07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை
பழிக்குப்பழி என்று முடிவெடுத்தபிறகு, அதற்குத் திட்டம் வகுக்கின்ற காலத் தில், ஏற்கனவே ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த அமைப்புச் சற்று மந்த மாக இருந்த நிலைமையில், மீண்டும் எழுச்சி ஊட்டி, புதிய பெயரைச்சேர்த்து, ‘ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அசோஷியசேன்’ என்ற பெயரை, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேசன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு ஒரு ஆயுதப்பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு சந்திரசேகர் ஆசாத் தலைவர் ஆனார்.
இதில் பகத் சிங் ஆயுதம் ஏந்தினானா இல்லையா என்ற கேள்வி வருகிறது. அந்த அமைப்புக்கு ஒரு ஆயுதப்படை அணி உருவாக்கப்பட்டு சந்திரசேகர் ஆசாத் தலைவராக ஆக்கப்பட்டார். எந்த ஸ்காட் என்கின்ற அதிகாரி லஜபதி ராயின் மண்டையை உடைத்து அவர் சாவுக்குக் காரணமாக இருந்தானோ, அவனைச் சுட்டுக் கொல்வது என்று முடிவு எடுத்தார்கள். அதன் காரணமாகத் தான் அந்த சம்பவத்துக்குப்பிறகு இயக்கத்தை இரகசியமாக நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். சீக்கியர்கள் வழக்கமாக வளர்க்கின்ற தலைக் கொண் டையை எளிதில் அகற்றுவதற்குச் சம்மதிக்க மாட்டார்கள் சீக்கியர்கள்.
ஆனால், இந்த இரகசிய இயக்கத்தை நடத்துவதற்காகத்தான் பகத்சிங் அவரு டைய தலைமுடி அத்தனையையும் ,தாடியையும் எடுத்து விடுகிறார்.தோற்றம் மாறிவிட்டது.
நவம்பர் 17 ஆம் தேதி லஜபதிராய் இறந்துபோனார். டிசம்பர் 17 ஆம் தேதி நாள்
குறித்தார்கள். சரியாக 30 நாட்கள் கழித்து. திட்டம் வகுக்கப்பட்டது. பின்னால் அப்ரூவராக மாறினான் ஜெயகோபால் என்கின்ற துரோகி. அப்பொழுதே கரு ணாக்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. நான் அங்கே இருக்கிற
குறித்தார்கள். சரியாக 30 நாட்கள் கழித்து. திட்டம் வகுக்கப்பட்டது. பின்னால் அப்ரூவராக மாறினான் ஜெயகோபால் என்கின்ற துரோகி. அப்பொழுதே கரு ணாக்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. நான் அங்கே இருக்கிற
கரு ணாவைச் சொல்கிறேன்.அவனுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட், போலிஸ் ஸ்டேசனில் இருந்து ஸ்காட் புறப்பட்டவுடன் தகவல் சொல்ல வேண்டும். பகத் சிங் சுடுவது என்ற முடிவு. ராஜகுரு பக்கத்தில் நின்று அரணா க உடனிருக்க வேண்டும். அதில் கொஞ்சம் தவறினால், குண்டுகள் தவறினால் இவன் சுட வேண்டும்.அதேநேரத்தில் Scott is killed என்று ஊரெல்லாம் ஒட்டி விடு வது. ஒட்டுகிற தாளை முதலிலேயே எழுதி விட்டார்கள். வழக்கில் இதுதான் பின்னாளில் சாட்சியாக ஆகிறது. அந்தத் தாளில் கைப்பட எழுதியது பகத்சிங். சிவப்பு எழுத்தில் எழுதுகிறான். Scott is killed என்று. இதை ஆங்காங்கு ஒட்டி விடு வது, இது முடிவு.
குறிப்பிட்ட தேதியில், ஸ்காட்டின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் இலண்ட னில் இருந்து வருகின்ற காரணத்தினால், எதிர்பாராமல் அவன் விடுமுறை எடுத்துவிட்டான். அவன் அன்றைக்கு வரவில்லை. அவனுடைய உதவியாளர் ஏ.வி.எஸ்.சாண்டர்ஸ் போலிஸ் ஸ்டேஷனுக்கு வருகிறான். லஜபதி ராயைக் கொன்றவன் ஸ்காட் - உடன் இருந்தவன் சாண்டர்ஸ். சாண்டர்ஸ் காவல் நிலை யத்தில் இருந்து வெளியேவந்து மோட்டார் சைக்கிளில்தான் புறப்படு கின்றான். அப்பொழுது ஜெயகோபாலுக்கு ஸ்காட்டுக்கும் சாண்டர்சுக்கும் வித் தியாசம் தெரியாமல், திருப்பதிக்குப்போனால் மொட்டை போட்டவன் எல்லோ ரும் ஒரேமாதிரியாகத்தான் தெரிவான் அல்லவா, அதுபோல, அவன் வெள் ளைக்காரன் அல்லவா, இவனுக்கு அடையாளம் தெரியவில்லை.
‘ஸ்காட் புறப்பட்டாயிற்று’ என்று இவன் சிக்னல் கொடுக்கிறான். பக்கத்தில் நெருங்கிவருகிற போது பகத்சிங் சுடுவதற்கு முன் முதல் தோட்டாவை ராஜ குரு சுட்டுவிட்டான். ராஜகுருவின் குண்டு உடம்பில் பாய்வதற்கு உள்ளாக பகத்சிங் ‘No No Not this man’ என்று சத்தம் போடுகிறான். ‘இவன் இல்லை’ என சத்தம் போடுகிறான். அதற்குள் குண்டு பாய்ந்து விட்டது.
சரி, சுட்டாயிற்று. இனி விடக்கூடாது என்று, அடுத்தடுத்த குண்டுகளைப் பகத் சிங் செலுத்துகிறான். இந்தக் குண்டுகள் தாக்கி அவன் கீழே விழுந்துவிட்டான். அந்த இடத்திலேயே அவன் உயிர்போய் விட்டது. புரட்சியாளர்கள் தப்பிச் சென் று விட்டார்கள். அங்கிருந்து தலைமறைவாக கொல்கத்தாவுக்குச் செல்கிறார் கள். இதுதான் மிக முக்கியமான நேரம். கல்கத்தாவுக்குச்சென்று அங்கே உள்ள புரட்சிக்காரர்களோடு தொடர்புகொள்கிறார்கள், இதைப் படிக்கின்றபோது எனக்குக்கூட ரொம்ப விநோதமாக இருந்தது.
No comments:
Post a Comment