கோவை மாவட்டம் வாளையார் - மதுக்கரை தேசிய நெடுஞ்சாலைப் பணியை உடனடியாக நிறைவேற்றக்கோரி, #மதிமுக சார்பில் நடைபயணம் நேற்று (29.09.13 )நடந்தது.
வாளையார் - மதுக்கரை தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் (NH 47), கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டு, பாதியில் நிற்கிறது. ரோட்டின் இருபுறங்களிலும், பள்ளம் இருப்பதால், வாகனங்கள் கவிழ வாய்ப்புள்ளது. உடனடியாக பணிகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தி, மதிமுக இளை ஞர் அணி சார்பில், நடைபயணம் வாளையார் பஸ் ஸ்டாண்ட் அருகே துவங் கியது. மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில், நடை பயணத்தை துவக்கி வைத் தார். மதுக்கரையில் நடைபயணம் முடிவடைந்தது."மதுக்கரை தேசிய நெடுஞ் சாலையிலிருந்து, கோவைபுதூர், பேரூர், வடவள்ளி வழியாக மேட்டுப்பாளை யம் ரோடு செல்வதற்கான, மேற்கு புறவழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவை - பொள்ளாச்சி மற்றும் கோவை - சத்தியமங்கலம் சாலைகளை அக லப்படுத்தும் திட்டத்திற்கு, பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டங்கள் நடந்து முடிந்தும், திட்டம் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.
இதை விரிவுபடுத்தும் பணியை, மத்திய அரசு உடனடியாக துவக்க வேண்டும். கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள, கோவை காங்கயம்பாளையம் - மேட் டுப்பாளையம் புறவழிச்சாலை திட்டத்தில், சில மாற்றங்களை செய்து, செயல் படுத்த வேண்டும்.
ஆத்துபாலம் - ஈச்சனாரி வரையிலான ரோட்டை நான்கு வழி பாதையாகவும், க.க.சாவடி - வேலந்தாவளம் ரோட்டை அகலப்படுத்தவும், மாநில அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்' என்பன, உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
மதுக்கரை ஒன்றிய செயலாளர் வெள்ளிங்கிரி, அவைத்தலைவர் மாணிக்க வாசகம், ஜோதிபாசு, மணி, கண்ணன் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்பு களை சேர்ந்த நிர்வாகிகள், அமைப்பாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த சாலை பணிகளை உடனடியாக முடிக்க படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவோம் , என்று மதிமுக மாநில இளைஞர் அணி செயலளார் ஈஸ்வரன் தெரிவித்தார் .
No comments:
Post a Comment