Saturday, September 21, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 19

நாள்:- 06.08.2007

தமிழ்  இனப்படுகொலைக்குத் துணைபோகும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு!

#வைகோ குற்றச்சாட்டு

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த 2007 ஜூலை 16-ம் நாள் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சி யாக இந்தக் கடிதத்தை எழுகிறேன். இலங்கைத் தீவில் தமிழ் இனத்தைப் பூண் டோடு அழிக்க, தொடர்ந்து கொடூரமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வரும் சிங்கள இனவெறி அரசுக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு, இராணுவ ஆயுதங்களையும்,உதவியையும் வழங்கி வருவது குறித் து என்னுடைய வேதனையையும்,எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன்.

தமிழ் இனத்தை இராணுவ பலம் கொண்டு தாக்கி அழிக்கும் இனப் படுகொலை யைச் செய் யும் குற்றவாளிதான் சிங்கள அரசு. ஈழத் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு உள்ள அரசியல் கட்சிகளும்,மறுமலர்ச்சி தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக, இந்தியா இலங்கை இரா ணுவக் கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடவில்லை என்றாலும், திரைமறைவில் அத்தகைய இராணுவ ஒப்பந்தத்தின் கூட்டாளியாகவே இந்தி யா செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டுகிறேன்.

என் குற்றச்சாட்டுக்குச் சான்றாக, இலங்கைக் கடலிலும், பன்னாட்டுக் கடல்
பரப்பிலும், கடல் புலிகளுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடக்கும் சண்டை யில், இந்தியக் கடற்படை சிங்களக் கடற்படைக்குத் தகவல் பரிமாற்றங்கள் முதல் அனைத்து உதவிகளையும் செய் து வருகிறது என்பதைச் சுட்டிக் காட் டுகிறேன்.

இலங்கைக்கு இந்தியா எந்தவிதமான ஆயுத உதவியோ,விற்பனையோ செய் வது இல்லை என்று 1998-இல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், இந்திய அரசு மேற்கொண்ட முடிவுக்கு முற்றிலும் எதிராக,உங்கள் தலைமையிலான ஐக்கி ய முற்போக்குக் கூட்டணி அரசு, சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அனுப்பி வரு கிறது. தமிழர்களின் பிரதிநிதிகளாகப் போராடும் விடுதலைப்புலிகளுக்கு எதி ராக சிங்கள இராணுவம் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது.

மேலும், இலங்கை விமானப் படைக்கு உதவுவதற்காக, இந்தியா தொடர்ந்து
ரேடார்களை வழங்கி வருவது, அதிர்ச்சி அளிக்கிறது.

எந்த விமானப்படைக்கு இந்த உதவி?

இத்தனை ஆண்டுகளாகப் பெண்கள், குழந்தைகளை, அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் குண்டுவீசிப்படுகொலை செய்த இலங்கை விமானப் படைக் குத்தான் இந்த உதவி.

1995-இல், அப்பாவித் தமிழ்  மக்கள் மீது இலங்கை விமானப்படை குண்டுவீசிக் கொன்று குவித்தபோது, போப் இரண்டாம் ஜான் பால் அவர்களும், அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் புத்ரோஸ் காலி அவர்களும்,தங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் தெரிவித்தனர். இத்தகைய விமானத் தாக்குதல் குறித்த அனைத்து விவரங்களையும், 2004 நவம்பர் 10-ஆம் நாள் நான் நேரில் தங்களி டம் தந்த கடிதத்தில் விளக்கமாகத் தெரிவித்து இருந்தேன். இத்தனைக்குப் பிறகும் இந்திய அரசு இலங்கை விமானப்படைக்கு 2005-இல் ரேடார்களைத் தந்தது.

2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் நாள்,இலங்கையின் சிங்கள விமானப்படை,  செஞ்சோலையில் ஆதரவு அற்றோர் காப்பகத்தின்மீது குண்டுவீச்சு நடத்தி, 61 தமிழ் ச் சிறுமிகளைக் கோரமாகக் கொன்ற சம்பவம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வளவு கொடுமைகள் செய் த இலங்கை விமானப் படைக்கு, இந்த ஆண்டு
ஜனவரியிலும், ஜூன் மாதத்திலும் இந்திய அரசு மீண்டும் ரேடார்களை வழங்கி உள்ளது. இலங்கை விமானப்படை செஞ்சோலையில் குழந்தைகளைப் படு கொலை செய்ததற்காக, இந்திய அரசு அளித்த வெகுமதிதான் இந்த ரேடார் களா? என்ற கேள்வி எழுகிறது. 

இத்தகைய அக்கிரமமான நடவடிக்கைகளால், செயல்பாடுகளால், ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு, பண்டித ஜவகர்லால் நேரு அவர்களும், திருமதி இந் திராகாந்தி அம்மையார் அவர்களும் தொலைநோக்கோடு உருவாக்கிப் பின் பற்றிய அயல் உறவுக் கொள்கையை, ஆயிரம் அடிக்குக் கீழே  குழிதோண்டிப் புதைத்து விட்டது. இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொடிய துரோகம் இழைத்துவிட்டது. இந்த அர சாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அரசியல் கட்சிகள், குறிப்பாக தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் இந்தத் துரோகத்துக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இலங்கைக்கு இனி எந்தவிதமான ஆயுதங்களும் விற்பதையோ, வழங்கு வதையோ உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும், ஏற்கனவே கொடுத்த ரேடார்களைத் திரும்பப் பெறுமாறும் தங்களை நான் வலியுறுத்தி வேண்டு கிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment