனைவரும் சொல்லி இருக்கிறார்கள். புராணங்களைத் தீட்டியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.வால்மீகி வருணிக்கிறார். தெற்கே போகின்ற படை களுக்கு சுக்ரீவன் சொல்லி அனுப்புகிறான். தெற்கே செல்லுங்கள் அழகிய நதி அங்கே ஓடிக்கொண்டிருக்கும் என்று இந்தத் தாமிரபரணி நதியைப் பற்றிச்
சொல்கிறான். காளிதாசன் ரகுவம்சத்திலே சொல்கிறார்.யுவான் சுவாங் சொல் கிறார். அதைப்போன்று மார்கோபோலோ சொல்கிறார். தாலமி சொல்கிறார், தாமிரபரணி நதியைப் பற்றி.

தாமிரபரணியின் பெருமை

புராணங்களில் இந்தத்தாமிரபரணி நதியைப்பற்றிச் சொல்கிறபோது,இது யுகங் களைக் கடந்தது என்கிறார்.கங்கையை விட தாமிரபரணி மூத்த நதி. யுகங் களைக் கடந்த நதி. கிருதா யுகம் என்று சொன்னார்கள். திரிபுரம் விரித்த விரி சடைக் கடவுள் உமையும் திருமணம் செய்துகொண்ட யுகத்தை திரேதா யுகம்
என்று சொன்னார்கள். ராமாயண காலத்தை கிருதா யுகம் என்றார்கள். மகா பாரத காலத்தை துவாபர யுகம் என்று சொன்னார்கள். இதை கலியுகம் என்று வர்ணித்தார்கள். ஆகவே,சிவனுக்கும் உமைக்கும் திருமணம் நடைபெற்ற கிருதா யுகத்தில் திருமணம் நடந்த பொழுது வடக்கு நிலை தாழ்ந்து, பூமியினு டைய சமநிலை குறைந்து விட்டதனாலே சமநிலைப் படுத்துவதற்காக அகத் தியரை தெற்கே அனுப்பியதாகப் புராணம்.

தெற்கே சிவன் அனுப்பியதாகவும்,அனுப்புகிறபொழுது தாமரைமலரை மாலை யாக சிவன் அகத்தியனுடைய கழுத்திலே அணிவித்து அனுப்பிய தாகவும், வந்த அகத்தியன் பொதிகை மலையில் சிவன் சூடிய சிவப்பான வண்ணத்தைக் கொண்டிருக்கக்கூடிய தாமரை மலர் மாலையை, அந்தப் பொதிகை மலையில் நதியாக அணிவித்ததாகவும்,அது பரணி நட்சத்திரமாக பிறந்த காரணத்தினால்,
செம்பொன் நிறமாக இருந்த காரணத்தினால் தாமிர வண்ணமாக இருந்த கார ணத்தினால், தாமிரபரணி என்று அழைக்கப்பட்டதாகவும் புராணத்திலே சொல் லி இருக்கிறார்கள்.

இப்படி சூட்டப்பட்ட மாலையாக சிவந்த வண்ணத்தைக் கொண்டிருக்கக்கூடிய,
தாமிர வண்ணத்தைக் கொண்டு இருக்கக்கூடிய இந்தத் தாமிரபரணி என்கின்ற நதியைப் பற்றி மகாவம்சத்தில் எழுதுகிறான். சிங்களத்துக்காரன் தனது வேத புத்தகமாகச் சொல்லும் மகாவம்சத்தில், சிங்களவர்களுடைய மூதாதையர்கள் இலங்கைத் தீவுக்குஉள்ளே வருகிறபொழுது மாதோட்ட துறைமுகத்தில் அவர் கள் இறங்கியவுடன் கடலில் அச்சத்தோடும் கவலையோடும் வந்த களைப்புத்
தீர்வதற்கு அந்த மண்ணிலே விழுந்து நாங்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்தோ மே என்று அந்த மண்ணைத் தொட்டு வணங்கிபோது, அந்த விரல்கள் எல்லாம் தாமிர நிற வண்ணமாக இருந்ததாகவும் வணங்கிவிட்டு, அவர்கள் தம்ம பன்னி என்று கூச்சலிட்டதாகவும் மகாவம்சத்தில் எழுதியிருக்கிறான். தாமிரபரணி என்றே அதைக் குறிப்பிடுகிறான்.

அத்தகைய பெருமைக்குரிய நதி.இந்தத்தாமிரபரணி ஆற்றங்கரையிலே வாழக் கூடிய மக்கள், இங்குதான் ஆதிச்சநல்லூர் இருக்கிறது. இங்குதான் கொற்கை இருக்கிறது. ஆதிச்சநல்லூரில் தான் உலகத்தின் பழமையானமனிதர்கள், எகிப் திலே எப்படி பிரமிடுக்குள்ளே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே வாழ்ந்த மனிதர்களுடைய மம்மிகள்-இறந்துபோனவர்களின் உடல்களைஅவர் கள் பராமரித்து வைப்பதற்காக மம்மி என்கின்ற அந்த மண்கூட்டுக்குள்ளே
வைத்தார்களோ, அதைப்போன்ற மண்கூடுகள் இங்கேநம்முடைய கூப்பிடு
தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூர் மண்ணுக்கு அடியில் இருக்கின்றன. ஆக
உலகின் பூர்வகுடிமக்கள் வாழ்ந்த பகுதி இந்தப் பகுதி.

இதிலே கட்டப்பட்டிருக்கின்ற அணைகளைப்பற்றியெல்லாம் சொன்னார்கள். ஒருமுறை அண்ணன் நல்லகண்ணு அவர்கள். நான் அரைகால் சட்டை போட் ட பள்ளிச்சிறுவனாக இருந்தபொழுது ஜில்லா போர்டு பிரசிடெண்ட் ஒருவர் வருகிறார். இந்தத் திருவைகுண்டம் அணையும் பாலமுமாக அமைந்திருப்ப தைத் திறந்து வைக்கின்ற நிகழ்ச்சியிலே கலெக்டர் துரை வருகிறார்.

ஜில்லா போர்டு தலைவர் வருகிறார் என்று நானும் சிறுவனாக இருந்து ஓடிச் சென்று அந்தக் கூட்டத்தோடுநின்றேன். ஒரு இசுலாமிய சகோதார் அந்தப் புகைப் படத்தை பத்திரமாக வைத்திருந்து எனக்குத்தந்தார் என்று நல்லகண்ணு அவர்கள் குறிப்பிட்டதாக வியனரசு கூறினார். 1941 மார்ச் 18 இல் திருவைகுண் டம் அணையுடன் பாலத்தைக் கட்ட அனுமதித்து திறந்து வைத்தார் வைகோ வின் தாத்தா கோபால் நாயக்கர் என்று வியனரசு கூறினார்.

இந்தப் பகுதி மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றி இங்கே நம்முடைய நயி னார் குலசேகரன் அவர்கள் சுருக்கமாகச் சொன்னாலும் மனதிலே ஆழமாகப் பதிகின்ற விதத்திலே சொன்னார்.

தூத்துக்குடி நகர மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்காதே என்பதல்ல எங்களுடைய குரல். ஆனால், இங்கே வாழு கிற மக்கள் தலைமுறை தலை முறையாக பாசனத்திற்குப் பயன்படுகின்ற எங்கள் விவசாயக் குடும்பங்கள் அழிந்து போவதா? 46,107 ஏக்கர் பாசனத்தைஅடியோடு இழப்பதா? மூன்று கால்
பாசனப் பகுதி 21,113 ஏக்கர் நிலம் முப்போகத்தை இழப்பதா? என்ற கேள்வி
இங்கே எழுப்பப்பட்டு இருக்கின்றது.

ஏற்கனவே 20 ஆயிரம் ஏக்கர் தரிசாகப் போய்விட்டது.பழைய திட்டத்தின் வாயி லாகவே அந்தத் திட்டத்திலேயே இவ்வளவு தண்ணீர் எடுக்கப்படு வதனாலே விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லை.

முதுகெலும்புள்ள அதிகாரி

இனி புதிதாகத் தண்ணீரைக் கொடுப்பதற்கு மருதூர் அணையிலே இருந்து கொண்டுபோகத் திட்ட மிடாதீர்கள்.ஒரு நாளைக்கு ஒன்பது கோடியே 70 இலட் சம் டன் லிட்டர் தண்ணீரைக் கொண்டுபோவதற்கு திட்டமிட்டிருக்கின்றார்கள். 282 கோடி ரூபாய் மதிப்பீட்டிலே திட்டமிட்டு இருக்கிறார்கள்.இது கூடாது, கூடாது என்று சொல்லியிருப்பவர் யார்? பொதுப்பணித்துறையினுடைய மதுரை மண்டலத்தினுடைய தலைமைப் பொறியாளர் சம்பத்குமார்.அவர் மார்ச் 29 ஆம் தேதி கடந்த வருடத்தில் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய முனி சிபல் கார்ப்பரேசன் கமிசனருக்கு அனுப்பிய கடிதத்தில், இந்த 46,107 ஏக்கர் நிலம் பாசனத்தை இழந்துவிடும். எனவே , இது சாத்தியமில்லை. நீங்கள் 9 கோடியே  எழுபது இலட்சம் லிட்டர் தண்ணீரை இங்கே இருந்து கொண்டு போகிற உத்தேசத்தைக் கைவிடுங்கள். இதை நாங்கள் ஏற்க முடியாது.இதைத் திருப்பி அனுப்புகிறேன் என்று This Proposal is Returned நான் அந்த அதிகாரியைப்  பாராட்டுகிறேன். தமிழ்நாட்டிலே முதுகெலும்பு உள்ள அதிகாரிகளும் இருக் கிறார்கள். முதுகெலும்பு உள்ள அதிகாரி சம்பத்குமாரை நான் பாராட்டுகிறேன்.

ஏனென்றால், 2011 நவம்பர் 13, 14 தேதிகளில் தமிழ்நாடு மாவட்ட ஆட்சித்தலை வர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டிலே முதலமைச்சர் அவர்கள் தூத் துக்குடியினுடைய தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக் கை எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதன்பிறகு,மருதூர் அணை யிலிருந்து அந்தத் தண்ணீரைக் கொண்டுபோக வேண்டும் என்ற உத்தேசத் திட்டத்தை முன் வைத்து தூத்துக்குடி முனிசிபல் கார்ப்பரேசனில் இருந்து தாக்கீது வந்தபிறகு, இது கூடாது என்று ஒரு பொதுப்பணித்துறை யினுடைய தலைமைப் பொறியாளர் - அவருக்குத் தெரியும், முதலமைச்சர் அறிவித்ததும்
தெரியும்.

முதலமைச்சர் கருத்துக்கு விரோதமாக அல்ல, ஆனால், ஆயிரக் கணக்கான
ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டு வருகிற நம்முடைய பாசனத்தின் தண் ணீர் உரிமையை இழந்துவிட்டு,இந்த 47 ஆயிரம் ஏக்கரும் தரிசாகப் போகிற ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்று, இது கூடாது என்று சொன்ன அந்த முதுகெலும்பு உள்ள அதிகாரியை, அந்தப் பொறியாளரை நான் பாராட்டு கிறேன்.

அப்படியானால் வழி என்ன? வழி இருக்கிறது. அவர்களே சொன்னார்களே, 10 டி.எம்.சி. தண்ணீர் கடலிலே வீணாகிறது. இப்படி வீணாகிற தண்ணீரை முக் காணிக்கும் சேந்தமங்கலத்திற்கும் இடையிலே ஒரு லோயர் டேம் அணை யைக் கட்டுங்கள்.நிதியை ஒதுக்குங்கள். அந்தத் தண்ணீரைத் தூத்துக்குடி மாந கர மக்களுக்குக் கொடுங்கள்.தூத்துக்குடியிலே வசிக்கக்கூடிய தோழர் களுக் குத் தாருங்கள். ஆக,தூத்துக்குடிக்கு தண்ணீர் கொடுங்கள்.இந்த யோசனை யை ஏற்றுக்கொண்டு கடலில் வீணாகிற 10 டி.எம்.சி. தண்ணீரைத் தடுத்து அணை கட்டி தூத்துக்குடி மக்களுக்குக் கொடுங்கள்.அதை வரவேற்கிறோம்.

ஆனால், இங்கே 47 ஆயிரம் ஏக்கரை அடியோடு தரிசாகப் போக வைத்து, விவ சாயத்தை அடியோடு அழித்து எல்லாம் பாழாவதா? இது கூடாது. பெரியவர் நயினார் குலசேகரன் அவர்களே நான் வறண்டுபோன வானம் பார்த்த பூமியி லே ஒரு விவசாயக் குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவன்.ஐந்தாறு ஆண்டு களுக்கு ஒருமுறை எப்பொழுதாவது எங்கள் ஊர் கண்மாய் நிறையும். எங்கள் கண்மாய் நிறைந்து கலங்கள் திறந்துவிட்டு ஓடுகிற காட்சி என்றால் எங்க ளுக்கு வாழ்க்கையில் அதைவிட ஒரு கண்கொள்ளாக் காட்சி கிடையாது.

நான் சிறுபிள்ளையாக நீச்சல் பழகியது எங்கள் ஊர் கண்மாயிலே. இப்பொழுது
நினைக்கிறேன், குளம் பெருக வில்லையே, தண்ணீர் வரவில்லையே! பருத்தி விளைகிறது. வத்தல் போடுகிறோம். தோட்டப் பயிர்கள் போடுகிறோம். கம்பு, சோளம், கேழ்வரகு போடுகிறோம். ஊடுபயிர் போடுகிறோம்.உளுந்து போடு கிறோம். மூன்றுபோகம் எல்லாம் நாங்கள் நினைத்ததே கிடையாது. இரண்டு போகம் அதிகம் பார்த்தது கிடையாது. ஒரு போகம் நெல் போடுவோம். கரும்பு போடுவோம்.எனக்குத் தெரிந்ததெல்லாம் கரும்பு ஆலையில் வரக்கூடிய கரும்புச் சாறோடு வரக்கூடிய நல்ல பதனியும் சேர்த்து நுங்கையும் போட்டு எலுமிச்சம் பழத்தையும் அதில் பிழிந்து அதைச் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.அப்பொழுதெல்லாம் மாட்டாலைதான்.

தொடரும் ....

No comments:

Post a Comment