Sunday, September 29, 2013

அணுஉலை விபத்து இழப்பீட்டுச் சட்டம்

அணுஉலை விபத்து இழப்பீட்டுச் சட்டம்: அமெரிக்காவுக்கு அடிபணியும் மன் மோகன்சிங் அரசு 

சங்கொலி தலையங்கம் 

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந் தியாவை அமெரிக்க நாட்டின் அடிமை தேசமாக மாற்றிவிட்டது.கடந்த ஒன்பது ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான டெல்லி ஆட்சியில், இந்தியா, அமெ ரிக்காவைச் சார்ந்த நாடாக, அமெரிக்காவின் கண் அசைவுக்கு ஏற்ப இயங்கும் கையாலாகாத நாடாக ஆகிவிட்டது. உலகில் பெரும்பாலான நாடுகள் அணு உலைகள் அமைப்பதையும் அணுமின் உற்பத்தியையும் கைவிட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் கொள்ளை லாபத்திற்கு இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாடு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவும் இன்னும் சில வளர்ந்த நாடுகளும் வழங்கும் அணுஉலைகளை இந்தியாவில் அமைத்து அணுமின் உற் பத்தியைப் பெருக்குவது என்று மன்மோகன் சிங் அரசு அமெரிக்காவுடன் அணு சக்தி உடன்பாட்டை 2005 ஆம் ஆண்டு உருவாக்கியது.

அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன்பாட்டின் பல அம்சங்கள் இந்தியாவின்
இறையாண்மைக்கு எதிராக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தவிர, மற்ற அனைத் துக் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், மன்மோகன்சிங் அரசு
இவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தனது அரசியல் அற்ப விளை யாட்டுகள் மூலம் சில கட்சிகளின் ஆதரவைப் பெற்று அணுசக்தி உடன்பாட் டை எந்தச் சிக்கலும் இல்லாமல் நிறைவேற்றியது. ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளாக இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இன்னும் செயற்பாட் டிற்கு வரவில்லை. இதற்குக் காரணம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட, அணுசக்தி பேரிடர் நிர்வாக இழப்பீட்டுச் சட்டம், 2010 (Civil Liability for Nuclear Damage Act 2010)என்று கூறப்படுகிறது.இச்சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வந்தால்தான் அமெரிக்க நாட்டுநிறுவனங்கள் இந்தியாவிற்கு அணுஉலைகள் வழங்க முடியும் என்று அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அணுசக்தி பேரிடர் நிர்வாக இழப்பீடு சட்டம், 2010 பிரிவு 17, அணுஉலைகளில் விபத்து நேரிட்டால் அந்த அணுஉலையை வழங்கிய நாடு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால், விபத்துக்கு இழப்பீடு வழங்குகின்ற பொறுப்பை ஏற்க முடியாது என்று
அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறி விட்டது. இதனால் இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டின்படி அமெரிக்கா, இந்தியாவிற்கு அணுஉலைகள் விற்பனை செய்ய மறுத்து வருகிறது. இந் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 27 ஆம் தேதி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந் தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அணுமின் சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசு இந்தியாவிலிருந்து சில திட்டவட்டமான முடிவு கள் இறுதி செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இதன்படி அணுஉலையில் விபத்து ஏற்படுகிறபோது இழப்பீடு வழங்குவதிலிருந்து அணு உலையை இந்தியாவிற்கு விற்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கிற விதத்தில் அணுசக்தி பேரிடர் நிர்வாக இழப்பீடு சட்டம் தளர்த்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா கட்டளையிட்டிருக்கிறது.

எனவே, மத்திய அரசு அணுசக்தி பேரிடர் நிர்வாக இழப்பீடு சட்டத்தில் மாற்றங் கள் கொண்டுவருவது குறித்து இந்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாகன்வதி கருத்தைக் கேட்டிருக்கிறது. மத்திய அணுசக்தித் துறைக்கு ஜி.இ. வாகன்வதி அளித்த பதிலில், “இந்தியாவில் அணுஉலையை இயக்குகிறவர் தான், இழப்பீடு பெறுவது தொடர்பான சிவில் அணுசக்தி பேரிடர் இழப்புச் சட் டம் பிரிவு 17 ஐ பயன்படுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்” என்று கூறி உள்ளார்.

அதாவது இந்தியாவில் அணுஉலைகளை இயக்கும், இந்திய அணுசக்திக் கழ கம் (Nuclear Power Cororation of India Ltd - NPCIL) அணுசக்தி பேரிடர் நிர்வாக இழப்பீடு சட்டத்தின் பிரிவு 17 இன் படி, அணுஉலை வழங்கிய நிறுவனங்களிடமிருந்து
நட்ட ஈடு பெறுவதா? வேண்டாமா? என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அட்டர்னி ஜெனரல் வாகன்வதி கூறியிருக்கிறார். அவரே 2012 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அணுஉலைகள் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டபோது, எழுத்து வடிவத்திலான ஒப்பந்தத்தில் இழப்பீடு பெறு வதற்கு அணுசக்தி பேரிடர் இழப்புச் சட்டத்தின் பிரிவு 17(அ) வழி வகுத்துள்ளது. ஆனால், அணுஉலையை இயக்குகிற அமைப்பு விரும்பினால் இந்த சட்டப் பிரிவை உடன்பாட்டில் சேர்க்காமல் விட்டுவிடலாம் என தெரிவித்திருந்ததை தற்போது மீண்டும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அணுஉலையை இந்தியாவிற்கு வழங்கும் நாடு இழப்பீடு வழங்க வலியுறுத் தும் சட்டப்பிரிவை திருத்தம் செய்ய முடியாது என்று இந்திய அரசு கூறி வந் தாலும், தற்போது அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி தெரிவித்துள்ள கருத் து, அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா அடிபணிய உதவியாக அமைந் துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டில் கையெழுத் திட்டு அணுஉலையில் விபத்து ஏற்படும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப் பீடு வழங்குவதற்கான சட்ட விதிகளை தளர்த்திட இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கின்ற போது ஒப்புதல் வழங்குவார் என்று தகவல் கள் கசிந்துள்ளன. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்தியாவுக்கு அணுசக்தி தேவைப்படுகிறது. அது தனது நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டே அதைப்பெறும். இந்தியாவும் அமெரிக்காவும் இது தொடர்பான கருத்துகளை விவாதித்து இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் எந்த நிபந்தனையையும் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக மன்மோகன் சிங் அரசு தெளிவுபடுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் அணுசக்தி பேரிடர் நிர் வாக இழப்பீடு சட்டம் கொண்டுவரப்பட்டபோது, ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்தது.

2010 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அணுவிபத்து கடப்பாடு மசோதா
நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த மசோதா அமெரிக்கா வின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கடும் எதிர்ப்பைத் தெரி வித்தன. உடனடியாக இம்மசோதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்ச கத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட் டது.

அணு உலையை விற்ற நிறுவனம் அல்லது அதன் ஊழியர்களின் திட்டமிட்ட
கவனக்குறைவின் காரணமாக விபத்து நடந்திருந்தால் அணுஉலையை இயக் கும் நிறுவனம் உலையை விற்ற நிறுவனத்திடமிருந்து நட்ட ஈடு கோரலாம் என்ற விதி 17(ஆ) அம்மசோதாவில் சேர்க்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவும் இம்மசோதாவை சட்டமாக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. இந்த விதியை நிரூபித்து நட்ட ஈடு பெறுவது கடினம் என்ற போதிலும் அமெரிக்கா, இந்த விதி சேர்க்கப்பட்டதைக்கூட விரும்பவில்லை. அதனால் மத்திய அரசு இந்த விதி 17(ஆ) ஐ நீக்கக் கோரும் அறிக்கை ஒன்றைத் தயாரித்து, நாடாளுமன்ற நிலைக் குழுவின் பார்வைக்கு அனுப்பிவைத்தது.நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப் பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மன்மோகன்சிங் அரசு பின்வாங்கியது.

இம்மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழுவில் நடந்த விவாதத்தின் அடிப் படையில் அணுஉலை மற்றும் இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிட மிருந்து நட்ட ஈடு பெறுவதற்கான விதி 17(ஆ) புதிய அம்சங்கள் சேர்க்கப்பட் டன. இதன்படி தொழில் நுட்ப ரீதியாகக் குறைபாடுகள் உடைய சாதனங்களை பழுதான சாதனங்களை விற்றதால் விபத்து நேர்ந்ததாக நிருபிக்கப்பட்டாலும், அணுஉலையை இயக்கும் நிறுவனம் இயந்திரங்களை விற்ற நிறுவனங்களிட மிருந்து நட்ட ஈட்டுத் தொகையைப் பெற முடியும் என்பது உள்ளிட்ட 18 திருத் தங்களை நாடாளுமன்ற நிலைக்குழு முன் வைத்தது. இந்தத் திருத்தங்களுக் கான அணுசக்தி பேரிடர் நிர்வாக இழப்பீடு சட்டத்தைக் கொண்டுவர நாடாளு மன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்தது.

இவ்வாறு நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்ட மசோதா ஆவ ணத்தில் மன்மோகன்சிங் அரசு ஒரு போர்ஜரி வேலையைச் செய்தது. அம்ம சோதாவில் தனித்தனியாக இருந்த 17(அ) என்ற விதிக்கும் 17(ஆ) என்ற விதிக் கும் இடையில் மற்றும் (and) விகுதியைச் சேர்த்து இரண்டும் இணைக்கப்பட் டது. இதன் மூலம் அணுஉலை இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங் களி டம் அணுஉலையை இயக்கும் நிறுவனம் 17(ஆ) பிரிவில் காணப்படும் அம்சங் கள் குறித்துத் தனியாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே நட்ட ஈடு பெற முடியும் என்ற நிபந்தனை ரகசியமாக சேர்க்கப்பட்டது. இந்தத் திருட்டுத்தனத்தை இந்து ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியது. நாடாளுமன்றத் தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. உடனடியாக சிறிதும் வெட்கப்படாமல் மன் மோகன்சிங் அரசு, அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாக உறுதி அளித் தது.

எனவே வேறு வழியில் அமெரிக்காவை திருப்திபடுத்த மன்மோகன்சிங் அரசு முயன்றது. நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்த திருத்தங்களை பரிசீ லனை செய்வது என்ற பெயரில் மத்திய அமைச்சரவை மோசமான இடைச் செருகல் ஒன்றைச் செய்தது. அணு விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அணுஉலை உபகரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் அல்லது அதன் ஊழியர்கள் செயல்படுகின்றனர் என அணுஉலையை இயக்கும் நிறுவ னங்கள் நிருபிக்க வேண்டும் என்ற விதியை 17(ஆ) பிரிவில் சேர்த்தது.

போபால் யூனியன் கார்பைடு ஏற்படுத்திய விபத்து மறக்கக் கூடியதா? விபத்து ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் தனது லாப வேட்டைக்காக பாதுகாப்பு விதிகள் அனைத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனம் திட்டமிட்டே புறக்கணித்தது என்பதை நிருபிக்க ஏராளமான சாட்சியங்கள் இருந்தபோதும் அதனை யூனி யன் கார்பைடு தலைவர் வாரன் ஆண்டர்சன் மட்டுமல்ல, இந்திய உச்ச நீதி மன்றம்கூட அப்போது ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது.

அணுஉலை விபத்துத் தொடர்பாக அமெரிக்கா உருவாக்கி உள்ள சர்வதேச உடன் பாடு ஒன்றில் 2010 நவம்பர் 8 இல் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகை தந்தபோது, இந்தியப் பிரதமர் கையெழுத்திட்டார். இந்த உடன்பாடு அணு விபத்திற்கு அணுஉலை உபகரணங்களைவிற்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்குவதைத் தடை செய்கிறது.2100 கோடி ரூபாய்க்கு மேல் நட்ட ஈடு கோருவதைத் தடை செய்கிறது. இந்தியச் சட்டம் வழங்கி இருக்கும் அற்ப பாது காப்புகளும் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டப்பட்டது.

தற்போது இந்தியாவுக்கு அணுஉலைகளை விற்பனை செய்யும் அமெரிக்க நிறு வனங்களான வெஸ்டிங் ஹவுஸ் (Westing House) ஜெனரல் எலக்ட்ரிக் (General Ele ctric) ஆகியவற்றிடமிருந்து அணுஉலைகளைப் பெறத் தடையாக உள்ள அணு விபத்துப் பேரிடர் நிர்வாக இழப்பீடு சட்டத்திலுள்ள விதிகளை கிழித்து எறிய
பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா புறப்பட்டுள்ளார். மன்மோகன்சிங் அர சின் பதவி சீட்டை கிழித்தால்தான் இந்திய நாட்டின் நலன் பாதுகாக்கப்படும் என்பதற்கு அணுசக்தி உடன்பாடு ஒரு சான்று ஆகும்.

No comments:

Post a Comment