Tuesday, September 24, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 17

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

நான் இந்த நேரத்தில் பதிவுசெய்யவிரும்புகிறேன். இந்தப் போரில் புலிகள் பின் னடைவதாகவும் எல்லா இடங்களையும் கைப்பற்றுவதாகவும் சரத் பொன் சேகா சொல்கிறான். இனி அவர்கள் வெளியே ஓட்டம் பிடிக்க வேண்டியது தான். நாங்கள் கைப்பற்றி விடுவோம் என்கிறான். இவ்வளவும் நடத்திக்கொண் டிருக்கின்ற சரத்பொன்சேகாவுக்கு நீங்கள் 500 மில்லியன் டாலர் கடன் கொடுத் தீர்கள். அடுத்தவாரம் பாகிஸ்தான் சென்று ஆயுதம் வாங்கிவிட்டான். எங்கள் வரிப்பணத்தில் இருந்து பணம் கொடுப்பீர்கள்.அவன் வாங்கிக் கொண்டு பாகிஸ்தானிடம் ஆயுதம் வாங்கி எங்கள் மக்களைக் கொல்வான். அதற்கு ஒரு அரசு இங்கே. அந்த அரசில் பங்கு வகிக்கின்ற தி.மு.க.

இத்தனைக்குப்பிறகு அங்கே இலங்கைத் தீவு பூராவிலும் இன்றைக்கு நாங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்கிறானே. நான் சொல்கிறேன். அந்த யுத்தத்தை பின்னால் இருந்து நடத்துவதே இந்திய இராணுவம் - இந்தியக் கடற்படை - இந்திய அதிகாரிகள். இப்படிப் பேசுவது தேசத்துரோகம் என்றால் வைகோ அதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறான். எது தேசத்துரோகம்? நீ சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்து எங்கள் மக்களைக் கொல்வது தேசபக்தி யா? இதைக் குற்றம் என்று சொல்வது தேசத்துரோகமா? விடுதலைப்புலிகளின் பத்து போர்க்கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இலங்கைக் கடற்படை அல்ல. இந்தியக் கடற்படை. நான் குற்றம் சாட்டுகிறேன்.

உனக்கும் அவனுக்கும் சண்டையில்லையே? அவர்களுக்குள் அல்லவா சண்
டை. நீ எதற்காக இலங்கையுடன் சேர்ந்து சண்டைபோடுகிறாய்? தகவல் பரி மாற்ற ஒப்பந்தம் என்று ஒன்று போட்டார்கள். துப்புகொடுப்பது. வேவுசொல் வது அவர்கள் படை முகாம்களை அடையாளம் காட்டுவது. அவர்களுடைய நடவடிக்கைகளை தடுப்பது. இது மட்டுமல்ல இவர்களே ஈடுபடுகிறார்கள். இதை எப்படி நம்பமுடியும் என்று சொன்னால் சிந்தாமணி ரவுத், ஏ.கே.தாகூர் என்று இருவர் அடிபட்டுக் கிடக்கிறார்களே. அவர்கள் இந்திய இராணுவத்தினர். 265 இந்திய இராணுவத்தினர் அங்கே இருப்பதாக இந்திய தூதரக அதிகாரி சொல்லியிருக்கிறான்.

யாரைக்கேட்டு நீங்கள் அனுப்பினீர்கள்? அவர்கள் சிவிலியன்- ஒருவன் சொன் னானாம். அப்படி என்றால் சிவிலியனை அங்கே சண்டைபோட அனுப்பி இருக் கிறீர்களா? சிங்களத்துக்காரனுக்கு ஆதரவாக இங்கு இருந்து சிவிலியனை எல் லாம் நீங்கள் சண்டைபோட அனுப்பினால் தமிழன் போகமாட்டானா? அதைத் தானே நெடுமாறன் கேட்டார். ஆக, இவர்கள் செய்த உதவிகள் வெட்டவெளிச்ச மாகிவிட்டது. இந்தியா துரோகம் செய்திருக்கிறது.

இப்பொழுது முந்தாநாள் கடைசியாக ஒப்பந்தம். இது இங்கு எந்தப் பத்திரிகை யிலும் வரவில்லை. இந்தியா - இலங்கை தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டு வரை போட்டிருக்கிறார்கள். எல்லாவிதத்திலும் ஒரு இனத்தை அழிக்கக்கூடிய, இவர்களது நோக்கம் சொல்கிறேன் அங்கே இருக்கக்கூடிய போராளி இயக்கத்தை அழித்து விட வேண்டும். அவர்களை அடிமைகளாக்கி விட வேண்டும். அதற்குப்பிறகு இவர்கள் சொல்கிற யோசனையைக் கேட்டு அவர்கள் இலங்கை அரசுடன் ஏதாவது பேசிக் கொள்ளட்டும் என்ற எண்ணத் தில்தான். இந்தியப் பிரதமர் இராணுவத்துக்கு உதவி செய்யவில்லை என்று இங்கே இருந்து கருணாநிதி சொல்லமுடியாது.

இந்தியப் பிரதமர் அக்டோபர் 2 ஆம் தேதி எனக்குக் கடிதம் எழுதியுள்ளார்.அதில் கூறுகிறார். நீ எழுதிய கடிதம் என் மனதைக் காயப்படுத்தி இருக்கிறது என்று சொல்லிவிட்டு இலங்கையின் ஒருமைப் பாட்டைக் காக்க நாங்கள் உதவிசெய் கிறோம். ஆகவே, இலங்கைக்கு நாங்கள் இராணுவ உதவி செய்திருக்கிறோம். இலங்கைக்கு ஓரளவு இராணுவ உதவி இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்க நாங்கள் செய்திருக்கிறோம் என்று நேற்றைக்கு எனக்கு எழுதிய கடிதத் தில் பிரதமர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அப்படியானால், நான் கேட்கிறேன். அந்த நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க நீங்கள் இராணுவம் அனுப்புகிறீர்கள். பாகிஸ்தான் ஒருமைப்பாட்டைக் காக்கத் தான் இராணுவம் அனுப்பினார்களா? மானக்ஷொ தலைமையில். அன்றைக்கு கிழக்கு பாகிஸ்தான் பிரிந்ததே? இன்று இலங்கையின் ஒருமைப்பாட்டைக்காக் க என்கிறாயே அங்கு தமிழர்கள் அடிமைகளாக நாயைவிட மோசமாக நடத்தப் படுவதால் அவர்களது பூர்வீக உரிமையில் தங்களுக்கு என்று தமிழ் ஈழம் கேட் கிறார்கள். சுயநிர்ணய உரிமை அனைவருக்கும் பிறப்புரிமை. அதில் நீ எப்படி அவர்களது ஒருமைப்பாட்டைக்காக்க இராணுவ உதவி செய்கிறேன் என்பாய்?

அந்த இராணுவ உதவியைக் கொண்டுதானே சிங்களவன் இவ்வளவு மக்க ளைக் கொல்கிறான். எனவே, இந்திய அரசு தமிழினத்துக்குத் துரோகம் செய்து விட்ட அரசு. கண்ணி வெடிகளை வைக்க அனுமதிதந்த அரசு. தமிழக மீனவர் களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்வதைத் தடுக்காத அரசு? மன்மோ கன் சிங் அரசு தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துவிட்ட அரசு. அதில் அங்கம் வகிக்கின்ற கருணாநிதி தலைமையிலான கட்சியும் இந்தத் துரோகத்தில் பங் கேற்க வேண்டும்.

இந்தப் பழிவந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் மாங்கொல்லையில் கூட்டம் போட்டு விட்டு ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். 7 மந்திரிகள் இருக்கிறார்களே! இராணுவ உதவி செய்யாதே! செய்தால் எங்கள் ஆதரவு கிடையாது என்று சொன்னார்களா? இராணுவத் தாக்குதல் வேகமாக நடக்கட் டும். உணவும் மருந்தும் போகாமல் இருக்கட்டும். அங்கு இருக்கின்ற போராளி கள் மடியட்டும் என்கின்ற எண்ணத்தில்தான் நீங்கள் வேண்டும் என்றே மன் மோகன் சிங் அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்து இருக்கிறீர்கள் என்று தமிழகத்தின் முதலமைச்சரை நான் குற்றம் சாட்டுகிறேன்.

மாவீரன் பகத்சிங்கின் நூற்றாண்டு நிறைவுபெறும் நேரத்தில் பகத்சிங் எந்தக் கொள்கைகளுக்காக வாழ்ந்தானோ, எந்த இலட்சியங்களுக்காக வாழ்ந்தானோ அவன் மரணத்தைத் துச்சமாக கருதி போராடினான். அதே உணர்வோடு, அப்ப டிப்பட்ட எண்ணத்தோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் பதவிகளுக்காக இயக்கம் நடத்தவில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவை யும் நடத்துவதற்கு மனம் இல்லாதவர்கள் அவர்கள். தமிழர்களைப்பற்றி இன் றைக்குக் கவலைப்படப்போவதில்லை. தமிழர்கள் விட்ட கண்ணீர்தான் கடல் நீராக மாறியிருக்கிறது என்றார் அண்ணா. அண்ணா நூற்றாண்டு விழா நடத் திய அதேவேளையில்தான் பகத்சிங்கின் நூற்றாண்டு விழாவையும் நடத்து கிறோம்.

வாழ்க பகத்சிங்கின் புகழ்!

வளர்க பகத்சிங்கின் வீர உணர்ச்சி!

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment