மத்திய அரசு ஆட்டம் காண்கிறது விரைவில் நாடாளுமன்றத் தேர்தல்
#வைகோ சூசகம்
#மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்களைச் சந்திக்கும் மறு மலர்ச்சிப் பயணத்தை இன்று (30.09.2013) தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல் லூரில் மாலை 3 மணிக்கு தொடங்கினார். இரவு 8 மணிக்கு நாசரேத்தில் நிறைவு செய்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் தன்னலமற்ற நேர்மையாலும் தந்தை பெரியாரின் சுய மரியாதையோடும் பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய பாதையில் தமிழக நலனுக்காக பாடுபட்டு, அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட் சத்தி உறுதி என மக்களிடம் விதைத்து, நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. மக்களை சந்திக்கின்ற பயணத்தை தாமிரபரணி ஆற்றங் கரையில், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் என் எண்ணத்தைச் செயல் படுத்துவதில் ஈடு இணையற்றவராக திகழ்கிற தம்பி ஜோயல் ஏற்பாட்டில் தொடங்க இருக்கிறது.