Sunday, October 27, 2013

இலங்கை மாநாட்டுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து ஐநா விற்கு அனுப்பும் மதிமுகவும் திவிகவும்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மன் னார்குடி ஒன்றிய #மதிமுக,திராவிடர் விடுதலைக்கழகம்,தமிழன் சேவை மையம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை( 26.10.13) பதிவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில்நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை எதிர்த்தும், இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது என்பதை வலியுறுத்தியும்,இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.

அதேவேளை தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு தரக்கோரியும்,போர்குற்றவாளி இலங்கை ஜனாதிபதியை சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முயற்சி செய்ய வும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து மன்னை ஒன்றிய மதிமுக, திராவி டர் விடுதலைக்கழகம்,  தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கடந்த அக்டோபர் 2ம் திகதி ஆரம்பித்த ஒரு லட்சம் கையெழுத் து இயக்கம் தொடர்ச்சியாக கையெழுத்து பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

ஒரு லட்சம் கையெழுத்துக்களை பொதுமக்களிடம் பெற்று, மேற்கண்ட கையெழுத்து பிரதிகளை பதிவு தபால் மூலம் இந்திய பிரதமர், இந்திய உள்துறை அமைச்சகம், ஐ.நா.சபை, ஜெனிவா மனித உரிமை ஆணையார் அலுவலலகம், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் ஆகி யோருக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment