Thursday, September 26, 2013

உழவர்களுக்குப் பாதக மசோதா!

உணவுப் பாதுகாப்பு மசோதா ,உழவர்களுக்குப் பாதக மசோதா!

நீண்ட நெடிய சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மசோதா,சோனியா காந்தியின் கனவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனி இந்தியாவில் உணவு இல்லாமல் யாரும் பட்டினி கிடக்கும் நிலை நீக்கப்
பட்டுவிட்டது. 80 கோடி மக்களுக்கு குறைந்த விலையில் அதாவது அரிசி கிலோ ரூ 3 க்கும், கோதுமை கிலோ ரூ.2 க்கும் கிடைக்கும். கிராமப்புறங்களில் 67 சதவிகித மக்களும், நகர்ப்புறங்களில் 50 சதவிகித மக்களும் பயன்பெறுவர்.
மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் அமுலில் இருக்கும். இதற்கு ஆகும்
மானியம் ஆண்டு ஒன்றுக்கு 1,25,000 கோடி ரூபாய்.

இந்தத்திட்டத்தில் மாற்றம் வேண்டும்,சில திருத்தங்கள் செய்யாவிடில் எதிர்த் து வாக்களிப்போம் என்று வீரம் பேசிய கலைஞர் கருணாநிதி ஒரே அடியாக
பல்டி அடித்ததுடன், இந்தத் திட்டம் கொண்டு வந்ததற்கு சோனியா காந்தியை அட்சய பாத்திரம் ஏந்தி வந்த மணிமேகலை என்று புகழாரம் சூட்டிஉள்ளார்.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டுமானால் கிராமப்புறத்தில் உள்ள
67 சதவிகித மக்கள், நகர்ப்புறத்தில் 50 சதவிகித மக்கள் யார் என்று கணக்கு
எழுதப் பட்டதா? இதைச் செய்ய வேண்டியது மாநில அரசுகள். எந்த அடிப்படை யில் 80 கோடி மக்கள் என்று சொல்லப்படுகிறது. பயனாளிகள் பட்டியல் இல் லாமல் பொத்தாம் பொதுவாக தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுவரப் பட்ட விளம்பரம் தேடும் திட்டமாகும்.

இந்தத் திட்டத்திற்குத் தேவையான தானியங்களை விவசாயிகளிடம் எந்த
விலையில் கொள்முதல் செய்யப் போகிறார்கள்.

விவசாய உற்பத்திச் செலவு பல மடங்கு உயர்ந்துவிட்டது. விவசாயிகள் பயன் படுத்தும் உரங்களின் விலை 100 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பூச்சிமருந்து விலை களும் உயர்ந்துவிட்டது. விவசாய கூலி ஆட்களின் கூலி 2 மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால், அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய் யும் தானியங்களின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப் பட்டது.அதே விலைக்கு கொள்முதல் செய்தால் விவசாயிகள் விவசாயத்தை அடியோடு கைவிடும் நிலை ஏற்படும்.

விவசாயிகளுக்கு தற்போது உள்ள நிலைமைக்கு ஏற்றவாறு கொள்முதல்
விலையை உயர்த்திக் கொடுத்தால் அரசு உணவு பாதுகாப்புத் திட்டத்திற்கு
அறிவித்துள்ள மானியம் ஒரு இலட்சத்து இருபத்தைந் தாயிரம் கோடி என்பது
இரண்டு கோடிக்கும் மேல் சென்றுவிடும். மேலும் தற்பொழுது இந்திய நாண யத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து மிகவும் மோசமான நிலைமை தான் உருவாகும்.

அடுத்து கொள்முதல் செய்யும் தானியங் களை சேர்த்து வைக்க இந்தியாவில்
போதுமான குடோன் வசதிகள் இல்லை.பல இடங்களில் குறிப்பாக தஞ்சை
மாவட்டம் போன்ற பகுதிகளில்,வெட்டார வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு, எலிகள் வாழ வகை செய்யப்பட்டு உள்ளது. 28.08.2013 ஆம் நாள் பெய்த மழை யில் விருத்தாச்சலத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை வைப்பதற்கு குடோன் வசதி இல்லாமல் வெட்டவெளியில் வைத்திருந்த 8000 மூட்டை நெல் மழையில் நனைந்து விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கன வே அரசு குடோன்களில் வைக்கப்பட்டுள்ள அரிசி பூச்சிகளாலும்,எலிகளாலும் சேதப்படுத்தப்பட்டு உபயோகிக்க முடியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான மூட்டை அரிசி கெட்டுப்போய், உச்சநீதிமன்றம் தலையிட்டும், எந்தப் பயனும் இல்லாமல் பாழ்படுத்தப்பட்டது. ஏற்கனவே இந்தியாவின் பணமதிப்பு வீழ்ச்சி
அடைந்து அரசு திவாலாகும் நிலையில் உள்ளது. இந்த மானியம் கொடுப்பதற் கான நிதி எப்படி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது தெளிவுபடுத்தப் படவில்லை.

பயனாளிகளின் தேர்வு முறையாக எடுக்கப்பட்டு உண்மையான ஏழை களை கண்டறிய வேண்டும்.

கொள்முதல் செய்யும் தானியங்களுக்கு விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய விலை கொடுக்கப்பட வேண்டும்.

கொள்முதல் செய்த தானியங்களை சேமித்து வைக்க போதுமான குடோன்
வசதிகள் செய்யப்பட வேண்டும்.தற்சமயம் இந்திய உணவுக்கழக குடோன் களில் 30 மில்லியன் டன் சேமித்து வைக்கவே போதுமான வசதி இல்லாமல் மழையாலும், எலியாலும் பெரும் சேதங்கள் ஏற்படுகிறது.உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியா முழுவதும் நிறைவேற்றுவதற்கு 62 மில்லியன் டன் கொள் முதல் செய்யப்பட வேண்டும். அப்படியானால் எங்கே சேமித்து வைப்பது.

இந்தியாவின் பணமதிப்பு வீழ்ச்சி அடைந்து கொண்டுள்ள நிலையில், மேலும் வீழ்ச்சியை நோக்கி வேகமாக செல்லும் நிலையில் இவர்கள் அறிவித்து உள்ள மானியத்திற்குமேல் இரு மடங்காக உயரும் மானியத்தை எப்படி சரிகட்டப் போகிறது.

பல மாநிலங்களில் பொதுவிநியோக முறை ஊழல் மலிந்ததாய், ஏழைகளுக்கு
செல்ல வேண்டிய தானியங்களை கொள்ளை அடிக்கும் கூட்டம் அனுபவித்துக் கொண்டு உள்ளது.

வறட்சியாலும், வெள்ளத்தாலும்,இயற்கை சீற்றங்களாலும் உணவு தானியங் கள் உற்பத்தி குறையும் பொழுது பொதுவிநியோகத்திற்குத் தேவையான தானி யங்களைக் கொள் முதல் செய்ய வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் மானியங் களை நேரடியாக மாநில சர்க்கார் மூலம் விநியோகிக்கும் என்று தெரிய வரு கிறது. அந்த மானியத்தை வைத்து தானியங்களை எங்கே வாங்குவது, இது மசோதாவில் தெளிவுபடுத்தப்படவில்லை.

9 ஆண்டுகாலம் பதவியில் இருக்கும் பொழுது நிறைவேற்றாமல், தேர்தல் நெருங்கும் பொழுது நிறைவேற்றி தேர்தலுக்குப் பின்னர் வரும் அரசை (அது காங்கிரஸ் தலைமையிலான அரசு அல்ல) சிக்கலில் மாட்டிவிடும் நிலைமை
தான் உருவாகும்.

ஆக உணவுப் பாதுகாப்புத்திட்டம் என்பது சோனியாகாந்தியை மணிமேகலை யாக சித்தரித்த கலைஞர் கருணாநிதி, உழவர்களுக்குப் பாதகமான திட்டம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் என்னும் ஓட்டைக் கப்பலில் பயணம் செய்வதற்கு கலைஞர் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பதை தெளி வுபடுத்தி உள்ளார்.

It is not a food security bill. 
It is vote security bill.

கட்டுரையாளர் :- ஆர்.டி.மாரியப்பன் (திருப்பூர் மதிமுக மாவட்டச் செயலாளர்)

No comments:

Post a Comment