Monday, October 7, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 6

நான் பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலான் என்ற ஊருக்கு இன்றைக்குக் காலையில் சென்று இருந்தேன். அந்த வீரமிக்க மண்ணைத் தொடுகிற பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. அந்த மண்ணைத் தொட்டு வணங்கினேன் என்று சொல்லிவிட்டு அந்த மண்ணை நான் எடுத்து வந்து இருந்தேன். அந்த மண் ணை எடுத்துக்காட்டி உயர்த்திக் காண்பித்து முத்தமிட்டு வணங்கிவிட்டு நான் பேசினேன். இங்கும் பாஞ்சாலங்குறிச்சி மண்ணை நெற்றியில் பூசினால் பிள் ளைக்கு வீரம் பிறக்கும் என்கின்ற நம்பிக்கை இந்த நாட்டு மக்களிடத்தில் இருக்கிறது.

சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சிக்கு, அங்கே கொடுக்கப்பட்ட வேலையின் காரணமாக உள்ளங்கை கிழிந்து பார்ப்பதற்குக் கொப்புளம் கொப்புளமாக கக்ஷ் டப்படுகிற நேரத்தில், அந்தச் சிறை அதிகாரி அதற்கு மேலும் கொளுத்துகின்ற வெயிலில், அவருடைய முதுகில் மாட்டைக் கட்டுவதைப்போல கயிறு கட்டி அவருடைய தோளிலும் முதுகிலும் கயிற்றினைக்கட்டி செக்கு இழுக்கச்சொன் னார்கள். அவர் செக்கு இழுத்தார்.

சிறைவாசிகள் வீரசிதம்பரத்துக்காக போராடுகிறார்கள். கலவரம் நடக்கிறது. அதில் ஒருவன் கொல்லப்படுகிறான். இந்த வீரஉணர்ச்சி பொங்கி எழுகிறது அல்லவா? ‘கண்டேன் காட்சியை கொண்டேன் உவகையை’ என்று வ.உ.சி. எழுதுகிறார். அங்கிருந்து கண்ணனூர் சிறைக்கு மாற்றப்படுகிறார். இதெல் லாம் அவரது சுயசரிதையில் அவர் எழுதியது.அவருடைய கவிதை

ஓர் இரவினிலே ஆறு இருமணிக்கு என் அரங்கினுள் யான் நன்கு உறங்குங் கால் அவன் செறிந்து மிஸ்டர் சிதம்பரம்பிள்ளை என்று உரைத்த சப்தம் ஒன்று அநேகதடவை விழித்துப் பார்த்தேன். அரங்குமுன் ஜூனியர் அசிஸ்டண்ட் சர் ஜன் நின்று செளக்கியம் உசாலி கலெக்டர் ஆஸ் தெரியுமா என்றான். தெரியும் என்றேன். எப்படி என்றான். யான் இவண் ஏகியதற்கும் தூத்துக்குடி சுதேசிக் கப் பல் கம்பெனி செத்தொழிந்ததற்கும் அவனே காரணம் என்றேன். நேற்று மணி யாச்சி ஜங்கஷனில் அவனை ஒருவன் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச் செத்தான் என்றான்.

நல்லதோர் செய்தி நவின்றாய் நீ நலம் பெறுவாய் என்றேன். இவ்வாண்டு கார னேசனில் உனக்கு விடுதலை இல்லை என்றான். விடுதலை என்றும் இல்லை எனினும் நன்றே என்றேன்.

கலெக்டர் ஆஷைச் சுட்டுக் கொன்றானே வீரன் வாஞ்சிநாதன். இதோ இங்கே
இருக்கின்ற ரயில்வே ஸ்டேஷனில் இருந்துதான் புறப்பட்டுப் போனான். இங் கெல்லாம் வந்து இருப்பான். இந்த மண் வீரம் செறிந்த மண். இங்கிருந்து மணி யாச்சி டிக்கெட் வாங்கிக்கொண்டுதான் இரயிலில் போயிருக்கிறான். அவன் வைத்து இருந்த கைத் துப்பாக்கியில் இரண்டு குண்டுதான் வைத்து இருந்தான். எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். ஆறு குண்டு போடுகின்ற டய ரிவால்வரில் இரண்டு குண்டுதான் போட்டு இருந்தான்.

அண்ணா எழுதிய ‘இரும்பாரம்’ என்ற நூலை நான் படித்து இருக்கிறேன். வில் லியம் டெல் என்கின்ற மாவீரன், தன் அம்புறாத் தூளியில் இரண்டு அம்புகள் தான் வைத்து இருந்தான். அவனுடைய மகனின் தலைமீது ஆப்பிள் பழத்தை வைத்து அந்த நாட்டின் சர்வாதிகாரி கெஸ்லர் சொல்கிறான். ‘நீ புரட்சி செய்வ தற்குத் திட்டமிடுகிறாய்.உன் ஒரே மகன் பத்துவயது பாலகனை எதிரே நிறுத்தி வைத்து இருக்கிறோம். அவன் தலைமீது ஒரு ஆப்பிள்பழம்.நீ அம்பு எய்து அந்த ஆப்பிள் பழத்தைப் பிளக்க வேண்டும். அம்பு தவறினால் உன் மகன் உயிரைக் குடிக்கும்’ என்று இராணுவ சர்வாதிகாரி கட்டளை இடுகிறான்.

வில்லியம் டெல் அம்பைத் தொடுத்தான்.நூறு கெஜ தூரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டு இருந்த அவன் மகனை நோக்கி அம்பு பாய்ந்து சென்றது. ஆப்பிள் பழம் இரண்டாகப் பிளந்தது. கூடியிருந்த கூட்டம் கரவொலி எழுப்பி மகிழ்ந்தது.

சர்வாதிகாரி கேட்டான்.வில்லியம் டெல்,உன்னை அம்பைத் தொடுக்கச் சொன் னேன்.உன் அம்புறாத் தூளியில் இரண்டாவது அம்பை எதற்காக வைத்து இருக் கிறாய்? என்று கேட்டார். அவன் சொன்னான், ‘முதல் அம்பு என் மகன் தலை மீது வைத்த ஆப்பிளுக்குக் குறி வைக்க. குறி தவறினால் அடுத்த அம்பு உன் மார்பைத் துளைக்க’ என்று சொன்னான்.

அவன் கைது செய்யப்பட்டு கைவிலங்கு பூட்டப்பட்டு கப்பலில் ஏற்றப்பட் டான்.  புயல் வீசியது. கப்பல் கவிழ்ந்துவிடும் நிலையில், இவனுடைய விலங் குகளையும் அகற்றினார்கள். கப்பலைச் செலுத்தச் சொன்னார்கள். கப்பலைச் செலுத்தி கரையும் சேர்த்தான். புரட்சியை நடத்தினான்.

அதுபோலத்தான்,வாஞ்சிநாதன் ஆறு குண்டு போடவில்லை.இரண்டே குண்டு தான் இருந்தது அவன் துப்பாக்கியில். பதட்டம் இல்லாமல் குறிபார்த்து சுடுகிற போது ஒரு குண்டில் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையோடு அவன் சென்றான். அதே இரயிலில் தான் ஆக்டிங் கலெக்டர் ஆக்ஷ் போகிறான். அவனுடைய சீமாட்டியும் உடன் வருகிறாள். மணியாச்சி ஜங்ஷனில் இரயில் நிற்கிறது. இதில் ஒரு குறிப்பைச் சொல்கிறேன். பாஞ்சாலங்குறிச்சி வம்சாவளியைச் சேர்ந்த ஜமீன்தார் குடும்பத்தினர் அதே ஸ்டேஷனில் வந்து இருக்கிறார்கள். என்ன அடிப்படை? இது முன்கூட்டியே தெரியுமா? எனக்குத் தெரியாது.

அவர்களும் முன்னும் பின்னும் அந்த பிளாட்பாரத்தில் கம்பீரமாக நடந்து கொண்டு இருக்கிறார்கள். இவன் முன்னும் பின்னும் சற்று நடந்துவிட்டு, பெட் டியில் ஏறுகிறான் ஒரே குண்டுதான் பயன்படுத்தினான். ஆக்ஷ் மார்பைத் துளைத்தது. இறங்கி ஓடுகிறான். தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு எடுக்கி றான். அங்கே இருக்கின்ற கழிப்பறையை நோக்கிப் போகிறான்.பெண்கள் கழிப் பறை என்று போட்டு இருக்கிறது. உள்ளே போக கதவு வரை சென்றவன்,பெண் கள் கழிப்பறை என்றவுடன் வெளியே வருகிறான். உயிர் பிரியப் போகிற நேரத் தில்கூட அவன் காத்தப் பண்பாட்டைப் பாருங்கள். அடுத்து ஆண்கள் கழிப்ப றைக்குச் சென்று, உயிர் பிழைத்துவிடக் கூடாது என்று வாய்க்கு உள்ளே கைத் துப்பாக்கியை வைத்துச் சுட்டான். அவன் உயிர் பிரிந்தது.

தொடரும் ....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment