07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை
பகத் சிங் பிறந்த ஊருக்குப் பெயர் கட்கர் கலான். நான் கண்ணப்பன் அவர்கள், மத்திய மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சராக இருந்தபோது, அன்றைக்கும் பஞ்சாபில் முதல் அமைச்சராக இருந்த அகாலிதள தலைவர் பிரகாக்ஷ் சிங் பாதல் அவர்களின் அழைப்பினை ஏற்று, பகத்சிங் பிறந்த ஊருக்கு சூரிய வெப் பத் தில் இருந்து மின்சாரத்தைத் தருகின்ற திட்டத்தை நீங்கள் வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டதை பெரிய பெருமிதமாகக் கருதி, அந்த திட்டத் துக்கு அனுமதி வழங்கியதால், அடிக்கல் நாட்டுகிற நிகழ்ச்சிக்கு அமைச்ச ரோடு என்னையும் சேர்த்து பிரகாக்ஷ் சிங் பாதல் அழைத்து இருந்தார்.
நான் கட்கர் கலானுக்குச் சென்றேன். ஒரு புனிதமான மண்ணைத் தரிசிக்கப்
போகிறோம் என்ற உணர்ச்சியோடு சென்றேன். எந்த ஜாலியன் வாலாபாக்கின் இரத்தம் தோய்ந்த மண்ணை வீட்டு ஜாடியில் எடுத்துவந்து பூஜித்தானோ, அவன் பிறந்த கிராமத்துக்குச் சென்று, எந்தச் சகோதரன்மீது அவர் மிகப்பெரிய நேசத்தை உயிராகக் கருதினானோ அந்த குல்தார் சிங் என் பக்கத்தில் நிற்க, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, அன்று மாலைப்பொழுதில் பாகிஸ் தான் எல்லையில் இருக்கக் கூடிய பகத் சிங், சுகதேவ், ராஜகுரு நினைவால யத்துக்கு முதலமைச்சர் பாதல் எங்களை அழைத்துச் சென்றபோது, இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் என்னைப்பேச அழைத்து, அறிமுகம் செய்து வைத்தார் பாதல். ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துவைத்துவிட்டு என் பெயரை யும் சொல்லி, எனக்கு இல்லாத பெருமைகளை எல்லாம் சூட்டி என்னைப் பேசச் சொன்னார்.

நான் எழுந்து பேசுகிறபோது, ‘எந்த உணர்ச்சியோடு பகத்சிங் அந்த மண்ணை எடுத்துக் கொண்டுபோய் வீட்டில் வைத்துப் பூஜித்தானோ, நான் பகத்சிங் பிறந்த கட்கர் கலான் மண்ணை பூஜிக்கத்தக்க மண்ணாகக் கருதி, என் கையில் எடுத்துகொண்டு வந்து இருந்தேன்.அந்த மண்ணைக் காட்டி, அதற்கு முத்தமிட் டு விட்டுத்தான் நான் பேசினேன். அந்த மண்ணையும் வைத்து இருக்கிறேன். வல்வெட்டித் துறை மண்ணையும் வன்னிக்காட்டு மண்ணையும் நான் வைத்து இருக்கிறேன்.
பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றில், நிகழ்வுகளை நான் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புவது, இது ஒலிநாடாவில், ஒளிநாடாவில், ஏடுகளில் நூலாக பதிவு செய்ய விரும்புவது, வருங்காலத் தலைமுறைக்கும், வளரும் தலை முறைக்கும், ஏன் எங்கள் இயக்கத் தோழர்களுக்கும், தியாக உணர்வு மேலும் தீட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த விழாவை நடத்துகின் றோம்.
எந்தச் சம்பவம் அவன் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல இன்னொரு சம்பவம் தான் லாகூர் சம்பவமாகும். 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் நாள் சைமன் கமிஷனை எதிர்த்து நாடெங்கும் போர்க்களம். கிளர்ச்சிக் களம் அமைந்தபோது, லாகூரில் சைமன் கமிஷனை எதிர்த்து, ‘சைமனே திரும் பிப்போ’ என்று முழங்கி வந்த வீரர்களுக்குத் தலைமை தாங்கிவந்த பஞ்சாப் சிங்கம் பாஞ்சாலத்துச் சிங்கம், லாலா லஜபதி ராயின் உச்சந்தலையில் தன் குண்டாந்தடியால் ஓங்கி அடித்தான் ஸ்காட் என்கின்ற அதிகாரி. தலை உடைந் து இரத்தம் கொட்டியது. லஜபதிராய் கீழேவிழுந்தார். துடித்தார். அதற்குப்பிறகு, அவரை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். நவம்பர் 17 ஆம் தேதி அன்று லஜபதிராய் இறந்தார். 17 நாட்கள் கழித்து லஜபதி ராய் இறந்துபோனார்.
அவரது உடலை ரவி நதிக்கரையில் தகனம் செய்தார்கள். இலட்சக்கணக்கான மக்கள் திரண்டார்கள். சிதையில் லஜபதி ராயின் உடல்வைக்கப்பட்டு அதற்குத் தீ மூட்டப்பட்ட பிறகு மக்கள் எல்லாம் கலைந்து சென்றனர். அப்பொழுது சில இளைஞர்கள் அங்கே வந்தார்கள். எரிந்து கொண்டு இருந்த நெருப்பின் மீது தங் கள் கைகளை வைத்தார்கள். ‘பழிக்குப் பழி’ என்று சத்தியம் செய்தார்கள். அவர் களுள் ஒருவன்தான் பகத்சிங் - அவர்களுள் ஒருவன்தான் சுகதேவ் - அவர் களுள் ஒருவன்தான் ராஜகுரு.
No comments:
Post a Comment