Thursday, September 19, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 18

நாள்:- 16.07.2007

இலங்கையுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தமா?

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு
மிகப்பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்ற பிரச்சினையைத்
தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.


இந்தியக் கடற்படையும்,இலங்கைக் கடற்படையும் தகவல் பரிமாற்றத்திற்குத்
தொலைத்தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்புச் செயல்பாடுகளை மேற் கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும், கடந்த 2007 ஜூலை 13 ஆம் தேதி யன்று இலங்கைக் கடற்படைக் கப்பலில் நடைபெற்ற இந்திய இல ங்கைக் கடற்படை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் அந்த முடிவு மேற்கொள்ளப்பட்ட தாகவும் வந்து உள்ள செய்தி, பேரதிர்ச்சி அளிக்கிறது.

சிங்கள இனவாத அரசு விரித்த சதிவலையில், இந்திய அரசு தெரிந்து கொண் டே சிக்கி உள்ளது என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறேன்.இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கரு அறுக்க, சிங்கள இனவாத அரசு, கடந்த பல ஆண்டுகளாக ஏவிவிட்ட கொடூரமான இனப் படுகொலைக்கு, தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டு உள்ளனர். கண்ணியத் தோடும், மரியாதை யோடும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் தமிழர்களுக்குமறுக்கப்பட்ட தால், அவர்கள் அறவழியில் நடத்திய போராட்டங்கள் அனைத்திலும், காவல்துறை யாலும், இராணுவத்தாலும் நடத்தப்பட்ட மிருகத்தனமான அடக்குமுறைகளை யே சந்திக்க நேர்ந்தது.

அதன் விளைவாக, உலகின் பல நாடுகளின் வரலாற்றில் எழுதப்பட்டு உள்ள
நிலைமையைப் போலவே, ஈழத்தமிழ் இனத்தின் இளைய தலைமுறை ஆயுதப் போராட்டத்தை கையில் ஏந்தும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது.அந்தத் தீவில் வடக்கு, கிழக்கில் வாழும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களும், மற்ற பகுதி களில் வாழும் இந்திய வழித்தோன்றல் தமிழர்களும்,தமிழ் நாட்டில் உள்ள தமி ழர்களோடு தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் ஆவர்.

1987 ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - இலங்கை
ஒப்பந்தமும்,அதைத்தொடர்ந்து இந்திய இராணுவம் (IPKF) சிங்கள அரசின் ஏவு தல் படையாக நடத்திய வன்முறைத் தாக்குதலில், ஏதும் அறியாத அப்பாவித் தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டதும், ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு இழைத்த நியாயப்படுத்த முடியாத, தவறான நடவடிக்கைகள் ஆகும்.

2004 இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த உடன், சிங்கள அரசு இந்தியாவோடு இராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன்மூலம் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில், இலங் கை அரசுக்கு இந்தியா உதவும் நிலையை உருவாக்க, வஞ்சகமாக அனைத்து முயற்சிகளையும் செய்தது.

அதனால் ஏற்படும் அதிர்ச்சிதரத்தக்க விளைவுகளைச் சுட்டிக்காட்டி, தங்களை நேரில் சந்தித்து, அவ்வாறு செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் தமிழர் களுக்கு எதிரான, பெருங்கேடான, மன்னிக்க முடியாத பெருந்தவறாகமுடியும்; எனவே, அத்தகைய இராணுவ ஒப்பந்தத்தை இந்தியா செய்யக்கூடாது என்று நான் கூறி யபோது, பிரச்சினையின் கடுமையைக் கவனத்தோடு புரிந்து கொண்டு, ‘இந்தி யா இலங்கையோடு அத்தகைய இராணுவ ஒப்பந்தத்தைச் செய்யாது’ என்று நீங்கள் வாக்குறுதி தந்தீர்கள்.

இருநாடுகளுக்கு இடையிலே செய்து கொள்ளப்படுவதாக இருந்த இந்திய இலங்கை இராணுவக் கூட்டு ஒப்பந்தம் திட்டமிட்டப்படி கையெழுத்து ஆக வில்லை. ஆனால், பிரச்சினை அதோடு நிற்கவில்லை. இலங்கை அரசு தனது தந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்திய அரசைச் சரிக்கட்டி, ஈழத்தமிழர் களின் பிரதிநிதிகளாகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிங்கள அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்குத் திரைமறைவில் பலவகையிலும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது.

தமிழர் பகுதிகளில் விமானங்கள் மூலம் குண்டு வீசி அழிக்கும் இலங்கை
விமானப் படைக்கு உதவும் வகையில், இந்தியா ராடார் கருவிகளைத் தந்தது.
நான் இதைத் தங்களிடம் சுட்டிக்காட்டியபோது, ‘தமிழர்களுக்கு எதிராகப் பயன் படுத்தப்படுமானால் ராடார் கருவிகளை இந்தியா திரும்பப் பெற்றுக் கொள் ளும்’ என்று உறுதி அளித்தீர்கள்.

ஆனால், நடந்தது என்ன?

ராடார்களைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, மேலும் ராடார் கருவிகளை
இந்தியா இலங்கைக்குத் தந்து உள்ளது. 1998ஆம் ஆண்டில், அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட் சிக் கூட்டத்தில், ‘எந்தநிலையிலும் இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ அடிப்படையில் எவ்விதமான உதவியும் செய்யாது என்றும்,இராணுவத் தள வாடங்களை விற்பதும் இல்லை’ என்றும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அந்த முடிவைக் காற்றில் பறக்கவிட்டு,தற்போது இந்திய அரசு இலங் கையில் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடக்கும் போரில், சிங்க ளப் படைகளுக்கு ஆயுதங்களைத் தந்துகொண்டு இருக்கிறது என்று வேதனை யுடன் குற்றம் சாட்டுகிறேன்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட்14 இல் இலங்கைத்தீவில் செஞ்சோலை என்ற இடத் தில்,ஆதரவு அற்ற குழந்தைகள் காப்பகத்தின்மீது சிங்கள விமானங்கள் குண்டு வீசியதில், 61 தமிழ் பெண் குழந்தைகள் துடிக்கத்துடிக்கக் கோரமாகக் கொல்லப் பட்டதும், 170 சிறுமிகள் மரணகாயமுற்றதும் உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கியது.

இந்தக் கொடூரமான கொலையை ஐ.நா. மன்ற அமைப்பும், ஐரோப்பிய நாடு களின் கண்காணிப்புக் குழுவும் உலகத்துக்குச் சொல்லி, சிங்கள அரசின் முகத் திரையைக் கிழித்தது. ஆனால், இந்தக் கோரக் கொலைக் குற்றத்தை இந்திய அரசு கண்டிக்கும் கடமையில் தவறியது.

அதைப்போலவே, 2006 ஆகஸ்ட் 8 ஆம் நாள் அன்று, சுனாமி மறுவாழ்வு முகா மில் ஊழியம் செய்த 17 தமிழ்இளைஞர்களை, சிங்கள இராணுவம் கொடூரமா கச் சுட்டுக் கொன்ற அக்கிரமத்தையும் இந்திய அரசு கண்டிக்கத் தவறியது.

தமிழ் மக்களின் உள்ளத்தில் இதனால் ஏற்பட்ட காயங்களில் மேலும்நெருப்பை அள்ளிப் போடுவதுபோல், இலங்கையில் யாழ்ப்பாணத்தில் துயரத்தில் பரித விக்கும் தமிழ் மக்களுக்குக் கொடுப்பதற்காக தமிழ்நாட்டில் உலகத் தமிழர் பேரமைப்பினர், மக்களிடம் திரட்டிய உணவையும்,மருந்துகளையும், செஞ்சி லுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பி வைப்பதற்கான அனுமதியையும் இந் திய அரசு வேண்டுமென்றே மறுத்து விட்டது. இதற்காக, நான் நேரில் தங்க ளைச் சந்தித்து கோரிக்கை வைத்தும் பயன் இல்லாமல் போனது.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தமிழக மீனவர்கள் இலங்கைக்
கடற்படையினரால் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் தாக்கப் பட்டதும், நூற்றுக்கணக்கான தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டதும்,அவர்களு டைய மீன்பிடி படகுகளும் வலைகளும் நாசமாக்கப்பட்டதும் மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். இப்படி எண்ணற்ற முறை நமது கடலிலேயே தமிழக மீன வர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியபோது, இந்தியக் கடற்படை அதைத் தடுப்பதற்கோ, தமிழக மீனவர்களைக் காப்பதற்கோ எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

ஆனால், இலங்கைக் கடற்படைக்கும், கடற்புலிகளுக்கும் இடையில் நடக்கும்
சண்டையில், தங்களுக்குச் சாதகமாக இந்தியக் கடற்படையை பயன்படுத்திக்
கொள்ள நயவஞ்சகமாகத் திட்டமிட்டு, இந்திய- இலங்கைக் கடற்படைக் கூட் டுக் கண்காணிப்பு வேண்டும் என்று சிங்கள அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.

இந்தியக் கடற்படையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற தளபதிகள், கூட்டுக் கண்காணிப்பு வேண்டும் என்றும் சொல்லி வந்தனர். அத்தகைய கூட்டுக்கண் காணிப்பு என்பது, ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியக் கடற்படையை ஈடுப டுத்தும் சதித்திட்டம் என்பதைச் சுட்டிக்காட்டி, எங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும்,தமிழர்களின் துயரத்தில் உண்மையான கவலை கொண் ட தலைவர்களும் இந்தத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால்,கூட் டுக் கண்காணிப்பை முதலில் வரவேற்ற தமிழக முதல் அமைச்சரும் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆனால், தமிழக மக்களையும் உலகத் தமிழர்களையும் தந்திரமாக ஏமாற்றும்
விதத்தில், இந்திய அரசு, இந்திய இலங்கையுடன் கூட்டுக் கண்காணிப்பு என்ற
திட்டத்தை மூடி மறைத்துவிட்டு, இருநாடுகளின் கடற்படைகளின் தொலைத் தொடர்புச் சாதன ஒருங்கிணைப்புத் திட்டம் என்ற ஒரு நயவஞ்சகத் திட்டத் தை செயல்படுத்த முடிவு எடுத்து இருக்கிறது. இலங்கைக் கடற்படையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுவதுதான் இதன் நோக்கம் ஆகும்.

சீனா, பாகிஸ்தான் மற்றும் மேற்கு நாடுகளில் இருந்து ஏராளமான ஆயுதங் களை வாங்கிக் குவித்து வரும் சிங்கள அரசு, தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கவும், அந்த அழிவில் தப்பும் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக ஆக்க வும், இனக்கொலையையும், இராணுவத் தாக்குதலையும் தீவிரப்படுத்தி வரும் இன்றையச் சூழ்நிலையில், தமிழர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா இராணுவ உதவிகளைச் செய்து வருகிறது.

இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், கடைப்பிடிக்கும் போக்கு,அணுகு முறை அனைத்தும், இலங்கையின் தமிழ்தேசிய இனப்பிரச்சினையில், தமிழ் இன மக்களின் உணர்வுகளை ஆழமாகக் காயப்படுத்துகிறது என்பதைத் தாங்க முடியாத வேதனையுடன் சுட்டிக்காட்டுவதுடன், இது தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்யும் துரோகம் என்று குற்றம் சாட்டு கிறேன்.

எனவே, இரண்டு கடற்படைகளுக்கும் இடையிலே செய்யப்படும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கையை, இந்திய அரசு இரத்து செய்யவேண் டும் என்றும், 1987 இல் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,
வைகோ

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.



No comments:

Post a Comment