Thursday, September 26, 2013

ஜனநாயகக் கடமை ஆற்றுவீர்!

புதிய வாக்காளர் சேர்ப்பு: ஜனநாயகக் கடமை ஆற்றுவீர்!

#வைகோ அறிக்கை

வரவிருக்கின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு அளிக்க வசதியாக, பதினெட்டு வயது நிறைவு அடைந்தவர்கள், அக்டோபர் 1 முதல் 31 வரை தங் களை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதன்மூலம், பதினெட்டு வயது நிறைவு அடைந்து, இதுவரை வாக்காளர்களாக தங்களைப் பதிவுசெய்துகொள்ளாதவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டுப் போய்விட்டது; தமது பெயர் தவறாக பதிவாகி உள்ளது என வருந்துவோர், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவும், திருத்தங் களை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் உள்ள தேர்தல் அலுவலரிடமோ, கோட்ட ஆட்சியர், வட்ட ஆட்சியர் அலுவலகங்களிலோ, புதிய வாக்காளருக் கான 6 எம் எண் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவிலான முகப்படத்தினை ஒட்டி, பிறந்த தேதி, வசிப்பிடம் தொடர்பாக ஆவண ஆதார நகலுடன் சேர்த்து, 01.10.2013 முதல், 31.10.2013 முடிய, வாக்காளர் பதிவு அலுவ லகத்தில், சம்பந்தப்பட்ட நபரோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவரோ நேரில் அளித்து, ஒப்புகை பெற்றுக் கொள்ளலாம். 

அதேபோல, பெயர்களை நீக்கம் செய்வதக்கு படிவம் எண் 7,வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள விவரங்களோடு புதிய விவரங்களைச் சேர்ப்ப தற்கான படிவம் எண் 8, குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிக்குள் இடம் பெயர்ந்து வந்தவர்கள், படிவம் எண் 8 ஏ, ஆகியவற்றை நிறைவு செய்து, உரிய ஆவண ஆதார நகலுடன் தாக்கல் செய்ய வேண்டும். 

தங்கள் பகுதி வாக்குச் சாவடியில் வாக்காளர் பட்டியல் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நூறு ரூபாய் செலுத்தி, குறுந்தகடு பெற்று பதிவு இறக்கம் செய்தும் தெரிந்து கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், ஒருவரே பத்து விண் ணப்பங்கள் வரை அளிக்கலாம். மற்றவர்கள் தாங்களே நேரடியாகவோ, தங் கள் குடும்பத் தலைவர் மூலமோ அளிக்க வேண்டும்.

அக்டோபர் 6, 20, 27ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளிலும்,அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களும் நடக்கின்றன. அந்த முகாம்களிலும், படிவங்களைத் தாக்கல் செய்யலாம். 

அங்கீகரிக்கப்பட்ட தனியார் இணையதள மையங்கள் மூலமும் பத்து ரூபாய் செலுத்தி தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்திட விண்ணப்பிக்கலாம். சில தினங்களில் நேரடி விசாரணைக்கு பணியாளர்கள் வரும்போது, விண் ணப்பதாரர்கள் தங்கள் முகவரியில் வசிப்பதை உறுதி செய்திட வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையும், கவலையும் மாற்றம் உரு வாக வேண்டும் என்ற ஏக்கமும் கொண்ட இளந்தலைமுறையினர், அவர்தம் பெற்றோர்கள்; பொதுநல அமைப்புகள்; கழகத் தோழர்கள் வாக்காளர் சேர்ப்புப் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு, ஜனநாயகக் கடமை ஆற்றிடுமாறு, மறும லர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

‘தாயகம்’                                                                          வைகோ
சென்னை - 8                                                        பொதுச்செயலாளர்
26.09.2013                                                                 மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment