Wednesday, October 16, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 1

#வைகோ உரை பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

வானமேசாயினும் மானமே பேணிடும்
மறக்குல மன்னன் நான்
அன்னியனுக்கு அடிபணிவனோ?
உயிரே போயினும் உரிமை காப்பேன்
கூற்றமே சீறினும்
இக்கொற்றவன் கலங்கேன்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்

என முழங்கிய வீரவேந்தர் பூலித்தேவருக்கு இன்று விழா.
மாமன்னர் பூலித்தேவருக்கு புகழ் அஞ்சலி தொடுக்க ஏற்ற இடம் வாசுதேவநல் லூர் என்று சிவகங்கையில் விழா நடந்தவேளையில் நான் நம் பெரு மதிப்புக் குரிய சேதுராமன் அவர்களிடத்தில் தெரிவித்தேன். சிவகங்கையில் மருது பாண்டியர்களுக்கு மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சேதுராமன் அவர்கள் பெருவிழா நடத்தினார்கள். அன்றும் கருமேகங்கள் குவிந்துகிடந்தன. பெருமழையும் பெய்யத் தொடங்கியது.

அந்தச் சிவகங்கை சீமையில் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் மருது பாண்டி
யர்களின் தியாகத்தை அவர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை ஒரு கடமை உணர்வோடு இந்த மண்ணில் வாழும் தலைமுறைக்கும் வளரும் தலை 
முறைக்கும் வரப்போகும் தலைமுறைக்கும் நமது முன்னோர்கள் செய்த தியா கம் தெரியவேண்டும் என்பதற்காக அந்த நிகழ்ச்சியில் நான் உரையாற்றி னேன். அதைப் போலவே சரித்திரப் புகழ்பெற்ற வாசுதேவநல்லூரில் மாநாட் டைப் போல இந்த நிகழ்ச்சியை அற்புதமாக ஏற்பாடு செய்து அதில் உரையாற் றுகின்ற உன்னதமான சந்தர்ப்பத்தையும் தந்திருக்கின்ற அகிலஇந்திய மூவேந் தர் முன்னணிக் கழகத்திற்கும் அதனுடைய மதிப்புமிக்க தலைவர் மருத்துவர் சேதுராமன் அவர்களுக்கும் மனம்நிறைந்த நன்றியைத் தெரிவிப்பது எனது கடமையாகும்.

சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க நிகழ்ச்சிகளை உள்ளடக் கியதுதான் அக்டோபர் திங்கள் ஆகும். இந்த மாதத்தில்தான் 7 ஆம் தேதியன்று தூக்குக்கயிற்றைத் தாவி அணைத்து வரவேற்று மரணத்தை எதிர்கொண்ட பகத்சிங் பிறந்தான். அவனது நூற்றாண்டு நிறைவு விழாவை தலைநகர் சென் னையில் நான் முன்னின்று நடத்தினேன்.

அதே உணர்வோடுதான் இன்றைக்கு வாசுதேவநல்லூரில் இந்த நாட்டின் விடு தலை வரலாற்றில் முதன் முதலாக வெள்ளையரின் படைகளைச் சிதறடித்து வாளுயர்த்திய பெருவேந்தன் பூலித்தேவர் என்ற உணர்வோடு, அவர் உலவிய இடத்தில் - அவர் படை நடத்திய இடத்தில் -அவருடைய கட்டளைகள் பிறப்பிக் கப்பட்ட பகுதியில் - அவர் எழுப்பிய கோட்டையில் பாய்ந்த பீரங்கிக் குண்டு களுக்கு அஞ்சாது வீரமறவர்கள் போராடிய பகுதியில் - இன்றைக்கு உரை யாற்றக்கூடிய ஒருவாய்ப்பைப்பெற்று நிற்கிறேன்.

ஒரு நெடியவரலாறு காத்தப்ப பூலித்தேவனுக்கு இருக்கிறது. எனக்குத்தெரிய சரித்திரத்தில் 630 ஆண்டுகளுக்கு முன்னால் வரலாற்றுக் குறிப்பு சுவடுகளின் அடிப்படையில் 1378 ஆம் ஆண்டு வரகு™ராம சிந்தாமணி பூலித்தேவர் தொடங் கி சரியாக இன்றைக்கு 630 ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் வழிவழி ஒவ்வொ ரு பிள்ளைக்கும் ஒரு பெயர் சூட்டுகிறபோது பாட்டனின் பெயரை பேரனுக்குச் சூட்டுகிற வழக்கம் நம் நாட்டில் இருக்கின்ற காரணத்தால் காத்தப்ப பூலித்தே வன் என்ற பெயர் தொடர்ந்து மூன்றுமுறை பேரனுக்குப் பேரனுக்குப் பேரனுக் கு என்று வந்து நான்காவது பெயராக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பிறந்த மாமன்னன் பூலித்தேவர் என்று வரலாறு மகுடம் சூட்டுகின்ற பெயர் நாம் யாருக்காக விழா நடத்துகிறோமோ அவருக்கு சூட்டப்பட்டது. காத்தப்ப பூலித்தேவர் என்ற பெயர்.

இன்றைக்கு 300 ஆவது ஆண்டு நெருங்கப்போகிறது. 1715; 2015 வந்தால் 300 ஆண்டுகள். பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா தொடங்கி இருக்கின் ற நேரத்தில் - தேவர் திருமகனாரின் நூற்றாண்டு நிறைவு பெறப்போகின்ற நேரத்தில் - 300 ஆவது ஆண்டு விழாவையும் இயற்கை அன்னை உயிரோடு இருக்க அனுமதிக்குமானால் அது வரப்போகின்ற 2015 ஆம் ஆண்டில் 300 ஆவ துஆண்டு விழாவை இந்த மண்டலம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத் தைப் பதிவு செய்கிறேன்.

தொடரும்.....

No comments:

Post a Comment