தூத்துக்குடி ஸ்நோ மகாலில் நடந்த #மதிமுக மாநில மீனவர் அணி செயலா ளர் நக்கீரன் இல்ல திருமண விழாவில், மதிமுக. பொதுச்செயலாளர் #வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியின் விவரம் :–
தூத்துக்குடி வீரம் விளைந்த மண். சுதந்திர போராட்டத்துக்கு பாடுபட்ட தலை வர்கள் பிறந்த மண். இங்கு கடல் அலைகள் ஓய்ந்தாலும் ஓயும், மீனவர்களின் துயரம் தீராதா. துன்பம் தீராதா?.
இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தாக்குகிறார்கள். கடலில் எத் தனை மீனவர்கள் சிங்களர்களால் அழிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் 2 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு தருவதாக கூறுகிறார்கள். இந்த போர்க்கப்பல் கள் எதற்காக தரப்படுகிறது. இலங்கை யாருடன் போரிடப் போகிறது.
போர்க்கப்பல்களை கொண்டு மீனவர்களை தானே அழிக்கப்போகிறார்கள். இந் த அரசு இருந்தால் தானே அவர்களின் திட்டம் நிறைவேறும். தேர்தல் பிப்ரவரி மாதத்தில் வரலாம். எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஒவ் வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்கிறோம். எந்த காலத்திலும் கொள்கை யை சமரசம் செய்ய மாட்டோம்.
நேற்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அரைவேக்காடு தனமாக ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார்.
ஜூலை 10–ந் தேதி ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியில் நீடிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை காங்கிரஸ் கட்சி எதிர்த்து உள்ளது. ஆகஸ்டு மாதம் 13–ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தி லும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதனை எதிர்த்து அவசர சட்ட மசோதாவை 30–ந் தேதி பாராளுமன்றத்தில்
தாக்கல் செய்தது. அப்போது மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அப்போது ராகுல்காந்தி எங்கே சென்றார்?. சோனியாகாந்தி எங்கே சென்றார்?. அனைத்து மந்திரிகளும் சட்டத்தை ஆதரித் து பேசினர். பிரதமர் தலைமையில் காபினட் மந்திரிகள் கூட்டத்தில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது.
எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து அனுப்பிய பிறகு நாட்டில் மக்களிடையே எதிர்ப்பு வந்தது. ம.தி.மு.க. அவசர சட்டத்தை எதிர்க்கிறது. இது ஜனநாயகத் துக்கு விரோதமானது.
மக்களின் எதிர்ப்பை உணர்ந்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவசர சட் டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று கூறி உள்ளார். அவர் நினைத்தால் அத னை திருப்பி அனுப்பி இருக்கலாம் அல்லது கிடப்பில் போட்டு இருக்கலாம். ராகுல்காந்தி பிரதமரிடம் தெரிவித்து அவசர சட்டத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்து பேச வேண்டும் என்பதற்காக, அவசர சட்டம் படு முட்டாள்தனமானது. அதனை கிழித்து எறிய வேண்டும் என்று கூறி உள்ளார். இது முட்டாள்தனமான முடிவு என்று கூறி உள்ளார்.
9½ ஆண்டுகளாக சோனியா காந்தியும், அவரது கூட்டமும் செய்த பாவங்களை சுமந்தாரே அதற்கு காட்டும் மரியாதையா?. ராபர்ட் வதேரா மீது குற்றச்சாட்டு வந்தது. அப்போது ராகுல் காந்தி எங்கு இருந்தார்?. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் வந்த போது ராகுல்காந்தி கருத்து தெரிவிக்கவில்லையே. அவர் எங்கே இருந்தார். நாட்டு மக்களை ஏமாற்ற முடி யாது.
மன்மோகன் சிங், பொருளாதார மேதை. காங்கிரசின் மதிப்பை போன்று, ரூபா யின் மதிப்பு தரைமட்டமாகி வருகிறது. மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி கவர்ன ராக இருந்தார். அப்போது பஸ்சில் தான் பயணம் செய்தார். அவர் இதனை தன் மானத்துக்கு இழுக்கு என்று கூறி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். அவர் இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளக்கூடும். அவர் கட் சிக்கு களங்கம் ஏற்படுமோ என்று கருதாமல், பிரதமர் பதவிக்கு ஏற்பட்ட இழுக்கு என்று கருதி ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் எந்த முடிவும் எடுக்கலாம். ஆனால் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் விரைவில் வருகிறது. மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உட்கார முடியாது. எந்த கட்டத்திலும் காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். தமிழ் மக்கள் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அரசு, தமிழ்நாடு மக்க ளின் வாழ்வாதாரத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்படும்.
மதிமுக. மக்கள் நம்பிக்கையை பெற்று உள்ளது. நாளை(30.09.13) செய்துங்க நல்லூரில் இருந்து மக்கள் பயணத்தை தொடங்குகிறோம்.
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
No comments:
Post a Comment