வைகோவின் 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை சில பக்கங்களில் தொகுத்து விட முடியாது இருந்தாலும் சிறிய முக்கியமான குறிப்புகள் மட்டுமே.
1964 -ஆகஸ்ட் மாதத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் முன்னிலையில், கோக லே அரங்கத்தில், இந்தி எதிர்ப்புக் கருத்து அரங்கில் வைகோ பேசினார் ,அன்று இரவு நுங்கம்பாக்கம் இல்லத்தில் அண்ணா அவர்களை சந்தித்தார். பாராட்டை யும் பெற்றார்.
1965 -ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில், மாணவர் அமைப்பினரோ டும் திரு.பெ. சீனிவாசன் அவர்களோடும் இணைந்து களப்பணி ஆற்றினார் தலைமறைவாகவும் இருந்தும் செயல்பட்டார்.
சென்னை மாநிலக் கல்லூரி, விக்டோரியா விடுதி தமிழ் மன்றத் தலைவராக தி.மு.க. மாணவர் அமைப்பின் தலைவராக வைகோ தேர்வு பெற்றார்.
வைகோவின் ஊரான கலிங்கப்பட்டிக்கு அருகே உள்ள திருவேங்கடத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில், திரு.இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் முன்னி லையில் உரை ஆற்றியனார்.
1966-அன்றைய சங்கரன்கோவில் நகர தி.மு.க. செயலாளர் திரு.அ.பழநிசாமி பி.காம்., அவர்கள், தி.மு.க. மேடையில் வைகோவை பேச வைத்தார்.இதே ஆண்டில் தி.மு.க. மாணவர் அணியில் தீவிர செயல்பட்டளராக மாறினார்.
1967 பொதுத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில்,மறைந்த முன்னாள் சபா நாய கர் காளிமுத்து அவர்களோடு களப்பணி ஆற்றியனார்.
1968-ம் ஆண்டு, ஜூன் மாதம், சட்டக் கல்லூரி திறந்தவுடன் நடைபெற்ற மாண வர் பேரவைத் தேர்தலில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வைகோ,நேரடிப் போட்டியில் குறைந்த வாக்குகளில் தோல்வியுற்றார்.முதல் அமைச்சர் அண்ணா அவர்களைக் காண வைகோவும் மாணவர் அமைப்பினரும் சென்ற னர். தேல்வி குறித்து அண்ணா ,'Take it sportively’என்று வைகோவை பார்த்து சொல்கிறார்.
1969-ம் ஆண்டு, சட்டக்கல்லூரின் சிறந்த பேச்சாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
பிப்ரவரி 2-ம் தேதி இரவு,அறிஞர் அண்ணா உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன் அண்ணா அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனை அறைக்குள்சென்று பார்த்து வந்தவர் வைகோ.
1970-ம் ஆண்டு,திமுக இளைஞர் மன்றம் அமைப்பாளர் ஆகவும், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகவும் இருந்தார்.இதே ஆண்டு கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
மேலும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராகவும் தேர்வு ஆனார்.
1971-ம் ஆண்டு குருவிகுளம் நிலவள வங்கியின் தலைவராக தேர்ந்து எடுக்கப் பட்டார்.திருநெல்வேலி M.D.K கூட்டுறவு பயிற்சிகூடத்தின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1972-ம் ஆண்டு திருநெல்வேலி -கன்னியாகுமரி மாவட்ட பிரச்சார செயலளார் ஆனார்.
1973-ம் ஆண்டு வரை திருநெல்வேலி -கன்னியாகுமரி மாவட்ட பிரச்சர செயல ளாராக இருந்தார்
1974-ம் ஆண்டு முதன் முதலில் பசும்பொன்னுக்கு முத்துராமலிங்க தேவர் நினைவிடத் தில் அஞ்சலி எழுத்த துவங்கி இன்று வரை அதை கடைபிடிக் கிறார் (இடையில் சிலவருடம் சிறையில் இருந்த காலத்தில் தவிர )
1975 ம் ஆண்டு சேலத்தில் தி.மு.க. மாநாட்டில் முதல் முறை உரை நிகழ்த்தி னார்.
1976 ம் ஆண்டு, ஜனவரி, 30-ம் தேதி தி.மு.க. அரசு, பிரதமர் இந்திரா காந்தியால் கலைக்கப்பட்டது. அதற்கு மறுநாள் பிப்ரவரி 1 ம் தேதி காலையில் நெல்லை மாவட்டத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் ஆள் வைகோ.
1977 ம் ஆண்டு,பிப்ரவரி2 ம் தேதி ஒரு வருட மிசா சிறை காலத்தை கடந்து விடுதலை ஆனார்.
இதே ஆண்டு மதுரைக்கு வந்த இந்திராகாந்திக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் பங்கெடுத்து கைது ஆகி 40 நாள் சிறையில் இருந்தார் வைகோ.
1978 ம் ஆண்டு திமுகவில் தொண்டர்படை பயிற்சி முகாம்களை தொடங்கி னார் 1978 ம் ஆண்டு மாநிலங்களை அவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு ,ஏப்ரல் 26-ம் தேதி, மாநிலங்களவை உறுபினராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண் டார்.மே 2-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாநிலங்களின் சுயாட்சி உரிமை குறித்துப் பேச, மாநிலங்களின் அதிகாரங்கள் குறித்த தனிநபர் மசோதா மீது முதன் முதலில் நாடாளுமன்றத்தில் தனது உரையை துவங்கினார்.
1979 ம் ஆண்டு ,வைகோவிற்கு வட இந்திய தலைவர்களின் அறிமுகமும் ,நட்பு பெற துவங்கிய காலகட்டம்.
1980 ம் ஆண்டு,காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
1981 ம் ஆண்டு , 1978 முதல் 1981 வரை ஆளும் கட்சியை எதிர்த்து 22 முறை போரட்டங்களின் பங்கேற்றார் 1978-81 வரை நான்கு முறை தொண்டர் படை பயிற்சி முகாம்களை நடத்தினார்.இந்த காலக்கட்டத்தில் ஆட்சிக்கு எதிராக ராணுவத்தை உருவாக்குகிறார் கோபால்சாமி என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் விமர்சிக்கப்பட்டார் , கைது நடவடிக்கைக்கும் உட்பட்டார்.
1982 ம் ஆண்டு மத்திய ரயில்வே நிலை குழு உறுப்பினர் ஆனார்.
1983ஆம் ஆண்டு துன்ப துயரங்களுக்கு ஆளாகி இருக்கின்ற ஈழத் தமிழ் மக்க ளுக்காக, டெல்லி போட்கிளப் மைதானத்தில் உண்ணாவிரதம்இதே ஆண்டு நெல்லை ரத்த தான கழகத்தின் கவர்னர் ஆனார்.ஈழத்தமிழர் மீது ஏவப்பட் கருப்பு ஜூலை குறித்து நாடாளுமன்றத்தில் வைகோ பேசியது வட இந்திய தலைவர்களின் மத்தியில் ஈழம் பிரச்சனை சென்று சேர்ந்தது.
1984 ம் ஆண்டு வைகோவின் தனி நபர் மசோதாவின் மீது நடந்த விவாதத்தில் ஆகஸ்ட் 16 ஆம் நாள், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இலங்கை தீவில் ‘வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள்தாம், அந்த மண்ணின் மைந்தர்கள். அங்கே நடப்பது இனப்படுகொலை’ என்றார்.
இதே ஆண்டு திமுகவின் தேர்தல் பணிகுழு செயலாளர் ஆனார்.
1985 ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் நாடாளுமன்ற மைய மண்டப்பத்தில் பெரி யார் , அம்பேத்கர் படங்களை திறக்க வேண்டும் என்று முன் முதலில் பேசிய வர் வைகோ.பிரதமாராக இருந்த ராஜீவ் காந்தியை கேள்விகளால் துளைத்து எடுத்தார் வைகோ .
1986 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் குறித்து ஜெயவர்த்தனா அவதுறு பேசிய போது , நாடாளுமன்றத்தில் பிரதமர் மீது கேள்வி கணைகளை தொடுத்தார்,இதுதொடர் பாக எம்.ஜி.ஆரே தொலைப்பேசி வழியாக வைகோவிற்கு நன்றி தெரிவித்தார். இதே ஆண்டில் மீண்டும் இந்த எதிர்ப்பு போராட்டம் .
1987 ம் ஆண்டு இந்திய-இலங்கை கூட்டு ஒப்பந்தை கடுமையாக சாடினார். டெல்லி அசோகா ஓட்டலில் சிறை வைக்க பட்ட பிரபாகரன் தொலைபேசி வழியாக வைகோவை தொடர்பு கொண்டார் , வைகோ மூலமாக பிரபாகரன் சிறை வைக்கப்பட்ட செய்து வெளி உலகிற்கு தெரியவந்தது.
1988 ம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே நாடாளு மன்ற உறுப்பினர் வைகோ மட்டுமே.
1989 ம் ஆண்டு சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் நின்று தோற்றுபோனார் , எதிர்த்து நின்று வென்றவர் வைகோவின் நண்பர் காளிமுத்து அவர்கள்.
இதே ஆண்டு இரு நாட்டு ராணுவ தாக்குதலுக்கு மத்தியில் ஈழம் பயணம் மேற்கொண்டு , வன்னி காட்டில் 23 நாள்கள் தங்கி இருந்து இந்திய அமைதிப் படை நடத்திய கோரங்களை பார்வையிட்டு வந்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியை கேள்விகளை தினறவைத்தவர் வைகோ.
1990 ம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் மேதினம் விடுமுறை நாளாக அறிவிக்க கார ணமாக இருந்தவர் வைகோ.இதே ஆண்டு பிப்ரவரியில், திருச்சி தி.மு.க. மாநாட்டில், 'உலகைக் குலுக்கிய புரட்சிகள்’ என்ற தலைப்பில், வைகோ உரை யாற்றினார், இதற்கு பிறகு கருணாநிதிக்கு அடுத்த நிலையில் வைகோவை வைத்து பார்க்க தொடங்கினார்.
1991 ம் ஆண்டு வம்பர் 26 ஆம் தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டி வைகோ வை கட்சியில் இருந்து நீக்க கருணாநிதி முடிவு செய்தார். அச்செயற் குழுவில் வைகோ மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி கருணாநிதி.பின்னர் வைகோ தன்னிலை விளக்கம் அளித்தார் .இவ்விளக்கத்தை கேட்ட கட்சியின் செயற் குழுவினரில் 99 விழுக்காடு உறுப்பினர்கள் வைகோவின் பக்கமே நியாயம் இருப்பதை உணர்ந்தனர்.கட்சியை விட்டு நீக்க முடியாத சூழல் உருவானது.
கருணாநிதியின் தந்திரம் முதல் முறையாக வைகோவிடம் தோற்று போனது.
1992 ம் ஆண்டு மீனவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த குரல் வைகோவின் குரல்.
1993 ம் ஆண்டு ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு வைகோ திமுகவை விட்டு வெளி யேற்ற முயன்று தோல்வியுற்ற கருணாநிதி , இப்போது விடுதலை புலிகளை காரணம் காட்டி வைகோ மீது கொலை பழி சுமத்தி திமுகவில் இருந்துவைகோ வையும் அவரை ஆதரித்த ஒன்பது மாவட்டச் செயலாளர்களும்,400 க்கும் மேற் பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் திமுகவில் இருந்து நீக்கினார் கருணாநிதி.
கட்சியில் இருந்து நீக்கியதை பொறுக்காமல் வைகோவின் மீது பற்றுகொண்ட திமுக தொண்டர்கள் ஐந்து பேர் தீக்குளித்து உயிரை துறந்தனர்.
1994 ம் ஆண்டு மறுமலர்ச்சி திமுக என்ற புதிய அரசியல் இயக்கத்தை வைகோ வும் அவரின் ஆதரவளர்களும் தொடங்கினார். கட்சி தொடங்கிய போது தனது சொத்து விவரங்களை வெளியிட்டார் வைகோ.1ஜூலை 27-ம் நாள், மூன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்னை வரை நடைபயணம் மேற் கொண்டார் , ஒட்டுமொத்தமாக அந்தப் பயணத்தில் மட்டும், 1,600 கிலோ மீட்டர்கள் கடந்து வந்தார்.
1995 ம் ஆண்டு திருச்சி மண்டல மாநாட்டில் தனி ஈழம் தான் தீர்வு என தீர்மா னம் நிறைவேற்றினார்.இந்த காலகட்டத்திலே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட் டம் தீவிரம் அடைந்தது.
1996 ம் ஆண்டு பொது தேர்த்தலில் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் நின்று தோற்றுபோனார் வைகோ.
1997 ம் ஆண்டு ஸ்டெர்லைட் எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்.
1998 ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு எந்த சிவகாசி தொகுதியில் தோற்றரோ அதை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார். ஐ.நா மனித உரிமை அமைப்பில் புகார் செய்து செம்மணி படுகொலை களை வெளி கொண்டுவந்தார்.சேது சமுத்திர திட்டத்தை பிரதமரை அறிவிக்க வைத்தார்.
1999 ம் ஆண்டு மீண்டும் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார். இந்த முறை மத்திய அமைச்சராக வந்த வாய்ப்புகளை மறுத்து தனது சகாக்களுக்கு பெற்று தந்தார்.இந்திய தலைவர்களை அழைத்து வந்து மாநில சுயாட்சி மாநாடு நடத்தினார்.கன்னியாகுமரி காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி வாங்கி தந்தார்.
2000 ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நதிகளை இணைக்க வேண்டும் என்று தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்.ஐ.நா வில் நூற்றாண்டு சிறப்பு கூடட்டத்தில் இந்திய பிரதிகளோடு வைகோ பங்கேற்றார்.
2001 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து களம் கண்டு மீண்டும் தோல்வி.
2002 ம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மையாக இருந்தது போது , இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் பிரதமருடன் பேசி
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் காப்பாற்றினார்.விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்கு பொடா சட்டத்தில் கைது.
2003 ம் ஆண்டு பொடா சிறை கைதியாக இருந்து கொண்டே வெற்றி கரமாக கட்சியை வழி நடத்தினார். காவேரி பிரச்சனைக்கு சிறைக்குள்ளே கைதிகளை ஓன்று திரட்டி உண்ணாவிரதம் இருந்தார்.
2004 ம் ஆண்டு 19 மாத கால சிறை வாழ்க்கை கடந்து விடுதலை ஆனார் வைகோ.ஆகஸ்ட் 5-ம் நாள் திருநெல்வேலியில், தாமிரபரணியில் நீராடி விட்டு, மறுமலர்ச்சி நடைப்பயணத்தைத் தொடங்கி சென்னைக்கு, 42 நாள் களில் 1,200 கிலோ மீட்டர்கள் நடந்து வந்தார்.சேது சமுத்திர திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறைந்த பட்ச செயல் திட்டத்தில் இணைத்தார்.
2005 ம் ஆண்டு ஈழத்திற்கு எதிராக காங்கிரெஸ் செய்த ஒவ்வொரு உதவி களை யும் எதிர்க்க துவங்கினார்.
2006 ம் ஆண்டு பணம் வாங்கி கொண்டு கூட்டணி வைத்தார் என்ற பழி சொல் லுக்கு ஆளானார்.முல்லை பெரியாறு அணை போராட்ட களத்தை தொடங் கினார்.
2007 ம் ஆண்டு நதி நீர் பிரச்சனைகளுக்கு களம் அமைத்து போராடினார்.
2008 ம் ஆண்டு ஈழம் போரின் கொடூரத்தை , போர் நிறுத்தம் வேண்டியும் பல களங்கள் அமைத்து போராடினார் , பல முறை கைதும் ஆனார்.ஒபாமாவை சந்தித்தார்.நார்வே தலைநகர் ஆஸ்லோவில் தெற்காசிய அமைதி கருத்தரங் களில் பங்கேற்றார்.
2009 ம் ஆண்டு ஈழ போர் உச்சத்தில் இருந்து போது பல போராட்டங்களை முன் னெடுத்தார். இதே ஆண்டில் நடந்த பொது தேர்தலில் விருதுநகர் தொகுதி யில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
2010 ம் ஆண்டு புலிகளை தடையை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வாதிட்டார். இது வரை பல ஆண்டுகள் நடந்து வந்த ஸ்டெர்லைட் வழக்கில் ஆலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மீண்டும் உச்ச நீதிமன்ற சென்ற வழக்கிலும் தொடர்ந்து போராடுகிறார் வைகோ.
2011 ம் ஆண்டு , தேர்தல் புறக்கணிப்பு, கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம், ஸ்டெர்லைட் வழக்கு , முல்லை பெரியாருக்கு லட்சக்கணக்கான மக்களை திரட்டி முற்றுகை ... ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று முதன் முதலில் பெல்ஜியத்தில் முன் வைத்தவர் வைகோ.
2012 ம் ஆண்டு , ஸ்டெர்லைட் வழக்கு , சங்கரன்கோவில் இடைத்தேர்தல் , சாஞ்சி போராட்டம் என முத்திரை பதித்தார் வைகோ
2013 ம் ஆண்டு தமிழக வாழ்வாதார போராட்டங்களும் ,ஈழத் தமிழர் விடியலுக் கான போரட்டங்களும் நாளும் தொடர்கிறது.
ஒவ்வொரு வருடத்தின் போரட்ட களங்களையும் , அரசியல் பயணங்களை யும் சில பக்கங்களில் அடைக்கிவிட முடியாது.அவரின் நாடாளுமன்ற உரை கள் நமது தளத்தில் உள்ளது படித்து தெரிந்து கொள்ளலாம்.
இதில் இருந்து ஓன்று தெரிகிறது , வெற்றிகளும் தோல்வியும் சேர்ந்தே பயணித்து வருபவர் வைகோ என்று.
முடியாது என்ற காரியத்தில் முடியும் என்று நம்பிக்கையோடு போராடும் களத் தில் முன் வரிசை போராளியாக இருக்கிறார் வைகோ.
இதுவரை அவரின் அரசியல் வாழ்க்கையில் புகழ்ச்சிகள் குறைவு , இகழ்ச்சிகள் அதிகம். வெற்றிகள் குறைவு , தோல்விகள் அதிகம் , பதவிகள் குறைவு , போரட்டங்கள் அதிகம்.
இதுவரை அவரை சோதித்த தமிழகம் இனி எந்த அளவில் அவரை பயன்படுத்த போகிறது ?
அவரின் வாகனம் 40 ஆண்டுகளுக்கு மேலாக 85 லட்சம் கிலோமீட்டர்களை தாண்டி பயணிக்கிறது.
5000 கிலோ மீட்டர்களுக்கு மேல் நடைபயணம்...
2500 கிலோ மீட்டர்களுக்கு மேல் மிதிவண்டி பயணம்... என தினமும் அரசியல் களத்தில் பம்பரம் போல சுழன்று வருபவர் வைகோ.
இன்னொரு செய்தியையும் உங்களுக்கு பதிவு செய்கிறேன் ...............அதே 2003 ஆம் ஆண்டில் "பொடாவில்" இருந்தபோது, தி ஹிந்து நாளிதழ் மீது ஜெயலலிதா அரசால் அவதூறு வழக்கு போடப்பட்டு, அந்த நாளிதளின் சென்னை அலுவலகத்திற்குள் காவல் துறை புகுந்து கண்மூடித்தனமாக நடந்து கொண்டது....... அதற்க்கு கடுமையான கண்டனம் அணைத்து தரப்பு மக்களிடம் இருந்து வந்தது..............போராட்டங்கள் நடைபெற்றது........ ஆனால், வைகோவும் அவருடன் சிறைபட்ட மதிமுக தோழர்களும், அந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை , கோர்ட்டில் ஆஜர் படுத்தும் போது "கருப்பு சட்டை" அணிந்து "தடா" கோர்ட் வாசலில் கோசங்கள் எழுப்பி போராடினர்.............. இது குறித்து தோழர்கள், நம்மை மீண்டும் சிறைக்கு கொண்டுபோய் விடுவார்களே........ இது மக்கள் மத்தியில் எப்படிபோய் சேரும் என்றபோது.............. வைகோ பொறுத்திருங்கள் என்றார்.......... அன்றைய மாலைபொழுதில்.......... "ஆல் இந்தியா ரேடியோவில்" செய்திகளில் இதை வாசித்தார்கள்............. சிறையில் வைகோவுக்கு ரேடியோ கேட்க அனுமதி உண்டு.............. அதை கேட்டு வைகோவும் தோழர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள்........... இது வைகோவே பின்பு நடைபெற்ற பொதுகுழுவில் கூறியது...... இதை ஏன் பதிவு செய்கிறேன் என்றால்.............. "எக்காலத்திலும் என்ன நிலையிலும் அநியாயத்தை எதிர்த்து போரிடும் கட்சி மதிமுக மட்டுமே"..............
ReplyDelete