Saturday, September 21, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 15

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

நமக்கு உலகத்தில் வேறுநாடுகளில் வீராதிவீரர்கள் தோன்றினால் கைதட்டிப் பழக்கப்பட்டவர்கள். இந்த இனத்தில் பிறந்த ஒருவன் ஒழுக்கத்தால் பண்பால் நேர்மையால் தனிமனித ஒழுக்கத்தால் தன் சாகசத்தால் ஒரு இனத்தை மீட்ப தற்கு களத்தில் நிற்கிறான். அவர்களுடைய போராட்டம் உங்களில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் ஆயுதக் கிளர்ச்சி உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

நான் மத்திய அரசைக் கேட்கிறேன். மாநில அரசைக் கேட்கிறேன். புலிகளின் போர்முறை உங்களுக்கு உடன்பாடல்ல. சரி. அவர்கள் ஆயுதம் ஏந்துவது உங் களுக்கு உடன்பாடு அல்ல.சரி.அவர்கள் துப்பாக்கி ஏந்துவது உங்களுக்கு உடன் பாடு அல்ல சரி. நீங்கள் கைராட்டினமும் தக்கடியும் வைத்துத்தான் நாம் போரா டி வெற்றிபெற்றோம் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் எப்படி ஆயுதம் ஏந்த லாம் என்று சொல்லலாம். அது உங்கள் உரிமை.

ஆனால், அவன் மண்ணில் அவன் நாட்டில் அவன் தாயகத்தை விடுவிப்பதற் குப் போராடுகிற வேளையில் அழிக்க நினைக்கின்ற சிங்களக் கொடியவனுக்கு நீ ஆயுதம் எப்படி கொடுக்கலாம். முதலமைச்சர் அவர்கள் மாங்கொல்லையில் புளித்துப்போன வசனத்தை முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு பேசியது , இருப்பது ஒரு உயிர்தான் போகப்போவதும் ஒருமுறைதான். நூறு உயிர் இருக் கும் என்று எவனும் நினைக்கவில்லை. ஒரு உயிர்தான் எல்லோருக்கும் இருக் கிறது. அது ஒருதடவைதான் போகும் என்று எல்லோருக்கும் தெரியும். அதை எத்தனை தடவை சொல்வீர்கள். நான் கூறுகிறேன். இந்த நிகழ்ச்சியை அவர் நடத்தியது உலகம் பூராவிலும் அல்ல. அவர் வாழ்வில் இதுவரை இல்லாத துரோகத்தைச் செய்த பழிக்கு ஆளாகி இருப்பதனால் இந்தப் பழிநேர்ந்து விட்ட து என்கின்ற பயத்தின் காரணமாக மக்களை ஏமாற்றுவதற்கு மாங்கொல்லை யில் கூட்டம் போடுகிறார்.

நான் குற்றம் சாட்டுகிறேன். ரேடார்களைக் கொடுத்தது உங்களுக்குத் தெரியா
தா? செஞ்சோலையிலே துடிக்கத் துடிக்க 61 குழந்தைகள் கொல்லப்பட்டார் களே அதற்கு இந்திய இராணுவ விமானத்தின் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டது உங்களுக்குத் தெரியாதா? தெரியும். இந்தியா ஆயுதம் கொடுப்பது உங்களுக் குத் தெரியும். உங்கள் அரசு நீங்கள் அங்கம் வகிக்கின்ற அரசு. நான் ஒவ்வொரு வார்த்தை யையும் கவனத்தோடு பயன்படுத்துகிறேன். பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் நான் கடுமையாக சொல்லி இருக்கிறேன். உங்கள் அரசு உங்கள் அரசில் பங்குவகிக்கின்ற கட்சிகள் தமிழன் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத் தத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். உங்கள் அரசும் அரசில் இருக்கக்கூடிய கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழர்களே, உறக்கத்தில் இருக்கின்ற தமிழர்களே! உங்களுக்கு இதைச்சொல் கிறேன். எந்த இனம் இதை சகிக்கும். எந்த மாநிலம் இதை சகிக்கும். நான் கேட் கிறேன். திடீரென்று நேற்றைக்கு முன்தினம் அனுப்பி விட்டாரா மன்மோகன் சிங் ஆதரவை. திடீரென்று நேர்ந்துவிட்டதா முதலமைச்சர் அவர்களே, மூன்று ஆண்டு காலமாக சொல்லிக் கொண்டு வருகிறோம். இந்தியா உதவி செய்கி றது. ஆயுதம் தருகிறது. ரேடார் தருகிறது என்று. இது அனைத்தும் உங்களுக் குத் தெரியும். தெரியாது என்று சொன்னால், தெரியாவிட்டால் நீங்கள் முதல மைச்சராக இருப்பதற்கு லாயக்கு இல்லை என்று அர்த்தம்.நீங்கள் முதல்வர், உங்கள் உளவுத்துறை இருக்கிறது - ஸ்பெஷல் பிராஞ்ச் இருக்கிறது - தில்லி யில் உங்களுக்கு ஏழு மந்திரிகள் இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று தெரியும். இந்தியா உதவுவது தெரியும். ஒவ்வொரு முறையும் இலங்கைக்குப் போய்விட்டுவந்து அங்கே இருக்கக்கூடிய சிங்கள இராணுவ நடவடிக்கைக்கு இனப்படுகொலைக்கு உடன் இருந்து எல்லா ஏற்பாட்டையும் செய்து கொடுத்து வருகின்ற புரோக்கர் நாராயணன் உங்களை வந்து ஒவ்வொருதடவையும் பார்த்துவிட்டுப் போனார்.

முதலமைச்சர் அவர்களே! உங்களிடம் கேட்டார்கள், ஈழத்தமிழர்கள் மடிகிறார் களே! இந்தியா உதவி செய்வதாக சொல்கிறார்களே என்று. நீங்கள் என்ன சொன்னீர்கள்? மத்திய அரசின் கொள்கைதான் என்னுடைய கொள்கை என்றீர் கள். மத்திய அரசின் கொள்கைதான் என்னுடைய கொள்கை என்று முந்தாநாள் சொல்லிவிட்டு இப்பொழுது மதராஸ் வீதிகளில் மத்திய அரசே நிறுத்து என்று யாரை ஏமாற்ற பித்தலாட்ட போஸ்டர் ஒட்டுகிறீர்கள். மத்திய அரசின் கொள் கை தான் என் கொள்கை என்றீர்கள் - கூட்டு ரோந்து வேண்டும் என்றீர்கள். கொதித்தெழுந்த அண்ணன் நெடுமாறனும், நானும் அறிக்கை விட்டோம். கூட் டு ரோந்து என்பது கூட்டுச் சதி என்று சொன்னோம்.

மீனவர்களைச் சுட்டுக் கொல்கின்ற இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற் படை கங்காணி வேலை செய்கிறது என்று சொன்னோம். பிறகு என்ன செய்தீர் கள். பிரச்சனை வெடித்துவிட்டது என்று தெரிந்தவுடன் கூட்டுரோந்து வேண்டு மா வேண்டாமா என்று மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஐந்துநாள் கழித்து நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது என்று சொன்னவுடன் அது எலி தவளை கதையாகி விடும் என்று மற்றவர்கள் சொல் கிறார்கள். ஆகவே கூட்டு ரோந்து வேண்டாம் என்றீர்கள். இப்பொழுது சொல்கிறார் கூட்டுரோந்து வேண்டாம் என்று. அரசு எடுத்த முடிவிற்கு இணங் க நீங்கள் முடிவை மாற்றிக் கொண்டீர்கள் என்று.

தொடரும் ...........

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment