காவிரி நடுவர் மன்ற ஆணையை நடைமுறைப்படுத்தாவிடில்
சோவியத் யூனியன் போல இந்தியா உடைந்து சிதறும்!
கர்நாடகத்தில் முதலமைச்சர் பொறுப்பிற்கு யார் வந்தாலும், அவர்கள் அந்த மாநில அரசியலில் தங்களுக்கு ஒரு தனி இடம் பெற வேண்டும் என்று நினைப் பார்கள். உடனடியாக அதற்கு அவர்கள் செய்வதெல்லாம் தமிழ்நாட்டின் தலை யில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதுதான்.
ஆம்! யார் கர்நாடக முதல்வராக வந்தாலும், “தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் ஒரு சொட்டு கூட தர மாட்டோம்” என்று கூறுவது வாடிக்கை ஆகி விட்டது. கடந்த
40 ஆண்டுகளாக இதே நிலைதான்.காங்கிரஸ், ஜனதா, பிஜேபி எந்தக் கட்சி
ஆட்சியென்றாலும், ஆட்கள் மாறினார்களே தவிர, இந்தப் பல்லவி மட்டும் மாறவேயில்லை.
வீரேந்திர பாட்டீல், தேவராஜ் அர்ஸ்,குண்டுராவ், பங்காரப்பா, ராமகிருஷ்ண
ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, தேவகவுடா, கே.எச்.பாட்டீல், எஸ்.எம்.கிருஷ் ணா, வீரப்பமொய்லி,குமாரசாமி, எடியூரப்பா இப்படி எத்தனையோ முதல்வர் கள் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு நியாயப்படியும், சட்டப்படியும்
தரவேண்டிய காவிரி நீரை வழங்காமல் தமிழக மக்களை வஞ்சித்தார்கள்.
அதே பாதையில்தான் தற்போதைய (2012) பிஜேபி முதல்வர் சதானந்த கவுடா வும்காவிரியில் ஒரு சொட்டுத் தண்ணீரும் கிடையாது என்று கூறியது மட்டு மின்றி,ஏப்ரல் 19 இல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தையும் கூட்டி, கர்நாடக மாநி லத்தின் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரைச் சந் திக்கப்போகிறோம்; காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப் படுத்த மாட்டோம் என்று அறிவித்து இருக்கின்றார்.
மேலும் காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் அணை கட்டி, புனல்
மின்சாரத் திட்டத்தை செயற்படுத்துவது என்றும் கர்நாடக முதல்வர் கூறி இருக்கின்றார்.இந்நிலையில் காவிரி பிரச்சினையில் தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதிக்க வேண்டும்.
மாநில அரசுக்கு தமிழகத்தின் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும்
தலைவர் வைகோ, ஏப்ரல் 14 அன்று தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரி மைக்காக நாடாளுமன்றத்தில் பலமுறை உரத்து குரல் எழுப்பியவர் தலைவர் வைகோ. அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்:
காவிரிப் பிரச்சினையில் ஒரு தீர்வு காண மத்திய அரசு, வி.பி.சிங் பிரதமர் பொறுப்பை வகித்த நேரத்தில் - 1990, ஜூன் 2ஆம் தேதி நடுவர்மன்றத்தை
அமைத்தது. நடுவர்மன்றம் 1991, ஜூன் 25 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக மாநிலம் அளிக்க வேண்டும் என்று இடைக்காலத்தீர்ப்பை அளித்தது.
காவிரி நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடக அரசு முரண்டு பிடித்தபோது, 1991, ஜூலை 12 அன்று மாநிலங் களவையில், கர்நாடக அரசு நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.
பேச்சுவார்த்தை இனி கிடையாது
1991, ஜூலை 12 அன்று மாநிலங்களவையில்,காவிரி பிரச்சினை குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, இப்பிரச்சினையை எழுப்பிட தலைவர் வைகோ,அவைத்தலைவர் டாக்டர் சங்கர்தயாள் சர்மா அவர்களை நேரில் சந்தித்து, அனுமதி பெற்றிருந்தார். இதை அறிந்த காங்கிரஸ் மற்றும் அதிமுக
உறுப்பினர்கள் தாங்களும் காவிரிப் பிரச்சினை குறித்துப்பேச வேண்டும் என்று அனுமதி கோரினர். ஆனால், காங்கிரஸ் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இதுகுறித்துப் பேசுவதற்கு அவைத்தலைவருக்கு முன்கூட்டியே மனு கூட செய்யவில்லை. வைகோ பேச அனுமதி தரக்கூடாது என்று காங்கிரஸ் உறுப் பினர்கள் கூச்சல் இட்டனர்.
ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, வைகோவை
பேச அனுமதிக்க வேண்டும் என்று அவைத்தலைவரிடம் கோரிக்கை வைத்த னர். அதைத் தொடர்ந்து அன்று மாலையில் காவிரிப் பிரச்சினை குறித்துப்
பேசிட அவைத்தலைவர் சங்கர்தயாள் சர்மா தலைவர் வைகோ அவர்களுக்கு
அனுமதி வழங்கினார்.அப்போது வைகோ,தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை திட்ட வட்டமாக தெளிவுபடுத்தினார்.
வைகோ : பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் காவிரிநதி தீரத்தில் தமிழ் நாட்டு மக்கள் அனுபவித்துவந்த அடிப்படை உரிமைக்கு பெரும் அபாயம் ஏற் பட்டுள்ளது.காவிரி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் இடைக்கால நிவாரண ஆணையை அமல்படுத்த கடமைப்பட் டுள்ள கர்நாடக மாநில அரசு, தான்தோன்றித் தனமாக முட்டுக்கட்டை போடுவ தும், அநீதியான முடிவுகளை மேற்கொள்வதும் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது ஆகும்.
காவிரி நதி தீரத்தில் உள்ள தஞ்சை விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் தங்கள்
உரிமைகளுக்காக வழக்கு தொடர்ந்தனர்.நடுவர் மன்றம் அமைக்குமாறு மத் திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதன்பேரில் வி.பி.சிங். தலை மையேற்ற தேசிய முன்னணி அரசு கடந்த ஆண்டு (1990) ஜூன் 2 ஆம் தேதி
நடுவர் மன்றத்தை அமைத்தது. ஜூலை 8 ஆம் தேதி கூடிய நடுவர் மன்றத்தின்
முதல் கூட்டத்திலேயே தமிழக அரசு, காவிரி தண்ணீரை கர்நாடகம் வழங்குவ தற்கான இடைக்கால நிவாரண ஆணை கோரி முறையீடு செய்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டதற்குப் பின்னர் இடைக்கால நிவாரண ஆணை பிறப்பிக்க தனக்கு அதிகாரமில்லை என்று நடுவர் மன்றம் தீர்ப்புஅளித் தது.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி (1991) அப்போது பொறுப்பிலிருந்த திமுக அரசு
இடைக்கால நிவாரண ஆணையை நடுவர்மன்றத்தில் பெறுவதற்காக வேண் டி, உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி ஒன்றைத் தாக்கல் செய்தது.இதன் மீது உச்சநீதிமன்றம் அளித்த தனது தீர்ப்பில் இடைக்கால நிவாரணஆணை வழங்க நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு அளித்தது.
அதன் பின் காவிரி நீர் தாவா நடுவர் மன்றம் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங் களில் குறிப்புகளையும்,புள்ளிவிவரங்களையும் கேட்டு பெற்றதோடு இரண்டு மாநிலங்களின் வாதங்களையும் பரிசீலித்ததோடு மட்டுமல்லாமல், இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நேரடியாகவே சென்று நீர்த் தேக்கங் களையும், பாசன நிலங்களையும் நேரடியாகப் பார்வையிட்டு அங்குள்ள விவசாயிகளின் கருத்துகளையும்,தேவைகளையும் அறிந்ததற்குப் பின்னர்தான் இடைக்கால நிவாரண ஆணையை வழங்கியது.
அதன்படி கர்நாடகம் மேட்டூர் நீர்த்தேக்கத்துக்கு ஆண்டொன்றுக்கு 205 டிஎம்சி நீர் கிடைக்கும் வகையில் தனது நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அறிவித்தது.
கர்நாடக மாநிலம் இடைக்கால ஆணையை நிறைவேற்ற வேண்டுமேயொழி ய இனியும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோருவது கூடாது.ஆக வே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக் கால ஆணைப்படி 205 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசிடம் வற்புறுத்த வேண்டும்.
நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிட வேண்டும்; காலம் காலமாக காவிரி நீரை பயன்படுத்தி வரும் தமிழ் நாட்டின் உரிமையை கர்நாடக அரசு இனியும் தட்டிப்பறிப்பதை அனுமதிக்க
மாட்டோம்; மத்திய அரசு அரசியல் சாசன சட்டப்படி அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் உத்தரவை செயற்படுத்திட உறுதியாக இருக்க வேண்டும்”
வைகோ இவ்வாறு வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் தலைவர் வைகோ கேட்டுக்கொண்டவாறு காவிரி நடு வர்மன்றத்தின் இடைக்கால ஆணையை ஏற்று தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசும் பொறுப்பை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டின் விவசாயிகள் காவிரி தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர்.காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் கருகின. இந்த நிலைமையில் 1993 ஜூலை 26 ஆம் நாள் தலைவர் வைகோ, நாடாளுமன்றத் தில் காவிரி பிரச்சினை குறித்து மிகக் கடுமையாக வாதாடினார்.
“தமிழ்நாட்டு மக்களை வேதனைக்கும் கோபத்துக்கும் ஆளாக்கியுள்ள மிகக்
கடுமையான பிரச்சினையான காவிரி பிரச்சினை குறித்து சில கருத்துகளை
வலியுறுத்த விரும்புகிறேன். குறுவை பயிருக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் வரப்பெறாமல் தமிழ்நாட்டில் காவிரி படுகை விவசாயிகள் கண்ணீரில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டு மக்கள் காவிரி நீருக்காக கர்நாடக மாநிலத்திடம் சலுகை கேட்கவில்லை, கையேந்தவில்லை.
ஜீவாதார உரிமை
ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்துவரும் ஜீவா தார உரிமையே காவிரி தண்ணீர் ஆகும்.அதனைத்தடுக்க கர்நாடகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது. சர்வதேச சட்டங்களே இதனைத் தெளிவுபடுத்தி உள் ளன. காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது தேசிய முன்னணி அரசு நடுவர்மன்றம் அமைத்தது.
அந்த நடுவர்மன்றம் வழங்கிய இடைக்கால ஆணையின்படி காவிரியில் 205 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்துவிட்டே ஆக வேண்டும். நடுவர்மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழ்நாட்டுக்கு விரோதமாகவும்,இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக் கும் வகைகளிலும் கர்நாடக மாநிலம் மேற்கொண்ட நடவடிக்கைகளை மத் திய அரசு தடுக்கத் தவறியது.
தமிழ்நாட்டுக்கு துரோகம்
கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் நடுவர்மன்ற ஆணையை நிறைவேற்றச்
செய்ய மத்தியஅரசும், கடமையைச் செய்யவில்லை. தமிழ்நாடு அரசும் தன்
கடமையைச் செய்யவில்லை.காவிரி உரிமைக்காக தமிழ்நாடு அரசு போராட வில்லை. அதேநேரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்ததைப் போல் ஜெயலலிதா அரசும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்தது.
இப்பொழுது திடீரென்று மெரினா கடற்கரையில் தமிழ்நாடு முதலமைச்சர்
உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தினார்.மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சுக்லா சென்னைக்கு வந்தார்.காவிரி பிரச்சினையில் கண் காணிப்புக் குழு ஒன்றும், செயல்படுத்தும் குழு ஒன்றும் மத்திய அரசு அமைக் கும் என்று ஒரு கபடம் நிறைந்த கண்துடைப்பு அறிவிப்பைச் செய்துவிட்டு
முதலமைச்சருக்கு பழரசமும் கொடுத்தார். இது தமிழ்நாட்டை வஞ்சிக்கும்
மோசடிச்செயல். நடுவர்மன்றத்தின் ஆணைக்கு கர்நாடகத்தைக் கட்டுப்படச்
செய்வதுதான் மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை. ஆனால், தமிழ் நாட்டு மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து ஏமாற்றுகிற பித்தலாட்டத்தை
நரசிம்மராவ் அரசு நடத்துகிறது.
(காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல்,குறுக்கீடு)
என்.கே.டி.ராமச்சந்திரன் (இ.காங்) :தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும். கோபால்சாமி அரசியலுக்காக வேண்டும் என்றே குற்றம் சாட்டு கிறார்.
மத்திய அரசு இருக்கிறதா?
வைகோ : நண்பர் ராமச்சந்திரன் அவர்களே, நீங்கள் ஒரு பழுத்த காங்கிரஸ் காரர். இந்த பிரச்சினையில் நரசிம்மராவ் அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என் பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்.
இந்தியாவின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை உண்மையிலேயே காப்பாற்ற வேண்டுமானால் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தை வஞ்சிக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைப்பதைத் தடுக்காத, தடுக்க முயற்சிக்காத ஒரு மத்திய அரசு இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
காவிரி பிரச்சினையை வைத்துக் கேட்கிறேன். இப்பொழுது மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? இயங்குகிறதா? இதுவே கேள்விக்குறி!
சோவியத் போலச் சிதறிவிடும்...
தமிழ்நாட்டில் காங்கிரஸ் காலாவதியாகிவிட்டதால் கர்நாடக மாநிலத்திலா வது தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக காவிரி பிரச் சினையில் தமிழ்நாட்டை மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு கைகழுவிவிட்டது என்று குற்றம் சாட்டுகிறேன்.நிலைமை இப்படியே நீடித்தால் என்ன நடக்கும்
தெரியுமா?
சோவியத் மண்டலத்தில் நடந்தது இந்தியாவிலும் நடக்கும். சோவியத் ரஷ்யா வில் குடியரசுகள் தனித்தனி நாடுகளாக பிரகடனம் செய்து கொண்டன. அந்த
நிலைமை எதிர் காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எச்சரிக் கிறேன்.
எங்கள் மாநிலத்தின் வழியாகப் பாயும் காவிரி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு விட மாட்டோம் என்று கர்நாடகம் செயல்படுமானால், அந்த அநீதியை மத்திய அரசு தடுக்கவில்லையானால் பின்னர் தமிழ்நாட்டுக்காரன் தங்கள் மாநிலத்தில் உள் ள நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் எங்களுக்கே சொந்தம்.இராணுவத் தளவாடத் தொழிற்சாலை தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று பிரகடனம் செய்யும் நிலை மை எதிர்காலத்தில் ஏற்படலாம். இதைச் சிந்தித்துப் பார்த்து மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வேளையில், தமிழ்நாட்டிலுள்ள ஆளும்கட்சி எந்த ஒரு நன்மையும் கிடைக்காமல் வெற்றிவிழா ஊர்வலம் என்று மக்களை ஏமாற்ற ஆர்ப்பரிக்கிறார்கள்”.
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பிய தலைவர் வைகோ, தமிழகத்தின் தண்ணீர் தட்டுப் பாட்டுக்கு நிரந்தரத் தீர்வுகாண, கேரளாவில் மேற்குநோக்கிப் பாய்ந்து வீணா கக் கடலில் கலக்கும் நதிகளை தமிழகம் நோக்கி திருப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து 1992, நவம்பர் 30 அன்று மாநிலங்களவையில் தலைவர் வைகோ
எழுப்பிய கேள்வியும், அதற்கு மத்திய அமைச்சர் அளித்த பதிலும் கீழ்வருமாறு:
வைகோ : புதிய நீர்ப்பாசனக் கொள்கை வகுக்க மத்திய அரசு முடிவெடுத்துள் ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சுக்லா இங்கே கூறினார்.விவசாயிகளைப் பாது காக்கும் வகையில் இந்தியாவின் இயற்கை வளங்கள் அனைத்தையும் முழு மையாக நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் மேற் கொள்ளும் வகையில் நீர்ப்பாசன கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
வீணாகும் தண்ணீர்
உதாரணமாக கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் அரபிக்கடலில் சங் கமம் ஆகின்றன. அந்த நதிகளின் தண்ணீர் கடலில் வீணாகிறது.
கேரளா எல்லைகளையொட்டி அமைந்து உள்ள தென்தமிழ்நாட்டுக்கு அந்த நதி கள் திருப்பி விடப்பட்டால் இலட்சக் கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். விவசாயிகளுக்கு பெரும் நன்மை விளையும். எனவே அதற்கான திட் டத்தை செயல்படுத்த என்ன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள இருக்கிறது என அறிய விரும்புகிறேன்.
அதைப்போல வறட்சியால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதிகளில் விவசாயத் தைப் பாதுகாக்கும் வகையில் சொட்டுநீர்ப் பாசனம், வெள்ளத்தில் பெருகும் தண்ணீரை சேமிப்பது போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் மத்திய அரசின் கொள்கை வகுக்கப்படுமா? என அறிய விரும்புகிறேன்.
வைகோவின் கேள்விக்கு பதிலளித்து மத்திய நீர்ப்பாசன அமைச்சர் வி.சி.சுக் லா கூறியதாவது:
கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிப் பாயும் சில நதிகளை தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடு பட்டுள்ளது. இந்த நோக்கத்துடன் கேரள அரசும், மத்திய அரசும் தங்களுக்கு
இடையில் இதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளுவதற்கு மத்திய அரசு நடவ டிக்கை எடுத்து வருகிறது.மத்திய அரசின் முயற்சிகள் மெல்ல மெல்ல வெற்றி பெற்று வருகின்றன.
மேற்கில் பாயும் நதிகளின் தண்ணீர் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் கட லில் வீணாவதால் அந்நதிகளை கிழக்கு நோக்கி திருப்பிவிட்டு தண்ணீர்
தேவைப்படும் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு பயன்படும் திட்டங்களை செயல்
ப டுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என மத்திய அரசு நம்பு கிறது. வறட்சிப் பகுதிகளில் நீர்ப்பாசனவசதி செய்வது குறித்து உறுப்பினர் கூறிய ஆலோசனைகளை மத்திய அரசு செயல்படுத்தும்.
சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் நவீன பாசனமுறைகளால் தண்ணீர் வீணாகா மல் பயன்படுத்தப்படும் வகையில் புதிய நீர்ப்பாசன நிர்வாகக் கொள்கை அமு லாக்கப்படும்”.மத்திய அரசு சார்பில் நீர்ப்பாசன அமைச்சர் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளை தமிழ்நாட்டுக்கு திருப்பிவிட கேரள மாநில அரசுடன் ஒப் பந்தம் உருவாக்கப்படும் என்று அறிவித்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன;
ஆனால், இன்னமும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
தலைவர் வைகோ கூறியவாறு, டில்லி மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும்
அரசாகவும், துரோகம் இழைக்கும் அரசாகவும்தான் இருந்து வருகிறது.
தொடரும்.....
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
நன்றிகள்
கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்
வெளியீடு :- சங்கொலி
No comments:
Post a Comment