D.D மருத்துவ கல்லூரியை அரசுடமை ஆக்குக - #வைகோ கோரிக்கை
D.D மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடான நடவடிக்கைகளாலும் , முறையற்ற செயல்களாலும் அதன் அங்கீகாரம் ரத்து செய்ய பட்டது எதிர்கால கல்வி கேள்வி குறியான நிலையில் கடந்த 16 நாட்களாக பாதிக்கப்பட்ட 103 மாணவ மாணவிகள் அற வழியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்
அவர்களின் நியாமான கோரிக்கைகளை அறிந்து அவர்களை இன்று காலை 11 மணி அளவில் மதிமுக பொது செயலாளர் வைகோ சந்திக்க திட்டமிட்டார் அதை அறிந்து கொண்ட காவல் துறை அறவழியில் போராடிய மாணவர்களை இன்று காலை 10 அளவில் கைது செய்து கிண்டி ரேஸ் கோஸ் மைதானத்தில் அடைத்தது.கைது செய்யப்பட்ட மாணவ மாணவிகளை சந்திக்க சென்ற வைகோவை காவல் துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை .அங்கு பத்திரிக்கையாளர்களிடம் வைகோ பேசியத்தின் விவரம்
"DD மருத்துவ கல்லூரி நிர்வாகம் செய்த தவறினால் அதில் பயிலும் 100 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்வி கூறி ஆகி உள்ளது .அண்ணாமலை பல்கலை கழகத்தை அரசு ஏற்று நடத்தியது போல இந்த மருத் துவ கல்லூரியின் நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் ,மனிதாபிமான அடிப்படையில் பாதிக்க பட்ட மாணவர்களின் எதிர்கால கல்விக்கு அரசு உத்த ரவாதம் அளிக்க வேண்டும் ,அதேசமயம் மாணவிகளிடம் மலிவாக நடத்து கொண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்வ தோடு சமந்தபட்ட காவல் துறை அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை கோருகிறேன் "
No comments:
Post a Comment