Monday, September 9, 2013

தூத்துக்குடியில் மதிமுக அமோக வெற்றி

தூத்துக்குடி மக்களைவை தொகுதியில் #மதிமுக அமோக வெற்றி பெறும்: கோவில்பட்டி திருமண விழாவில் #வைகோ பேச்சு

கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் தெய்வேந்திரன் மகன் திருமணம் ஆர்த்தி மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்து இருந்த மதிமுக பொது செயலாளர் வைகோ மணமக்களைவ வாழ்த்தினார்.
பின்னர் அவர் பேசுகையில் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலை
அளிப்பதாகஉள்ளது. விலைவாசி ஏற்றம், பொருளாதார மந்த நிலைமையால் சாக்கில் பணத்தினை கொண்டு போய் கடைகளில் பொருள்களை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளுப்பட்டுள்ளனர். மக்கள் நலனில் அக்க றையின்மை, தமிழர் மற்றும் ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிராக இருக்கும் காங் கிரஸ் தலைமயிலான அரசு வீழ்த்தப்படும் காலம் வந்து விட்டது. 

இனி அரசியலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக அமோக வெற்றி பெறும். அப்படி வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் தூத்துக்குடியும் ஒன்று. தேர்தல் குறித்த முடிவுகள் கட்சி செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன்னேற்றத்தினை பார்த்துக்கொள்ளவேண்டும்.மதிமுக என்றுமே குழந்தை கள் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

1 comment:

  1. மிக்க மகிழ்ச்சி......... "வெற்றி தலைவன் வைகோ ; வெற்றி சின்னம் "பம்பரம்"......இதுவரை வைகோ "அதிகார பூர்வமாக" அறிவித்து உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின்படி ஈரோடு, விருதுநகர் & தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஆகும்............ இதைபோல் 6 மடங்கு தொகுதிகளில் மதிமுக போட்டி இட வேண்டும்.......... எனக்கு ஒரு சந்தேகம்........ மதிமுகவின் தற்போதைய பலம் "பல மடங்கு" பெருகி உள்ளது "வைகோவுக்கே" மலைப்பாக உள்ளது........... ஆகவே அவர் தொகுதிகளின் எண்ணிக்கையை பார்த்து பார்த்து அறிவிக்கிறார் போலும்........... மதிமுக இன்னும் போட்டி இட வேண்டிய தொகுதிகள் திருப்பூர், திருச்சி, ஆரணி, செஞ்சி, தஞ்சை, கோவை, தென் சென்னை, தேனீ, கரூர், பொள்ளாச்சி, நாகப்பட்டினம், வேலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாமக்கல் ஆகும்.......... தமிழ் நாட்டில் திமுக & அதிமுக தவிர.......... "மக்கள் சக்தியாம்" மதிமுகவின் தலைமையில் கூட்டணி அமைய பெற்று அதில் பிஜேபி & தேமுதிக இடம் பெற்றால் 40 தொகுதிகளும் அந்த அணி பெரும் வாய்ப்பு பிரகாசம்.................... நன்றி......... பொன்னம்பலம்............. 10.09.2013................

    ReplyDelete