Thursday, September 5, 2013

பணியாளர்கள் பணிநீக்கம்

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் #மதிமுக விவசாய அணி மாநில துணை செய லாளர் வரதராஜன் தலைமையில் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் கடந்த 7 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தலைமை அலுவலகம் கோவில்பட்டியில் உள்ளது. புதுவாழ்வு திட்டத்தின் மாவட்ட திட்ட மேலாளராக தரணி பணி யாற்றி வருகிறார். 
புதுவாழ்வு திட்டத்தில் பணியாற்றி வரும் ஒருங்கிணைப்பாளர்கள் பசுவந்த னை சேர்ந்த அருணா, வெள்ளைப் பாண்டி ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும், எட்டயபுரம் சங்கர், நீலமேகராணி ஆகியோரை பணிநீக்கம் செய்தும் மாவட்ட திட்ட மேலாளர் உத்தரவிட்டார். மேலும் 10க்கும் மேற்பட்டோரையும் இடம் மாறுதல் செய்தார்.

பணியாளர்கள் சஸ் பெண்ட் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அதை ரத்து செய்யகோரியும், மாவட்ட திட்ட மேலாளர் தரணி பணியா ளர் விரோத போக்குடன் செயல்படுவ தாக புகார் தெரிவித்தும் அவரை உடனடி யாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மற் றும் 50க்கும் மேற்பட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன் தலைமையில் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினர். பின்னர் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் கந்தசாமியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

No comments:

Post a Comment