07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை
பகத்சிங்கின் தோழர்களிடம் இருந்து சிறைக்கு ஒருகேள்வி அனுப்பப்படுகிறது “நீ உயிர்வாழ ஆசைப்படுகிறாயா” என்பதே அக்கேள்வி. அதற்கு மார்ச் 22 ஆம் தேதி பகத்சிங் எழுதும் பதில் கடிதமே அவரது கடைசி எழுத்தாகும்.
அதில் பகத்சிங் கூறுகிறார்.
“வாழ வேண்டுமென்ற ஆசை இயற்கையானது. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது.
ஒரு சிறைக் கைதியாகவோ, நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை. என் பெயர் இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னமாகி உள்ளது.
துணிச்சலோடும், புன்னகையோடும் நான் தூக்குமேடையேறினால் அது இந் தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத் சிங்கைப் போல் ஆகவேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் உயிர்த் தியா கம் செய்ய சித்தமாவோர் எண்ணிக்கை பெருகும். புரட்சிப் பேரலையை எதிர் கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.
மனிதகுலத்துக்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டி சிலகுறிக்கோள் களை எனது இதயத்தில் பேணிவளர்த்தேன். அந்தக் குறிக்கோள்களில் ஆயிரத் தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. கடைசிக் கட்டத்துக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்கள் தோழன்
பகத்சிங்
பகத்சிங்கின் சிறைக்குறிப்புகளாக அம்மாவீரன் எழுதியவற்றில் சிலவற்றை வாசிக்கும்போதே மெய்சிலிர்க்கும். தியாக சிகரமான அந்த வரலாற்று நாயக னின் உள்ளக்கிடக்கையை உணரமுடியும்.
அவர் மனம் கவர்ந்த நூல்களின் வாசகங்களை குறிப்பாக எழுதிடும் வழக்கம் பலவற்றைப் பதிவு செய்துள்ளது.
வால்ட் விம்மனின் ‘விடுதலை’ பற்றிய கவிதை வரிகளை எழுதிவைத்துள் ளார்.
களரீயம் துளைத்த அந்த இதயங்கள்
இளைஞரது அச்சடலங்கள்
சில்லிட்டு அசைவற்றுக் கிடப்பதாகத் தோன்றினாலும்
ஒடுக்க முடியாத விரயத்துடன்
அவை எங்கோ வாழ்கின்றன
மற்ற இளைஞரிடம் அவை வாழ்கின்றன
விடுதலைக்காகக் கொலையுண்டோரின்
சமாதியல்ல இது
விடுதலைக்காக துளிர்க்கும்
மீண்டும் வித்தினை உண்டாக்கும்
அதனைக்காத்து ஏந்திச்சென்று மீண்டும்
விதைக்கும், மழையும் பனியும் அதனை வளர்க்கும்”
சர்வதேச கீதம் எனும் தலைப்பில் பகத்சிங் குறித்தது ......
“புதியதொரு பூமி பூத்துக்குலுங்கும்
ஏதுமற்ற நாம் எல்லாமும் பெறுவோம்”
‘யுத்தத்தை’ குறித்து பகத்சிங் எழுதியது
யுத்தம் யுத்தமே - வருவது வரட்டும் தயக்கமோ, காலவிரயமோ இருக்கக் கூடாது.
ஒரு தேசத்தில் பிரஜை, எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை ஸ்பார்ட்டா வரலாற்றில் படித்து பகத்சிங் பதிவு செய்கிறார்.
பிரஜையும் மனிதனும் என்ற தலைப்பில் பகத்சிங் எழுதுகிறார் இதோ!
தெர்மாப்பிளே யுத்தத்துக்கான 300 பேர் உள்ள குழுவில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு ஸ்பார்ட்டா நகரத்துக்கு பெடார்க்டெஸ் விண்ணப்பித்தான். அவன் மறுதலிக்கப்பட்டான். தன்னைக் காட்டிலும் மேலான 300 ஸ்பார்ட்டா நகரத்தார்கள் இருப்பதாக மகிழ்ந்து கொண்டு சென்றுவிட்டான்.அவன் உண் மையாகவே அப்படிச் செய்தான் எனக் கருதுகிறேன். அதைச் சந்தேகிக்க இட மில்லை. அவன் ஒரு பிரஜை.
ஸ்பார்ட்டா நகரத்துத் தாய் ஒருத்தியின் ஐந்து பிள்ளைகளும் இராணுவத்தில் இருந்தனர். “உனது பிள்ளைகள் ஐவரும் கொல்லப்பட்டு விட்டனர்” என ஒரு வன் செய்தி கொண்டு வந்தான்.
“மோசமான அடிமையே அதுவா நான் உன்னிடம் வினவியது?”
நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் - அவனது தெய்வங்களுக்கு நன்றி சொல் வதற்காக அவள் கோயிலுக்கு விரைந்தாள்
அவள் ஒரு பிரஜை.
No comments:
Post a Comment