Wednesday, September 18, 2013

மாணவர் சைக்கிள் பிரச்சாரம்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று திண்டிவனத் தில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ..



மாணவர்களின் பயணம் 

தமிழினப்படுகொலை நடத்திய இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெறக்கூடாது, அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, காமன் வெல்த் நாடுகளின் அமைப்பில் இருந்து இலங்கையை விலக்கி விட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 30 மாணவர்கள் திருச்சியில் இருந்து சென்னை வரை சைக்கிள் பிரசாரத்தை கடந்த 13–ந்தேதி முதல் மேற்கொண்டுள்ளனர். 

திண்டிவனத்தில் வரவேற்ப்பு 

அந்த மாணவர்கள் நேற்று மாலை திண்டிவனத்திற்கு வந்தனர். இவர்களை வாழ்த்தும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் திருமணம் மண்டபத் தில் நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாநில பொருளாளர் டாக்டர் மாசிலா மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணி முன்னிலை வகித் தார்.திண்டிவனம் நகர செயலாளர் கா.மு.இஸ்மாயில் வரவேற்றார். இந்நிகழ்ச் சி யில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தங்கராசு, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், பேராசிரியர் கல்யாணி ஆகி யோர் கலந்து கொண்டு அந்த மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.

இலங்கையில் நடத்தக்கூடாது

இதனை தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.–

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது. முன்பு பாகிஸ்தான், நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை நீக்கப்பட்டதுபோல, லட்சக்க ணக்கான தமிழர்களை, பச்சிளங்குழந்தைகளை, தாய்மார்களை ஈவு, இரக்க மின்றி படுகொலை செய்த இலங்கை அரசை காமன்வெல்த் அமைப்பில் இருந் து நீக்கி வைக்கப்பட வேண்டும். கொலைகார ராஜபக்சே அரசுக்கு கிரீடம் சூட்டத்தான் இந்திய அரசு இந்த வேலையை செய்கிறது. 

இனப்படுகொலையின் கூட்டு குற்றவாளி இந்திய அரசு.இந்த குற்றத்தை மறைப்பதற்காக, நீதியை புதைப்பதற்காக அங்கே இந்த மாநாடு நடத்தப்படு கிறது. இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தினால், 2 ஆண்டுகளுக்கு ராஜ பக்சே காமன்வெல்த் அமைப்பிற்கு தலைவராகிவிடுவார். தமிழர்களின் புதை குழி மீது இந்த மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது இந்திய அரசு.

எனவே திருச்சியில் இருந்து புறப்பட்டிருக்கிற இந்த மாணவர்கள், மலேசியா வில் இருந்து வந்திருக்கிற இந்த மாணவ தோழர்கள், லட்சக்கணக்கான மக்க ளை சந்திப்பதற்காக காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கு, காமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்தாதே என்பதை இலக்காக வைத் து தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய நாட்டில் இருக்க கூடிய தேசிய இயக்கங்களுக்கும் நமது குமுறலை தெரிவிக்க இந்த சைக்கிள் பயணத்தை மாணவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது போராட் ட பயணம் உண்ணதமானது. இவர்களை வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கின் றேன். இதற்கெல்லாம் சுதந்திர தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. அது நடக்கும். அது உறுதியாக நடக்கும். அந்த நம்பிக்கையோடு பயணத்தை தொடங்குகிறோம்.



No comments:

Post a Comment