Monday, September 16, 2013

மணிமேகலையா சோனியா காந்தி?

மணிமேகலையா சோனியாகாந்தி?காங்கிரஸ் அரசைத்தூக்கி எறிவோம்!
தென்சென்னை மாவட்ட நிதி அளிப்புக் கூட்டத்தில் #வைகோ

தென்சென்னை மாவட்டக்கழகத்தின் சார்பில் 5.9.2013 அன்று சைதாப்பேட்டை யில் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதியினைப் பெற்றுக் கொண்டு, பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற் றிய உரையில் இருந்து....

இனி இழப்பதற்கு எதுவும் இல்லை; காணப் போவது பொன் உலகம் என்ற நிறைந்த நம்பிக்கையோடு, இருபதாவது ஆண்டில் தனது அரசியல் பயணத் தை நடத்திக் கொண்டு இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின், தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி வழங்குதல், செப்டெம்பர் 15 இல் நடை பெற இருக்கின்ற விருதுநகர் மாநாட்டுக்கு, தலைநகர் சென்னையில் நுழைவா யில் அமைக்கின்ற இலக்கோடு நடைபெறுகின்ற, தென்சென்னை மாவட்ட நிதி அளிப்பு விழா மாபெரும் பொதுக் கூட்டத்தில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
எண்ணியதை எண்ணியாங்கு செய்து முடிக்கின்ற செயல் மாமணியாகத் திகழ் கின்ற, தமிழகத்திலேயே அதிக நிதியை வழங்கியது தென்சென்னை மாவட்டம் என்கின்ற சாதனையை இம்முறையும் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்ற ஆற்றலாளர், தென் சென்னை மாவட்டச் செயலாளர் , ஆருயிர்ச் சகோதரர் வேளச்சேரி மணிமாறன் அவர்கள் தலைமையில் இப்பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. மாணவப் பருவந்தொட்டு அண்ணாவின் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு,இந்த இயக்கத்தில் என்னோடு இணைந்து பணி ஆற்றி
வருகின்ற, குறுகிய காலத்தில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருக்கின்ற அருமைத்தம்பி சைதை ப.சுப்பிரமணி அவர்களே, அதிக நிதியை வழங்கி இருக் கின்ற ரெட்சன் அம்பிகாபதி உள்ளிட்ட பகுதிச் செயலாளர்களே, தலைமைக் கழகச் செயலாளர்களே, கழக முன்னோடிகளே வணக்கம்.

28 மாதங்களுக்குப் பிறகு, இந்த சைதை தேரடித் திடலில் நான் பேசுகிறேன்.2011 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் போட்டி இடுவது இல்லை என்று எடுத்த முடிவினை மக்கள் இடையே விளக்குவதற்காக, மாவட்டச் செயலாளர் மணி மாறன் முன்னின்று ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில்,இதே இடத்தில் உரை ஆற்றினேன்.

நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம்


அடுத்த பத்தாவது நாள்,செப்டெம்பர் 15 ஆம் நாள்,பெருந்தகை காமராசர் பிறந்த
விருதுநகரில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மாநாடு. பேரறிஞர் அண்ணா பிறந் த நாள் விழா மாநாடு.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எவரும் வீழ்த்த முடியாது என்பதற்கு அடையாளமாகத்தான் இங்கே பெருந்திரளான கூட்டம். இந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற வழியில், இளைஞர்கள் தமிழர்களின் வீர
விளையாட்டுகளை நிகழ்த்திக் காண்பித்தார்கள்; புரவிகளில் அணிவகுத்து அழைத்து வந்தார்கள்.நாதஸ்வர இசை முழங்க, வேட்டுச் சத்தம் ஒரு பரபரப் பை ஏற்படுத்த, வாண வெடிகள் பூக்களாகச் சிதற, கோலாகலமாக என்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் அவர்களும், சுப்பிரமணி அவர் களும் அழைத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள். நம்பிக்கையோடு சொல்லு
கிறேன்; வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இதைவிடப் பெரிய
கோலாகலமான வரவேற்போடு ஒரு நிகழ்ச்சியையும் நீங்கள்தான் நடத்தப்
போகிறீர்கள்.

நெருப்பிலே வாட்டப்பட்ட ஈட்டியின் முனை கூர்மையாக இருப்பதைப்போல,
மறுமலர்ச்சி திமு கழகம் கூர் தீட்டப்பட்டு இருக்கின்றது.தேர்தல் களத்தில் மிக வும் கவனமாக அடி எடுத்து வைப்போம். எங்களை அழிக்க நினைப்பவர்கள், நம்ப வைத்துக் கழுத்தை அறுத்தவர்கள் எப்படிக் காய்களை நகர்த்துகின்றார் களோ,அதைப் பொறுத்து எங்கள் காய்களை நகர்த்துவோம். கடந்த காலங் களில் பெற்ற பட்டறிவு எங்களுக்குத் துணை நிற்கும். கடந்த தேர்தலைப்புறக் கணித்தபோதும், தமிழக அரசியலில் நாங்கள் நிராகரிக்கப்படவில்லை. அதற் குப் பிறகுதான், இந்த இயக்கம் மக்கள் இடையே புதிய நம்பிக்கையைப் பெற்று வளர்ந்து இருக்கின்றது. ஒருநாள் கூட ஓய்வு கொள்ளாமல் களத்தில் இறங்கிப் பணி ஆற்றிக் கொண்டு இருக்கின்றோம்.நாங்கள் நேர்மையானவர்கள். எங்கள் கைகள் கறை படியாதவை. இந்தத் தகுதியை வைத்துக் கொண்டு மக்களிடம்
விண்ணப்பம் போடுகிறோம்.அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம். எந்த இடத்தில் இருந்தாலும் தொடர்ந்து பாடுபடுவோம்.

நாடு முழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை


இன்றைக்குத் தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியா முழுமையும் ஒரு மாற்றம் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

நாடாளுமன்றத் தேர்தலில் நமது இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?தமிழகத் தை வஞ்சித்து வருகிற, தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் செய்கிற, தமிழ் ஈழத்தின் விடியல் கனவுகளைத் தகர்த்து, சிங்களவனுக்கு உதவிக் கொண்டு இருக்கின்ற,காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தூக்கி எறிய வேண்டும்.

விலைவாசி ஏறி விட்டது; இந்தியப் பொருளாதாரம் நொறுங்கி விட்டது.இமயத் திருமுடி முதல்,குமரித் திருவடி வரை,மக்களின் கோபாவேச அலை வீசுகிறது. காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசுகிறது.வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும்.நமது உடனடி இலக்கு இதுதான். அடுத்த இலக்கைப் பிறகு பார்ப்போம்.

மதுவின் பிடியிலும், இலவசங்களின் பிடியிலும் தமிழகம் பாழாகிக் கொண்டு
இருக்கின்றது.இந்த நிலைமைகளை விளக்கி,தமிழகம் முழுவதும் மூன்று பிரச் சார நடைப்பயணங்களை மேற்கொண்டோம். கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்துவிட்டுத்தான், இந்தத் தேரடித் திடலில் நிற்கிறேன்.

இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என் பது, 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு, இன்று வரையிலும் ஏற்படாத பெரும் சரிவு.இந்திய ரூபாயின் மதிப்பு தரைமட்டமாகி விட்டது. ஆழிப்பேரலை போல, கரன்சி சுனாமி அடிக்கிறது.

அவருக்கே உரிய கலைநயத்தோடு,இங்கே ஒரு மரப்பேழையைத் தயார் செய் து,அதில் கரன்சி நோட்டுகளை கட்டுக் கட்டாக அடுக்கி வைத்து இங்கே தந்தார் வேளச்சேரி மணிமாறன்.காங்கிரஸ் அரசு போகிறபோக்கைப் பார்த்தால், இனி பணத்தை மூட்டை கட்டிக்கொண்டுதான் கடைத் தெருவுக்குப் போக முடியும்.

ஜிம்பாப்வே நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற கொடூரமான பொருளாதார நெருக் கடியைப் போல, காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள் கைகளால்,ரூபாயின் மதிப்பு அடியோடு வீழ்ந்து விட்டது. பன்னாட்டு நிறுவ னங்களுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். வரலாறு கா ணாத ஊழல்களால், இனி காங்கிரஸ் நீடிக்கக் கூடாது என்ற எண்ணத்திற்கு மக்கள் வந்து விட்டார்கள்.


மணிமேகலையா சோனியா காந்தி?


ஈழத்தமிழர்கள் பிரச்சினையில்,தமிழகத்தில் மாணவர்கள் வீதிக்கு வந்து விட் டார்கள். எனவேதான், அவர்களோடு ஒண்டிக் கொண்டு இருந்த தி.மு.க. அந்த
அரசை விட்டு வெளியே வந்தது.அறிவாலயத்திலும், சத்தியமூர்த்தி பவனிலும் வேட்டுச் சத்தம் கேட்டது.இனிப்புகள் வழங்கப்பட்டன. அடுத்த சில மாதங்களி லேயே, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, தில்லி ஜன்பத் சாலை 10 ஆம் எண் வீட்டு முன்பு தவம் கிடக் கிறார். ஆதரவு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? என்று வியாக்கியானம் தருகிறார்.

அது மட்டும் அல்ல;காவியங்களைத் தீட்டியவர்,புறநானூறுக்கு விளக்கம் தந்த மதிப்புக்குரிய தி.மு.க. தலைவர், காங்கிரஸ் தலைவியைப் பார்த்து மணிமேக லை என்று வருணிக்கிறார். அந்த மணிமேகலை மாதவியோடு துறவறம் பூண் டாள். அறநெறிகளைப் பின் பற்றி நின்றாள். அட்சய பாத்திரம் எனும் அமுத சுரபியை ஏந்தி வந்து,பசித்த வயிறுகளுக்கெல்லாம் உணவு வழங்கினாள். உல கத்தின் எந்த இலக்கியத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரத்தைப்படைத்து இருக்க
முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டு களாகத் தமிழர்களுக்குப் புகழ் தேடித்
தருகின்ற மணிமேகலை.

இந்த இனத்திற்கு ஏத்தனையோ துரோகங்களைச் செய்தார்; அதையெல்லாம் விடக் கொடுமை,யாருக்கு யாரை ஒப்புமை காட்டு கிறீர்கள்? சோனியா காந்தி
மணிமேகலையா? திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் யோசிக்க வேண் டும்.ஒரு இயக்கத்தின் கொள்கை,இலட்சியங்கள் அனைத்தையுமே பாழாக்கி விடுவதா?

ஈழத்தில் எத்தனை இலட்சம் தமிழர்கள் பசியால் செத்தார்கள்? குழந்தைகள் பட் டினியால் துடிதுடித்துச் செத்தார்களே? மார்சுகி தாருஸ்மன் தலைமையில் பான் கி மூன் அமைத்த குழுவின் அறிக்கையைப் படித்தால் ரத்தக் கண்ணீர் வருமே? தண்ணீர் கிடைக்காமல் நா வறண்டு செத்தார்கள். கொத்துக் கொத்தா கக் கொன்று குவித்தார்கள் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றார்களே?

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக்கூடாது


இந்தப் படுகொலைகளுக்கெல்லாம் காரணமாக ஆயுதங்களை அள்ளிக்கொ டுத்து,விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில், தமிழ் இனத்தையே கரு அறுத்த கொடூரத்தைச் செய்தவர்களையா இப்படிப் பாராட்டுவது? எண் ணிப் பார்க்க வேண்டாமா? இத்தனைக்குப் பிறகும், அந்தக் கொலைகாரனுக்கு முடிசூட்டு வதற்காக, அங்கே காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு முனைந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்களே?

கொலைகாரன் ராஜபக்சேயை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும் என்று நாம் கேட்கிறோம்.இந்த நிலையில், அங்கே காமன்வெல்த் மாநாடு நடந்தால், அதற்குப்பிறகு,நீதி நிரந்தரமாகக் குழிதோண்டிப்புதைக்கப் பட்டு விடும். இதற்கு இந்தியாதான் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றது.

அந்த மாநாடு அங்கே நடக்கக்கூடாது என்பது மட்டும் அல்ல, காமன்வெல்த்
அமைப்பில் இருந்தே இலங்கை நீக்கப்பட வேண்டும். இந்த மாநாட்டுக்கு ஏற் பாடு செய்து விட்டு, ஒருவேளை இந்தியா பங்கு ஏற்காமல் போனாலும் நீதி
கிடைத்து விடாது. மாநாடு நடந்தால்,அவர்களது நோக்கம் நிறைவேறி விடும்.
பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராஜபக்சேதான் அந்த அமைப்புக்குத்
தலைவராக இருப்பான்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு, பிரதமர் மன்மோ கன்சிங் அங்கே போகாமல் கூட இருக்கலாம். கவனமாக இருக்க வேண்டும் தமிழக மக்கள். மான உணர்ச்சி அற்றுப்போய் விட்டதா தமிழகத்திலே? நாம் பாதுகாக்கா விட்டால், பிறகு வேறு யார் அவர்களைப் பாதுகாப்பார்கள்?

விருதுநகர் மாநாட்டுக்கு வாருங்கள்

இங்கே அருமைத் தம்பி சுப்பிரமணி அவர்கள் சொன்னார்கள், நான் இருபது
ஆண்டுகளாக உங்களோடு வருவதற்குப் பல காரணங்கள் உண்டு.பச்சையப் பன் கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்தார். பரங்கிமலை கண்டோன் மெண்ட் தேர்தலில் கலவரம் வந்து விட்டது. சண்முகம் வீட்டைச் சுற்றிலும் தாக்குதல் நடக்கிறது. அந்தச் சூழலில்,இன்றைக்கு முன்னணியில் இருக்கின்ற பல தலைவர்கள் காரில் ஏறிப் பறந்து போய்விட்டார்கள்.

ஆனால், தி.மு.க. தொண்டன் அடிபடக் கூடாது என்று அங்கே நான் களத்தில்
இருந்தேன். வருவது வரட்டும், அதைச் சந்திப்போம் என்ற உறுதியோடு நின் றேன். அந்த நிகழ்ச்சியை இங்கே சொன்னார். அப்போது ஒரு மாணவனாக
நான் அருகில் இருந்து பார்த்தேன்.அன்று முதல் உங்களை என் இதயத்தில்
ஏற்றுக்கொண்டு வருகிறேன் என்றார்.அப்படிப்பட்ட தொண்டர்களால் உரு வாக்கப்பட்டது இந்தக் கட்சி. எந்த இயக்கமாக இருந்தாலும் சரி, தொண்டர்
களை வஞ்சிக்கக் கூடாது, அவர்களது உழைப்பைச் சுயநலத்துக்காகச் சுரண் டக்கூடாது.

மக்கள் நம்மை ஏற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். நம்மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்து இருக்கின்றது.எதிர்காலம் நம்பிக்கை ஊட்டுவதாக அமை யும். நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய அணுகுமுறை எப்படி இருக்க
வேண்டும் என்பதை, விருதுநகர் மாநாட்டிலே விவாதிப்போம். அலைகடலெ னத் திரண்டு வாருங்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment