Tuesday, September 24, 2013

திராவிட இயக்கத்தின் வேர் ஊன்றிப் பதிந்த விருதுநகர்!

விருதுநகர் மாநாட்டு நிறைவுப் பேருரையின் தொடக்கத்தில் #வைகோ

87 ஆண்டுகளுக்கு முன்னால் ‘விருதுபட்டி’ என்று அழைக்கப்பட்ட இந்தத் திரு நகரில் டபிள்யு.பி.ஏ. செளந்தர பாண்டியனார் அவர்களுக்கும், தமிழவேள் பி.டி. இராசன் அவர்களுக்கும் 1926 டிசம்பர் 27 இல், ஏ. இராமசாமி முதலியார் தலை மையில், இந்த மண்ணைச் சேர்ந்த பெருமக்கள் நடத்திய விருது வழங்குகின்ற நிகழ்ச்சியில் பங்கு ஏற்றார், வைக்கத்து வீரர் ஈ.வெ.ரா. என்று அழைக்கப்பட்ட பெரியார். அதில், பனகல் அரசர், குமாரசாமி ரெட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, செந்திக்குமார நாடார், வி.வி.சண்முக நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதற்கு அடுத்த ஆண்டில், 1926 பிப்ரவரி 26 இல்,வி.வி.இராமசாமி நாடார் நடத் திய ஜஸ்டிஸ் தினக் கொண்டாட்டம்.அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து, 1929 பிப்ரவரி 17,18 இல்,செங்கல்பட்டில், சுயமரியாதை இயக்கத்தின் முதலாவது மாகாண சுயமரியாதை மாநாடு. 1930 இல், மே 10,11 ஆகிய நாள்களில்,ஈரோட் டில் இரண்டாவது மாகாண மாநாடு; 1931 ஆகஸ்ட் 8,9 ஆகிய நாள்களில்,விருது நகரில் சுயமரியாதை இயக்கத்தின் மூன்றாவது மாகாண மாநாடு, ஆர்.கே.சண் முகம் செட்டியார் தலைமையில் நடைபெற்றது. வி.வி.இராமசாமி நாடார்
வரவேற்றார்.

அந்த மாநாட்டில், தந்தை பெரியார், திருமதி நாகம்மாள், செளந்தரபாண்டிய னார், ராவ் சாகேப் செந்தில்குமார் நாடார்,அஞ்சா நெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரிசாமி, பாவேந்தர் பாரதிதாசன், மூவலூர் மூதாட்டி இராமாமிர்தத்து அம் மையார்,பொன்னம்பலனார், தோழர் ஜீவா, முத்துசாமி வல்லத்தரசு ஆகியோர் பங்கு ஏற்றனர்.

1935 அக்டோபர் 13 இல், ஜஸ்டிஸ் கட்சியின் தொண்டர்கள் மாநாடு நடைபெற் றது. திறப்பாளர், செளந்தரபாண்டியனார்.

1938 தாளமுத்து நடராசனை களபலி ஆக்கிய போர்க்களம். டிசம்பர் 6 சென்னை நீதிமன்றத்தில் கூண்டில் நிற்கிறார் ஈரோட்டுச் சிங்கம். நீதிபதியைப் பார்த்துச் சொல்லுகிறார்:

‘நேரத்தை வீணாக்காதீர்கள்; உங்களுக்கு எவ்வளவு உயர்ந்தபட்ச தண்டனை வழங்குகின்ற அதிகாரம் இருக்கின்றதோ, மந்திரிமார்களைத் திருப்தி செய்வ தற்காக அந்தத் தண்டனையைக் கொடுத்து,சிறைச்சாலையில் எவ்வளவு கீழா ன வகுப்பு இருக்கிறதோ அதை எனக்குத் தாருங்கள்’ என்றார்.

சிறைவாசம் அறிவிக்கப்பட்டது. ‘மூன்று வருடம் மூன்று வருடம்’ என்று உற் சாகமாகக் கூறிக்கொண்டே நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார் அவர். அந்த நாள், 1938 டிசம்பர் 6. அதில் இருந்து 12 ஆவது நாள், டிசம்பர் 18 ஆம் தேதி,
தமிழ்நாட்டிலேயே இந்த விருதுநகரில் தான், அவர் சிறையில் அடைபட்டுக் கிடந்ததால், இந்த விருதுநகர் வீதிகளில், யானை மீது அம்பாரி வைத்து, அதில் பெரியார் படத்தை வைத்து, முன்னால் ராவ் சாகிப் செந்தில்குமார் நாடார் மக் களைத் திரட்டிச் சென்றார். அந்நிகழ்ச்சியின் முடிவில், அவரே புலி, வில், கயல்
கொடியை ஏற்றினார்.


1939 பிப்ரவரி. சிறையில் பெரியாருக்கு உடல் நலம் இல்லை என்ற செய்தி, தமி ழர்களை, சுயமரியாதை இயக்கத்தினரைப் பதற வைத்த வேளையில், இந்த விருதுநகரில் இருந்து அரசாங்கத்துக்கு ஒரு அவசரத் தந்தி. அதில், ‘சிறையில்
இருக்கின்ற பெரியாருக்கு தேக சுகம் சீர்கெட்டு வருவதாக நாங்கள் கேள்விப் படுகிறோம். அவரது உடல் நலனுக்கு ஏதேனும் ஆபத்து நேருமானால், தமிழ கத்தின் பொது அமைதி, சமூக ஒற்றுமை, அடியோடு சீர்குலைந்து போகும் என எச்சரிக்கிறோம்’ என அதே செந்தில்குமார் நாடார், சண்முக நாடார், பெ.சி.சிதம் பர நாடார், 1939 பிப்ரவரி 9 ஆம் தேதி தந்தி அனுப்பினர். மே 22 ஆம் நாள் பெரி யார் விடுதலை செய்யப்பட்டார்.

அந்தப் பெரியாரை, 1939 ஆகஸ்ட் 13 இல் இந்த விருதுபட்டிக்கு அழைத்துக் கொண்டு வந்து, விருது வழங்கி, பணமுடிப்புத் தந்தனர்.

1940 அக்டோபர் 13 இல் பேரறிஞர் அண்ணா, விருதுநகரில் நாடார் உயர்நிலைப் பள்ளியில்,நான்கு மணிக்கு ஆங்கிலத்தில் உரை ஆற்றிவிட்டு,மாலை 6மணிக் கு, மாரியம்மன் கோவில் திடலில் தென்னிந்திய நல உரிமைச் சங்க விழா
பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

1940 டிசம்பர் 18. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் எதிர்காலத்தைத் தீர்மா னிக்கின்ற கூட்டம். இங்கு பெரியாரும், அண்ணாவும், முதன்முதலாக அதே மாரியம்மன்கோவில் திடலில், 1940 ஆம் ஆண்டில் பேசுகிறார்கள்.

1943 ஆகஸ்ட் திங்கள் 8 ஆம் நாள், இந்த விருதுநகரில் இருந்து ஒரு இளைஞன், திராவிட நாட்டுக்கு அறிக்கை எழுதி அனுப்புகிறார். ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு புதிய அமைப்பு தேவை.’ என்று. அந்த வாலிபர்தான், 1944 ஜூன் 11 ஆம் தேதி,
விருதுநகரில் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் மாணவர் மா நாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் ஆகிறார்.அவர்தான் ஏ.வி.பி. ஆசைத் தம்பி.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன், பேரா சிரியர் அன்பழகன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி கலந்து கொண்ட அந்த மாநாட்டில், மதியழகன் கொடி ஏற்றி வைக்கிறார்.

1944 ஆகஸ்ட் 27,28 ஆகிய நாள்களில், சேலத்தில், ‘திராவிடர் கழகம்’ உதயமாகி விட்டது. அப்படி ஒரு அமைப்பு தேவை என்று அறிக்கை தந்த ஆசைத்தம்பி அழைக்கிறார். ‘விருதைவாசிகளே, விழிமின், செயலாற்ற எழுமின்’ என்று செப் டெம்பர் 29 ஆம் தேதி அறிக்கை தருகிறார்.

இப்படியெல்லாம், திராவிட இயக்கம் என்ற விருட்சத்தின் வேர் ஆழமாக ஊன் றிப் பதிந்து இருக்கின்ற இந்த விருதுநகரில்தான்,இன்றைக்கு மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு நடைபெறுகிறது.

(விருதுநகர் மாநாட்டு நிறைவுப் பேருரையின் தொடக்கத்தில் வைகோ)

No comments:

Post a Comment